சனி, 22 ஏப்ரல், 2017

கழுத்தூறி > கஸ்தூரி.

கஸ்தூரி என்பது ஒரு வகை நறுமணப்பொருள். இது ஒரு மானின் கழுத்திலிருந்து ஊறிவருவதாக முன்னர் நம்பப்பட்டதாகும். கழுத்தூறி என்ற‌
சொல்லிலிருந்து கஸ்தூரி என்ற சொல் அமைந்தது. இச்சொல்லில் ழு என்பது
ஸ் என்று மாற்றப்பட்டது,

இந்த நம்பிக்கையைச் சுட்டிய இணைய அகரவரிசைக் குறிப்பு  காணமுடியவில்லை, திருத்தப்பட்டிருக்கலாம்.
எமது பழைய இடுகைகளும் அழிந்தன.

எனினும் கழுத்தூறி >  கஸ்தூரி.

எமது பழைய இடுகையின் பகர்ப்பு வைத்திருப்போர் அன்புகூர்ந்து அனுப்பிவைக்கவும்.

posting feature may have been made difficult.  will edit later.

வெள்ளி, 21 ஏப்ரல், 2017

சிங்கைநகராம் இழைப்பதெலாம் வென்றி

அடுக்குமாடி வீட்டினிலே  சிங்கைநகர் மேவி
அமைதியாக வீற்றிருந்தேம் அங்குபல குப்பை
எடுக்கும்வேலை ஆற்றுகிற பளுவுந்து  வந்தே
ஏற்றபடி  அழுக்கவற்றை ஏற்றியகன் றார்கள்
நடுப்பகலோ காலையதோ  மாலயதோ என்று
நாடுவதும் இல்லையது தூய்மையொன்று நோக்கம்!
விடுப்பினிலே வேலையரும் விலகிநிற்பதுண்டோ ?
வினைசெயலே தலைக்கடனே வேறுளதோ   வியப்பேம்

உலகினிலே தூய்மையதாம் உற்றஒரு   கடனாய்
உழைப்பதுசிங் கைநகராம் இழைப்பதெலாம் வென்றி.

தூய்மை வாழ்க

குறிப்புகள்:

இருந்தேம்  ( இருந்தோம்  வியந்தோம்  :  ~ஓம் என்பதினும்  ~ஏம்  என்று  முடிவது  பொருத்தம் )

பளு வுந்து  :  லாரி .

வென்றி =  வெற்றி  
இச்சொல் வென்றி என்றும் வரும்.

 

வியாழன், 20 ஏப்ரல், 2017

பன்னீரா ? எடப்பாடியா?

உயரப் பறந்தது தேன்சிட்டு;
உயர்ந்து சென்றது வான்முட்ட!
அயர்ந்தன மற்றப் பறவைகளே.
அரசனும் ஆனேன் நானென்றது.

தமிழகத் தரசோ யாரென்பதை
தாமிகப் பறந்து கூவுமவர்
அமையும் பன்னீர் தெளிப்பவரோ?
அவர்முன் அமர்ந்த பாடியரோ?

இன்னும் சின்னாள் பொறுத்திருந்தால்
எதற்கும் விடையும் கிடைத்துவிடும்.
மன்னர்  இவரென் றறிந்தபடி
மாலை இலைநீர் அருந்திடுவீர்.

இலைநீர் ‍  : கொழுந்து இலைநீர், (தேயிலை நீர்)