அகந்தை என்னும் சொல் அகம் என்ற சொல்லுடன் தை என்ற விகுதி இணைந்த சொல்லாம்.
அகம் என்பது உள் என்றும் உள்ளிருக்கும் மனம் என்றும் பொருள் படுவது. அகவொழுக்கம் அகப்பொருள் என்பவை மனத்துள் நிகழ்வன கூறுவதும் அதற்கான இலக்கணமும் என்பது நீங்கள் அறிந்தவை.
சிலவிடத்து "அகம்" என்ற சொல்லே நின்று அகந்தை அல்லது அகம்பாவம் என்று பொருள் தருதலும் உளது.
அகம் என்பது ஒரு பெயர்ச்சொல். வினைபோல இதுவும் விகுதி அல்லது பின்னொட்டுப் பெற்று அகந்தை என்றானது.
-தை விகுதி பெற்ற வேறு சொற்கள்:
குழ > குழந்தை. (மற்றும் குழ +வி - குழவி )
இள > இளந்தை (இளமை )
வரி > வரந்தை (வர - வரை; வர> வரப்பு; வர> வரி > வரித்தல் ).
ஊர்ப்பெயர்களிலும் வரும்: குடம் > குடந்தை. -= வளைவு, கும்பகோணம் என்னும் நகரம் .
-----------------------------------------------------------------------------------------------------------

அகந்தை 1 | akantai | * 1. conceit, arrogance, haughtiness; 2. conception of individuality -> akagkAram |