மக்கள் ஆட்சி மலர்ந்த நாடுகளில்
தக்க காலத்தில் தவிர்க்க இயலாத
தேர்தல் நிகழ்வோ ஆர்வம் தருவதே!
ஒபாமா உலகின் உயரிருக் கைவரு
அவமில் நாளில் அனைவரும் களித்தனர்.
மன்னர் ஆட்சியில் இன்னதோர் புதுமை
மகிழ்தலம் மண்ணிதில் நடப்பது முண்டோ?
பெரியன நாடுகள் தேர்தலைப் போலவே
சிறியது சிங்கை தன்னிலும் தேர்தலே!
கட்சிகள் பலவாம்! கத்தல் பெருக்கிக்
கருவிகள் பொருத்திய கூட்டமும் பலவாம்.
வேடிக்கை காண விழைந்திடும் பலரும்
கூடி மகிழும் ஒருபெரும் தருணம்
தேர்தல் நிகழ்வுகள் வாழ்க
ஊர்தரும் மகிழ்வை யாரும் பெறுகவே,
இது ஆசிரியப்பா. ஆனால் சீர்களை வகையுளி செய்யவில்லை. அதாவது " மக்கள் ஆட்சி மலர்ந்த நா - டுகளில்:" என்று பிரிக்கவில்லை. அது தேவையற்றதும் ஆகும். வெண்சீரும்
வந்து ஒலி சிறக்கிறது
கத்தல்பெருக்கி : ஒலிபெருக்கி. கத்து என்பதன் பொருள் ஒலி செய் என்பதே.
இதை முன் நான் விளக்கியதுண்டு.
தக்க காலத்தில் தவிர்க்க இயலாத
தேர்தல் நிகழ்வோ ஆர்வம் தருவதே!
ஒபாமா உலகின் உயரிருக் கைவரு
அவமில் நாளில் அனைவரும் களித்தனர்.
மன்னர் ஆட்சியில் இன்னதோர் புதுமை
மகிழ்தலம் மண்ணிதில் நடப்பது முண்டோ?
பெரியன நாடுகள் தேர்தலைப் போலவே
சிறியது சிங்கை தன்னிலும் தேர்தலே!
கட்சிகள் பலவாம்! கத்தல் பெருக்கிக்
கருவிகள் பொருத்திய கூட்டமும் பலவாம்.
வேடிக்கை காண விழைந்திடும் பலரும்
கூடி மகிழும் ஒருபெரும் தருணம்
தேர்தல் நிகழ்வுகள் வாழ்க
ஊர்தரும் மகிழ்வை யாரும் பெறுகவே,
இது ஆசிரியப்பா. ஆனால் சீர்களை வகையுளி செய்யவில்லை. அதாவது " மக்கள் ஆட்சி மலர்ந்த நா - டுகளில்:" என்று பிரிக்கவில்லை. அது தேவையற்றதும் ஆகும். வெண்சீரும்
வந்து ஒலி சிறக்கிறது
கத்தல்பெருக்கி : ஒலிபெருக்கி. கத்து என்பதன் பொருள் ஒலி செய் என்பதே.
இதை முன் நான் விளக்கியதுண்டு.