1927 வாக்கில், ஒரு மண்ணியல் ஆய்வறிஞர் குழு, ஊரல் மலைத்தொடரில் உள்ள மிக்க உயர்ந்த மலையுச்சியைக் கண்டுபிடித்தனர். அவ்விடத்துக்கு அருகில் வாழ்ந்த மக்கள் அம்மலையை நாரதா என்று குறித்தனர். நாரதா என்ற பெயர் நமது தொன்மங்களில் (புராணங்களில்) உள்ள ஒரு கதைப்பாத்திரம், ஒரு முனிவர் என்பது நீங்கள் அறிந்ததே. இம்முனிவர் பெயருடன் ஒலியொப்புமை உடைய ஒரு சொல்லை அவர்கள் அம்மலைக்கு அல்லது மலையுச்சிக்கு இட்டிருப்பது நாம் அறிந்து மகிழத்தக்கதே ஆகும். நாரத என்ற சொல், நமதாகவுமிருக்கலாம்; அல்லது நமது சொல்லுடன் ஒத்த, வேறு பொருளுடைய பிறமொழிச் சொல்லாகவும் இருக்கலாம். இதுவா அதுவா என்று உறுதியுரை தருவது, கடின வேலைதான். காரணம் அம்மக்கள் நமது தொன்மங்களை அறிந்திருக்கவில்லை. நமது நாரதரையும் அறிந்தவர்கள் அல்லர்.
நமது நாரதர் வடக்கே ஒரு மலையில் வாழ்ந்தவர் என்று நம் தொன்ம
அறிவில் படுவதால், அம்மலை இமயம் அன்று, ஊரல் மலைதான் என்று ஒரு கருத்தை முன்னிடுகை செய்யலாம். அது நம் வாத எல்லைக்கு உட்பட்டதாகவு மிருக்கலாம்.
இந்தியர்கள் இவ்வாறு சொல்வதை அறிந்தோ அறியாமலோ, உருசிய
அரசு இதை ஆயத் தொடங்கியது. நாரத என்ற மலைப்பெயரை உண்மையில் மக்கள் என்று பொருள்படும் நாரோட்னோய் என்று மாற்றிவிட்டு அதை மக்கள் புரட்சிக் கொண்டாட்டங்களின்போது அறிவித்துவிட்டனர். அதாவது நாரத = மக்கள்; நாரோட்னோய் = மக்கள். word form updated.
நரன் என்ற தமிழ்ச்சொல், மனிதன் என்று பொருட்படும், இது நருள் என்ற மக்கள்பெருக்கம் குறிக்கும் சொல்லுடன் தொடர்புடையது,
நர் > நரு> நருள்.
நர் > நரு > நரு+ அன் = நரன் (மனிதன்).
நர் > நரு > நார்+ அது+ அன் = நாரதன். (< நாரத). நாரதன் என்றால் பொருள் மனிதன்; இது முனிவருக்கு இடப்பட்ட பெயர். இது ஏன் இடப்பட்டது என்ற ஆய்வு இருக்கட்டும். கேட்டால் சொல்வோம்.
(ஒப்பு நோக்குக: பரு+ அது+ அம் = பருவதம். பரு> பார்> பார்வதி. வதம்> வதி. (வதம்: வ்+ அது+ அம்). வ், உடம்படு மெய்.
இப்படி நீண்டு திரியும் சொற்கள் பல.)
நாரத, நாரட்னோய் என்பனவும், மக்கள் என்றே பொருள்படுவதால்,
நாரத என்ற உருசிய மொழிச் சொல்லின் பொருள், தமிழில்போல, மக்கள் என்பதே.
முனிவருக்குப் பெயர்தந்த தமிழ்.
மலைக்கும் பெயர்தந்த தமிழ்.
குறிப்பு: யூரல் / ஊரல் மலை, ஊறல் ( ஊறுதல்) மலையாகவும் இருக்கலாம். நீர் ஊறும் மலை. தமிழென்பது புழக்கத்தில் உலக மொழி அன்றெனினும் அதன் தொடக்கத்தில் உலகம் அளாவிய மொழியே. இல்லையென்றால், இதை யெல்லாம் சொல்ல, சொல்லில் வசதி இருக்காது.
ரஷ்யரின் ஆய்வு முடிவும் சரியானதே.
இது அவ்வட்டாரத்து அல்லது பக்கத்து நிலப்பகுதிகளில் வழங்கும் துருக்கிய இனமொழிகளில் ஒன்றிலிருந்து ( Turgic or Ob-urgic ) வந்திருக்கலாம் என்று எண்ணுவர். தன்னை ஈகை செய்துகொண்ட இளைஞன் ஒருவனின் பெயராக இருக்கலாம் என்று வேறு சிலர் எண்ணினர். இந்த ஆய்வாளர் தமிழை அறியாதவர்கள்.
இது அவ்வட்டாரத்து அல்லது பக்கத்து நிலப்பகுதிகளில் வழங்கும் துருக்கிய இனமொழிகளில் ஒன்றிலிருந்து ( Turgic or Ob-urgic ) வந்திருக்கலாம் என்று எண்ணுவர். தன்னை ஈகை செய்துகொண்ட இளைஞன் ஒருவனின் பெயராக இருக்கலாம் என்று வேறு சிலர் எண்ணினர். இந்த ஆய்வாளர் தமிழை அறியாதவர்கள்.