இன்று கோவம் என்ற தமிழ்ச்சொல்லை அறிந்தின்புறுகிறோம்.
ஒரு நல்ல நிகழ்வு நடந்துவிட்டால், நம் மனம் மலர்கிறது. மனமென்பது ஒரு மலருக்கு ஒப்புமையாகும் ஓர் உறுப்பு. இது இருதயம் அல்லது இதயமாகுமென்று சொல்வர். ஆனால் இதை அறிவியலார் ஒத்துக்கொள்வதில்லை. எண்ணங்கள் மூளையிலிருந்தே உண்டாவதாகச் சொல்வர். கோபம் என்பது மனம் குவிதல் அடிப்படையில் உண்டான சொல்லே. அறிவியல் கருத்துக்கு ஒப்ப அமையவில்லை.
குவிதல், வினை.
குவி > கோவி > கோவித்தல், ககர ஒற்றின்மேல் உகரம் ஏறியது, ஓகாரமாக மாறும் திரிபு.
இவற்றைக் கவனத்தில் கொள்க.
ஊ- ஊது, ஓ> ஓது. காற்றினால் எழும் ஒலிகள்.
ஊடு > ஓடு. ஓடுவது காற்றினூடு விலக்கிக்கொண்டு ஓடுவதானன்றோ.
பேச்சில் உகரம் ஒகரமாக ஒலிப்பதுண்டு. உக்காரு - ஒக்காரு என்று பேசுவது கவனித்துள்ளோம்.
உச்சரி என்பது , உ- உச்சு ( முன்வருதல், ஒலி முனவருதல்; அரு+ இ> அருகில், இவண் என்னும் கருத்துகள், அரு இ > அரி. அருகில் இங்குவருதல். உச்சு என்பதில் முன்வரவு முதலெழுத்திலும் ஈற்றிலும் வந்து அழுத்தம் தருகிறது. உச்சி என்ற சொல்லிலும் உகரம் முன்வரவையும் இகரம் அண்மையையும் தெரிவிக்கிறது. நிற்கையில் முன்னிருப்பது உச்சி.
குவி என்பதில் குறுக்கத்தைக் குறிப்பது குகரம். இகரம் இங்கென்னும் பொருளது. குறுகி இங்குத் தெரிகிறது குவிதல் என்னும் நிகழ்வு.
கோவம் என்ற முதல் வடிவம், கோபம் ஆவது வகர பகரப் போலி அல்லது திரிபு. வகு> பகு என்பதைப் போல்.
சமஸ்கிருதம்.
சமஸ்கிருதம் இந்திய மொழியே ஆதலால், தமிழுக்குச் சொல்வது சமஸ்கிருதத்துக்கும் ஒப்பதே. சமஸ்கிருதம் இந்தோ ஐரோப்பிய மொழி என்பது பிற்கால ஐரோப்பியர் ஆராய்ச்சி. சீனமொழியுடன் ஐரோப்பிய மொழிகளை உறவு கற்பிக்க முயன்று தடுமாறி இறுதியில் சமஸ்கிருதத்தை எடுத்துக்கொண்டனர். இந்தக் கற்பனை மொழியுறவு, ஐரோப்பியர் ஆசியாவுக்கும் உரியவர் என்ற கருத்தை நிலைப்படுத்தவே. இதனால் ஐரோப்பிய மொழிகள் வளம்பெற்றன. இந்தோ ஐரோப்பிய மூலமொழி என்பது கற்பனை.
திறவிடம் என்பது தென்னிந்தியாவின் திறந்த ( கடலினை எதிர்கொண்ட்) இடம். திரவிடம் என்பதன் மூலமும் திற இடம் தாம். கடல்சூழ் இடத்தை எதிர்கொண்டு வாழ்ந்த பிராமணர் திரவிடப் பார்ப்பனர். றகரம் சொல்லாக்கத்தில் வந்தால் ரகரமாகிவிடும். திறவிடம் > திரவிடம். மூலச்சொல் தமிழ் அடிப்படை. ஆனால் தமிழுக்காக உண்டானதன்று. இடப்பெயர். கடலால் சூழ்ந்து திறந்த இடம் திற இடம் > திரவிடம்.
குவி (௳னம் குவிதல், மலர்ச்சிக்கு எதிர்).
குவி அம் > கோவம். குவி கோவி திரிபு.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக