செவ்வாய், 30 ஏப்ரல், 2024

மேதின வாழ்த்துக்கள்

 வீட்டிலும் நாட்டிலும் வேலைகள்  செய்து 

விரிவாரி ஞாலம்   தெரிவேற்றம்  செய்தார்தம்

பாட்டை  உணர்ந்தோர்  பயன்கருதி ஏத்திய

நாட்டினர் கொண்டாடும்  மேதினமே இன்று,

வருகநன் மக்காள்  பெருகுபுகழ் அன்னார்

சருகென்றும் எண்ணா  துருகி வணங்குவம்.

அன்னவரால் இந்நகரம் தூய்மை அடைந்தது.

அன்னவரால் ஞாலம்  அலங்கோல  மேதவிர்ந்து

இன்னரும்  நல்லிடமாய் இங்கு  ஒளிர்ந்த(து.)

உழைப்போரை எப்போதும் ஓங்குயர்ந் தோராய்

இமைப்போதும் மாறாமல் ஏற்றியே போற்றுவீர்.

நம்மிறைவன் நல்லவர் என்றன்னார் போற்றுகிறான்,

தம்மை உணர்ந்தவரே தாரணி  தானுணர்ந்தார்.

வேலைகள் செய்வோர்க்    கியாதே இயன்றது

மூலையில் வைத்தொளிக்கா மூதறிவால் ஈந்திடுவீர்.

வேலனும் வேலைசெய் வள்ளி வரித்திட்டான்,

ஞாலம் பயனுற  நல்லதை இன்றுசெய்வீர்

கூலமோ  சேலையா தேனும் கொடுத்திடுவீர்.

நாளும் நலம்பெறுவோம் நாம். 


உழைப்பார்க்  உரித்தாம்நல் வாழ்த்து, பணியால்

பிழைப்பார்க்காம் ஏற்றம் இனி.



பரந்தாமன்

 பரந்தாமன் என்பது அழகிய தமிழ்ச்சொல்.

இது எவ்வாறு என்பதை இப்போது காண்போம்.

இன்னொரு மொழியில் இச்சொல் எப்படி அமைந்தது, என்ன பொருள் அதனின்று போதருகிறது என்ற இரண்டையும் கண்டபின் அதனின் மிக்கத் திறனுடைய பொருளை அதிலிருந்து கண்டு ஆன்ம நிறைவை அடைய வேண்டுமென்ற ஆவல் உமக்கு ஏற்படுமானல், அதன் எண்ணத்திலிருந்து நீங்குமுன்,  நீர் அதைத் தமிழால் பொருள் கண்டு பின் விலக வேண்டும். பற்பல ஆன்மிக நிலைகளில் தமிழ் உமக்குச் சிறந்த பொருளையும் ஆன்மிக நிறைநிலையையும் தரவல்லதாகும் என்பதை நீர் போகப்போக உணர்ந்துகொள்வீர்.

இவ்வாறு சொல்லிச்சென்றவர் அருளாளர்  அரவிந்த மகரிஷி  ஆவார்.  அவர் மாமுனிவர்.

பரந்தாமன் என்ற சொல்லில் பரம் + தாம் + அன்  என்ற சொற்கள் உள்ளன.

இதில் கண்ணன் தாமே பரம் என்கின்றான். பரம் என்றால் எங்கும் பரந்து நிறைந்துள்ள இறை.  -பேரான்மா ஆகிய நிறைவு.

ஆகவே தாமே பரம் ஆனவனே கண்ண பரமாத்துமன்  ஆவன்.

பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால் 

கள்ளம் தவிர்த்து கலந்தேலோர் எம்பாவாய்!

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.


ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

ராட்சசி ( அமைப்பு)

தமிழில் இது அரக்கி என்று வரும்.

ககரம்  சகரமாகத் திரியும்.

அரக்கி > ( அரச்சி )> ரச்ச (சி)>  ராட்சசி.

அரக்க அகி > அரக்ககி>  ராச்சசி > ராட்சசி. (இன்னொரு வழியில்)

அக(ம்)> அகி: அகமுடையாள்.

ஒருத்தி அரக்கி எனப்படுதல் அவள் அகம் காரணமாக.

ககரம் சகரமாதல்:  சேரலம்> கேரளம்; கழிகடை> கழிசடை.  பட்சி>< பக்கி.  இன்னும் பல.

குருவிக்கு பக்கங்கள் தெளிவாக உள்ளன. சிறகுகள் இரண்டு பக்கமும்.  அதனால் பக்கம்>பக்கி>பட்சி.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

இளக்காரம்

 இவ்வினிய நாளில் இளக்காரம் என்னும் சொல்லின் திறம் அறிவோம்.

முதலிற் காரம் என்னும் விகுதி போலுமோர் உறுப்பினை  அலசுவது தக்கது.

காரம் என்பதற்குக் கூறப்படும் பொருள் பல.   மிளகு அல்லது மிளகாய் முதலிய உண்துணைகளைக் கடித்தால் நாவில் ஏற்படும் உற்றுணர்வுக்குக் காரமென்பர். எரிவு தாங்காவிட்டால் சிறிது தண்ணீர் குடித்துக்கொள்வோம். தொண்டையில் சளியடைப்பு என்பது எல்லா மனிதருக்கும் ஏற்படும் நிலை.  இதை மிளகு மாற்றக்கூடுமென்னும் நினைப்பில் தியாகராச பாகவதர்கூட மிளகை வாயில் பாடிக்கொண் டிருக்கையில் போட்டுக்கொள்வார்  என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.  தமிழ் முரசு ஆசிரியராகத் திகழ்ந்த மேதகு சாரங்கபாணியார் நம் பாகவதர் சிங்கப்பூருக்கு வரவழைக்கப்பட வேண்டும் என்று முயற்சிகள் செய்தார்.  அதற்குள் அவர் காலமாகி  விட்டபடியால்,  அவருக்குப் பதிலாக அவர்தம் இளவல் கோவிந்தராச பாகவதரைக் கச்சேரியில் சிங்கப்பூரில் கேட்கும் நற்பேறு கிட்டியது.  காந்தியைப்போல் ஒரு சாந்த சொரூபனை என்ற பாபநாசம் சிவன் பாடலை பழைய விக்டோரியா நினைவு மண்டபத்தில் அழகாகப் பாடினார்.  ஆனால் மிளகு வாயில் போட்டுக்கொண்டாரா என்று தெரியவில்லை. காரத்தை விளக்கும் முயற்சியில் இக்கேள்விச் செய்தியை  நினைவுகூர்ந்தோம்.

ஆனால் காரம் என்பதன் அடிச்சொல்  "கார்" என்பதுதான்.  கரு> கார் என்று திரியும். கருமுகில்கள் வானில்பல தோன்றி மழை வரும் காலத்தைக் கார்காலம் என்பர்.  அழல் ( தீ ) என்ற சொல்,  அயல் என்றும் திரியும்.  இது ழகர யகரத் திரிபுவகை. வாழைப் பழத்தை வாயைப்பயம்  என்று பேசிக்கேட்டிருக்கிறோம். இது பேச்சுமொழியில் என்றாலும் எல்லாம் அந்தத் திரிபுவகைதான்.  எந்த உருவில் எங்கு தோன்றினாலும் அது நம்மிடமிருந்து தப்பிவிடக் கூடாது. இதில் என்ன ஒரு வசதி என்றால்  வெண்பா எழுதும்போது யகர எதுகை தேவைப்பட்டுப் பொருத்தமாக வந்தால் அழல் என்பதற்கு நேரான பொருண்மையுள்ள சொல்லை அயல் என்ற உருவில் திணித்துப் பாட்டை எழுதிவிடலாம்.   இப்படி எழுதினால் இக்காலத்தில் புரிந்துகொள்வார் குறைவு என்பது வேறு இடர் ஆகும்.  குழம்பு காரமாகிவிட்டது என்று சொல்வதற்கு அயல்கிறது என்று கூறும் பேச்சு இப்போது மறைந்துவிட்டது. இதைக் குறிக்க ஆங்கிலத்தில் வரும் acrid என்ற சொல்லும் அண்மையில் யாரும் பயன்படுத்திக் கேட்கவில்லை.  Pungent என்னும் சொல் அணிமை உடையதாகலாம்.  சுவை, மணம் இரண்டையும் இந்தப் pungent என்னும் சொல் தழுவுகிறபடியால்  காரம் என்னும் ஒருசார் பொருண்மைக்கு இச்சொல் ஈடாகலாம்.

அலங்காரம் என்ற சொல்லிலிலும் காரம் என்ற பின்னொட்டு உள்ளது.  ஆனால் இது அழகாக்கப்பட்டது என்ற பொருள் உள்ள சொல்.  இதில் வரும் அல என்ற சொல் அழ(கு) என்பதற்கு நேர்.  பழம் என்பதும் பலம் என்பதும் பழுத்தது என்ற பொருளில் ஈடானவை.  ழ <> ல திரிபு. ஆயினும் அலகு என்ற சொல் பல்பொருட் சொல். அழகு என்பதற்கு நேரானதன்று. நம் ஆய்வு காரம் என்பதே ஆதலின், அலங்காரம் என்பதில் நாம் இதுவரை கருதிய காரமெதுவும் இல்லை,

கரி(~த்தல் )  என்னும் வினையடியாகத் தோன்றும் பெயர்ச்சொல்லான காரம் என்பது கரி + அம் என்ற அடியும் விகுதியும் இணைய முதனிலை நீண்டு காரம் என்று வரும்.  அது காரச்சுவை குறிக்கும் என்பது அறிக.  ஆனால் அலங்காரம், இளக்காரம் என்பவற்றில் வரும் காரம் என்ற ஈறு,  இதனுடன் தொடர்பு உடையதன்று.

கடுமையான பேச்சு  என்பதைக் காரமான பேச்சு என்போம்.  காரசாரமான வாதம் என்ற வழக்கும் உள்ளது.  இதில் வரும் காரமும் இளக்காரம் என்பதில் வரும் காரமும் ஒன்றன்ன்று.

இளக்காரம் என்ற சொல் பேச்சு வழக்கில் வரும் சொல்.  இளக்கு என்பதனடியாகப் பிறந்த வினைச்சொல் மற்றும் பிறவும் உள்ளன. மூலவினை இளக்குதல் என்பதே.  கடினம் குறைத்தல் என்பதே இதன் பொருண்மையாகும். இங்கு காரம் என்னும் துணைச்சொல் அல்லது விகுதி இல்லை. 

இளக்கு + ஆர்  + அம் >  இளக்காரம்  என்பதே சரியாகும்.  ஆர்தல் இதன் பொருள் நிறைதல்,  முழுமைப்படுதல் என்பதே.   இள என்ற அடியுடன் கு என்ற வினையாக்க விகுதி இணைந்து இளக்கு என்ற வினை அமைகிறது என்று கண்டுகொள்க. அதன் பின் வருவன ஆர்  மற்றும் அம் என்பனவே  ஆகும்.

வலக்காரம் என்ற சொல்  இதுபோல் தோன்றினாலும்  வலம் + கு + ஆரம் என்று வருவதே  ஆகும்,   வலக்குதல் என்ற வினை அமையவில்லை.  இங்கு வந்த கு என்பது ஓர் இடைநிலையாகிறது  வன்மை நிலைக்கு நிறைவு ஆதல் என்று அறிந்துகொள்க. காரம் இங்கு ஒரு சொல்லீறு அல்லது விகுதி என்றால் அது கு என்ற சேர்தல் குறித்த சொல் இணைந்த இறுதியே ஆகும்.  இவ்வாறு கு என்ற இடைநிலை பலவாறு பல சொற்களில் கலந்துள்ளது.  இவற்றுள் பெயர் வினை என்று வேறுபாடில்லை.  எடுத்துக்காட்டு:  செய்+ கு+ இன்று + ஆன்,  செய்கின்றான்.  கின்று என்பது சேர்பிரிப்பினால் வந்த புது இடைநிலையாகிறது.  ஆனால் இவ்வாறு செய்தல் வசதியாய் இருக்கக்கூடும்.

எது உணவு ஆகுகிறதோ,  அதுவே  ஆகாரம்.  ஆர்தல் என்றால் உண்ணுதலும் ஆகும்.   ஆதல் என்பதே மூலவினை.   ஆ -  வினை; கு-  பழந்தமிழ்ச் சொல். இணைவு குறிக்கும்,   ஆர் - உண் என்பது,  அம் விகுதி .  ஆ+ கு+ ஆர்+ அம்  > ஆகாரம் இதன் பொருள் உணவு. ஆ+ காரம் என்று பிரித்துக்கொள்வது ஒரு விரைவுவசதியாய்  இருக்கலாம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

திருத்தம் 28042024  1817 சில எழுத்துமாற்றங்கள்

சரிசெய்யப்பட்டன.





வியாழன், 25 ஏப்ரல், 2024

பணம் சேமிக்கும் வழிகளில் ஒன்று.

 கதவைக் கொஞ்சம் திறந்து வைத்தால்

காற்றின் ஓட்டம் மிகுமே!--- நீர்

மிதவை போலும்  வருமோர் இன்பம்

மெத்த மகிழ்வே தருமே--- குளிர்

உதவும் ஊட்டி கொள்ளும்  அளவில்

ஒண்மின் ஆற்றல் குறுகும்---நாளைச்

சிதைவில் திறத்தில் செலவும் குன்றிச்

சேமிப் பாகும் பணமே.



உரை:

கதவைக் கொஞ்சம் திறந்து வைத்தால் காற்றின் ஓட்டம் மிகுமே!--- கதவைக் கொஞ்சம் நீம்பலாக வைத்துவிட்டு எதிரில் உட்கார்ந்துகொண்டால்  காற்றோட்டம் ஏற்படும்;  நீர் மிதவை போலும்  வருமோர் இன்பம் மெத்த மகிழ்வே தருமே--- படகில் செல்வதுபோல் காற்றின் இன்பம் மகிழ்ச்சியைத் தருகிறது; குளிர் உதவும் ஊட்டி கொள்ளும்  அளவில் ஒண்மின் ஆற்றல் குறுகும்--- குளிரூட்டி ( ஏசி) மின்சாரத்தை எடுத்துக்கொள்வது குறைந்துவிடும்; நாளைச் சிதைவில் திறத்தில் செலவும் குன்றி சேமிப் பாகும் பணமே -  மின்சாரக் கட்டணச் செலவு குறைந்து பணம் சேமிப்பு உண்டாகும் என்றவாறு.

சிதைவில்:  சிதைவு இல்.  சேதம் அல்லது மாறுதல் இல்லாத.  குளிரூட்டி - ஏசி என்னும் குளிர் இயக்கக்கருவி.

நீர்மிதவை போலும் வரும் ஓர் இன்பம் -  மிதவையில் செல்லும்போது வரும் தென்றலின் இன்பம். இங்கு: படகுச்செலவின் இன்பம்.

சேமிப்பு<  சேர்மிப்பு<  .... இச்சொல்லில் இர் மறைந்து சொல் உருவானது.

வாயு என்ற சொல்லின் பொருளகற்சி.

 ஆரியன் என்ற சொல் தமிழ்ச்சொல்,  அஃது ஆர்தல்,  பொருள்:  நிறைதல் என்ற சொல்லிலிருந்து வந்தது என்பதை முன்னர் சொல்லியுள்ளோம். ஆனல் வரலாற்று ஆசிரியர் சிலர் இச்சொல் எங்கிருந்து வந்தது என்று அறிந்தர்களில்லை. ஒருவேளை arable என்ற சொல்லோடு தொடர்பு உளதோ என்று அயிர்த்தனர். ( சந்தேகப்பட்டார்கள்). இந்தச் சொல்லும் "ஏர்"  ( ஏர் உழவு) என்ற தமிழ்ச்சொல்லுடன் தொடர்புடையது. சுமேரியா முதலிய இடங்களிலும் தமிழ் வழங்கியுள்ளபடியால்,  அங்கிருந்து தமிழ் பரவுவது எளிது.  ஆனால் ஆரியன் பற்றிய வரலாற்று  ஆய்வுகளில் ஆரியர் என்போர் நாடோடிகள் என்று கூறப்பட்டுள்ளதால்,  அவர்கள் ஏர் உழுதனர் என்று கதை எதுவுமில்லை.  ஆரியன் என்பது ஒரு தமிழ்ச்சொல். இதைத் தமிழ் மூலமாகவே அறியவேண்டும்.

வாயு என்பது தமிழ்ச்சொல் ஆகும். இது சங்கப்பாடல்களில் இடம்பெறவில்லை என்று கூறினாலும், இது வாய் என்பதனடியாக எழுந்த சொல். வாயினால் ஊதுவதுதான் வாயு என்னும் காற்று. பின்னர் நிலத்திலிருந்து எழுந்து வெளிப்படும் காற்றும் வாயு என்று பொருள்விரிவு கண்டது.

உ என்பது முன்வருதல் குறிக்கும் சுட்டடிச்சொல்.

https://sivamaalaa.blogspot.com/2017/06/blog-post_6.html

சொடுக்கி வாசித்து அறிக.

வாய் என்பதற்கு இடம் என்ற பொருளும் உண்டு, எவ்விடத்திலும் வரும் காற்றையும் வாயு என்பதில் பொருள் மாறுபாடு எதுவும் நேர்ந்துவிடாது.

வாயூது என்பதன் இறுதி எழுத்து மறைந்த சொல்லாகக் கருத ஏற்புடைமை உளதாதல் அறிக.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.


புதன், 24 ஏப்ரல், 2024

வாசுகி - பெயர், மற்றும் பாம்பு என்றால் என்ன?

 வாசுகி என்பது ஒரு பாம்பின் பெயராகவே  நம் நூல்கள் கூறுகின்றன.  இது கிழக்குத் திசையில் இந்தப் பூமியைத் தாங்கிக்கொண்டுள்ளது என்று இந்நூல்களின்படி நாம்  அறிகிறோம்.

இதுபோன்ற சொற்கள், நம் காலத்திற்கும் முன்னரும்,  இவை கூறப்பட்டு  நமக்குக் கிடைத்துள்ள நூல்களின் காலத்திற்கு முன்னும் இருந்த நூல்களிலிருந்து மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு நம்மை வந்து எட்டியுள்ளன.  அம் மிக்கப் பழைய நூல்களில் இருந்த சொற்களைப் பெயர்த்தெழுதியவர்கள் அச் சொற்களை அவர்களிடம் அப்போதிருந்த பதங்களைக் கொண்டே சொல்லவேண்டியதைப் புனைந்திருக்க வேண்டும்.  பாம்பு என்ற வுடன் இப்போது பக்கத்திலுள்ள காட்டில் இழைந்து திரியும் பாம்பு வகையைக் குறிப்பதாகக் கொள்ளுதல் பொருந்தாமல்  முடியும்.

எழில்மலை என்ற ஒரு மலைப்பெயரை  எலிமலை என்று மொழிபெயர்த்தனராம்.  அப்புறம் அந்த நாட்டுவேந்தனையும் மூஞ்சூறு இனத்தவன் என்று கூறிவிட்டனர்.  இதுபோன்ற தவறுகள் பெயர்த்தெழுதுவதிலும் அதை வாயித்து உணர்ந்து கொள்வதிலும் ஏற்படாமல் காத்துக்கொள்ளவேண்டும். நாமும் இங்கு முயல்வோம்.

பூமியைத் தாங்கிக்கொண் டிருக்கும் பாம்பு  என்பது புறப்பாகம் என்று பொருள்படவேண்டும்.

பாகம் : இது இடைக்குறைந்து,  பாகம்> பாம்  ஆகும்.

புறம்  என்பது, ஓரெழுத்தால் குறிக்கப்பட்டது,  பு  - புறம் அல்லது வெளி,

ஆகவே புறப்பாகம் என்பது சரியாகவருகிறது.

பாகம் புறம்,  பாம் + பு >  பாம்பு  ஆகிறது,  ஒரு நெடும்பாகம் என்பது பெறப்படுகிறது,

வாய் +  உ + கு + இ என்பவை வாயுகி  ஆகும் வாய் - இருக்கும் இடத்தில் முன் வந்து  சேர்ந்து இருப்பது என்று சரியாக வருகிறது,  இதிலுள்ள யகரம்  சகரம் ஆகும் என்பது திரிபு விதி.   ஆகவே வாயுகி என்பது வாசுகி ஆயிற்று.

வாய் என்ற  பழந்தமிழ்ச் சொல்லுக்கு இருக்கும் இடம் என்று பொருள்.

இதை இப்போது பறந்துபோய் பார்க்க முடியாவிட்டாலும் எதுவும் முரணானது இல்லை என்று அறிக.

அது ஒரு நீண்ட தட்டாக இருக்கலாம். பூமியில் மேலோட்டில் பல தட்டுகள் உள்ளன.

வாசுகி என்றால் ஒரு பாம் பு. நீங்கள் கண்ட பாம்பு  அன்று.  பாம் பு - பாகம் புறத்தது.  புறத்தே உள்ள பாகம்.

பாகம் என்பது பாம் என்று இடைக்குறைந்தது.

பாம் கு> பாங்கு, இதிலும் பாகம் பாம் என்றே ஆகிக் கு விகுதி பெற்றது.

வணக்கம்

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

திருத்தம்: 24042024 1248

ஞாயிறு, 21 ஏப்ரல், 2024

The name Ranjan, Ranjani

 ரஞ்சன், ரஞ்சனி என்ற பெயர்கள் பலருக்கு உள்ளன,

நிறைந்தவன் >  நிறைஞ்சவன்.  இங்கு த என்பது ச என்று மாறிவிட்டது.   இது பேச்சுமொழித் திரிபு.

நிறைஞ்சவன் >  நிறைஞ்சன்.> நிரஞ்சன்.  

2ம் சொல்லில் றை - ர ஆனது  முதலாவது ஐகாரக் குறுக்கம், அடுத்து  த- ச திரிபு.  தனி>சனி போல.

நிரஞ்சன் >  ரஞ்சன்.  நிரஞ்சனி > ரஞ்சனி.   ( இது முதற்குறைப்போலி,  நிகரம் கெட்டது ).  ரகரம் முதலாகாது என்ற தொல்காப்பிய முனிவரின் விதியை மீறிய திரிபு.

உதாரணம்:  நிரம்ப >  ரொம்ப.

நீர் அங்கன் > நீரங்கன் > ரங்கன் ( கடவுட் பெயர்).

நீரின் அமிசம் ( அம்சம்) ஆன தேவன்.)

வேறு எழுத்துக்களிலும் வரும்:

உரு ஒட்டி >  உரொட்டி >  ரொட்டி.  ( ஓர் உருவாகச் செய்து சூடேற்றிய இருப்புத் தட்டில் ஒட்டி ஒட்டிச் சமைத்துச் [ சுட்டு ]எடுப்பது ).

ஒரு குழிவுள்ள இரும்புச் சட்டியில்  பிசைந்த மாவை நிறைத்து,  சூட்டில் ஒட்டி எடுப்பது )

நிறை ஒட்டி > நிரொட்டி > ரொட்டி  எனினுமாம்,

ரொட்டி என்பதை  லொத்தி என்பது சீனர்களின் பேச்சுத் திரிபு.  லோ தீ என்று பொருள்கூற அவர்களுக்கு வசதி ஆகிவிடுகிறது.  ல - ர திரிபும் உள்ளது.

மூலச்சொல் திரிந்தால்  றகர வருக்கம் ரகர வருக்கமாகித் தன் வன்மையை இழந்துவிடும்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு: பின்.


சனி, 20 ஏப்ரல், 2024

சாமியைக் கும்பிடுதல் தமிழர் பண்பாடு

 இங்குச் சில ஆய்வுரைகளை நீங்கள் அடைந்தறியும் பொருட்டு கீழே குறிப்பிடுகிறோம்.  சொடுக்கி வாசித்து அறிக. நீங்களே தாங்களாகவே தேடிக் கண்டுபிடிப்பது கடினம்.  ஆகையால் இது இங்கு பதிவுபெறுகிறது.

1. https://sivamaalaa.blogspot.com/2019/02/blog-post.html

சாமி என்பது எப்படி அமைந்த சொல்.

2. https://sivamaalaa.blogspot.com/2019/12/blog-post_9.html

சாமி  இன்னொரு பொருள்

https://sivamaalaa.blogspot.com/2017/06/go-to-heaven-now.html

சொர்க்கத்தைத் தாக்கிய  அறிவாளிகள் சிலர்

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


வெள்ளி, 19 ஏப்ரல், 2024

விதிநிரல் : மிரட்டு - விரட்டு

 மிரட்டிய பின்னும் மிரட்டப்பட்ட மனிதன் அஞ்சி ஒடுங்கிய பின்னுமே அந்த மனிதனைத் துரத்திவிட முடிகிறது  

ஆகவே:

மிரட்டு ( மி )  >  விரட்டு.

இவ்வாறு சொற்கள் அவற்றின் தொடர்பொருள் நிரலுடன் தமிழில் அமைந்திருப்பது கண்டு வியக்கத் தகுந்ததாய் உள்ளது.  இதுபோலும் நிகழ்வு நிரலை யாம் ஏனைச் சொற்களிலும் கண்டுள்ளோம்.  ஆங்காங்கு எழுதியும் உள்ளோம்.

இது மிஞ்சு> விஞ்சு என்ற விதிநிரல் படியான  திரிபுவகையாகும், 


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

வியாழன், 18 ஏப்ரல், 2024

அ/திருஷ்டம் திட்டம் [ கேள்விக்குப் பதில்]

முன் இடுகையில் எழுப்பிய கேள்விக்கான பதிலை இங்குக் காண்க:

 இங்கு தெர் என்ற அடிச்சொல்லிலிருந்து தொடங்குவோம். இதுவே எளிதாகவும் சுருக்கமாகவும் முடிப்பதற்குரிய வழி.

தெர் >  தெரி >  தெரிதல்.

தெர் >  தெர் + உள் > தெருள்.  ( உள் என்பது விகுதி,  எ-டு:  கடவுள் ).

தெருள் > தெருட்டு >  தெருட்டுதல்.   தெளிவாக்குதல்.

பூசைமொழியில் இது மாற்றப்பட்டது:

தெருட்டு > திருட்டம் > திருஷ்டம்.

அதி + திருஷ்டம் >  அதிருஷ்டம்  :  மிகத் தெளிவான நிலை.  நற்பேறு உண்டான நிலை.   உயர்ந்த காட்சி பெற்ற தன்மை.

இது உண்மையில் தாயுமானவர் பெற்றதுபோலும் இறுதிக் காட்சி. சிலரே அடைவது, பிறரால் அடையமுடியாதது.  பணத்தை அடைவது அன்று. பணம் பிணத்துக்கு ஒப்பானது,  நிலையானது அன்று, 

திருஷ்டாந்தம் -  தெளிவுபடுத்துவது. சான்று. விளக்கம், எடுத்துக்காட்டுகள்.

திட்டம்: இது இடுகை இன்னொன்றில் விளக்குவோம்.

இங்குச் சொடுக்கி வாசிக்கவும்:

https://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_31.html

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்.


புதன், 17 ஏப்ரல், 2024

அதிருஷ்டம் என்பதன் அமைப்பு.[கேள்வி]

 இன்று அதிருஷ்டம் என்ற பதம் கணித்தறிவோம்.

திருஷ்டம் என்பதனோடு  அ என்ற எதிர்மறை முன்னொட்டு சேர்க்கப்பட்டு இச் சொல் புனையப்பட்டுள்ளது. இந்த அகரத்தை விலக்கிவிட்டு, திருஷ்டம் என்பதனைப் பல்கலைக்கழக அகரவரிசையில் தேடினால், கிடைக்கவில்லை. வடவெழுத்தை, தொல்காப்பியமுனி சொன்னதுபோல் விலக்கிவிட்டு, அதற் குரிய எழுத்தைப் போட்டு,  திருட்டம் என்றாக்கினால்  அதுவும் கிடைக்க வில்லை. ஆகவே அது தமிழாகிவிடும் என்று முனிவர் நமக்குச் சொன்னபடி, ஒன்றும் நடக்கவில்லை. இப்படித் தேடியது கிடைக்காவிட்டால்தான் மகிழ்ச்சி மேலிடுகிறது.

இது திருட்டம் என்று வந்துவிட்டாலும், திருட்டினுடன் தொடர்பு உடையசொல் அன்று.  திருட்டு அம் என்று பிரித்து  ஆனந்தம் கொண்டாட முடியவில்லை.

அ என்பது அல்லாமை என்றால்,  திருட்டல்லாமை என்பது மகிழ்ச்சிக் குரியது தான்.  நம் பொருள் திருடப்படாமை ஆனந்தம் தானே?  ஆகவே சொல்லின் பொருள்  வந்துவிட்டது  எனலோமோ?

திருட்டில்லாவிடில் ஆனந்தமே. நம்மை அறியாமல் மனத்தில் பொங்கும் ஆனந்தமே.

என்னை  அறியாமல் மனம் கொப்பளிக்கும் ஆனந்தமே?

எண்ணமெல்லாம் வெல்லும் கனவாலே

விண்ணிலே கண்ணைவைத்த  அதிருஷ்டமே!

இங்குக்  கண்ணுறும் தொடர்பில் அடுத்த இடுகையைச்  சொடுக்கி வாசித்து உண்மை அறிக:-

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர். 

செவ்வாய், 16 ஏப்ரல், 2024

அதிசயம் என்று எதைச்சொல்வது, ஓர் ஆய்வு.

அதிசயம், வியப்பு இவற்றின் உள்ளீடுகள்


Wonder என்ற ஆங்கிலச்சொல்லின் மூலம்  செருமானிய மொழியின் அகரவரிசையில் wundran என்று தரவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால் வியத்தல்  என்னும்  பொருண்மை பற்றிய உணர்ச்சியை  அது தொடக்கத்தில் குறிக்கவில்லை என்பர். பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னரே அந்த மனவுணர்வையும் குறிக்க அது வழங்கிற்று என்று ஆங்கில வல்லுநர்கள் கூறுகின்றனர். பார்த்து அல்லது அறிந்தவுடன் புன்னகை பூக்கச் செய்வது  என்பது மூல இந்தோ ஐரோப்பியத்தில் காணப்படுகிறது. நகைப்போரும் உண்டென்று சொல்லப்படுகிறது,  இத்தகு நடப்புக்கு ஸ்மர என்ற சமஸ்கிருத்தச் சொல்லே  உதவிய ஆதி மூலச் சொல் என்று கூறப்படுகிறது.

தமிழில் ஆச்சரியம் என்ற சொல்லும் வழங்குகிறது.  இச்சொல்லில் ஆ என்பது ஆ என்னும் வியப்பொலி யெழுப்புதலைக் குறிக்கிறது.  சரியம்< சரிதல் என்பது சழிதல் என்றும் வரும் சொல்  ஆகும். சழிதல் என்பது உண்மையில் சுழிதல் அல்லது சுழலுதல் என்றும் வரும் மூலத்திற் பிறந்தது.  இது உம்மை > அம்மை என்பது போலும் உ - அ திரிபு ஆகும்.  உம்மை என்பது குறுகி உமை என்றும் ஆகும்.  ஒரு வியப்புக்குரிய நிகழ்வை அல்லது பொருளைக் கண்டவுடன் ஒருவகைச் சுழற்சி ஏற்படுகிறது.  கண்டு சுழலுதலே கண்டு மயங்குதலும் ஆகும்.  ஆகவே ஆச்சரியம் என்பது சரிதல் அல்லது சுழல்தல் என்பதே.  விழி என்ற சொல், இமைகளின் விரி என்பதே  ஆகும்.  இதிலிருந்து சழி, சரி என்ற திரிபை உணரலாம்.  வரி என்பது வழி என்று ஆயின் இரு வரிகளுக்கிடையில் இடனிருப்பதை உணர்த்துவதால் இவ்விரு சொற்களின் தொடர்பு அறியலாம்.  குரு என்பவர் ஒரு சீடர் குழுவினிடை பொலிகின்றவர்.  ஆகவே குழு மற்றும் குரு என்பவற்றின்ன் சொல்வளர்ச்சியை அறியலாம். குரு> குரவர் என்பது அவர் என்ற சொல் இணைந்த அமைப்பு  ஆகும். ஒழிதல், ஒருவுதல், ஒவுதல் என்பவற்றறின்  அணுக்கத்தினையும் அறிந்துகொள்க. வழி என்பது ஒரு வரிபோலும் நீர் ஓடுதல்.  இதிலிருந்து வழி வரி என்பவற்றின் அணுக்கத்தினையும் அறிந்துகொள்ளவேண்டும். ஆச்சரியம் என்பது ஒரு ஒப்பொலிக் கலவை ஆகும். ஒலிக்குறிப்புடன் இயற்சொல்லும் கலந்தது.

சுழலுதலும்  மருவுதலும் அசைவுகளே.   இவற்றை இணைத்தால்  சுழமரு என்று வரவேண்டும். ஒலிப்பில் இதனின் சற்று   வேறுபட்டும் வரலாம்.  சுழமரு  என்பதை ஏற்றுக்கொண்டு இதை ஸ்மர என்பதனுடன் ஒப்பீடு செய்வோம்.  மனத்துள் ஒரு எண்ணச்சுழல் உண்டாவதும் அதுபோய் உதடுகளில் மருவிப் புன்னகை யாவதும் எண்ணுவோம்.  இப்போது ஸ்மர என்பதிலிருந்து ஸ்மய்ல் என்றதும் அதன் முன்ன்னோடி வேறுபாடுகளுமான  ஆங்கிலம் உள்ளிட்ட ஐரோப்பியச் சொற்கள் உண்டானமையும் இப்போது புரிந்துகொள்ளத் தக்கதாகி விடுகிறது.வியப்பைக் கண்ட மனச்சுழற்சியும் அது உதடுகளில் விரிவதுபோலும் அசைவாகிப் புன்னகை என்று அறியப்பட்டமையும் இவையெல்லாம் இறுதியில் "ஓண்ரன்" wondrun  ஆனமையும் பொழுது புலர்தல் போல் புதுச்சொல்லாய் அங்கு ஆனமையும் தெளிவாகிவிடுகிறது.  சுழமரு என்பதிலிருந்து  சுமர என்றாகி,  அது கிளைத்து :ஸ்மர ஆனது  எப்படி என்று தெளிவாகிறது.  ஸ்மர சார (காமனின் கணைகள்),     ஸ்மர ஜ்வாலா (  காமனின் ஆசைத்தீச்சுழல்கல்), ஸ்மர ருஜம்  ( காமனின்  உணர்வுகள்),  ஸ்மர வியால ( காமனின் எண்ண அலைகள்),  ஸ்மர அர்த  ( காமனின் வருநினைவுகள்), ஸ்மர தனு (காமனின் வில் ),ஸ்மர துர்மதனம்  (காமனின்  ஏற்புடைமை இல்லாத ஆசைகள்), எனப் புனைவுகள் விரிந்தன.சுழல், மருவுதல் என்ற அடிப்படைச் சொற்கள் இவற்றுக்கெல்லாம்  ஊற்றுக்களமாய் இருந்தது. 

வியப்பு என்பதை உணர்த்த,  எது இசைந்தது என்பதே இன்னொரு கேள்வியாகும்.  அது இசையும் என்பதே அதிசையும் > அதிசயம் ஆதலின்,  எதிசைந்தது என்பது அறிவுக்கு உணவாக்கும் கேள்வியாக்கிவிடுகிறது.  வியன் என்பது பெருமை அல்லது பெரிது ஆதலின்,  வியப்பு என்பது,  விய > வியப்பு எனப்  பெருமையே குறிக்கும்,  ஆகவே பெருமையானது ஒன்று இசைந்ததே வியப்பு  ஆகிவிடுகிறது

வி என்பது விரிவு குறிக்கும் எழுத்து/  இது விர் என்ற அடிச்சொல்லின் ரகர ஒற்று மறைந்த மீதம் ஆகுவது.    வி  அ >  விய என்றால் அங்கு விரிவு என்று பொருள். இனி, விர்> விய்> விய  என்று இதனை காட்டுதலும் ஆகும்.  வி அ > விய என்பதறிக. விரிவு அங்கு என்பது. பெரிது  என்பது இரு எல்லைகளும் ஒருபுறமும் இன்னும் இரு எல்லைகள் இன்னொரு புறமும் விரிந்தாலன்றி பெருமை என்பது ஏற்படாது ஒழியும். அதனால் வி அ என்பதும் விய என்பதும் உணரப்படும்.  வியப்பின் உள்ளீடு எல்லை விரிவாகவோ அன்றி உருவம் பெரிதாகவோ இருக்கலாம்.  எல்லாம் ஒருவழியில் வேறுபாடற்றவை.  அதில் எது இசைந்தாலும் அதிசையும் ,  அது அதிசயமே. அஃது இசையும் > அதிசையும் > அதிசயம் எனினுமாம்.

சகசமாக ஒன்று இசைந்திருந்தால்  அது சகசாதியம்.  அதையும் வியக்கலாம். Someone may be able to be surprised by just the common sense displayed. செயலில் ஒன்று இசைந்திருந்தால் அதை வியக்கலாம்.  தெய்விகத் தன்மை உள்ளதென்று ஒன்றை வியக்கலாம். அஃது இசைந்திருந்தலின் அதிசையும், > அதிசயம் ஆகிறது. இதை இசைவினால் வியப்பு என்க.  புத்த சைன நூலகளில் இவற்றைக் கண்டுணர்க.

சயம் என்ற தனிச்சொல் குறைதலையும் குறிக்குமாதலால் அதி சயமென்பது குறைவினிசைதலுமாகும்,

அயக்குதலென்பது அசைத்தல்.  ஒன்று அசைதலும் வியப்பை உண்ண்டாக்கலாம்.  அய என்பது சய ஆகும் பின் அம் விகுதியினால்  சயம் ஆகி,   அதிகுறைவும் அதிசயமே.

இப்போது அதிசயம் என்பதன் தன்மையை உணர்ந்துகொண்டீர்கள்.

அதிசையும் என்ற தொடரை அஃதிசையும் என்று எழுதுவர்.  சொல்லாக்கத்திற்கு அதிசையும் > அதிசயம் என்று திரிந்து சொல்லானது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர் 

குறிப்பு:

அயக்கு-தல் >. அசக்கு-.  அசைத்தல். குன்றுக ளயக்கலின் (கம்பராமாயணம்.)

இந்த ஆங்கிலக் கவிதை கூட ஓர் அதிசயமான எழுத்துத்தான். முழுக்கவிதையையும் இங்குச் சொடுக்கி வாசித்துக்கொள்ளுங்கள். இதைப் பாடிய கவி ஒலிவர் கோல்டுசிமித்.

Beside yon straggling fence that skirts the way
With blossom'd furze unprofitably gay,
There, in his noisy mansion, skill'd to rule,
The village master taught his little school;
A................................

https://allpoetry.com/The-Village-Schoolmaster2

இதை இன்னொரு முறை வாசிப்பதும் எமக்கு மகிழ்வு விளைப்பதே. சொடுக்கிப் படிக்க இனிது, இதைப் 13 அகவையில் யாம் வாசித்தது நினைவுக்கு வருகிறது.


திங்கள், 15 ஏப்ரல், 2024

தேர்தல் முன் கணிப்புகள்

கருத்துகள்  கணிப்புகள்  கொஞ்சமோ---- சொல்லும்

கனிச்சுவை  ஆரூடம் பஞ்சமோ?

பொருத்துறார் உண்மையைப்  பொய்களில்  ----- நம்மைப்

பொய்யறியார் என்றோ புனைகிறார்?


வாக்குகள் எண்ணிட அறிகிறோம் ---- இதற்கு

வரட்டுரை  ஆக்குதல்  என்பயன்?

நாக்குக்குக் கொடுங்கள்  ஓய்வினை----  வரும்

நாள்வரையில் காக்க வாய்மையே.


ஆனை கிடக்குது பானைக்குள் ---- அதை

அறிந்துவிட் டாலென்ன பொல்லாப்பு?

தேனென்னும் தீஞ்சுவை கிட்டுமே ----  இனித்

தேசத்தார் பாங்கினில் தென்றலே.

ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

புள்ளிவிவரம் கேட்பது

 புள்ளிவிவ   ரங்களை  அள்ளித் தரத்தொடங்கின்

ஒள்ளியரென்  போரும் உறங்கத் தொடங்கிடுவர்!

சாப்பாடோ தேநீரோ சற்றே கிடைக்குமென்று

 ஏற்பா டறியா திறங்கிவந்த  ஊரார்

கடினக் கருத்துகள் ஆரம்பம்  ஆனால்

படுக்கையைத் தேடிப் பறக்காமல் கேட்டுவிடின்

பூமியில் அஃதும் இயல்பன்று  நாமிதிலே

 நேமத்தால் நன்மைகாண் போம்

-----  சிவமாலா

இதன் பொருள்:

புள்ளிவிவ   ரங்களை  அள்ளித் தரத்தொடங்கின் --- ஒரு பொதுக்கூட்டத்தில் எழுதிக் கவனித்தாலே உருப்பெற்றுக் காணத்தக்க, புள்ளி விவரங்களை வாய்மொழியாகக் கூறத்தொடங்கிவிட்டால்,

ஒள்ளியரென்  போரும் உறங்கத் தொடங்கிடுவர்!--- மிக்கச் சிறந்த நினைவாற்றல் நிறைந்த அறிவாளிகள் கூடத் தூக்கத்தில் விழுந்துவிடுவர்;

சாப்பாடோ தேநீரோ சற்றே கிடைக்குமென்ற---- கூட்டத்தில் சாப்பாடோ குடிக்கத் தேநீரோ கொஞ்சம் கொடுப்பார்கள் குடிக்கலாம் என்னும்;

 ஏற்பா டறியா திறங்கிவந்த  ஊரார்--- ஏதாவது கிடைக்கும் பார்க்கலாம் என்று கூட்டத்திற்கு வருகின்ற ஊரின் பொதுமக்கள்;

கடினக் கருத்துகள் ஆரம்பம்  ஆனால்---  கடுமை மிகுந்த பொருளியல் கருத்துகள் சொற்பொழிவில்  வரத்தொடங்கிவிடுமானால்;

படுக்கையைத் தேடிப் ---  மீண்டும் வீட்டுக்குச் சென்று படுத்துத் தூங்கவே மனங்கொள்வர்;  பறக்காமல்---  வீட்டுக்கு ஓடிவிடாமல்,

கேட்டுவிடின்--- ( அவ்வாறின்றி) உட்கார்ந்து எல்லாவற்றையும் உள்வாங்கிக்கொள்வார்கள் ஆயின்;

பூமியில் அஃதும் இயல்பன்று ---  அதுவும் எங்கும் எப்போதும் 

நடைபெறுவதன்று;

 நாமிதிலே---  நாம் இதைப் பகுத்துணர்வதானால் இதில்

 நேமத்தால் நன்மைகாண் போம்.--- இயல்பான விதிமுறைகள் கடைப்பிடிப்புகள் எவையோ அவற்றால்,    உண்மையைத் தெரிந்துகொள்வோம்.

யாரையும் குறைகூறுவதைத் தவிர்ப்போம் என்றவாறு.

நேமம் :  எப்போதும் உள்ளபடி .

Note:  The meanings have been made clear; we may need to paraphrase correctly with due 

regard to the poetic wordings. Will attend when time permits.

ஆச்சாரியன்


ஆரியன் என்ற சொல்லும் பலவழிகளில் உருப்பெறும். எடுத்துக்காட்டாக ஆசிரியன் என்பதன் இடைக்குறையாக ஆரியன் என்றாலும் அச்சொல் வந்துவிடுகிறது. ஆ(சி)ரியன் எனக்் காண்க.  வாத்தியார் அறிவாளி என்பதை ஆசிரியன் அறிவாளி என்று மாற்றிச்சொல்லி, ஆசிரியறிவாளி என்றாக்கி, அறிவாளி என்பதற்குப் பதிலாக ஆசிரியாரியன் என்று சொல்லி, ஆசிரிய+ஆரியன் = ஆச்சிரியார்யன் என்றும் பின்னும் திருத்தி ஆச்சாரியன் என்று குறுக்கினால் இச்சொல் வந்துவிடுகிறது. வேறன்று அது.

ஆசிரிய ஆரியன்  
ஆச்சாரியன்.

ஆசிரிய என்பதில் ஆசி என்பதை மட்டும் எடுத்துக்கொள்க.  தமிழில்  ஆச் என்பது ஏற்புடைய சொல்லுரு  அன்று.

ஆ(ச் இ) ஆரியன்.  இவற்றுள் இ என்பதை விடுக.
ஆச்  ஆரியன்
ஆச்சாரியன்,  ஆச்சாரிய  என்றும்   வரும்.  பூசைமொழியில் அன் என்ற ஆண்பால் ஒருமை ஒழிக்கப்பட்டது.   இல்லை.

மேற்கண்டவை ஒலிமுறையில் விளக்கப்பட்டன.  தமிழ்ச் சந்தி முறையிலன்று. இலக்கணத்தின்படியுயன்று, இதுபோலும் சொல்லாக்க இலக்கணம் தமிழ்நூல்களில் சொல்லப்படவில்லை. இதற்கு என்ன காரணம்.  ஏனென்றால்  தமிழ் இலக்கணம் தமிழைத் திருத்தமாகப் பேசவும் எழுதவும் உதவும் இலக்கணம்.  சொல்லாக்கம் சிறிதளவே சொல்லப்பட்டது. சொற்களை ஆக்கிக்கொள்வதற்கு உதவ உங்களுக்குப் போதிக்கப்படும் கலையோ தந்திரமோ அன்று.

தமிழ்ப் புணரியலின்படி,  ஆச்சாரியனாசிரிய  னென்று  வரவேண்டும்.  சொல் மிக நீண்டுவிட்டது. தமிழ் தமிழ் என்று  அரசியலில் உள்ளவர்கள் பெரும்பாலும் கூவுதலின் மூலமாகத் தங்கள்  அக்கறையை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.  தமிழைப் படிப்பவர்கள் குறைவு. இந்த நிலையில் பத்து எழுத்துக்கள் உள்ள ஒரு சொல், சரியன்று என்று  ஒதுக்கப்படலாம்.   சொற்களைக் குறுக்கிச் சிறு புனைவுகளாக்கினால் எடுத்தாளுவதற்கு எளிமையாக  விருக்கும்.  யாம் எழுதும்போதும் நீண்ட சொற்கள் வந்துவிடுகின்றன.  இத்தகைய நிலைகளைக் கருதித்தான் இடைக்குறை முதலிய வசதிகள் கவிதை எழுதுவோருக்கு உதவ உண்டாக்கப்பட்டன. இவையே கருதித்தான்  பண்டை நாட்களில் சொல்லாக்கத்திலும் இந்நெறி கடைப்பிடிக்கப்பட்டது,  தமிழ்க் கவிதைகளில் இசை முதன்மை வாய்ந்தது ஆதலின் அது முறியாமல் ஒழுக, சொற்கள் சிறியவாக்கப்பட்டன.   எ-டு:  கற்றதனால்  ஆய பயனென்கொல்?  என்ற தொடரில்  ஆகிய என்று எழுதினால் இசை முறிந்து வெண்பா கெடும். பண்டை நாட்களில் நெடுஞ்சொற்கள் வழக்கிலும் அருகியே வந்தன. பூசைமொழி அன் விகுதியையும் கொள்ளவில்லை யாதலின்,  ஆச்சார்யா என்று மேலும் சுருக்குண்டது.

பூசைமொழியிலும் சொற்கள் அவர்களின் முயற்சியையும் கடந்து,  நீண்டுதான் விட்டன.  இதனால் கரட்டியல்வு மிகுதியாகவே,  குரு நானக் முதலியவர்கள் குருமுகி முதலிய மொழிகளைக் கையாண்டனர்.. இதனால் சில மொழிகள் ஆற்றொழுக்குப் போலும் நடையை அடைந்தன. இவையாவும் நலம் கருதியவையே  ஆகும்.

ஆசிரியன் என்ற சொல்லே சகர வருக்க எழுத்துகள் இரட்டித்து ஆச்சாரியன் என்று வந்தது என்பது இன்னொரு கருத்தாம். 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

சனி, 13 ஏப்ரல், 2024

Happiness and Sadness ( by Poet Saran)

 


There are moments of intense sadness, 

Of bawling your eyes out, 

Wet paper below your hands,

Scribbles of hatred and disenchantment, 

Staring into the sky, isolated and ostracised.

Every muscle hurting to move,

Every movement calling out for death,

The quietness all around you but endless voices in your head,

The atmosphere of desperation and despair, 

Of hatefulness and regret,

The singularity of a big xxxk you.


But there are also moments of intense happiness, The sun shining brightly down on you, 

The moon glowing in the darkness, 

The wind grazing by your skin, 

The shadows of movement and progress, 

Platonic loves of gesture and admiration, 

The warmth and contentment behind a laughter, The elation of a kinder mind and blissful quietness.


There will be moments of both, 

Co-existing together, 

Taking turns at times, 

Looping in oppositional forces, 

Of yin and yang, 

Of waves and lulls,

Of stillness and being, 

the totality of you.

வியாழன், 11 ஏப்ரல், 2024

தனுஷ் என்ற சொல்தோன்றுதல்

 இன்று தனுஷ் என்ற சொல் எவ்வாறு தோன்றிற்று என்று அறிந்துகொள்வோம்.

தன்னில்தான் இயங்கும் நிலைதான் தனுஷ் என்று சொல்லப்படுதிறது.  ஒவ்வொரு இராசிக்கும் ஒரு தன்மை,  குண இசைவுகள் முதலியன இருக்கும் என்பது உண்மையாயினும்,  தனுஷுக்கு இது  சற்று நிறைவை ஒட்டி நிற்கிறது என்பர்.உங்கள் இருகைகளாலும் ஒரு பூனையைத் தூக்கி கீழே போட்டுவிட்டாலும்  அது  கண்டபடி போய் விழாமல் ஒரு தந்திரத் தாவல் மன்னன்போல் நாலு காலும் சமநிலைப் படும்படியாக விழுந்து நிற்கும். ஓர் எருமையால் தூக்கி எறியப்பட்ட சிங்கம்  கண்டமாதிரி போய்த் தரையில் விழுகிறது.  அதனிடம் தந்திரத்தாவல் இல்லை. தாக்கும்போது முன்னங் கால்களால் அடித்துக்கொண்டு வாயினால் கடித்துப் பிடித்துக்கொள்கிறது. வீழ்ச்சியில் தந்திரம் இல்லை.

தனுஷ் என்ற சொல் "தன் உய்வு"  என்ற இரு தமிழ்ச் சொற்களிலிருந்து வருகிறது. அல்லது அதற்கான தமிழ்ப் பதத்தின் சமகாலப் புனைவாதலும் கூடும். ஆகவே, தன் உய்வு > த(ன்)னுய்வு> தனுசி/(வு)> தனுஷ்  ஆகும்.  இது தனுர் என்றுமாகும். உர் என்பது உரு என்பதன் சுருக்கம்

தனுஷ்கோடி (ஊர்ப்பெயர்) என்பதில் கோடி என்பது மூலை.  கோடு> கோடி, இது வளைவுப் பொருள்.  ஒரு நேர்கோட்டின் முடிவு  அதன் வளைவுதான்.  தனுஷ்கோடி என்பது தானே நிற்கும்  அல்லது தனியாக நிற்கும் ஒரு நிலப்பகுதி,  திட்டு, தீவு.   தீவு என்பது நிலத்தின் தீர்வு அல்லது முடிவு.  தீவகம் என்பதும் தீவுதான்.  தனிநிலம்,  அல்லது பிற நிலப்பகுதிகளைச் சார்ந்து நில்லாத, ஒரு தனிப்பகுதி.  நாவலந்தீவு என்றால் பேச்சில் வலிமை காட்டிய தன்மை இங்கு வாழும் மக்களுடன் முடிந்தது,  மற்றவர்போல் அதிகம் பேசிக் கொள்கைபரப்புச் செய்யாதவர்கள் என்றுபொருள்.  புத்தமதத்தைச் சீனாவுக்குப் போதித்தவர்கள் இந்தியர்கள். சீனா அதைப் பிறருக்கு எடுத்துரைத்தது குறைவு.  இந்தியர்களே முன்னணியில் இருந்தனர்.  நாவற்பழம் கிட்டிய அழகிய இடம் என்றும் பொருள்.  தீவகம் + அல்+ பு + அம் > தீவகற்பம்  ( தீவுக்குறை.).  தீவகம் அல் =  தீவு அல்லாத. ஒருபக்கம் நிலத்தொடர் உடைய,

உய்>( உயி)> உசி.  இது யகர சகரப் போலி.   ஒ.நோ:  பசு > பை.  (பசுந்தமிழ் > பைந்தமிழ் )

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

செவ்வாய், 9 ஏப்ரல், 2024

அதிசயம் என்பதற்கு இன்னொரு பொருட்பார்வை

 அதிசயம் என்ற சொல்லுக்கு உங்கள் வாத்தியார் பொருள் கூறியிருப்பார். நீங்கள் படித்த நூல்கள் சொல்லாக்கவியல் நூலா யிருந்திருந்தால், அதில் வேறுவிதமான சொற்பகுப்புகளை கூறியுமிருக்கலாம்.  இன்று இதை நாம் வேறொரு கோணத்திலிருந்து காண்போம்.

ஒன்றை ஓர் அதிசயம் என்றால், உங்களை வியக்க வைத்தது என்ன என்ற கேள்வி எழுகிறது.  வியப்புக்குரியது ஒவ்வொரு நிகழ்விலும் மாறுபடுகிறது. இந்த ஒவ்வொரு வியப்புக்கும் என்ன உள்ளடக்கம் என்று பார்த்து ஒரே பெயரைக் கொடுத்து எல்லாவற்றையும் ஒருங்கே முன்னிறுத்திவிட முடியாது. அதனால் இதற்குள் ஒரு கடினநிலை தோன்றியது.

ஒரு பெயரில் அடக்க இயலவில்லை.

அதனால் இந்தப் பெயரை இப்படி அமைத்தனர்.

அது இசையும்   

> அதிசையும்

> அதிசயம்.

எது இசையும் என்பது கேள்வியாக வந்தால்,  அது, வியப்பை உண்டாக்குகிறதே, அது!  அது வேறுபடு பொருளாம்.

நாலு கண்கள் இருக்கும் ஒரு விலங்கைக் கண்டுவிட்டால்,  அதில் வியப்பைத் தருமாறு இசைந்திருப்பது கண்களின் எண்ணிக்கை.

எதிசையுமோ  அதிசையும் -  அதிசயம்.

இந்தச்சொல்லை இப்படி உருவாக்கிய புலவன் மிகுந்த அறிவாளி என்று அறிக.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

புத்தன்

 புத்தன்:

புத்தர் உலகிற் புதுநெறியைக் கண்டுபிடித்தவர்.

புது+ அர் > புத்தர். (தகரம் இரட்டிப்பு)

பூ - தோன்றுதல். (மூலச்சொல்.)

 பு>புகு >புது. ( புதியன புகுதல்)

மக்கள் அழைத்தது - சாக்கியமுனி.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்





திங்கள், 8 ஏப்ரல், 2024

மோடி செயல்வீரர்

 அடுத்தடுத்த நாடுகளுக்கு அடிவருடி ஆகாமல்

எடுத்தகரு மம்எதுவும்  இனிதாகத் தான்செய்யும்

மோடிஎனும் செயல்வீரர்  முனைந்திட்ட .மூதறிஞர்

தேடித்திரிந் தலைந்தாலும் தேசமிதில்  கிட்டாதார்

நல்லவேலை  செய்பவரை இல்லிற்குள் அனுப்பென்றே

சொல்லுவதும் ஏதுக்கோ சூழ்ந்துவிடை காணோம்நாம்..


தாம்நலமே  செய்வதற்கே தலையெழுத்துச் சரியில்லார்

நாம்நலமே பெறுங்காலை ஏன் அவரைத்   துரத்துகிறார்.

அவரிருந்து பலகாலம் அனைத்துமக்க ளும்உயர

இவர்வழியே விடவேண்டும் தடைசெய்தல் தக்கதன்றே 

மக்கள்நாட்டம் நாட்டினேற்றம் முக்கால மும்சிறக்க

ஒக்க அவர்  இருந்தாலே  உலகுமிகப் பயன்பெறுமே..


தம்நிலையைத்  தாமறிந்து தம்வசதி செல்வநிலை

இம்மண்ணோர் இருப்புநிலை எதிர்காலம் ஆறு பேறு

எல்லாமும்  கணித்தறிந்து  சொல்லாடும் சூழ்திறனே

நல்லாராய் எடுபடுவார் நாடோறும் செல்திசையே

இல்லாதார் சிந்தித்தல் இல்லாமல் இல்லிற்செல்

சொல்விடையோ மட்டமான வல்வழிச்சொல் ஐயமிலை


வாரிசுகள்  யாருமிலார் எண்மலராய் நாடெண்ணி

ஓருயிராய்  ஒடுங்கியவர்  மாமுனிவர் மோடி இவர்.

பிள்ளையில்லை குட்டியில்லை அள்ளுபெருஞ்  செல்வமிலை 

தாயிழந்தும் ஓய்ந்துவிடார்  ஆயும்மக்கள் மேலெனவே

தேசமொன்று குறிக்கோளாய் வாசமலர் வாழ்வார்ந்தார்

ஏசலறியா   மோடி இரும்பொறையை வாழ்த்துகவே.




தக்கதன்றே - தக்கதல்ல.

பெறும்காலை - பெறுகின்ற காலத்தில்

இவர் வழியே விட -  எதிர்ப்பவர்கள் தடுக்காமல் இருக்க

உயர - முன்னேற்றமடைய

மக்கள் நாட்டம் - மக்களுக்கு வேண்டியவை

நாட்டினேற்றம் - நாடு செப்பனிடப்பட்ட முன்னேற்றம்

ஒக்க - நாட்டினருடன்

எண்மலர்:

கொல்லாமை, ஐம்பொறி யடக்கல், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு.ஆகிய எட்டு மலர்கள்.

தம் நிலை - தம்முடைய சொத்துப்பத்துகள்
இம்மண்ணோர் -  நாட்டுமக்கள் 
இருப்பு நிலை -  மக்களுக்குள்ள வசதிகள்
சொல்லாடும் -  உரை தொடுக்கும், பேச்சு நிகழ்த்தும்
நல்லாராய் எடுபடுவார் - நல்லவர்களாய் சொல்லப்படுவோர்
செல் திசை =  செல்லவேண்டிய வழி
இல்லாதார் -  சிந்தனை இல்லாதவர்கள்
இல்லிற் செல் - வீட்டுக்குப் போ எனப்படும் கூச்சல்
வல்வழிச்சொல் -  வன்மை காட்டும் சொல்
ஐயமில்லை - சந்தேகமில்லை

எண்மலர்  எட்டு நற்குணங்கள் மேலே காண்க
வாரிசு -  வருகின்ற  பின் தலைமுறைகள்.  ( வரு+ சு >வாரிசு,
சு - விகுதி ),
நாடெண்ணி - நாட்டு நலன் கருதி
மாமுனிவர் - மகரிஷி
ஆயுமக்கள், வாக்களிக்கும்  மக்கள்.
தலைவர்களை மக்கள் ஆய்வு செய்கின்றனர்.. முடிவுசெய்து
வாக்கை அளிக்கிறார்கள். அதனால் ஆயும் மக்கள்.
ஒ.நோ அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ? (குறள்).
இரும்பொறை -  மலைபோன்றவர்.  இது சேரமன்னர்
பட்டப்பெயர், பொருள்  உள்ளது. 

வல்வழிச்சொல்: போகிற வழியில் சிந்திக்காமற் பேசுவது.

சமானம் என்னும் பதம்.

 பழைய இடுகை ஒன்றில் பதம் என்ற சொல்லும் எவ்விதம் அமைந்தது என்பதற்கு  விளக்கம் எழுதியுள்ளோம்.  ஒவ்வொரு வழக்கிலுள்ள தமிழ்ச்சொல்லிலும் பொருண்மை பதிவுற்று உள்ளது.  பதிவுற்று நிற்பதுதான் பதம் என்னும் சொல்.  பது, பதி என்பவை பதிந்துள்ளமை என்று பொருள்தரும். சற்றுக் குழம்புபோல் உள்ள பரப்பில் கெட்டியான ஒரு பொருள் நல்லபடி பதிந்துவிடுகிறது.  ஒரு பெண்ணாதிக்கக் குடும்பத்தில்  அப்பெண்ணை மணந்துகொள்ளும் ஆண்மகன் திருமணத்தின்பின் தன்னைப் பதிந்துகொள்ளுகின்றான். பண்டைக் காலத்தில் எழுத்துமுறையிலான பதிவுகள் இல்லை.  மனத்திலே பதிந்துகொள்ளும் முறையே இருந்தது. ஆகையினால் அவன் "பதி" எனப்பட்டான்

இதை மேலும் இங்கு விளக்கியுள்ளோம்.  சொடுக்கி வாயித்து  (வாசித்து)க் கொள்ளுங்கள்.  வாயினால் வெளிப்படுத்துவதுதான் வாயித்தல். யி பின்  சி  ஆகும்.

https://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_25.html

சுழுத்தி , சுழுமுனை நாடி என்பனவும் இங்கு விளக்கப்பட்டுள்ளன.

https://sivamaalaa.blogspot.com/2021/03/blog-post_15.html

சமானம் என்பது தமிழிலும் சங்கதத்திலும் (= சமஸ்கிருதத்திலும்)  உள்ள தற்சமச் சொல்.

இதைப் பாணினி என்ற பாணப் புலவன் சொன்ன படி பிரிக்காமல்  தமிழ்வழியில் பிரித்தறிவோம்.

சமம் +  ஆன + அம் >  சம +  ஆன + அம் >  சமானம்.  

சமானம் என்பதை  ஸமானம் என்று முன்னர் எழுதினர்.

இதை:

சமம்  +  அன் + அம் >   சம + அன் + அம் >  சமானம் என்றும்  பிரிக்கலாம்.

அன் என்பது அன்ன என்ற உவம உருபு  அன் என்று குறுகி இடைநிலையாக நின்றதாகும்.  " சமமான அதுபோலும் அமைந்தது " என்று இது வாக்கியமாகிப் பொருள் பயக்கும்.

சம என்பதில் இறுதி  அகரமும்   அன் என்பதன் முதலான அகரமும் இணைய:

அ + அ >  ஆ  என்பது ஒலியியல் முறையில்  சரியானதே,

அ அ என்பதைத் தட்டச்சுச் செய்தால்  ஆ ஆகிவிடும்.  அறிக.

விடுதலை விடுதலை என்ற பாரதியார் பாட்டில்  சரிநிகர்  சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே என்ற வரியையும் படித்து அறிந்துகொள்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.



சனி, 6 ஏப்ரல், 2024

மித்திரம் நட்பு - காக்கும் காஉசிக முனிவர்.

 தேவர் தம் நூலில் நட்பினை நன்கு  ஆராய்ந்து விளக்குகிறார். அவர்:


மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு. 800


என்று தெளிவாகப் பாடுகிறார்.  ஆனால் இதிலுள்ள தொல்லை என்னவென்றால் ஒருவன் மாசற்றவன் என்று அவனுடன் பழகுமுன் எப்படித் தெரிந்துகொள்வது?  பிறகு பிறகு தானே ஒவ்வொருவன் வண்டவாளமும் தண்டவாளத்தில் ஓடுகிறது?

ஒருவன் ஒவ்வொரு மாலையிலும் போய்ச் சங்கிலி திருடுகிறான் என்று,  நாம் வீட்டிலுருந்துகொண்டு எப்படித் தெரிந்துகொள்வது?  ஒருநாள் பிடிபட்டபின் என்னை வந்து பிணையில் எடு ( bail me out please)  என்று தொலைபேசியில் அழைக்கும்  போதுதான்  தெரிகிறது. 

நட்பு என்பது மிக்கத்திறன் வாய்ந்தது.  அவனுக்காகச் சொத்தை அடைமானம் வைத்து காசு கட்டி அவனை மீட்டு வருகிறோம்.

இது நம் அளவில் நாம் செய்த நன்மை.  நாம்  அவனுக்கு மிக்கத்திறன் வாய்ந்த ஒரு நண்பன். நட்பு என்பதே ஒருவனையாவது காப்பாற்றவேண்டிய ஒன்று. இப்படி உலகில் பலரைக் காப்பாற்றியவர்தாம் கவுசிக முனிவர்.   அவர்: உலகம் என்றால் அதில் நல்லவர்களும் கெட்டவர்களும் இருப்பார்கள். கெட்டவர்களுக்கு நோய் வந்தாலும் மருத்துவர் மருந்து கொடுக்கத்தான் செய்கிறார்.  அப்போதுதான் ஒருவர் உலக நண்பன் ஆகிறார்.

காவு  உசிக  முனிவர்.

காவு உயிக முனிவர்

காவு உய்வு இக முனிவர்.  காவலின் உயர்வு மிக    வாழ்ந்த முனிவர்.

காவு என்றால் அது காவல். 

அவரல்லரோ  உலக நண்பரான முனிவர்.



நட்பும் மிகத்திறம் உடையது. அதனானாலேதான்  மிக்கத்திறம் >  மிகத்திரம்>  மித்திரம் ஆயிற்று

மித்திர(ம்)  என்றால் சம்ஸ்கிருதத்தில் நட்பு. மிக்கத்திறன் என்பது நட்புத்தான்.

காத்தல் என்பது ஒரு கடவுளியல்பு.  முனிவர் அவரின் பதில்நிலையராக (representative) நின்று உலகுக்கெல்லாம் நண்பராகிறார்.

மிகத்திறம்> மி(க)த்திரம் > மித்திரன்.

கா உய் இக அன் >  காவுயிகன் >  காவுசிகன் > கௌசிகன்.
பொருத்தமான புனைவு ஆகும்.


வெள்ளி, 5 ஏப்ரல், 2024

பாக்கியம் என்பதன் அடிமுடிப்பொருள்.

 இவ்வுலகில் இலாபம் மட்டுமே ஏற்படுவதில்லை.  நட்டமும் ஏற்படத்தான் செய்கிறது. இரண்டுமே இந்த உலகம் என்னும் குட்டையில் ஊறிக்கிடைத்த மட்டைகள்தாம். இரண்டும் ஒரே மட்டை என்று வைத்துக்கொண்டால், மட்டையில் ஒரு பாக்கியம் என்னலாம்; மற்ற பகுதி பாக்கியமின்மை ஆகும். ஒன்று நல்ல பகுதி.  இன்னொன்று கெட்ட பகுதி.

பாக்கியம் என்றால் இயன்ற பகுதி.  அதனால்தான் அதற்கு இயம் என்ற விகுதி கொடுத்துள்ளனர்.  பாக்கியமின்மை நமக்கு இயலாத பகுதி. அதை நாம் இப்போது துருப்பிடித்த பகுதி என்னலாம்.  துருப்பிடித்த இரும்பு போல பயன்படுத்த வியலாத பகுதி. இதை இன்னும் சுருக்கிச் சொல்வதானால் "துருப்பாக்கியம்" -  என்று சொல்லிப்பாருங்கள். இன்னும் சுருக்கித் துர்ப்பாக்கியம் என்று சொல்லியும் பாருங்கள். 

துரு என்பது இரும்பைத் துருவிச் சென்று இறுதியில் ஒரு பொத்தலைப் போட்டுவிடுகிறது.  அதனால்தான் அதைத் துருவென்று சொன்னார்கள். துருவென்பது துருவுதல் என்பதன் அடிச்சொல். இறுதியில் இரும்பைத் தின்றுவுடும் துருவை துரு என்று சொல்லாமல் என்னவென்று சொல்வது. துருவென்பது சரியான சொல்.

பாக்கியம் என்றாலே அதை நற்பேறு என்றுதான் வேறு சொல்லால் குறிக்கமுடியம்.  அப்புறம்  துருப்பாக்கியம் என்றால் இப்போது பாக்கியம் என்ற சொல் "கெட்ட நற்பேறு"  என்று சொல்லலாமோ?   அது முரண்பாடாக இல்லையா?  ஆகவே,  பாக்கியம் என்றால் நற்பேறு அன்று,  வெறும் பேறு மட்டுமே,  நற்பாக்கியம் என்றால்தான் நல்ல பாக்கியம், துருப்பாக்கியம் என்றால்தான் கெட்டபாக்கியம் என்னலாமோ.

மனிதனே குறைகள் இல்லாதவன் அல்லன்;  அவனால் ஆக்கப்பட்ட மொழியும் குறைப்பட்டதே ஆகும். ம்

இப்படி ப்ளூம்ஃபீல்ட்டு முதலிய மொழிநூலறிஞர்கள் மொழிகளில் பல முரண்பாடுகள் உள்ளன என்று கூறுகிறார்கள்.  உலகின் எல்லா மொழிகளிலும்!   ஆங்கில மொழியிலிருந்து பல முரண்பாடுகளைக் காட்டுகிறார்கள். தமிழில் இப்படி நாம் காணும்போது,  உரையாசிரியர்களே நமக்கு வந்து வழிகாட்டுகின்றனர். பாக்கியம் என்றால் நல்ல பாக்கியம் என்று எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும் கூறுவர்.  பள்ளமும் மேடும் அடுத்தடுத்து வருமாயின்  வண்டி கவிழ்ந்துவிடுமன்றோ?   நல்லபடியாக மட்டுறுத்துகின்றனர் என்று அறிக.

எனவே:

பாக்கியம் என்று வந்தால் அது நல்ல பாக்கியம் அல்லது பேறு.

துருப்பாக்கியம் என்றால் கெட்ட நிகழ்வு

அடிப்பொருள்

:  நல்ல பாகம் அல்லது பேறு.

ஏன் பாகம் என் கிறோம்?  பாகம் என்பது பகுதி,

எப்படிப் பகுதி ஆகும், பாருங்கள்:

பகு> பாகு>  பாகு + இயம் > பாக்கியம்.

இறுதி உகரம் வர ககரம் மெய்  இரட்டிக்குமே.

முடிப்பொருள்:

பாக்கியம் துர்ப்பாக்கியம் என்று உலகவழக்கில்  ( அன்றாடப் பயன்பாட்டில்) இருப்பதால்,  பாக்கியம் என்பது இப்போது பொதுப்பொருளில் வழங்குகிறது. 

ஆயினும் பாக்கியம் என்பதன் ஆக்கப்பொருள் நற்பேறு என்பதே.

இயம்:  இ + அம்  :  என்றால் இங்கு அமைவது அல்லது இயன்றது.

இயல் > இயம்,

அறிக மகிழ்க

மெய்ப்பு:  பின்னர்.


வியாழன், 4 ஏப்ரல், 2024

dinosaur தமிழில்.

 dinosaur தமிழில்  வியனூரி.  மொழிபெயர்ப்பு.

செவ்வாய், 2 ஏப்ரல், 2024

பாசாங்கு

[இங்கு நீர், உம் என்று வரும் சொற்கள் உம்மை [( வாசிப்பவரை) க்] குறிப்பவை அல்ல)]

பசுமையாக இருப்பவை எல்லாம்  இயற்கைப் பசுமையாய் இருத்தல் அருமையே. பசுமையான இலை, தழை, செடி, கொடி, மரக்கிளைகள், வேறு துண்டுப் பொருள்கள் எல்லாவற்றையும் மேலே போர்த்திக்கொண்டு, அப்போர்வையின் கீழ் உம் எதிரிப்படைஞர்கள் ஒளிந்திருக்கவும் கூடும். அற்றம் பார்த்து உள்ளே அமர்ந்திருப்பர். நீர் வருகிறீர் என்று கண்ட வுடன் அண்மை அறிந்து  மேற்போர்த்தியவற்றை விலக்கிவிட்டு உம்மைக் கொல்வதற்கு முந்துவர். நீர் ஏமாளித்தனத்துடன் நடமாடினீராயின் கொலைப்படவும் கூடும். திடீரென்று வெளிப்பட்டு அணுகுவோரிடம் தப்பிச் செல்வதும் உலகில் அரிதாகவே நடைபெறுவதாகும். 

இதற்கான சுற்றுச்சார்புகள் அமைந்த இடம் ஒரு காடுதான். வீதியில் கொள்ளை யடிப்பவனுக்குப் பசுமைப் போர்வைகள் தேவைப்படாது.  அதுவன்று நாம் இங்கே கருதுவது. பாசாங்கு என்ற சொல்லைத்தான் விளக்க வருகிறோம். வேண்டிய காட்சியமைப்புகளைக் கற்பனை செய்துகொள்ளும்.

பாசாங்கு  என்பதில் பசுமை +  அம் + கு என்ற மூன்று பகவுகள் உள்ளன. பசுமை என்பதை மேலே மீண்டும் படித்துத் தெளிந்துகொள்ளும்.  அம் என்பது அழகு, அமைப்பு என்றெல்லாம் பொருள்படும் அடிச்சொல்.  இங்கு  இடைநிலையாக வந்துள்ளது.  கு என்பது இங்கு விகுதியாக வந்துள்ளது. நாக்கு என்பதில் ஒரு விகுதி  " கு" என்று வந்துள்ளது போலுமே இது. விகுதி என்பது சொல்லை மிகுதிப்படுத்தி வேறு ஒரு புதுச்சொல்லை உண்டாக்கும் முற்றுநிலை.

பாசாங் என்று மலாய் மொழியிலும் ஒரு சொல் உள்ளது.  அது பொருத்துதல் என்ற பொருளுடையது, மலாய் மொழி இயல்பின்படி சொல்லிறுதியில் முழுக் குகரம் வருவதரிது.. பொருளில் சில ஒற்றுமைகள் இருத்தல் கூடும்.  இருப்பினும் ஒன்றிலிருந்து மற்றது வந்தது என்று சொல்வதற்கில்லை. ஆயினும் ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரே தமிழர் தென் கிழக்காசிய நாடுகள் முழுமையும் வேற்று இனங்களுடன் பழகிக் கலந்துள்ளனர். எனவே சொற்கலப்புகள் இயல்பானவையே. குமரிக்கண்ட அழிவின்பின் அங்கிருந்து தப்பி ஓடியவர்கள் கிமர் என்ற அடையாளம் கொண்டவர்களாக இப்போது இருக்கின்றனர் என்று  சிலர் (ஆய்வாளர்கள் ) கூறுகின்றனர்.  பல்லவ எழுத்துக்களுடன் கம்போடியக் கிமர் எழுத்துக்கள் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளன. சோழ இளவரசி ஒருத்தியை அனிருத்த என்ற கம்போடிய இளவரசன் மணந்துகொண்டான் என்பர். அங்கோர்வாட் ஆலயங்களும் கருதற்குரியவை. நீல உத்தமன் என்ற சோழத் தளபதி இந்தோனீசிய பாலிம்பாங்க் தீவிலிருந்து வந்து சிங்கபுரத்தில் (சிங்கப்பூரில்) சோழ ஆளுநனாக இருந்து ஒரு மலாய் இளவரசியையோ ( அழகியையோ ) மணந்தான்.  பின் இவன் மலாய்மகனாகவே மாறி  Sang Nila Utama என்ற பெயருடன் ஆண்டான் என்பர். ( மலாயா தேச சரித்திரக் காட்சிகள், ராமகிருஷ்ண மடம் வெளியீடு, ஆசிரியர்: பிரமாச்சாரி கைலாசம் ).  வேறு சீன எழுத்தாளர்கள் எதியவையும் உள்ளன, இந்தியத் தொடர்பு பற்றியவை இவை, இப்போது எம்மிடம் இல. ( கோவிட் காலத்தில் எம் வீடு கைவிடப்பட்டு அழிந்தன ). இவற்றைக் கொண்டு யாம் மேற்கொண்டு ஒன்றும் சொல் ஆய்வில் ஈடுபடவில்லை. (மலாய் மொழிச் சொற்களை ஏன் இங்குக் குறிப்பிட வேண்டும் என்பார்க்கு இது போதுமானது). 

 பசுமை என்பதில் மை விகுதி விலகிற்று.  பசு+ அம் என்பது பாசாம் என்று நீண்டது.  வேறு சொற்பகவுகள் வந்து சேர்கையில் இவ்வாறு சொற்கள் நீள்வது இயல்பு. (பசு + அம் + கு > பாசு+ ஆம் + கு ).வந்தான் என்ற வினைமுற்று வாங்க என்று மாறுகிறதன்றோ.  அது வங்க என்று தோன்றுவதில்லை. வினைமுற்று, வியங்கோள்வினை, பொருட்பெயர்ச் சொல்லாக்கம் என்று எல்லா நிலையிலும் சொற்களில் மாற்றங்கள் நிகழும். ஒவ்வொரு சொல்லையும் ஆராய்ந்தாலே ஒளிவுகளும்  நெளிவுகளும் சுழிவுகளும் புரியும்.

பசு( மை) > பசு> பாசி. ( பசு+ இ ).  பசு என்பது பாசு என்று மாறி இகரம் ஈற்றில் வந்து சொல்லாயிற்று.

இத்துடன் முடிப்போம்.

அறிக மகிழ்க.


திங்கள், 1 ஏப்ரல், 2024

வசூல் உருதுச்சொல்?

 வசூல் என்பது  உருதுச்சொல் அன்று.  அதன் தொடக்கத்தைப் பார்த்தாலே அதில் வருதல் குறிக்கும்  வ என்ற ஒலி உள்ளது.  அது உண்மையில் சொற்பிறப்பால்  உருது அன்று.  ஒரே எழுத்தைக் கொண்டு எப்படித் தமிழ் என்று முடிவு செய்கிறீர் என்னலாம்.  வந்தான் என்ற சொல்லிலும் வ  மட்டுமே வருதலைக் குறிக்கும் நிலையைக் காட்டுகிறது.  அதில் ருகரம்  கூட இல்லையே!

வந்தான் என்ற வினைமுற்றில் வகரத்துக்கு அடுத்து ருகரம் வரவில்லை என்றாலும், வந்தான் என்று அமைந்ததே சரி.  வருந்தான் என்றால் வருந்தமாட்டான் என்று வேறொரு பொருண்மை காட்டுவதாக ஆகிவிடும். அதுபோலவே இச்சொல்லானது "வருசூல்" என்று அமைந்திருப்பின்  வருகின்ற கர்ப்பம் என்று பொருள் மாறிவிடும்.  அதனால் இச்சொல்லை அமைத்த அறிவாளிகள்  இதை வருசூல் என்று அமைக்காமல்  வசூல் என்றே அமைத்தனர். இவ்வாறு செய்ததன் மூலம் தமிழில் வந்தாள், வந்தான் என்று அமைந்த சொற்களின் அமைப்பையே வசூல் என்ற சொல்லும் பின்பற்றி, தமிழ்ச் சொல்லமைபினோடு இயைபு பட்டுள்ளதாக இருக்கிறது. அதனால் இது பொருளமைதியிற் பொலிந்த சொல்லாகும்.

எச்சொல்லும்  பின்வழக்கினால் ஒரு மொழிக்கு உரித்தாகலாம். இவ்வாறு உருதுக்குள் வழக்குப்பெற்றிருந்தால் அது உருதுச்சொல்.

ஆயினும் மஜ்முவா, ஜக்கேர, ரிசால  என்ற சொற்கள்,  பணப்பெறவுக்கு (collection) உருதுமொழியில் வழங்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. வசூல் என்றொரு சொல் வழங்கப்படவில்லை. எனவே தென்னாட்டில்  எழுந்த சொல்லாகவே இது தெரிகிறது. 

ஜமா கர்னா, அய்க்ஹத கர்னா, ஏக்சத் லானா, ஹாசில் கர்னா இருசொல் தொடர்களும் வசூல் என்பதனோடு பொருந்தவில்லை. The word hasil is used also in Malaysia and Indonesia. It means( yeild of) property (to collect).

அந்தக் 

காலத்தில் பணத்தைப் புதைத்து வைத்துத்தான் காத்தனர்.  வங்கி என்னும் பணப்பொதிவகங்கள் ஏதும் இல்லை. அரசனின் ஆணைச் சேவகர்கள் வந்து தோண்டி எடுத்துத்தான் ஆய்தல் செய்தனர்.  சூலுதல் என்றால் தோண்டுதல்.

வந்து தோண்டி எடுத்துச் சென்றனர் என்பதை வசூல் என்ற சொல் காட்டுகிறது.

வருசூல் > வசூல்.  வருசூல் என்பது வினைத்தொகை.  வசூல் என்பது அதில் திரிந்த சொல். (திரிசொல்).

முன் செய்த ஆய்வுகளையும் படித்தறிக:  [ சொடுக்கி இவ்விடுகைகளுக்குச் செல்லவும் ]

1 https://sivamaalaa.blogspot.com/2016/07/blog-post_53.html

https://sivamaalaa.blogspot.com/2017/03/vasool.html

https://sivamaalaa.blogspot.com/2021/05/blog-post_31.html

வேற்றுமொழிச் சொற்கள் தமிழிற் கலந்து தமிழ்மொழி கெட்டுவிடும் என்ற அச்சத்தால் பீடிக்கப்பட்டு,  தமிழ்ச் சொற்களையும் தமிழல்ல என்று ஒதுக்கிவிடுதல் ஏற்பட்டுவிட்ட நிலையையே இது காட்டுகிறது.  இவ்விடுகை இதைத் தெளிவு படுத்துகிறது.  உங்கள் கருத்தையும் கருத்துப் பதிவுப் பகுதியில் இடுவதை வரவேற்கிறோம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்