வியாழன், 5 நவம்பர், 2015

வாசித்தல் படித்தல்

 இவ்விரண்டு சொற்களும்  ஏறத்தாழ  ஒரே பொருளுடையவை .

வாசித்தல் என்ற சொல்லைப் பார்ப்போம்.

இச்சொல்  வாயி என்றே மலையாள மொழியில் வருகிறது.  அதாவது எழுத்தில் இருப்பதை வாயினால்  வெளிப்படுத்துதல் என்று பொருள்.

வாய் >  வாயி  >  வாயித்தல் >  வாசித்தல்.

யகரம்  சகரமாக மாறும் என்பதை   முன்னரே பல இடுகைகளில் எடுத்துக் காட்டியுள்ளோம்.

எ-டு:  வாயில்  >  வாசல்.
            நேயம்  >  நேசம்    
             தோயை > தோசை .  ( நீரில் தோய்த்து  அரைத்துச் செய்த  சிற்றுணவு,)                   தோயல். 
             தேஎம்>  தேயம் >  தேசம். ( தேஎம்  என்பது  பழந்தமிழ் )                 
            ஒயனை  >  ஒசனை  
( ஓய்தல் >(ஆய்ந்து ஓய்ந்து பார்த்தல் )  >  ஒயனை  >  ஆல் + ஓசனை =  ஆலோசனை : ஆலமரத்தடியில்  சிந்தித்தல் . இதில்  அகல்>  ஆல்  ஆகி  அகலச் சிந்தித்தல் எனினும் ஆகும். )

            ஒயனை >  ஓசனை    இதுபின் யோசனை ஆயிற்று.
             ஆனை  >  யானை;     ஆண்டு >  யாண்டு.   இவை  கண்டு  இத்திரிபு                  உணர்ந்து கொள்க.
             காயல் > ( காசல்) >  காசம் .   இருமல், காய்ச்சல்  முதல் பல அறிகுறிகள் காட்டும்  என்புருக்கி  நோய்.  காச நோய். காயல் + நோய் =  காயனோய் > காச நோய் <  காசம் + நோய்  என்ற பிறழ் பிரிப்பு ,  காசம் என்ற சொல்லை  ஈன்றது .   

படித்தல் என்பது  நூலில் உள்ளபடியே  கற்று அல்லது வாசித்து அறிதல்.  படியே உணர்தல் அறிதல் அல்லது ஓசை செய்தல்  படித்தல் என்க,

படி + அம்  =  பாடம் ;  முதனிலை நீண்டு  அம்  விகுதி பெற்ற தொழிற்பெயர். இதில் படி என்பதிலுள்ள இகரம் குன்றியது ,  நடி + அகம் =  நாடகம்  என்பதிலும் 
இகரம் குன்றி முதனிலை நீண்டு விகுதி பெற்றது.   இப்படிப்  பல உள,


----------------------------------------------------------------------------------------

ஆம் >  ஓம் ,  அம்மை > உம்மை;  அம்மா> உம்மா > உமா  முதலிய திரிபுகளை 
மறத்தலாகாது.  ஆமை  >  ஏமை > ஓமை ;   ஓம்  அடிச்சொல் : ஓமை;  ஓம்பு. 
ஏமை also connected to  ஏமம்.   ஓமம்  a medicinal seed that protects you.  Notice the central concept of protection. Will explain when opportunity arises.  

புதன், 4 நவம்பர், 2015

இலஞ்சம்

தெலுங்கிலும் கன்னட மொழியிலும்  லஞ்சம் என்றசொல்லே  வழங்குகிறது.மலையாளத்தில் மட்டும்  கையூட்டு என்ற நல்ல தமிழ்ச்சொல்  பயில்கின்றது.
சட்டைக் கையால் கொடுத்தல் என்று ஜப்பானிய 
 மொழியிலும் எண்ணணெய்  இடுதல் என்று  கிரேக்க மொழியிலும் சொல்வார்கள் என்று தெரிகிறது. மாமூல் என்று கூறுவதுண்டு ஆனால் இது தமிழன்று.  உருது என்பர், தமிழிலும்  லஞ்சம் என்ற சொல் வழக்கு உள்ளது.

குற்றத்திற்காகப் பிடிபட்ட ஒருவனோ  அல்லது ஒரு காரியம் ஆகவேண்டி மிகவும் ஆழ்ந்து விரும்புகிறவனோ இரப்பது போல் வேண்டிக்கொண்டு அதற்கு ஏதேனும்  ஊக்கத்தொகை தருவதே லஞ்சம் என்னலாம்,

இரந்து :  இலஞ்சு  என்று வரும்
குறைந்து ;  குறஞ்சு.   நிறைந்து >  நிறைஞ்சு  என்றெல்லாம் வருகின்றன அல்லவா?  ரகர லகரப் பரிமாற்றம் பல மொழிகளில் காணப்படுகிறது,

இறைஞ்சுதலும் இரந்து வேண்டிக்கொள்ளுதல் போன்றதே

ஆகவே இலஞ்சு  > இலஞ்சம் என்று அமைந்துள்ளது.

வேதங்களில் இச்சொல் இல்லை. லஞ்ச வழக்கம் பிற்காலத்தது என்று தெரிகிறது.  சங்க நூல்களிலும் இல்லை

=========================================================================
లంచం    lanjam telugu
ಲಂಚ      lancha kannada''

also in Skrt

kimpaLam  in Tamil colloquial...

திங்கள், 2 நவம்பர், 2015

To the Hero who started coming at nights

இது தலைவியிடம்   தோழி சொல்வதுபோல்  அமைந்த பாட்டு,    தோழி தலைவனைத் தனியே  எதிர்கொண்டபின்   தலைவியிடம் வந்து பேசுகிறாள்.  தலைவி   அவள் தாய் விதித்த வீட்டுக் காவலுட் பட்டு  உள்ளிருப்பவள்.  பாடல்   வருமாறு:-

தினைகிளி கடிக எனில்  பகலும் ஒல்லும்;
இரவு நீ வருதலின் ஊறும்  அஞ்சுவல்;
யாங்குச் செய்வாம் எம் இடும்பை நோய்க்கு என
ஆங்கு யான் கூறிய அனைத்திற்குப் பிறிது செத்து
ஓங்குமலை நாடன் உயிர்த்தோன் மன்ற
ஐதே காமம் யானே
கழிமுதுக் குறைமையும் பழியுமென்  றிசினே   ( குறுந்  218)

இப்பாடலைப் பாடியவர்  தங்கால் முடிக்கோவலனார்.

பொருள்:

தினைகிளி கடிக எனில்  பகலும் ஒல்லும் -   தினையில் வந்து அமரும் கிளிகளைப் போய் விரட்டு என்று அம்மா அனுப்பினாலும் ( அவனைப்)  பகலிலாவது  காண முடியும்;

இரவு நீ வருதலின் ஊறும்  அஞ்சுவல்; -  நீ ( தலைவன்) இரவில் வருவதால், (  அவனுக்கு) ஏதேனும் துன்பம் நேருமோ என்று அஞ்சுகின்றேன்;

யாங்குச் செய்வாம் -  என்ன பரிகாரம் செய்ய இயலும்?

எம் இடும்பை நோய்க்கு என  -  எமது   காதலால் வந்த துன்ப நோய்க்கு என்று;

ஆங்கு யான் கூறிய அனைத்திற்குப் பிறிது செத்து - அப்படி நான் சொன்ன அனைத்திற்கும்   வேறுவழியிற் சிந்தித்து;

ஓங்குமலை நாடன் உயிர்த்தோன் -  பெருமை பொருந்திய மலை நாட்டினன் ஆகிய தலைவன்  பெருமூச்சு எறிந்தான்;

மன்ற ஐதே காமம்  -  மிகவும் நுட்பமானதே இக்காதல்;

யானே கழிமுதுக் குறைமையும் பழியுமென்   றிசினே.  -- மிக்கமுதிர்ந்த அறிவுடைமையும்  ஆனால் ஊரார் பழித்தலும் உடையது  என்று  கூறினேன் ( என்பவள்  தோழி). 

The hint here is about eloping. Solution is there.
Can it be implemented without the affect of  good reputation hitherto maintained....?

எம் இடும்பை  என்பது:    யான்  என்றவிடத்துத் தலைவி  தன்னைச் கட்டிக்கொள்கிறாள்.  எம்  என்கையில்  தலைவியுடன் தன்னையும்  உட்படுத்திக்  கொள்கிறாள்.  இது  தலைவி  உழக்கும்  தனித்துயரைத்   தனக்கும் சேர்த்து  வந்ததாகக் கூறும்  பண்பாடு ஆகும்.   காதல் வயப்பட்டு அவள் கிடக்கின்றாள் என்று பேசுதல்  தோழிக்குரிய பண்புடைமை ஆகாது என்பது இப்பாடலில்  மிக்க  நுட்பமாக உணர்த்தப்பெறுகிறது.

கழி முதுக்குறைமை:  ஒப்பீடு:

சிறுமுதுக்குறைமை. Precociousness; இளமையிற் பேரறிவுடைமை. இனியசொல்லான் சிறுமுதுக் குறைமை கேட்டே (சீவக. 1051).
சிறுமுதுக்குறைவி n. < id. +. Precocious girl, a term of endearment; சிறுபிராயத்தே பேரறிவுடையவள். சிறுமுதுக்குறை விக்குச் சிறுமையுஞ் செய்தேன் (சிலப். 16, 68).   These are cited for comparison.

கழி =  மிகுந்த .

"குறைமை "   :  நிறைந்த அறிவுடைய ஒருவரை " அவர் கொஞ்சம் அறிவாளி ;  எதில் ஈடுபடுவது எதில் ஈடுபடக்கூடாது  என்று தெரிந்தவர் . " என்பதைக் கேட்டிருப்பீர்கள். இங்கு கொஞ்சம் என்றது உண்மையில்  நிறைந்த அல்லது போதிய என்று பொருள்.

சூழ்நிலை :  கிளி விரட்டக்கூட வெளியிற் செல்லமுடியாத வீட்டுக்காவலில்  தலைவி துன்புறுகின்றாள். தலைவன்  இரவில் மட்டுமே வந்து அவளை யாருமறியாமல் சந்திக்க முடிகிறது.  " இப்படி நீ வருவதால்  உனக்கு ஏதேனும்
துன்பம் நேரலாமே . புலி கரடி  மேடு பள்ளம் எல்லாம் உள்ளனவே.  எத்தனை
நாள் இப்படிக் காலம் கடத்துவாய் ?"    என்று  தலைவனைக் கேட்டேன்,  தலைவியின் துன்பத்திற்கு என்னதான் பரிகாரம்? என்றேன்.   எங்காவது  போய்விடுங்கள்  என்று  அறிவுரை வழங்குவது என் நோக்கமன்று.  அவனே பெருமூச்சு எறிந்தான் . வேறுமாதிரி நடந்து கொண்டால்  (ஓடிவிட்டால்  )  அதுதான் அறிவுடைமை  ;  பழிச்சொல்லுக்கு  அஞ்சிப் பயனில்லை என்று தலைவனிடம் சொன்னேன் .  ஆனாலும் அது அவன்  உட்கிடக்கையே அன்றி  என்  அறிவுரை அன்று.  வேறு வழி ஒன்றுமில்லை.  என்று தலைவியிடம் தோழி சொல்கிறாள்.

தலைவனின் பெருமூச்சுக்குத் தோழி கொண்ட பொருள்மேல்  இந்தப் பாடல் செல்கிறது .  காதலோ  மிக்க நுட்பம்  உடையது.   இதை முற்றும் உணர்ந்தவள்  தோழி  போலும்.  உணர்ந்தவள்போல்தான் உள்ளது அவள் கழறியவை.  தலைவி  பேரறிவு உடையவள்   (  கழி முதுக்குறைமை )  என்று  தோழியே சொல்கிறாள். ஒடிப்போவதை அவள் விரும்பமாட்டாள் என்று  உணர்ந்துகொண்டவள்  "என் கருத்தன்று   அவர்  அப்படி  எண்ணிப் பெருமூச்சு  விட்டார." என்று தற்காத்துக் கொண்டு  பேசுவது  புரிகின்றதன்றோ?

வீட்டுக்காவல் முதலியவை  நடந்தும்  இதுவரை  ஓடிவிடாமல்  இருந்தது  தலைவியின் பேரறிவு உடைமை ; இனி ஒடிப்போவதை  மேற்கொள்வதே  உனக்குப்  பேரறிவுடைமை என்பது  தோழியின்   அறிவுறுத்தல் , அதைத்  தயக்கத்துடன் வெளிப்படுத்தினாலும்.   

Under such pressure the hero should proceed to arrange for marriage. Elopement is not a clear solution. A matter only for discussion. The poet ends his poem well before coming to such realities as marriage.

நல்ல இனிய பாடல். படித்து இன்புறுங்கள்.

Shall review to make the import of this poem clearer.
Note: There are some  bugs here.  Certain words appear in unintended colour(s). A  letter T appears on the screen in the stanza and refuses to be erased.  Pl ignore this.