தீட்டுதல் என்ற சொல் வழக்கில் உள்ளதுதான். திட்டம் தீட்டினார்கள்
என்பதை நூல்களிலும் தாளிகைகளிலும் காணலாம். நாம் இங்கு
உரையாட விழைவது திட்டம் என்ற சொல் பற்றியது. "திட்டம் தீட்டுதல்
"என்ற வழக்கிலிருந்தே திட்டம் என்ற சொல்லுக்கும் தீட்டுதல் என்ற
சொல்லுக்கும் உள்ள தொடர்பினை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
சவம் என்ற சொல் நான் அடிக்கடி காட்டுகிற உதாரணம்1 தான். சா + வு + அம் = சவம். இங்கு சா என்ற நெடில் சகரமாகக் குறைந்தது.
இந்த மாதிரி பல சொற்களை நான் முன் இடுகைகளில் எடுத்துக்காட்டியுள்ளேன்.
இதேபோல், நெடில் குறுகி அமைந்த சொல்தான் திட்டம் என்பது.
தீட்டு + அம் = திட்டம். சில தொழிற்பெயர்கள் வினைப்பகுதி குறுகி
விகுதி ஏற்கும். சில நீண்டு விகுதி ஏற்கும்: எ~டு: சுடு+அன் = சூடன், அல்லது அம் சேர்த்துச் சூடம். இவற்றை மனத்திலிருத்தி மகிழவும்.
========================================
( உது= முன்னிற்பது; ஆர் = நிறைவு. ஆர்தல்: வினைச்சொல்: நிறைதல் . அணம் : ஒரு வினையாக்க விகுதி.)