அன்னாசிப் பழம் என்பதைச் சிலர் அருநாசிப் பழம் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். வாத்தியார் சொல்வது "அன்னாசி".
மக்கள் மொழி: அர்நாசி. மலாய் மொழியில் "நாநாஸ்"
இதிலும் அரு > அன் திரிபைக் கவனிக்கவேண்டும்.
அரிய மூக்குப்போன்ற முட்டுக்களை உடையதும், உள்ளே மூக்குப்போன்றே துளைகளை உடையதும் ஆன இப்பழத்திற்கு இப்பெயர் இட்டவருக்கு நாம் பாராட்டுக்களைத் தெரிவிக்கவேண்டும்.
அவர் யாரென்று நமக்குத் தெரியவில்லை.
அரு+ நாசி > அருநாசி >அன்னாசி.
நாசி என்பதும் அழகிய சொல். மூக்கு இல்லையானால், நாவினால் ஒழுங்காகப் பேசவராது. நாவிற்குச் சீர்தருவது நா+சீர் = நாசீ(ர்) > நாசி. நோஸ் என்ற ஆங்கிலம் வரை இதற்கு உறவு உண்டு. ( சீகாரம் 'சி' ஆகும். ரகர ஒற்று கெடும்).
இங்கு சீரென்றது ஒலிக்கு உண்டாம் சீரினை. நாசி என்பது திரிசொல். இறுதி ரகர ஒற்று பெரும்பாலும் வீழ்வது. வரு> வார் > வா என்பதில் கடைசி இரண்டு திரிசொற்களைக் காண்க. வாருங்கள் > வாங்க என்பதில் ருகரமும் ளகர ஒற்றும் தொலைந்தன. தமிழ்மொழி இயன்மொழி ஆயினும் திரிசொற்களுக்குப் பெயர்போனது ஆகும். இத்திரிபுகளின் கூட்டமே தனிமொழிகளாய்விட்டன.
இப்போது அரு(ந்து) > அன்(னம்) தொடர்பான திரிபுகளை இன்னொருமுறை கவனித்துக்கொள்ளுங்கள்.
குறிப்பு:
"நா+சீர் = நாசீர்?" :-
இது முன் இவ்விடுகையில் ஓரிடத்தில் காணப்பட்ட நிலை. இக்குறி
எம் பழைய முன்வரைவுகளில் இல்லையாதலால் இன்று நீக்கப்பட்டது.
கள்ளப்புகவரால் இக்குறி இடப்பட்டதென்பது தெரிவிக்காமல் புலப்படும்.
8.5.2020 3.03 பகல்.