வெள்ளி, 28 ஜூலை, 2023

மோடி வந்தபின் தமிழர் நிலை

 

கோடிபல தமிழருண்டு நாடுகள் பலவினிலும்

கூறுபெயர் கொண்டு வாழ்வார்,

நாடியுரை செய்திடினே மோடிபோல் தமிழருண்டோ

தேடினிலை ஒருவர் தாமும்!

கூடிநிற்பர் அவரிடையே எம்மூலை உலகெனினும்

சென்றிடுவார் தமிழைக் கொண்டு;

வாடினவர் தமிழில்லை என்றவர்  முன்னைபலர்

இன்றெவரும் கண்ணில் காணோம்.


உலகெங்கும் தமிழர் பலகோடி என்ற கணக்கில் உள்ளனர். பலரும் பெயரால் தமிழர்.  மோடிபோல் ஒரு தமிழர் எங்கும் இல்லை. உலகில் கூடியிருப்போரிடை எல்லாம் சென்று தமிழுரைக்கின்றார் மோடி.  தமிழ் அங்கில்லை இங்கில்லை என்பவர் முன்னே பலர்,  அவர்கள் யாரையும் இப்போது கண்டுபிடிக்க முடியவில்லை  ---- என்பது இப்பாடல்.

புதன், 26 ஜூலை, 2023

சாகித்தியம் ( சாஹித்தியம் ) சொற்பொருள்.

 சாகித்தியம் என்பது இலக்கியத்தைக் குறிக்கும் சொல் என்றாலும்,  இது சிறப்பாகப் பாடுதற்குரிய வரிகளையே  பெரிதும் குறித்தற்குரியது.   சிலப்பதிகாரத்தின் பழைய உரையிலும் இச்சொல் வந்துள்ளபடியினால் இஃது தமிழர்கள் நன்கு  அறிந்துள்ள சொல் என்றே கூறவேண்டும்,  கருநாடக இசையினைக் கேட்டின்புறுவோருக்கு இஃது மிகுந்த பயன்பாடுள்ள சொல்லென்று கூறலாம்.  

நாம் இங்கு இச்சொல் எவ்வாறு தோற்றம் கண்டதென்பதையே கவனிப்போம். இச்சொல் தோற்றத்துக்குப் பல்வேறு மூலங்கள் காணப்பெறலாம் எனினும் நாம் இச்சொல்லைத் தமிழிலிருந்தே புரிந்துகொள்ளல் முயல்வோம்.இயற் சொற்களும் திரிசொற்களும் மிக்குடைய திரிந்தமைவே தமிழ்மொழியாகும்.

முன்னாட்களில் சொற்கள் பல நீட்டமுடையனவாக இருக்கவில்லை.  சங்க இலக்கியம் போலும் பழங்கால எழுத்துக்களைக் காணின்,  சொற்கள் பெரும்பாலும் நீட்டமில்லாதவையாய் இருந்தன.  எடுத்துக்காட்டாக,  ஆகாயம் என்ற சொல்,   தொல்காப்பியனார் காலத்தில்  " காயம் " என்றே இருந்தது,  சூரியன், நிலா இன்னும் ஒளிதரு தாரகைகள் பலவும் வந்து காயும் இடமே ஆகாயமாதலின்.  அது   காயம்  என்றே வழங்கிற்று.   காய்  +  அம்=   காயம்,  இவை காய்கின்ற பெருவெளி என்று அது பொருள் தந்தது,  வானத்திற் காயும் இவையே பெரிதும் ஆக்கம் தருவனவாய் இருந்தன.  ஆதலின்  காயம் என்பது ஆகாயம் என்று நீண்டது. காயம் என்பது புண்ணையும் குறித்தது.  புண்ணும் காய்தற் குரியது ஆதலின்,  அதுவும் பொருந்திவரும் பெயரே ஆகும்.  காயம் என்பது ஆகாயம் ஆனதனால்,  அது புண்ணாகிய காயத்திலிருந்து வேறாக அறியப்பட்டது காண்க.  இவ்வாறு பொருள்மயக்கம் தடுக்கப்பட்டது.

இவ்வாறு மாற்றப்பட்டபின்,  காயம் ( வானம்) என்ற சொல்,  வழக்கில் மறைந்தது. இந்தப் புதிய சொல்லுடன் கண்ணதாசன் கவி ஒன்று செவிக்கினிமை பயக்கின்றது:

" ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது, 

ஆகாசம் பூமி எங்கும்  அழகு* சிரிக்குது" என்று வரும்.  (*இளமை)

ஆகாயம் -  ஆகாசம்,  ய- ச  திரிபு.  போலி என்றும் சொல்வர்.

காயம் என்பது பெருங்காயத்தையும் குறிக்கும்,

பல நல்ல உடைகளை உடுத்துக்கொண்டு மயக்குபவள் வேயி.இந்தச்சொல் பின் வேசி என்று திரிந்துவிட்டது,  வேய்ந்த்கொள்ளுதலாவது,  உடுத்துக்கொள்ளுதல்.

இனி, சாகித்தியம் என்னும் சொல்லைக் காண்போம்.

இச்சொல்   ஆகு + இயற்றியம்  என்று அமைந்தது,

ஆகுதலாவது,  பயன்பாடு பெறுதல்.   நூல்கள் அல்லது சுவடிகள் பெரிதும் இல்லாமல் இருந்த காலத்தில்  ஒரு பாடலைப் பாகவதர் பாடுவார்.  அதன் வரிகளை பின்பு எழுதிக்கொடுப்பர்.    அவற்றைப் பாராயணம் செய்துகொள்ள இவ்வெழுத்துகள் உதவும்.  இயற்றிய  பாடல்  உதவுதலைக் குறிப்பதுதான்  ஆகுதல்.  ( ஆக்கம் )

இயற்றியம் என்பதுவும்   இயத்தியம் என்று திரியும்.  பற்றி ஒழுகுவதற்குரிய உணவுமுறை,   பற்று> பத்து >  பத்தியம்  ஆனது.  இது றகரத் தகர மாற்றீடு ஆகும்.  சிற்றம்பலம் > சித்தம்பலம் >  சித்தம்பரம்>  சிதம்பரம் என்பதுபோலுமே  ஆகும்.

ஆகு இயத்தியம்>  சாகியத்தியம்>  சாகித்தியம் .

அகர வருக்கம் சகர வருக்கமாகத் திரிதல்.

எளிமையான எடுத்துக்காட்டு:  அமணர் -  சமணர்.  இனி,  தனி> சனி என்று புதுச்சொற்களும் அமைவன. கிரகங்களும் தனிச்சிறப்புடைய கோள் சனி. அதற்கு மட்டுமே ஈசுவரப் பட்டம்.

ஒரு யகர எழுத்து  - குறைதல்.

கி என்பதை ஹி  என்று மெலித்தல்.

சாகித்தியம் என்ற சொல் அமைந்துவிட்டது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.






காலம்சென்ற வளர்ப்பு - ஓர் இரங்கல்கவிதை

 யான்மியா என்றாலோ

தான்மியா எனப்பாடும்,

நானென்ன பேசினேனோ

யானும்  சொல்வதில்லை!

அதுவென்ன சொன்னதென்று

அதுதனக்கே வெளிச்சமாகும்.

நிகழ்ச்சிநிரல் இல்லாத

மகிழ்ச்சிப் பெருவெள்ளம்,


சிலநாட்கள் தலைகுனிந்து

கண்மூடி அமர்ந்துபின்னே,

சட்டென்று விட்டதுயிர்;

பரமபதம் அழைத்ததோ?

பாருக்குள்தான் நிலைத்ததோ?

மீந்திருந்த உடலைகொண்டு

மின் தகனம் செய்தோமே,

அம்மா மறைந்தபின்னே

இதுவும்  மறைந்ததையோ!

மியாமியா  என்று ஒலிக்க

வீட்டில் ஏதுமில்லை.

அமைதியே  மிஞ்சியது.

என்செய்வோம் நாம் இனி?



இது கவனிப்பாரற்று இருந்தது.  காப்பகத்திலிருந்து வீட்டுக்குக் கொண்டுவந்து கவனித்து வளர்த்தோம்.  இப்போது பிரிந்து சென்றுவிட்டது.   பிரியாவிடை கொடுத்துவிட்டோம்.

சனி, 22 ஜூலை, 2023

மகத்து சொற்பொருள்

 மகத்து என்ற சொல்லும் பொருளும் தமிழில் வழங்கியுள்ளது.  எனினும் இது சமயக் கருத்துகளில் வரும் சொல்லாகும்.  இதன் பொருள் " இது மிகப் பெரியது" என்பதுதான்.

ஒன்று சிறப்புக்குரியதாகவோ மிக்க வல்லமை உடையதாகவோ,  இருப்பதாகவோ இயங்குவதாகவோ விளங்குவதாயின்,  அதன் அளவு அல்லது பருமை என்பது ஒரு பொருட்டன்று.  ஒன்று மிக்கச் சிற்றளவினதாக இருந்துகொண்டு  மிக்க வல்லமையை வெளிப்படுத்தும் இயல்பினதாக இருக்கக் கூடும். எடுத்துக்காட்டாக,  ஓர் அணு,  ஆயின் அது பிளக்கப்படின் ஓர் பேராற்றல்  அதனின்று வெளிப்படுவதாக இருக்கலாம். அவ்வாற்றல் இயக்கத்தில் அறியப்படுவதே அன்றி,  காட்சியளவினைக் கொண்டு அறியப்படுவது அன்று. பருமை அல்லது பருமன் என்பது,  ஆற்றலை அறிய உதவுதன்று என்று இதிலிருந்து முடிவுசெய்தல் வேண்டும்.

ஒரு சிறிய விதை  நோய் தீர்க்கக் கூடும்.  ஒரு கட்டில் அளவினதான பரிய பொருள் அதற்கு ஒரு விதத்திலும் உதவாததாய் முடியலாம்.  ஆனால் ஓய்வுக்குக் கட்டில் உதவலாம்.

பயன்பாட்டு வலிமை என்பதும் முன்மையான கருத்தாகும்.

இவற்றிலிருந்தே சிறு மையம் , பெரிய மையம் என்ற கருத்துக்கள் கிளைத்து எழுந்தன.  சிறு மையம் என்பது சின்மயம் என்று குறுக்குண்டது.  இறைவன் அல்லது இறைமைப்பொருள்,  அல்லது பரம்பொருள்,  எங்கும் உள்ளது ஆதலின். ஒரு சிறுமையத்திலும் அது இருக்கும்.  ஒரு பெரு மையத்திலும் அது விரிந்துவிடும்.

மகம் என்பது ஒரு பெரும் பொருளைக் குறிப்பது.  ஒன்றில் இன்னொன்று தோன்றுவதே மகம் ஆகும்.   மக+ அம் > மகம்.  இங்கு வகர உடம்படு மெய் தோன்றுவது இல்லை, அதற்குத் தேவையுமில்லை.  உடம்படுமெய் போன்றவை, உடன் தோன்று ஒலி எளிதாக்கத்திற்குத் தேவையே தவிரச் சொல்லின் பொருளறிவுக்கு அத்துணைத் தேவையன்று.  மேலும் உடம்படுமெய் என்பது சொல்லின் உள்ளெழுச்சி அன்று.  அது வெறும் வெளிவரவே  ஆகும்.  அதனால் மகம் என்பது மகவம் என்று நீட்டிப் பெறப்படாதொழிந்தது அறிக.

மகம் + து என்பது மகத்து ஆகும்.  மகம் அல்லது மகமாகிய தன்மை உடைத்து.

மகத்துக்கெல்லாம் மகத்து என்றால் பெரிய அனைத்திலும் பெரியது,  ஓர் எல்லைக்குள் அடைக்க  முடியாதது ஆகும்.

எல்லை அற்றது எனவே. அது மகத்து என்றும் இறைமை என்றும் அறியப்பட்டது.

மக என்பது அம், அ, கு, அ என்ற எழுத்துக்களால் அறியப்படுவது ஆகும்.  இவை, அம் - அமைவும் , அ - அதில் தோன்றுதல்,   கு -  சேர்க்கை,  அ - சேய்மை விரிவு,  இவற்றைக் குறுக்க,  மக என்பது கிட்டுகிறது.   கு அ என்ற கடை இரண்டும் க ஆயின.

திறன் கொண்டு அறிக.

அறிக மகிழ்க

மெய்ப்பு : பின்னர்.

வியாழன், 20 ஜூலை, 2023

அலைகளில் வந்த பெண்

 நினைவுகள்  மிடைந்தொரு மிதவையு  மாகி

கடலினில் வருகின்றதே,

மனைதனில் நடமிடும்  பொழுதினில் கேட்ட

குரலொலி தருகின்றதே!


மனிதர்கள் இலாஒரு  நடுவணில் ஏகி

புனிதமெய்  அலைமன்னுதே,

கனிதரும் சுவைபெறு இனியநீர் எழிலி

இணைந்துடன் ஒலிக்கின்றதே!


விழித்ததும் மறைந்தன

கனவு கனமாகும்,

பின் அது இலதாகும்.


காலை 4 மணிக்கு ஏற்பட்ட ஒரு கனவினை இது

வருணிக்கிறது.

மிடைந்து-  இடையிடையே மாட்டிக்கொண்டு வந்து( இறுதியில் ஒரு மிதவை தெரிந்தது.)

மனைதனில் - வீட்டில்.

(குரல் மட்டும் கேட்டது).


நடுவண் - நடுவிலுள்ள இடம்.  நடுவணில் - நடுவிடத்தில்.

புனிதமெய் - இங்கு இறந்துவிட்டவர் உயிரானதுபோல் உடல்

அலைமன்னுதே  -  அலைகளிடையில் பொருந்தி வருதல்.

மழை நீர் நாவில் பட்டதுபோல் உணர, அது இனிக்கின்றது.

கனவுக்காட்சி நீங்கியது.  இதில் என்னவென்றால், மிதவையில் வரவில்லை,  மிதவையில் ஏற முயற்சி செய்யாமல் இவர் அலைகளில் பொருந்தியபடி வருகிறார்.


                                                                


 

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

மழை இல்லாவிடின் கடலும் கூட தன் தன்மை கெட்டுவிடும், வறண்டு போகும், மீன் முதலிய உயிர்கள் வாழ்வுக்கு உதவாதது ஆகும்.


டலினின்று  அல்லது மலைகளிலிருந்து மேகங்கள் எழுகின்றன.  எழும் மேகத்திற்கு எழிலி என்று பெயர் வந்தது.  ஆனால் பிற்காலத்தில்   மேகம் என்ற பொதுப்பொருள் எய்தியது இச்சொல்.

தான் கொண்ட நீரை மழையாக ஊற்றுதல்  -  தடிதல்.  "தடிந்து எழிலி"

மேகம்:  மேலுள்ளது.  முகில்.    மே+ கு+ அம்    இஃது  ஒரு தமிழ்ப் பேச்சு வழக்குச் சொல்.  இச்சொல் துணைக்கண்டச் சேவையில் உள்ளது நம் பேறு  ஆகும்,,



அறிக மகிழ்க
 
மெய்ப்பு:   26072023

கடலினின்று


புதன், 19 ஜூலை, 2023

puRam 335

335. கடவுள் இலவே!
பாடியவர்: மாங்குடி கிழார்
திணை: வாகை துறை : மூதின் முல்லை

அடலருந் துப்பின் .. .. .. ..
.. .. .. .. குருந்தே முல்லை யென்று
இந்நான் கல்லது பூவும் இல்லை;
கருங்கால் வரகே, இருங்கதிர்த் தினையே,
சிறுகொடிக் கொள்ளே, பொறிகிளர் அவரையடு
இந்நான் கல்லது உணாவும் இல்லை;
துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று
இந்நான் கல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி,
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்,
கல்லே பரவின் அல்லது,
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.


This is reproduced here for quick ref only.

செவ்வாய், 18 ஜூலை, 2023

சன்னல், சாளரம், "விண்டோ" முதலியவை.

 சன்னலுக்குக்  காலதர் என்றொரு சொல்லும் உள்ளது.  கால் என்பது காற்று என்பதன் அடிச்சொல்.  வந்தக்கால்,  சொன்னக்கால் என்று வரும் பதப்பயன்பாடுகளில்  வந்த போது,  சொன்னபோது என்று பொருள்தந்து,  இச்சொல் காலத்தையே குறித்தது காண்க.  காற்று என்பது கால்+து என்ற இரண்டின் புணர்ப்பு  ஆகும்.  ஆகவே காலதர் என்பது வீட்டுக்குள் காற்று வரும் வழி என்று பொருள்தரவே, சன்னல் அல்லது சாளரம் என்று பொருள்பட்டது.

சன்னல் பற்றிய முந்தைய இடுகையை இங்குக் காணலாம்:

https://sivamaalaa.blogspot.com/2017/03/blog-post_95.html

சாளரம், மற்றும் சாரளம் என்பதும் விளக்கப்பட்டுள்ளது.   அது இங்கு உள்ளது.

https://sivamaalaa.blogspot.com/2018/06/blog-post_29.html

இவை கொஞ்சம் விளக்கமாகவே எழுதப்பட்டுள.

பலகணி என்ற சொல்:

https://sivamaalaa.blogspot.com/2017/03/blog-post_12.html

பண்டைக்காலத்தில் வீட்டுக்குச் சன்னல் அமைப்பதென்பது, முதன்முதல் பெரிதும் பின்பற்றப்படவில்லை. கதவு ஒன்றிரண்டு போதுமென்று நினைத்தனர்.    ஆனால் கதவைத் திறக்காமல் சாத்திவைத்துக்கொண்டு காற்றுவரவு வசதியைப் பெறவும் வெளியில் நடப்பதை அறியவும் சன்னல் இருப்பது அவசியம் என்பது பின் உணரப்பட்டு,  அவை அமைக்கப்பட்டன.  சன்னல் என்றால் சுவர் இல்லாத இடன் என்பது நீங்கள் அறிந்ததே. இதே பொருளைச் சன்னல் என்பதிலும் கண்டறியலாம்.

தன் + அல் >  சன்+ அல் > சன்னல்.

தன் என்பது சுவரைக் குறிக்கும் பதிற்பெயர்.

சுவரில்லாத இடம் என்று இதற்குப் பொருள்.

சுவர் என்பது சு - சுற்றி,  வர் -  வருவதாகிய அடைப்பு  என்று பொருள்படும் என்பது முன்னர் விளக்கப்பட்டது.  சுவறு என்பது தவறு.  வறு என்பது வறுத்தல் என்று பொருள்தரும் சொல்.  சுவர் என்பதே சரி.

பெயரிடக் கடினமாகிய இவற்றை நல்லபடி தமிழ்வாணர் சமாளித்துள்ளனர்.

Window  என்பதில் டவ் என்பது  கண் என்று பொருள்படும் என்று மேலை ஆய்வாளர்கள் கூறுவர். auga  - eye. Old Norse.  eagduru = eyedoor.   Frisian andern என்பதும் ஒப்பிடப்படும்.   அப்படியானால்  அது பலகணி என்ற சொல் போன்றது என்பது காண்க.


அறிக மகிழ்க.

மெய்ப்பு : பின்.







திங்கள், 17 ஜூலை, 2023

மணமக்கட்குப் பரிசுகள்

 



பரிசுபல கொண்டுதரும் மணவிழவின் பின்னே
அரிதெனவே கொண்டாடும் மறப்பரிய  நாளே
உரியசில கொண்டுவந்து உங்களிடம் தந்தோம்
நெறிவழுவாச் சிறப்புடனே மலர்ந்திடுபொன் வாழ்வே


வாழ்வெங்கும் மணம்பெருகித் திசைநான்கும்  பரவத்
தாழ்வறியாக்  குணங்களின்மென்  மேல்சிறந்து மிளிர்க.,
ஏழ்கடலும் தாண்டியொரு புகழ்பெறவே வாழ்க
யாழ்விளைத்த இசைபோலும் இணையற்ற வாழ்வே,

திருமணத்தின் பின் விருந்தும்  பரிசுப் பொருள்களும் வழங்கி மணமக்கள் மகிழுற்றனர். படத்தில் மணமக்கள்









எங்களின் இனிய நல்வாழ்த்துகள்

வியாழன், 13 ஜூலை, 2023

எதிர்நிற்றல் இரு வடிவங்கள் [எதிர்நில்-தல், எதிர்நிலல்-தல்]

 இங்கு தலைப்பில் காட்டியதுபோல். இவ்வடிவங்கள் இருவகையில் தமிழ் நூல்களில்  காணப்பட்டுள்ளன.

~நிலல்-தல் என்பது :-  ~தல் என்னும் தொழிற்பெயர் விகுதியுடன் ஓர் "எதிர்நில்-தல்", மற்றும்  "எதிர்நிலல்-தல்" :   இடைநிலையாக  "அல்"  என்பது வருதலும் ஆகும்.  இது உண்மையில் இருவிகுதிகள் புணர்ப்புற்ற சொல்லாக்கம்.  இடையில் வரும் "அல்" விகுதி தேவையற்றது என்று அறிவாளிகள் கருதி மறுக்கலாம்.  இருவடிவங்களும் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கின்றபடியால் இவற்றைத் தவறு என்பது வழுவாகும்.  இது ஓர் அல் இடைநிலையுடன் நீண்டுள்ளமைக்கு காரணம்,  "தேவை எழுந்ததே" ஆகும்.  Necessity is the mother of invention  எனற்பாலதை மனத்தில் இருத்திக் கொள்க. பொருள் விரிவாக்கத்திற்கு  கூடுதல் விகுதி அல்லது இடைச்சொற்கள் கொண்டு சொல்லை நீட்டுதல் இயல்பானதாகும்.

இதுபோல் ஒரு 'விகுதி" வந்து இடைநிலையாய் நிற்க இன்னொன்று கொண்டு முடிதல், சொல்லாக்கத்தில் எதிர்நோக்கவேண்டியதொன்றே.

முயற்சித்தல்  என்ற சொல் முயற்சி என்பதிலிருந்து எழுகின்றது.  சி விகுதி வந்து முயற்சி என்பது தொழிற்பெயர் ஆகிவிட்டபடியால்,  இன்னொரு விகுதி தேவையில்லை என்று கருதக்கூடும்.

தமிழ் என்பது கவிதையில் எழுந்த மொழி என்பதை மறக்கலாகாது.  கவிதைக்கு நீண்ட சொல்லொன்று தேவைப்படும் இடத்தில் எப்படியும் இசை முறியாமல் இருக்கச் சொல்லை நீட்டவேண்டியுள்ளது.  இசைபிசகாமல் இருத்தல் என்பது மிகவும் முக்கியம் ஆகும்.  முக்கியம் எனில் முகப்பில் இருந்த நிலையில் இன்றியமையாமை யாகும்.  மனிதற்கு முகம் போல் பாட்டுக்கு இசையிணக்கம்.  பண்டை மக்கள் இப்போது படிப்பதுபோல்  "வாசிப்பது" இல்லை.  உரைநடையையும் பாடியே முடிப்பர்.  இப்படிச்  செய்து அவர்கள் மிக்க இன்பம் அடைந்தனர் என்பது தெரிகிறது.  சமஸ்கிருதமொழி பெரும்பாலும் பாடப்படுவதற்கும் மந்திரங்களாக இருப்பதற்கும் ஆன காரணி அதுவே. 

"கேள்வி" முயல் என்னும் போது,  முயல் என்ற சிறு விலங்கின் தோற்றம் மனத்திரையில் எழுந்து,  கருத்துத்தடை ஏற்படுவதால் இப்போதெல்லாம் " கேள்வி முயற்சிக்கவேண்டும்"  என்றே சொல்லவேண்டியுள்ளது.

சொல்லாய்வில் சொற்கள் பலவாறு நீண்டு வளர்ந்திருத்தலைக் காணலாம்.  ஒன்றுக்கு மேற்பட்ட விகுதிகள் புணர்க்கப்பட்ட சொற்கள் பலவாகும்.  ஒருவிகுதி பெற்ற தொழிற்பெயர்களை மட்டும் காட்டிவிட்டு இலக்கணத்தை முடக்கிக்கொள்ளுதல் அறியாமை ஆகும்.

எடுத்துக்காட்டு:  பாண்டித்தியம்.

பண் >  பாண் > பாண்+ து + இத்து + இயம் ( இ+ அம்) > பாண்டித்தியம்.

அத்துச் சாரியை உணர்ந்தோர். இத்துச் சாரியையை உணராமை,  குறுக்கமான அறிவாம்.

அது >  அத்து  [ சாரியை]

இது >  இத்து  -  இது இன்னொரு சாரியை.

சமஸ்கிருதம் என்பது உள்ளூர் பூசாரிகள் கையாண்ட மொழி.  இந்தோ ஐரோப்பிய மொழியாக அதை வெள்ளையர்கள் ஆக்கிக்கொண்டதற்குக் காரணம்,  அவர்கட்கு ஒரு நெட்டிடைமை உடைய வரலாறு தேவைப்பட்டமையே எனல் உணர்க.

எதிர்நிலற்றல் என்பது சரியான வடிவமே.  நீட்டம் வேண்டும்போது மேற்கொள்க.  இப்போது அளபெடைகள்  ஆளப்பெறுதல் இல்லை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

" ஒருவர் மோடி" - பாராட்டுப் பாடல்.

 


இந்தியத் திருவென்னும் பெருநாட்டிற்குச்

செந்தண்மை வாய்ந்தஒரு தலைவரென்றால்

வந்துள்ள உயர்துறவி ஒருவர்மோடி.


தமக்கென்று பொருள்வேண்டா அவரேநல்லார்

பிறர்க்கென்றே என்பினையும் ஈவரன்னார்

உலகுக்கும் அமைதிக்கும் ஒருவர்மோடி.


பொருட்பாயைச் சுருட்டிக்கொண் டலைகயமைசேர்

திருட்டாமை  திரிந்தூரும்  குருட்டுக்காட்டில்

அருட்டிருவாய் அணிபெறுவார் ஒருவர்மோடி.


இவை தாழிசைகள்.  ஒருவர்மோடி என்ற தொடர் மூன்றடுக்கி வந்தன.


என்பு  -  எலும்பு

ஈவர் -  தருமம் செய்வார்

அலை -  அலைகின்ற

கயமை -  நற்குணமில்லார்

திருட்டாமை -  திருட்டு ஆமை

திரிந்தூரும் -  ஓரிடமென்று இல்லாமல் எங்கும் மறைவாகச்  செல்லும்

திரிதல் -  திரிபுகொள்ளுதல்

அருட்டிரு -  அருள் திரு

அணி பெறுவார் -  அழகினை அடைவார

தனக்கென்று   (ஒருமை)  -  தமக்கென்று  ( பன்மை)


தனக்கு ( தமக்கு), பிறர்க்கு, உலகுக்கு என்பன முரண் எதுகைகள்.


புதன், 12 ஜூலை, 2023

வருகை புரிந்தோருக்கு வாழ்த்து


https://sivamaalaa.blogspot.com/2023/07/dinner-in-honour-of-reuben-saruka.html

மேற்கண்ட இடுகையின் தொடர்ச்சி:


வந்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் ஒரு கவி. இது நம் நன்றியைத் தெரிவிக்கிறது. 


(எண்சீர் விருத்தம்)

வந்துலவும் தென்றலுக்கு வணக்கம் சொல்ல,

வாய்வந்தே உதவாமல் மறந்த போதும் -

செந்தணிகைத் தென்றலதும் பிணக்கம் கொண்டு,

சீருடனே மீண்டும்வர மறப்ப துண்டோ?

வந்திருந்து சிறப்பித்த நீங்கள் எல்லாம்

வாழியவே வளர்பிறையாய் என்று மென்றும்!

செந்தமிழால் உங்களையே வாழ்த்தி நின்றேன்:

சிலையுணர்வு பெற்றமைபோல் நலம்சொல் வேனே.


செந்தணிகை -   தணிகைமலை(த் தென்றல்). அல்லது அதுபோல் குளிர்ந்த தென்றல்.

சிலை உணர்வு பெற்றமை  -  ஒரு சிலைக்கு உயிர்வந்தது போல்.

முன் மறந்துவிட்ட காரணத்தாலும் இப்போது நன்றி சொல்வதாலும் சிலை 

உணர்வு பெற்றதென்று சொல்லப்பட்டது.


மெய்ப்பு  பின்னர்.

செவ்வாய், 11 ஜூலை, 2023

Dinner in honour of Reuben Saruka


 

A special welcome dinner was held for Reuben and Saruka, who have entered marital life recently. They are seated together on the left . Beautiful service from Gayathri Singapore.

Welcome into the fold Saruka

Gripping the hand of Reuben;

Close beside  raising " Eureka"

Hallowed  on earth as heaven.


May sixteen treasures you attain

And all of them to retain;

Days or nights with children

Independent and ne'er beholden.


MAY U B0TH HAVE A WONDERFUL LIFE AS ONE,


from our blog and relatives and friends


You are invited to continue reading:

https://sivamaalaa.blogspot.com/2023/07/blog-post_12.html

A poem of thanks to those present to bless the couple.

இணைக வாழ்த்துக

மெய்ப்பு பின்




திங்கள், 10 ஜூலை, 2023

சம்பிரதாயம்

 சம்பிரதாயம் என்ற சொல்லைச்  சிந்தித்து உணர்வோம்.

முன்னர் நாம் வெளியிட்ட இடுகைகளில்,  தம் என்பதே சம் என்று திரிந்து உருக்கொண்டது என்பதை விளக்கியுள்ளோம்.

தம் என்பது ஒரு பன்மை வடிவமாகும்.  இரண்டு தன்-கள் கூடினால் ஒரு தம் ஆகிறது.  அதாவது ஒன்றுக்கு மேபட்ட  மனிதர்  தம்மைச் சுட்டிக்கொள்ள "தம்"  அல்லது தங்கள் என்பர்.   தாம் என்று நீண்டொலிக்கும் சொல்லும் இவ்வாறே பன்மை ஆகும்.  இணைப்பு என்பதைக் குறிக்க,  இந்தத் தம்மிலிருந்தே சம் என்பதைத் திரித்துப் பயன்படுத்தியது  அறிவுக்குப் பொருந்தியதே  ஆமென்க.

இருவர் போகம் செய்துகொள்வதை  "சம்போகம்"  என்றது இதனால்தான். ஒருவர் இன்னொருவரிடம் "போதல்",  போகமாகும்.  இந்த வழக்கு,  மக்கள் பேச்சினின்று வருவது ஆகும்.

தகரம் முதலாக வரும் சொற்கள் சகரமுதலாகத் திரியும் என்பதை முன்னர் இடுகைகளில் காட்டியுள்ளோம். மீண்டும் படித்து அறிந்துகொள்க.  எடுத்துக்காட்டாக ஒன்று: தனி > சனி.  சனிக்கிரகம் என்பது ஒரு தனித்தன்மை வாய்ந்த கிரகம்.  கிரங்களுக்குள் ஈசுவரப் பட்டம் உடையது சனி.

சிலவிடங்களில் மூலச்சொல்லை மறைத்துவிடுவது,   பொருளாக்கத்தடை இன்றி  ஒன்றைக் குறிப்பதற்கு ஏற்றதொன்றாம். இத்தகு பொருண்மையுணர்விற்குத் திரிபுகள் பெரிதும் உதவுவன.  தாய் போன்ற ஒருவரை  தாய் என்றே சொல்லலாம்,  அவர் பெண்ணாக இல்லாவிடினும்.  ஆனால்  அதைச் சாய் என்று திரித்து வழங்குவது இன்னும் சிறப்பு.  தாய்மை பற்றிய எண்ணங்கள் இடையில் நுழைந்து எந்தப் பொருண்மைத்தடைகளும் ஏற்படமாட்டா. சாயிமாதா என்ற சொல்லைக் கவனிக்கவும்.  தாய் > சாய்> சாயி. மேலும் இது ஈரானிலிருந்து வந்த சொல் என்று சொல்ல ஒரு வழி ஏற்படும்,  அது வேறு எங்கிருந்து வந்திருந்தபோதும்.  இவ்வாறு ஒரு பொருண்மை இடன்மாற்றுக்கும் வசதி ஏற்படுகிறது. 

நாம் கடைப்பிடிப்பதைத்  தம் வழியினின்றே பெற்றிருக்கலாம்,  பிற  குடும்பங்களி லிருந்தும்  பெற்றிருக்கலாம்,  எவ்வழியும் தரலாம்.   பின்பற்றப் பின்பற்ற,  அது ஓர் ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்ல்முறை  ஆகிவிடுகிறது.  தம்மவை என்பதற்கு  சம்;  பிறவழியின என்பது குறிக்க பிர.  தந்த செயல்முறை குறிக்க  தா-.  எல்லாம் சேர்க்கச்  சம்பிரதா  ஆகிறது.  இதில் அம் விகுதி கூட்டச் சம்பிரதாயம்  ஆகிவிடுகிறது.

தாமும் பிறரும் தொடர்ந்து கடைப்பிடிக்கும் செயல்முறைகளில்  நாம் தொடர்ந்து பின்பற்றுபவை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

கவிதை படித்தால் இருமுறை மகிழ்ச்சி

 நம் எழுத்துக்களைப் படித்து மகிழ்ந்தவர்கள் ஒரு திருமணத்தில் ஒன்று கூடினால் மகிழ்ச்சி அனைவர் மனத்திலும்.




புனைந்த கவிதை படித்து மகிழ்ந்தனர்

இணைந்த போது மணவிழ வொன்றினில்

அணைந்த படகினர் அடைந்த மகிழ்வென

நினைந்து மீண்டும் கவிதனைச் சூழ்ந்தனர்.

ஒரு கவிதை வடித்தோன்பால் அவன் கவிதையைப் படித்ததும் மகிழ்வு பிறக்கிறது. அதன்  பின் படித்தோர் எல்லாம் ய படகுப் பயணம் போல் தம் வாழ்க்கையில் சென்றுகொண்டிருப்பர்.  அப்புறம் கவிஞனை ஒரு மணவிழாவில் சந்திக்கிற  வாய்ப்பு  நேர்கையில் இன்னொரு மகிழ்வு தோன்றுகிறது.  அந்த இரண்டாம் மகிழ்வை இந்தப் படத்தில் உள்ள சுவைஞர்கள் காட்டி மகிழ்கின்றனர்.  அவர்களுக்கு நம் பணிவும் அன்பும் உரித்தாகுகின்றன.

இந்தக் கவிதையை அவர்களுக்குப் படைக்கிறோம். இதன் பின் எதிர்கொண்ட  ஓர் அம்மையாரும் எம் கவிதையைப் படித்ததைச் சொல்லி மகிழ்ந்தார்.   அவருக்கும் நன்றி நவில்கின்றோம்.

கவி -- கவிஞன்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

செல்ல வளர்ப்பு மறைவு.


படத்தில் காணப்படுவது திருமதி  பா. ஷீபா  அவர்களின் செல்ல வளர்ப்பு,  இதைப் பன்னீ  ராண்டுகளாகப் பிள்ளை போல் காத்து வளர்த்து வந்தார். கடந்த மாதம் இப்பூனை முதுமையினால் மறைந்தது.  சுமார் $1500 வெள்ளி செலவு செய்து,  பூனை மற்ற விலங்குகளின் சிறப்பு எரியூட்டு நிலையத்தில் இது எரியூட்டப் பட்டது. பூசைகளும் செய்யப்பட்டன.  பூனையின் பெயர்: ஆஷ்லி ஆகும்.  திருமதி ஷீபா நம்  வலைப்பூங்காவின் கண்காணிப்பாளர் ஆவார்.  இவரிடம் நம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆஷ்லியில் ஆன்மசாந்திக்கு  வேண்டிக்கொள்கிறோம்,




 

ஞாயிறு, 9 ஜூலை, 2023

உயிரா ஜீவனா பிறப்பா?

 இதை இழுத்துவிரிக்காமல் சுருக்கமாகச் சொல்லிவிடுவோம்.

உயிர் என்பது முழுச்சொல்.

யிர் என்பது தலையெழுத்து நீங்கியது. இதனை முதற்குறை என்பர்.

யிகரத்தில் சொற்கள் தொடங்காமையின், மாற்றாக  இர் என்பதை இடுவோம்.  -யிர் என்பது உண்மையில் இர் தான்.  உ =  உள்ளே ;  இர் -  இருப்பது.  இர் என்பது இரு என்பதன் மூலம்.   யாரும் உள்ளே எந்தத் தொங்கலில் உயிர் உள்ளது என்று கண்டுபிடித்துவிட்டதாகத் தகவல் எம்மிடம் இல்லை. உங்களிடம் இருப்பின் எம்முடன் பகிர்ந்துகொள்ளுதலை வரவேற்கிறோம்.

உய்  ( உய்தல்) என்பதை முதலாகக் கொள்வர் சிலர்.  ஆனால் உய் என்பதும் உகரச் சுட்டடிச் சொல்லே ஆதலால்  வேறுபாடு ஒன்றுமில்லை.

இர் என்பதன் பொருண்மையை இரை என்பதிலும் கண்டுகொள்ளலாம்


இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய் (குறள் 946)

இரை என்பது விலங்குணவு பறவை உணவு முதலியன குறிக்கும். கழிபேருணவினனை இங்குக் கழிபேரிரையான் என்று ஏனை உயிரினங்கள் உண்பனபோல் உண்பவன் என்ற பொருள்பட நாயனார் உரைப்பது சிறப்பு.

 இர் - இங்கிருந்து,  அ - அங்குவரை ,  அய் =  அகல இருப்பது. ஐ என்பதும் அது.  அகல அறிவும்  அகல ஆளுமையும் உடைய மனிதரைக் குறிக்க "ஐ" அடிச்சொல்லாய் வரும்.  " ஐயர் யாத்தனர் கரணம் என்ப"  என்ற தொல்காப்பிய நூற்பாவில் ( கற்பியல்  4 )  இச்சொல்லுக்கு இதுவே பொருள்.  இர் அ அய் > இரை,  ( கோழிக்கு இரை முதலிய உணவுகள் ),  இரைத்தல் -  வினைச்சொல்.  இ, அ, அ(ய்) -  இவை சுட்டடிகள். இடையில் அகரமின்றியும் உரைக்கலாம். இடையில் அகரம் புணர்த்திக் கெடுத்தல் பொருளுணர்வுக்கு முழுமை தரும்.

இர் என்பது  சிர் என்று திரியும். யிர் என்பது புணர்ச்சித் திரிபு,  யகர உடம்படு மெய் வந்துள்ளது, 

இதை  அமண் - சமண் என்ற திரிபில் அடக்கிவிடலாம்.  அகரமும் அதன் வருக்கங்களும்  சகரமும் அதன் வருக்கங்களாகத் திரியும்.  இங்கு எல்லாவற்றையும் காட்ட இடமில்லை.  பழைய இடுகைகளில் படித்துப் பட்டியல் மேற்கொள்க.

சிர் என்பது அதற்கு இனமான முதலுடன் ஜிர் என்றும் பின் ஜிவ் என்றும் திரியும்.

ஜிவ்  -- ஜிவ் + அன் >  ஜீவன்   முதனிலை நீண்டு தமிழுக்குரிய அன் விகுதியும் பெற்று  ஜீவன் ஆனது.  தமிழில் இது ஆண்பால் விகுதி.  வேறு மொழிகள் அவற்றை வெற்று விகுதிகளாக்கிக்கொள்ளத் தடை எதுவும் இல்லை.

தமிழிலே கூட இவ்வாறு அன் பொது விகுதியாக வரும்,

உயர்திணை நீங்கிய பிற அணியினவாய உயிர்கள் பிற அணிகள் அல்லது பிரா(அ)ணிகள் >  பிராணிகள்.  அகரம் தொகுந்தது. பிராணியை இயக்குவது அதன் பிராணன்,  இங்கும் அன் விகுதி வந்து அழகு செய்யும். கக்குவான் என்பது நோய்ப்பெயர்,  அதில் ஏன்  ஆன் விகுதி?

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்