Sivamala
By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
வெள்ளி, 16 மே, 2025
சிவமாலாவின் சிறப்பு சேமிப்பு (saving)
செவ்வாய், 24 டிசம்பர், 2024
சீர்பலவும் நேருமாறு விளங்கிய வசிட்டமுனி. பெயரமைப்பு
இராமகாதையில் பல தமிழ்ச்சொற்களின் பிறழ்வடிவங்கள் சங்கதமாகத் தரப்பட்டிருப்பதாக கண்டுபிடிக்கலாம். பல ஆண்டுகட்கு முன்னே சில இராமகாதைப் பெயர்களை ஆய்ந்து அவற்றின் தமிழ் வடிவங்களைத் தந்தோம். தமிழ் மொழி முழுமையு முள்ள பல சொற்களையும் ஆராய எண்ணம் கொண்டதால், இராம காதை, கண்ணன் காதை என்ற இவற்றோடு நில்லாமல் பல சொற்களையும் விளக்கி வெளியிட்டுள்ளோம். இவற்றில் பலவற்றை விரும்பாதவர்கள் அழித்துவிட்டனர். அதனால் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது.
விழுமிய பீடு உடையவன் என்பதே விபீடணன் என்பதன் பொருள் என்பது முன் யாம் வெளியிட்டது ஆகும். விபீஷண என்பது விழு பீடு அண் அ என்பதன் திரிபே ஆகும். இதுபோல்வன இயற்பெயர்கள் அல்ல, காரணப் பெயர்கள். இர் என்ற இருள் குறிக்கும் அடிச்சொல்லிலிருந்தே இராமன், இராவணன் முதலிய சொற்கள் உண்டாயின. அனு மன் என்பது மனிதனை அணுகியவன் அல்லது அண்மையானவன் என்பது. பழைய இடுகைகளில் சிலவற்றில் இருக்கலாம். தேடிப் பிடித்துக் கண்டுகொள்க.
இன்று, சீர்பலவும் நேருமாறு வாழ்ந்தவர் வஷிஷ்டர் என்பதே அவ் ஆய்வு ஆகும். இச்சொல் வர்சீர்த்தர் என்பதுதான். வரு+சீர்+ து + .அர் என்பதே வசிஷ்டர் ஆயிற்று. சீரனைத்தும் வருமாறு வாழ்ந்தவர். சொல்லமைப்பில் ஏதும் கடினம் இல்லை. வடவெழுத்து என்பவை ஒரு மயங்குநிலையை விளைவித்துவிட்டன.
இராமபிரானின் அறிவுக்கு வழியமைத்த ஆசிரியர் என்ற பொருளில் "வழியிட்ட(வ)ர்" என்ற சொல்லும் குறுக்கி "வழிட்டர்" என்று வந்து பின்னர் வசிஷ்டர் என்றாகிவிடும்.கடுமை என்ற சொல்லில் பிறந்த கட்டம் என்ற சொல் இன்று கஷ்டம் என்று திரிந்துவழங்குதல் காண்க.
பாஞ்சாலி தொடர்பானவை சில முன் விளக்கப்பட்டன. அகலியை என்பதும் முன் விரித்துணர்த்தப் பட்டதேயாகும்
தமிழிலிருந்த முன்னைய இராமகாதை மூலம் அழிந்திருக்கவேண்டும். வால்மிகி என்பதும் தூய்மை மிக்கோன் எனல் பொருட்டாகும் தமிழ்ப் பெயரே. வாலறிவன் என்ற குறள்தொடர் அறிக.
இராம காதையின் முதன்மை நிகழ்வுகள் தமிழ்நாட்டுக்கு அருகில் நடந்தவை.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்
சனி, 21 டிசம்பர், 2024
நாதாரி.
இன்று நாதாரி என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.
இந்தச் சொல் தமிழ்நாட்டிலும் இந்தி பேசும் மாநிலங்களிலும் வழங்கும் சொல்லாக அறியப்படுகிறது. இந்தியத் தமிழர்கள் பலர் மலேசியா சிங்கப்பூர் வட்டாரங்களில் வந்து (தென் கிழக்காசியாவில) தங்குவதால், அவர்கள் அறிந்த சொல்லாகவும் இது இருத்தல் கூடும்.
நாவின் ஆதாரத்தால் அறியப்படும் ஒரு மனிதனை நாதாரி என்று சொல்வர் என்று இதற்குப் பொருள் கூறப்படுகிறது, நா ( நாக்கு) என்பதும், ஆதாரம் என்ற சொல்லும் தமிழில் தொன்றுதொட்டு வழங்கிவருபவை.
ஆதாரம் என்றால் ஒரு பசுமாட்டைத் தந்து ஆதரிப்பது என்று பொருள். பால் அருந்துவதற்கு ஆதாரம் அல்லது மாடு இல்லாமல் வந்தவர்களும் அந்தக் காலத்தில் அரசர்களும் மற்ற ஆட்சியாளர்களும் பசுதானம் வழங்கினார்கள். இதுவே ஆ+ தாரம் என்ற சொற்களால் குறிக்கப்பட்டது. பசு இல்லாதவன், ஆ தந்து அணைப்புறாதவன். அதாவது அவனுக்கு " ஆ+ தரவு" கிடைக்கவில்லை என்று பொருள்.
கோவில்களுக்கும் ஆக்கள் தானம் தரப்படுவதுண்டு. ஆங்கும் ஆதரவு, ஆதாரம் எல்லாம் கொடுக்கப்பட்டன. தா+ (இ)ன் + அம் > தானம். இன் என்ற சொற்பகவு ன் என்று முதற்குறைந்து நின்றது. அம் என்பது அமைவு குறிக்கும் சொல்லின் அடிச்சொல். இங்கு விகுதி ( மிகுதி) யாய் வந்தது.
தருதல் வினைச்சொல்.
தரு + வு > தரவு.
தரு+ அம் > தாரம்.
தாரம் என்றால் தருதல். பெண் பிள்ளைகளைப் பெற்றுத் தருவதால், தாரம் என்ற சொல் மனைவி என்று பொருள் எய்தியது.
தரு+ இ > தாரி: தருதல் செய்வோன், செய்பவள்.
முதன்முதல் மனிதன் அறிந்துகொண்டது தன் நாவினால் செய்யும் ஒலியைத்தான். இதுவே நா+ து + அம் > நாதம் ஆனது. நாவினதாய் ( நா து ) அமைவது நாதம் பின் அறிவு வளர்ந்து நாதம் பிறவற்றாலும் பெறப்பட்டது.
நாவினால் மக்களுக்கு எடுத்துச் சொல்பவர், நா+ தரு+ அர் > நாதர். அருணகிரி நாதர், ஏசுநாதர், நபிநாதர். என்பவற்றில் நாதர் என்பதன் பொருளை அறிந்துகொள்க. நாதருவர் > நாத (ருவ) ர்> நாதர் என்பது நல்ல விளக்கம். எது நல்லபடி விளக்குகிறதோ அது அதற்கு விளக்கம். இலக்கணத்தினால் விளக்கப்பட்டு அது உருப்படாவிட்டால் அது ஒரு விளக்கமன்று.
இப்போது சமத் கிருதம் > சமஸ்கிருதம் என்பது தமிழுக்குச் சமமான ஒலி என்று அதை விளக்கியுள்ளோம். வெள்ளன் அதிலிருந்து சொற்களை எடுத்து அவன் மொழியை வளப்படுத்திக்கொள்வதற்கு அதை இந்தோ ஐரோப்பியம் என்றான். இராமாயணம் முதலியவை ஐரோப்பாவில் இயற்றப்படாமல் இந்தியாவில்தான் இயற்றப்பட்டது, அதுதான் வால்மிகி ( வால்= தூய்மை, மிகு இ> மிகி ) என்ற தூயவரால் எழுதப்பட்டமையின் அது வெளிநாட்டு மொழியன்று.
ஒரு நாட்டை நீண்டகாலம் பிடித்து ஆள்வதற்கு இதைக்கூடச் செய்யத் தெரியாதவனா வெள்ளையன்? ஒரு நாட்டைப் பிடிப்பதென்றால் இதை நிச்சயம் செய்யத்தான் செய்வான். ஆனபின் நட்டத்தைக் கணக்குப்பார்த்து நல்லதைச் செய்துகொள்ளுவீர்.
பழங்காலத்தில் பிறப்புச் சான்றிதழ்கள் எதுவும் இல்லை. நாவினால்தான் ஒரு மனிதன் தன்னை அறிமுகம் செய்துகொள்ளவேண்டியிருந்தது. ஆகையால் பெயர் என்பதற்கு, நா+ அம்+ அம் > நா + ம் + அம் > நாமம் என்று ஒரு சொல் படைக்கப்பட்டது. நடுவில் வந்த "ம்" என்பது அம் என்பதன் முதற்குறை, அல்லது தலைக்கொய்வு ஆகும். இங்கு இடைநிலையாய் வந்துள்ளது. காமம் என்ற சொல்லிலும் கா + ( இ)ம் + அம் > காமம் என்று இடைநிலை வந்துள்ளது.
பிற்காலத்தில் எழுத்து ஆதாரங்கள் உண்டானபோது, நாவினால் செய்துகொள்ளும் ஆதாரம், குறையுடையது என்று மக்கள் எண்ணினர். ஆதலால் நாவினால் பெயர் முதலியவை அறிமுகம் செய்துகொள்வது, தகுதியில்லாமல் தாழ்ந்து, நாதாரி என்ற சொல் உண்டாயிற்று.
இதை அமைத்தவர் யாரென்று தெரியவில்லை. இந்திக்காரராக இருந்தால், தமிழிலிருந்து நா, ஆ, தாரம் ஆகிய சொற்களை எடுத்து அமைத்ததற்கு அவரைப் பாராட்டுவது நம் கடமை ஆகும். தமிழர் ஒருவராகவும் இருத்தல் கூடும். இதைப் போய்த் தேடுவது ஒரு பணவிரையம் தான்.
இந்தச் சொல் இந்தியில் முதலில் வழக்குப் பெற்று இருக்கலாம். வழக்கு என்றால் இலக்கணத்தில் பயன்பாடு என்று பொருள்.
வாசித்து அறிய இன்னும் இடுகைகள்:
https://sivamaalaa.blogspot.com/2017/09/blog-post_96.html
வெட்சித் திணை ஆதாரம் ஆதரவு (தலைத்தோற்றம் தொடக்கம்)
https://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_10.html
சொல்லமைப்பு நெறிமுறைகள்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்.