பலமுறைகள் தலையமைச்சாய் இருந்து பட்ட
பல்வேறு பெற்றறிவும் பைக்குள் பொங்க
நலமுறையும் வழிகாட்ட வந்த செம்மல்
நல்லவிக்கி ரமசிங்கர் பதவி ஏற்றார்
கொலைமுறையும் ஊழலுமே கூடி விஞ்சும்
குற்றதிபன் முன்னாள்பக் சேயின் பக்கம்
கலையரசின் இயல்நோக்கிக் கனிவு காட்டும்
காலம்தம் புறங்காத்துக் கொள்வார் காண்பீர்.
பட்ட : இங்கு இனிமையற்ற அனுபவங்களைக் குறிக்க, "பட்ட " என்ற சொல் வருகிறது.
பெற்றறிவு: பெற்ற அறிவு. அனுபவம், தமக்கு துன்பமானவை உள்ளிட்ட
அனுபவங்கள்.
பைக்குள் பொ ங்க : தாம் சேர்த்துவைத்தவற்றுள் மிகுந்து நிற்க.
நலமுறையும்: நலம் உறையும் . நன்மையே உள்ளில் காணப்படும்
கூடி = கலந்து. .
விஞ்சி நிற்க : மிகுந்து நிற்க.
குற்றதிபன் : சிறுமை உடைய அரசுத் தலைவன் .
கலை அரசின் இயல் = அரசியற் கலையின் இலக்கணம் - கலை அரசின் என்பதை கலையாகிய அரசின் ( இயல்) என்று விரிக்க. .
நோக்கி : கடைப்பிடித்து.
கனிவு காட்டும்: (இப்போது விக்கிரம சிங்கே இரக்கம் காட்டுவதைக் குறிக்கும்.)
காலம்: இக்காலத்தில்.
புறம் காத்து (தம்) முதுகைக் காத்து ........
என்றவாறு.