பிறருக்கும் தமரான பிரதமர் மோடி
பிரியாமல் உலகருடன் உறைந்து வாழ்வார்
அறவர்க்கும் அன்பருக்கும் அருமைச் செம்மல்
ஆலயத்தில் இறைவர்காண் அகத்து மாண்பர்
அரியதீவு சைப்பிரசில் அடியை வைத்தார்
ஆனமக்கள் அனைவர்க்கும் உறவர் ஆனார்
பெரிதுசொன்னார் இதுவன்று போர்செய் காலம்
பிழைக்காதீர் என்றபடி பெருமை கண்டீர்.
பொருள்
பிறருக்கும் - தாம் அல்லாத பிறருக்கு(ம்)
உலகர் - உலகத்து மக்கள்
உறைந்து - ஒன்றிணைந்து
அறவர் - அறம் செய்வோர்
ஆலயத்தில் இறைவர்காண் அகத்து மாண்பர்
உறவர் - சொந்தக்காரர்
பிழைக்காதீர் - இதற்குச் தவறு செய்யாதீர் என்று பொருள்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை உடையது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக