சனி, 30 ஜூன், 2012

பைக்குள் இருந்திடும் காசு கைக்குள் வயப்படல்


பைக்குள்  இருந்திடும் காசு -- நன்கு
பயன்பட வேண்டுமென் றெண்ணிடும் போதில்
கைக்குள் வயப்படல் இன்றி -- பிறர்
கண்களில் பட்டுக் கரைவதும் என்ன!


ஒன்றை நினைத்திங்கு வைக்க --மற்
றொன்றதன் முன்வந்து சென்றிட உய்க்க*
என்றுமெண் ணாததற் கெல்லாம் -- பணம்
ஏன்போகு தென்பதை இறைவனும் சொல்லான்.




*{சென்றிட உய்க்க,= செலவாகும்படி பணத்தை வேறு பாதையில் போகச்செய்ய}





இனிவரும் காலம்நற்  காலம் -- பணம்
இனிவரும் நின்றினி  ஏற்றமென் கின்றார்.
பனிவரும் ஞாயிறின் முன்போல் --அது
பறந்திடக் காண்பதில் மாற்றமொன் றில்லை.


இத்திங்கள் வேறில்லை போக்கு --- பணம்
இருக்கும் எனும்காலம் எண்பெறும்  நோக்கில்,
பத்தைந்து குரங்குகள் பாய்ந்து -- கூரைப்
பதிவினைப் பிய்த்தே எறிந்தன ஓடு.


கூரையை வேய்தொழி லாளர் -- தமைக்
கூப்பிட்டு மேல்சரி செய்கின்ற போதில்,
யாருக்கும் நேர்வதே என்றார்  -- இன்றேல்
யார்தாம் பிழைத்திடக் கூடுமென் கின்றார்.


யாரும் பிழைத்திட வேண்டும் -- பணம்
யாங்கும் உலாவி உழைத்திட வேண்டும்,
தீரும் பணச்சிக்கல் எல்லாம் -- இதே
தீர்க்க முடிவென்ற வார்ப்பினைக் கொள்வோம்.

வெள்ளி, 29 ஜூன், 2012

அதங்கோடு ஆசான்.









அரசவைகளில் அரசு போற்றும்  அறிஞர்கள் சிலர் இருந்தனர். இவர்கள் அறம் எது, அறம் அல்லாதது எது, செயற்பாலது எது, செய்யாது நீக்கத் தக்கது எது  என்று யாவருமறிய விளம்பினர். இவர்களில் நாவு,"அறம் கரை நாவு" என்று சொல்லப்பட்டது. இவர்கள் ஒரு வகையில் சொற்பொழிவுகள்  செய்து. கேள்விக்குப்  பதில்  எடுத்துரைத்திருக்கலாம்.
கரைதல் - எடுத்து உரைத்தல்.  கரைதல், ஒலித்தல் என்னும் கருத்து அடிப்படையை உடைய சொல்.


அறம் என்பது ஒன்று. மற்றபடி, பொருள், இன்பம், வீடு என்ற துறைகளும் உண்டு. அவற்றைப் பற்றியும் பேசுவதுண்டு. ஆனால், அறமே பெரிதும் பேசப்பட்டது என்று தெரிகிறது. அதுவே சிறப்பு உடையதாயிற்று.


அறங்கரை நாவினரே இந்த நான்கு துறைகளையும் கவனித்து ஆலோசனை வழங்கி வந்தனர்.
     
அத்தகைய ஒருவரே அதங்கோடு ஆசான்.


அறம், பொருள், இன்பம், வீடு என்பவற்றுள், அறம் முன்னுரைக்கப் பட்டதால், பொருள்,இன்பம், வீடு என்பன தொடர்வன ஆகும்.


இவற்றைக் கூறும் நூல்கள் மறைகள் எனப்பட்ட ன . பிற அரிய நூல்களும் மறைகளே. இசை நூல், இசை மறை ஆகும்.


தொல்காப்பியப் பாயிரம், அதங்கோடு  ஆசானைப் பற்றி நமக்குத் தெரிவிக்கின்றது.





அதங்கோடு  > திருவதங்கோடு > திருவாங்கூர் என்பர் சிலர். அன்று, அது வேறொன்று என்பாரும் உளர்.
இவ்வூர் கேரளாவில் உள்ளதென்பர்.

Tolkappiyam timeline



      Scientific proof for Tolkaapiyam timeline

the scientific proof for Tamils antiquity !
By  MAHADEVAN.

Tamizh Nadu is in thai and maasi[january and february];which means there had been a shift in the positions of star constellations from the time of this record in the first Tamizh grammar book (and passed on from number of generations of masters and students upto the age of writing down of Tholkappiyam nool) to the present day - the aries(aadu iyal-mesha with aswini as first monthstar) constellation had moved from Tamizh spring day -january to april now;
That is:

Spring starts always at January 14 in Tamlzh Naadu;
The source of Tholkaappiyam says Aries(Mesha) constellation was usually seen at the start of Spring--Jan 14;
Presently Aries is seen as the evening star by April 21;

This means there hadbeen a shift of 3 months which is equivalent according to Dr.Frawley's calculations to about, 8,500 years from the present AROUND 6,500 B.C.E. derived as follows:

if 3.88 months shift=>10,500 years:so, 3 months shift=8076 years;or
if 3.00 months shift=>8500 years:so, 3 months shift=8500 years; or
if 1.33 months shift=>5139 years:so, 3 months shift=11563.2 years; or
if 1.1 months shift=>4500 years:so, 3 months shift=12272.73 years; or
if 0.88 months shift=>4350 years:so, 3 months shift=14500 years;

Roughly the date of the 1st Tamizh grammar work (or perhaps copied down second or later Grammar work or Tholkaappiyam itself) was between 8076 years and 14500 years from present;which goes from 6076 B.C.E. to 12500 B.C.E.
to locate the exact date we can take the following methods

Arithmetic mean=8,500/3 *3=8,500=6,500 B.C.E.,
Geometric mean={8100+8500+11563.2+12272.73+14500}/5=54935/5=10,987 years for 3 months shift =8,987 B.C.E.
Median=[midpoint of 2 extreme entries]=from above,{ 14,500+8,100}/2=11,300 for 3 months shift=9,300 B.C.E.
Graphical mode=8,500 years=6,500 B.C.E.,
{this is the way they usually do for calculating proximity dates in any scientific methods }
Therefore we can conclude that :
"a Grammar work in Tamizh was written atleast around 6,500 B.C.E."

 Sivamala wrote:
Thanks to our member Mahadevan for these details. This is in line with the estimates given by Prof Ka Su Pillai AND other Tamil scholars. Europeans have a problem because they do not want the Bible Timeline speculated by them to be in jeopardy. Northerners would object because they fear that their "culture" will lose out to Tamils.       

Thanks to mayyam.

excerpts on Naan Marai.


      we need evidence not opinions

¦¾¡ø¸¡ôÀ¢Â÷ ¸¡Äò¾¢ø ¿¡ýÌ ¬Ã¢Â §Å¾í¸Ùõ ¯Õô¦ÀüÚÅ¢ð¼É ±ýÀ¾üÌ ±ó¾ ¬¾¡ÃÓõ þø¨Ä.

¦¾¡ø¸¡ôÀ¢Â÷ ¸¡Äò¾¢ø ¿¡ýÌ ¬Ã¢Â §Å¾í¸Ùõ ¯Õô¦ÀüÚÅ¢ð¼É ±ýÀ¾üÌ ±ó¾ ¬¾¡ÃÓõ þø¨Ä.

þó¾ ¿¡ýÌ ¬Ã¢Â §Å¾í¸Ùõ ´§Ã ¸¡Äò¾¢ø ±Øó¾¨Å ±ýÚ ±ó¾ ¬öÅ¡ÇÕõ þÐŨà ÜÈÅ¢ø¨Ä.

¦¾¡ø¸¡ôÀ¢Â÷ ¸¡Äò¾¢ø ´Õ §Å¾Á¡ÅÐ «¨ÁóÐŢ𼾡 ±ýÀ¾ü§¸ ¬¾¡ÃÁ¢øÄ¡¾§À¡Ð "¿¡ýÁ¨È" ±ýÀÐ ¿¡ýÌ ¬Ã¢Â §Å¾í¸¨Çì ÌÈ¢ò¾ ¦º¡ü¦È¡¼÷ ±ýÚ ¦¸¡ûžüÌ ±ýÉ ¬¾¡Ãõ ¯ûÇÐ? ´ýÚÁ¢ø¨Ä.

Á¨È ±ýÈ ¦º¡ø ÀÄ ¦À¡ÕÙ¨¼Â ¦º¡ø. ¬Ã¢Â §Å¾ò¨¾ ÁðΧÁ ÌÈ¢ìÌõ ¦º¡ø «ýÚ.

¿¡ø ±ýÈ ¦º¡øÖõ ¿¡ýÌ ±ýÈ ¦À¡ÕÙ¼ý À¢È ¦À¡ÕÙõ ¯¨¼Â ´Õ ¦º¡ø. ±É§Å ¿¡ø ±ýÀÐ ±ñÏô ¦À¡ÕÇ¢ø¾¡ý ÅçÅñÎõ ±ý§È¡÷ «Ú¾¢Â¢ø¨Ä. ±ØòÐ, ¦º¡ø, ¦À¡Õû, ¡ôÒ ±ýÈ ¿¡ýÌ "ШÈ"¸¨Ç§Â¡ (disciplines or sub-disciplines) À¢È («Èõ ¦À¡Õû þýÀõ ţΠ±ýÛõ) Шȸ¨Ç§Â¡ ÌÈ¢ò¾¢Õì¸Ä¡õ. "¿ÃõÀ¢ý Á¨È " ±ýÚ þ¨º á¨ÄÔõ ¦¾¡ø¸¡ôÀ¢Âõ ÌȢ츢ýÈÐ.

"¿¡ýÁ¨È ÓüÈ¢Â" ±ýÈ ¦¾¡¼Ã¢ø ÅÕõ "ÓüÈ¢Â" ±ýÈ ¦º¡ø, ¸üÚ½÷ó¾ ±ýÈ ¦À¡ÕÇ¢ø ÁðÎõ¾¡ý ÅçÅñÎõ ±ýÀ¾üÌõ ±ó¾ ¬¾ÃÓõ þø¨Ä. "±Ø¾¢ ÓÊò¾" ±ýÚõ ¦À¡Õû ¦¸¡ûÇÄ¡õ. ¿¡ýÌ þÄ츽ò ШÈáø¸¨Ç ±Ø¾¢ÓÊò¾ ±ýÚ ²ý ¦¸¡ûÇÄ¡¸¡Ð ±ýÀ¾üÌ ±ó¾ ¾Á¢ÆÈ¢»Õõ ¸ÕòШà ÅÆí¸¢Ôûǡá ±ýÀÐõ «È¢ó¾¢ýÒÈò ¾ì¸¾¡Ìõ.

þýÛõ ÀÄ ¯ñÎ. ±øÄ¡ô §Àá(º¢)âÂ÷¸Ùõ ÅÃðÎõ. À¡÷ì¸Ä¡õ.


I was reading this thread today and could not read this post which is in tsc. I have edited this and rendered this in unicode for the benefit of all:

தொல்காப்பியர் காலத்தில் நான்கு ஆரிய வேதங்களும் உருப்பெற்றுவிட்டன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

தொல்காப்பியர் காலத்தில் நான்கு ஆரிய வேதங்களும் உருப்பெற்றுவிட்டன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இந்த நான்கு ஆரிய வேதங்களும் ஒரே காலத்தில் எழுந்தவை என்று எந்த ஆய்வாளரும் இதுவரை கூறவில்லை.

தொல்காப்பியர் காலத்தில் ஒரு வேதமாவது அமைந்துவிட்டதா என்பதற்கே ஆதாரமில்லாதபோது "நான்மறை" என்பது நான்கு ஆரிய வேதங்களைக் குறித்த சொற்றொடர் என்று கொள்வதற்கு என்ன ஆதாரம் உள்ளது? ஒன்றுமில்லை.

மறை என்ற சொல் பல பொருளுடைய சொல். ஆரிய வேதத்தை மட்டுமே குறிக்கும் சொல் அன்று.

நால் என்ற சொல்லும் நான்கு என்ற பொருளுடன் பிற பொருளும் உடைய ஒரு சொல். எனவே நால் என்பது எண்ணுப் பொருளில்தான் வரவேண்டும் என்றோர் அறுதியில்லை. எழுத்து, சொல், பொருள், யாப்பு என்ற நான்கு "துறை"களையோ (disciplines or sub-disciplines) பிற (அறம் பொருள் இன்பம் வீடு என்னும்) துறைகளையோ குறித்திருக்கலாம். "நரம்பின் மறைய " என்று இசை நூலையும் தொல்காப்பியம் குறிக்கின்றது.

"நான்மறை முற்றிய" என்ற தொடரில் வரும் "முற்றிய" என்ற சொல், கற்றுணர்ந்த என்ற பொருளில் மட்டும்தான் வரவேண்டும் என்பதற்கும் எந்த ஆதரமும் இல்லை. "எழுதி முடித்த" என்றும் பொருள் கொள்ளலாம். நான்கு இலக்கணத் துறைநூல்களை எழுதிமுடித்த என்று ஏன் கொள்ளலாகாது என்பதற்கு எந்த தமிழறிஞரும் கருத்துரை வழங்கியுள்ளாரா என்பதும் அறிந்தின்புறத் தக்கதாகும்.

இன்னும் பல உண்டு. எல்லாப் பேரா(சி)ரியர்களும் வரட்டும். பார்க்கலாம்.  

http://www.mayyam.com/talk/showthread.php?4255-NAAN-MARAI/page9

I had written this on 15 May 2007. posted at 9.14 pm.

another extract from the same page, I wrote:



]இதுபோது நிலவுகின்ற - ஆரிய வேதங்கள் என்று குறிக்கப்பெற்ற நான்கு எண்ணிக்கையிலான வேதங்களைத்தாம் " நான்மறை" என்ற தொல்காப்பியப் பாயிரச் சொற்றொடர் குறிக்கிறதென்பதற்கு அச்சொற்றொடருக்குப் பொருள்கூறுவோரின் நினைப்பேயன்றி வேறெந்த ஆதரமும் இல்லை. நான்மறை என்பதற்கு இரிக் வேதமுதலிய நான்கு வேதங்கள் எனின் அப்படிக்கூறுவதும் ஒரு காலவழுவாம்.
    

அம்மை அப்பன்




அப்பன்  இறைவனாக அம்மையும் ஆமென்றே
ஒப்புர வூட்டினரே ஊர்மக்கள் ---எப்புறமே
நோக்கினும் நற்சம நன்னிலை நோச்சொலால்
தாக்கினும் தக்கதிந் நாடு.






மங்கையர் தம்மை மகிழ்வுறுத்தும் சொற்களோ
எங்கும் பிறதொடர்கள் இன்மைகூர் --- பங்கமோ
நம்நாட்டில் மட்டுமோ நானிலம் மேவியதோ
பண்பாட்டில் வந்ததோ பாழ்.





இப்பாக்கள் பெண்ணியம் பற்றியவை.  இறைவனை அப்பனாக கொண்ட மக்கள், அம்மையாகவும் கொண்டு வணங்கி வருகின்றனர். இது நெடுங்காலமாகத் தொடர்வது.
ஒப்புநிலை (சமத்துவம்) வித்தில் உள்ளது, இன்னும் முழுவளர்ச்சி அடையவில்லை என்றுசொல்லலாமா?


தாய்நாடு, தாய்மொழி என்பனவெல்லாம் ஏய்ப்பு என்பர் அறிஞர் சிலர். அது எதனால்? இத் தொடர்களுக்கு மாற்றுத் தொடர்கள் இன்மையினாலா? இந்தியாவில் மட்டுமோ? உலகம் எங்கணுமோ? காரணம் பண்பாட்டில் வந்த சீர்கேடோ? இது இரண்டாவது பாவின் கேள்வி.


வியாழன், 28 ஜூன், 2012

அடுத்திருத்தல்


அடுத்திருத்தல் கருத்து அமைந்த சொற்கள்

இவை பல. சிலவற்றைக் காண்போம்.



caNTu 01 1. chaff; 2. broken chips of spoilt straw; 3. an insect damaging growing crops; 4. a preparation of opium used for smoking; 5. pole, as a boundary-mark



சண்டு என்பதன் சொல்லமைப்பும் பொருளும்.

அண் > சண் >; சண்டு
அண் >; அண்டு      > அண்டுதல்.

நெல் முதலியவற்றை அடுத்திருப்பது. உமி.
பயிர்களை அடுத்திருந்து கடிக்கும் பூச்சிவகை.
அபினுக்கு அடுத்தெழுந்து புகைபிடிக்கப் பயன்படுவது. (derived matter)
ஓர்  நிலத்தை அடுத்திருக்கும்  வேலி.
வைக்கோல் உடைந்தால், முறிந்தால் உண்டாகும் அடுத்த நிலையில் இருக்கும் பொருள்.

புதன், 27 ஜூன், 2012

Getting closer in yesteryears, what it meant!

சந்தர்ப்பம் என்பதை வேறு வகையில் சொல்லவேண்டுமானால், "அமைந்தது" என்று சொல்லலாம்.சந்தர்ப்பம் இல்லை என்பதை "அமையவில்லை" என்றோ, வாய்ப்புக் கிட்டவில்லை என்றோ, அல்லது வேறு வழிகளிலோ சொல்லலாம்.


அமை > சமை > சம்.
அம் > அமை.
சம் > சமை.
(அம்) > (சம்). அம்=சம்.


அகர முதலான பல சொற்கள், பின் சகர முதலாகிவிட்டன.


எ-டு: அமண் > சமண்.


இன்னொரு சொல்லைக் கவனிப்போம்.




அண் > அண்டு.> அண்டுதல்.


அண் >அண்மு > அண்முதல்.


அண் > அணு > அணுகு > அணுகுதல்.


அண்டு > சண்டு > சண்டை.


அண்டை > சண்டை.


அண்டி, அணுகி, அடுத்து நின்றுதான் சண்டை போடுகின்றனர்.


கலந்து , கைகலந்து கலகம் உண்டாவதில்லை?

திங்கள், 25 ஜூன், 2012

Long live the tireless worker


எந்த நாளும் இனிது வாழ்க!

அதிகாலை எழுந்து,
பகலெல்லாம் உழைத்து,
மாலையில் ஓய்கின்றான்,
ஆண்டுகள் பலப்பல,
அதைச் செய்தான் பிறிதில்லை
அயர்வேதும் உறுதலின்றி !

உழைப்பாளி ஓய்ந்த நாள்
ஒப்பிலாத் துன்பம் ஏய்ந்தநாள்
உழைத்துக்கொண்டே இருந்தால்,
உலகினர் இன்பம் எலாம் வாய்ந்தே
ஒப்புயர்வு இலாது உலவுவர்,
அந்த உழைப்புக்குச் சொந்தக்காரன்
எந்த நாளும் இனிது வாழ்க!

வெள்ளி, 22 ஜூன், 2012

வேய்ங்குழல் நாதம்


வேய்ங்குழல் நாதம் தாங்கியே வீசும்
வீங்கிள வேனில் தருதென்றல்
விண்ணிலும் மண்ணிலும் விரிந்திடும் தண்ணருள்
பண்ணினைத் தந்தவன் கண்ணனவன்.


ஒரு நண்பர், கண்ணனைப் பற்றிச் சில வரிகள் தரும்படி வேண்டினார். அவருக்காக.....
I  am happy that he cheered up after reading these lines.


      

சீனக்கண்


     

சின்னக்கண் அழகன் என்றால்
சீனனைச் சொல்ல வேண்டும்.
என்பக்கம் சிரிக்கும் போதில்
இமை மூடிக் கண்மறைக்கும்.

வெளிறிய மஞ்சள் மேனி
வேண்டுமோ குளிக்க மஞ்சள்?
உளறிய அசை ஒவ் வொன்றுக்கும்
உட்பொருள் வாஞ்சை கெஞ்சும்.       

விளம்பரத் தந்திரங்கள்


      விளம்பரத் தந்திரங்கள்.

தன்பற்றியே யாரும்
பேசும்படி செய்தோன்,
பண்பட்டு உயர் தன்விளம்பரத்தின்
விண்தொட்டோன்!
சிக்கினோன் அன்னோன் எனப்பட்டால்
சிக்கினோன் அன்னவனோ?
மற்றோரோ
யார்?


குறிப்பு: பண்பட்டு உயர் தன்விளம்பரம் = மிகவும் பண்பட்ட அல்லது வளர்ச்சி முற்றிய நிலையடைந்த சுயவிளம்பரத் தந்திரத்தைக் குறிக்கிறது இத்தொடர். அவன் பண்பட்டானோ இல்லையோ, அது பண்பட்டுவிட்டதென்பது கருத்து.       

A partial directory reproduced for your reading

Screen-reader users, click here to turn off Google Instant.
Search
About 309 results (0.23 seconds) 




      santharppam.


          (தருணம், வருணம் என்பவற்றின் சொல்லாய்வுகளை
http://bishyamala.wordpress.com/  (BI's SPACE) சென்று கண்டுமகிழ்க.)
type and click: http://bishyamala.wordpress.com/2012/06/17/varunam-tharunam-etymology/
We shall continue with our enquiry into tharuNam etc., We now look into a related word.

இதை சம்+தர்ப்பம் என்று பிரிப்போம்.

சம் என்ற முன்னொட்டு இருக்கட்டும்.

தர்ப்பம் என்பது உண்மையில் தருப்பம் என்பதன் திரிபே. தரு>தருதல்; தரு > தருப்பு> தருப்பம் > தர்ப்பம்.

அதாவது: தரு +பு + அம்.

இப்போது, தருணம் என்பதில் உள்ள  "தருதல்"  கருத்துடன் ஒப்பு நோக்கவேண்டும். தொடர்பு புரியும்.

மாற்றுவிளக்கங்கள் ஒருபால் நிற்கட்டும்.


===============================================================

Notes:

1. "சன்" என்பதற்கு,  சங்கதத்தில் பல பொருட்சாயல்கள்:
"san" --  to gain for another , procure , bestow , give , distribute RV. ; to be successful , be granted or fulfilled or to wish to acquire or obtain ; to wish to procure or bestow RV. AV.

2  சம் என்ற முன்னொட்டு:
            "sam"--  prefix: with , together with , along with , together , altogether (used as a preposition or prefix to verbs and verbal derivatives , like in Gk. Lat. {con} , and expressing `" conjunction "' , `" union "' , `" thoroughness "' , `" intensity "' , `" completeness "' e.g.{saMyuj} , `" to join together "' ; {saM-dhA} , `" to place together "' ;{saM-dhi} , `" placing together "' ; {saM-tap} , `" to consume utterly by burning "' ; {sam-uccheda} , `" destroying altogether , complete destruction, note: " for many glorious waters surrounded Agni "' ; it is sometimes prefixed to nouns in the sense of 2. {sama} , `" same "' ; cf. %{samartha}) RV. &c. &c.

We shall look into this later. No hurry.       

புதன், 20 ஜூன், 2012

சர்மா


      sharma, sarma, sama

சர்மா

இது ஒரு பட்டப்பெயராய் வழங்கிவருகிறது. ஷர்மா, சர்மா, ஸர்மா, சர்மன் என்று பல்வேறு வடிவங்களில் அறியப்படும் இப்பெயர், எங்ஙனம் தோன்றியதென்பதில் சிக்கல் நீடிக்கின்றது.

மகிழ்ச்சி என்று பொருள்தரும் ஒரு சமஸ்கிருதச் சொல்லில் இருந்து தோன்றியதாகக் கூறப்படினும், இஃது முடிவான கருத்தென்று கூறிவிட இயலவில்லை.

இது இப்போது பெரும்பாலும் ஸ, ஷ என்ற முதலெழுத்தைக் கொண்ட சொல்லாக எண்ணப்பட்டாலும் இது முற்காலத்தில் "ச" என்றே தொடங்கியது என்று எண்ணத்தோன்றுகிறது.

சர்மண்வத் என்பது ஒரு ஆற்றின்பெயராய் இருத்தலின், இவ் ஆறு ஓடும் பகுதிகளில் வாழ்ந்தவர்கள் என்று அடையாளம் கூற அமைந்த பெயரென்று கருதவும் இடமுண்டு.

சர்மன் என்பது தோலைக்குறிப்பது. நல்ல தோல் நிறமுடைய கூட்டத்தினர் என்றும் பொருள்பட்டிருக்கலாம்.

சர்மவத் என்பது தோலை அணிந்துகொண்டோர் என்றும் பொருள்தரும். போர்மறவரையும் குறிக்கலாம்.

சர்மா என்பது தமிழ்ச்சொல் என்று கூறவியலவில்லை. சமஸ்கிருதத்தில் ஆற்றங்கரை வாசி என்றோ போர்மறவர் என்றோ குறிக்க எழுந்த பெயராகலாம்.

ச, ஷ, ஸ திரிபுகள் இயல்பானவை.       

Interchangeability of certain Tamil words


        னகர ஒற்றில் முடியும் பல சொற்கள், மகர ஒற்றோடும் முடியும்.

இதற்குதாரணம்:

குணன் - குணம்.#
அறன் - அறம்
திறன் - திறம்

இன்னும் மணம் - மணன் என்றும் அமையும்.

இப்படி முடிதல் வேறு மொழிகளிலும் உள்ளது. சீன மொழியில், குவான் இன் என்பது குவான் இம் என்றாதல் போல.

நிலம் - நிலன்.
புறம் - புறன்.

குறிப்பு:

# நடுவணதென்னும் ஆட்சியுங் குணனும் காரணமாகப் பெற்ற பெயர்.-- நச்.உரை. தொல், அகத்திணையியல் 2.

இஃது முன்னம் ஒருக்கால் யான் கூறியதுதான், ஆயின் சற்று விரித்துரைத்தேன்.