வியாழன், 24 செப்டம்பர், 2015

Spicy food very good



மிளகாய் மிளகுநச்  சீரகம்  மல்லி 
அழகாம் உடலுக்கே ஆமே ----  இளகா 
உரத்தோ டுலவ  உலகில்நூ  றெட்ட
நரத்துக்கு வேறில்லை நாடு,  



அழகாம் உடலுக்கு  --அழகு வேண்டும் உடம்புக்கு;
ஆமே  -  வேண்டியவை  நடக்கும்  
நரம் =  மனிதர் . நாடு =  தெரிந்துகொள் 






http://www.ba-bamail.com/content.aspx?emailid=16793

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

முக்காடு,

விகடம் என்ற பதத்தை  முன் இடுகையில் கூறியவாறு வடமொழி வழியாகக் காட்டாமல் தமிழிலேயே காட்டுவோம்:

விழு+ கடம் :  விழுகடம்>  விகடம்.

இதில் ஒரு ழு மறைந்துள்ளது.  விழு என்ற சொல்லை வி என்ற முன்னொட்டாகக் காட்டி கடம் என்று கொண்டு சேர்த்தாலும் அதன் உள்ளீடு தமிழ் என்பதை மறைக்கமுடியவில்லை

விழுகடம் என்பதில் ழு மறைவது ஓர் இடைக்குறை.

இயல்பு கடந்து விழுமியதாக நிற்பது என்று பொருள்.  வழக்கில் இது நகைச்சுவையைக் குறிக்கிறதன்றோ?

வேங்கடம்  என்ற சொல்லிலும் கடம் உள்ளது,  கடத்தல் அரிய வெம்மையான  இடம் என்பது பொருள்  கட  அம்  கடமாயிற்று,

இப்படி இடை ழுகரம் மறைந்த சொற்கள் உள ;   இன்னொன்றைப் பார்ப்போம்.

ஆடு >  ஆடை;  இங்கு ஆடை என்பது விகுதி பெற்ற தொழிற்பெயர்,

ஆடு என்பது  மட்டுமே நின்று பெயரானால் அது முதனிலைத் தொழிற்பெயர் எனப்படும் /

முழுக்கு  ஆடு :  முழுக்காடு >  முக்காடு,  அதாவது தலை முழுவதும் மூடிய  ஆடை;   தலை முழுக்காடை.   முக்காடு என்ற சொல்லுக்கு  இறுதி  ஐ விகுதி 
தேவைப்பட வில்லை;  ஆடு என்ற தனிச்சொல் மட்டும்  ஆடையைக் குறிக்கவருமானால் பொருள் தெளிவின்றிப் போமிடங்களும்  தோன்றுதற்கு வாய்ப்பு  உண்டு . முக்காடு என்பதில் அவ இடையூறில்லை/

பிற பின் 

விகட

வடமொழி  எனப்படும் சங்கதத்தில் முன்னொட்டுக்களாம் துணைச்சொற்கள்    பல . சில முன் கண்டோம்.  

இன்னும் ஒன்று காண்போம் .

விழு-  என்னும் சொல் சிறப்பு குறிக்கும்.   விழுமியது என்றால் சிறப்பானது என்பதாம். இச்சொல்லின் முதலெழுத்து மட்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

விகட  :   exceeding the usual measure.  (and other meanings).

வி :  சிறப்பு.

கட  என்பது  கடந்த நிலையைக் குறிக்கிறது.

எனவே  விகட என்றது  சிறப்பாகக் கடந்தது என்று பொருள் .

இன்று காட்டப்பெற்ற சொல்லின் இரு கூறுகளும் தமிழிலிருந்து  எடுக்கப்பட்டு அமைந்தவை. ஆகும் .

இங்ஙகனம்  பல உள .