திங்கள், 2 ஜனவரி, 2017

MAHAMAYA




Wednesday, July 20, 2016


மகாமாயா

இன்று ஒரு வகைத் திரிபுபற்றி  உரையாடி மகிழலாம். சொல்லிறுதியில் ளகர ஒற்றில் முடியும் ஒருசொல், யகர ஒற்றாய்ச் சில வேளைகளில் முடியும் என்பதே அது.  இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு:

மாள் > மாய்

என்பதாகும்.

இச்சொல் வடிவங்கள் இங்ஙனம் மட்டுமின்றி  மடி, மரி என்றும் வருதலை உணரலாம்.  மாள்தல், மாய்தல், மடிதல், மரித்தல் என்று ~தல் தொழிற்பெயர் விகுதி பெற்றும் வரும்.

மடிதல், மரித்தல் என்று மகரக் குறிலில் தொடங்கிய சொல் மாகாரமாக முதனிலை நீண்டு திரிந்தும் சொல்லாவது கவனிக்க வேண்டியதொன்றாகும்.

இவை அனைத்தும் பொருள் மாறாமல் இன்றுகாறும் வழங்கி வந்திருத்தலை அறியும்போது தமிழ்ச் சொற்கள் பிற மொழியின்   சார்பின்றித்  தாமே திரிந்து தமிழ்மொழி உருவாக்கம் பெற்றிருப்பதைக் கண்டு மகிழலாம்.  பொருள் மாறியிருந்தால் நாம் ஒரு வேளை கண்டுகொள்ள இயலாது போயிருத்தல் கூடும்.

இந்த நாலு சொற்களும் மகரத்திலேயே தொடங்கின..

இவற்றில் சில பிற மொழிகளுக்குள் தாவிச் சென்றன,

கேட்க இனிமையாகவும் சொல்ல எளிமையாகவும் விளக்கமாகப் பொருள்படுத்தும் திறமும் உடைய சொற்கள் பிறமொழிகளில் சென்று
வழங்குவது நாம் கண்டு களிக்கத் தக்கதே என்போம். மிக்கப் பழங்காலத்திலேயே நம் பேச்சும் சொற்களும் தெளிவு பெற்றிருந்தமையை இத்தகைய தாவல்கள்  நமக்கு அறிவிக்கின்றன.

உடல் மாய்தலே மனிதன் தொடக்கத்தில் உணர்ந்த மாய்தல். இதன் பின் வெகுகாலம் கழித்தே  அவன்  ஒருவற்கு  அறிவு  மாய்ந்துபோய் மனிதன் மடைமை அடைகிறான்  என்பதை  உணர்ந்துகொண்டிருத்தல் தெளிவாகி றது. மொழிநூலில் அணியியல் வழக்குகள் காலத்தால் பிற்பட்டவை. பொருள் உண்டாகி உறுதியடைந்த பின்னரே அதனை அழகுபடுத்தும் வகைகளும் கலைகளும் தோன்றுதல் கூடும். குயில் தோன்றிய பின் தான் அது பறக்கவும் பின் பாடவும் அறிந்துகொள்ளும்.

மாய் என்பதிலிருந்து மாயம் மாயை மாயா முதலிய சொற்கள் பிற்காலத்தில் உருப்பெற்றன.  அறிவு மாய்தல் என்னும் விரிவு பின்பு  உணரப்பட்டது.   மாயம் செய்வோன் மாயன், மாயக்காரன் என்றும் குறிக்கப்பெறுவானா யினன். மாய் என்ற சொல் தமிழில் தோன்றி ப்  பல ஆயிரம் ஆண்டுகளின் பின் தான்  மாயா என்ற சமயக் கருத்தும் மாமாயா என்னும்  மகாமாயா ஆகிய  அம்மனின் பெயரும் உருப்பெற்றிருத்தல் கூடும். இவை அணிவகையில் ஏற்பட்டவையாகக் கருதவேண்டும்.-

to edit
Post a Comment



ஞாயிறு, 1 ஜனவரி, 2017

மார்க்கண்டேயன்.

மார்க்கண்டேயன்.

இந்தச் சொல் "மாறுகண்ட ஐயன்" என்ற தமிழ்த் தொடரின் திரிபு. இதை விவரித்து 2009 வாக்கில் இங்கு பதிவு செய்திருந்தோம். இதற்குமுன் இது கருத்துக்களங்களிலும் பேசப்பட்டதே ஆகும். ஆனால்
கள்ள மென்பொருளால் இது அழிவுண்டது. இது இன்னும் இருக்கிறதா என்று தேடிப்பார்த்ததில் தெரியவந்தது.

மறு ‍  என்பதும் மாறு என்பதும் தொடர்பு உடைய சொற்கள். இது பின்
மாற்று என்றும் வரும். உலகம் இரு பக்கங்களை உடையது என்பதும், நாமறிந்த இவ்வுலகு அவற்றுள் ஒரு பக்கம் என்பதும், மார்க்கண்டேயன் என்பவர் அடுத்த பக்கத்தை (இறைவன் உள்ள பக்கத்தைக்) கண்டு மீண்டவர்) என்பதும் கருத்து  ஆகும்.

கார்த்திகை ஐயன் என்பது கார்த்திகேயன் என்று திரிந்ததும் இங்ஙனமே. தமிழ்ச் சொற்களை பிறர் கையாளும்போது திரிபுகள் உருவாகுமென்பதை உணர்க.

 இன்னொன்று:

கங்கை + ஐயன்  =   கங்கையையன் > காங்கேயன் .

ஏய்தல்  - இயைதல் .   கங்கை +  ஏயன் >   .காங்கேயன்  (கங்கையுடன் இணைந்தவன் )   என்றும் பொருள் உரைத்தல் கூடும்,   இன்ன பிறவும் ..  

will edit.

ளகரம் ணகரமாக மாறுதல்.


ஒரு சில சொற்களில் ளகரம் ணகராமாகத் திரியும். இதற்கு நல்ல‌
எடுத்துக்காட்டு: களவாணி என்ற சொல். இதன் இறுதியில் உள்ள‌
வாணி என்பது உண்மையில் வாளி என்ற சொல்லிறுதி ஆகும்.

களவு +ஆள் + இ =  களவாளி  > களவாணி.

இதைக் களவு + ஆணி என்று பிரித்தல் பிழையாகத் தோன்றுகிறது,
களவு செய்யும் ஆண் என்பதனோடு இகரம் சேர்ப்பர்போல் தெரிகிறது


.ளகரம் ணகரமாக மாறுதல்.