ஞாயிறு, 31 ஜூலை, 2022

Cleaning Jobs are exacting by Mu. Saran

From Australia  Mr Mu Saran sent this, his poem. 

For your reading pleasure.


23.7.2022


M. SARAN (  Australia ).


We clean throughout the day 

The mundanity of it kills me 

I am standing there 

Sometimes squatting 

Sometimes bending 

Sometimes crying 

Man, am I bored! 

Bored out of my soul

When I lather soap on my body

When I wipe myself clean

When I scrub the pan 

When I vacuum the floor

When I floss my teeth

When I hang my clothes 

When I write down my thoughts 

All forms of it, takes so much god damn TIME!

Totally Insipid Management Exercises

A wonderful reason to be a sentient being

I wonder if cats feel the same when they lick themselves 

Or when an elephant showers itself with its trunk

But I guess, their mundanity is existing itself

They don’t get to choose unique experiences

Like jumping off the plane 

Surfing in the ocean

Traveling cities

Laughing with loved ones 

Or the ability to create

There are many things in life that bores me, 

especially cleaning

But I guess, it is worth it, for that tiny moments of love we share with others.

வியாழன், 28 ஜூலை, 2022

மாதப் பெயர் --- ஆடி

 தமிழில் ஆடுதல் என்ற சொல்லுக்குப் பல பொருளுண்டு. மனம்கூட ஆடுவதாகச் சொல்கிறார்கள். ஏதேனும் சிறப்புக்குரியதைக் காணின் மனம் ஆடுவதுண்டாம். "ஆடாத மனமும் உண்டோ" என்ற பாட்டில், காண்பதற்குரிய சிறப்பினைக் கண்டுவிடின், மனம் ஆடிவிடும் என்று சொல்வதாகக் கொள்ளவேண்டும். மேலும் கீழும் குதிப்பது மட்டுமின்றி,  ஆடுதல் என்பது " இயங்குதல்" என்ற்பால  பொருளும்  உடைத்தாய் உள்ளதென்பது சொல்லாமலே விளங்கும்.  ."ஆடுகிற கோயிலுக்கு விளக்குப் பிடிக்கிறான்" என்ற பண்டைச் சொல்லாட்சியிலிருந்து, ஆடுதல் என்றால், பூசனையும் அர்ச்சனையும் உற்சவமும் ஆகியன நடைபெற்று, இயக்கத்திலிருக்கும் கோயில் என்று பொருளாதலைக் காணலாம்.

என்ன ஆட்டம் ஆடினான் என்ற வாக்கியத்தில் ஆட்டம் என்பதை நடனம் என்று மொழிஎயர்த்தால் பொருந்தவில்லை.

ஆடுதல்,  இது ஆலுதல் என்றும் திரிதல் உடையது.

ஆடி -  இயக்கத்துக்குரிய மாதம்.  எனவே, கோயிற் பூசை முதலியவை மனித இயக்கத்தின் வெளிப்பாடுகளே.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின


காணாமற் போன சொல்: பரமாணர்

 பரமாணர் என்ற சொல் இப்போது நமக்குக் கிடைத்துள்ள நூல்களிலோ பேச்சு வழக்கிலோ இல்லை.  ஆனால் இதன் உள்ளுறைவுகளான :  பரம் என்பது உள்ளது.  மாணர் என்பதில் மாண் ( மாண்பு) என்பதும் உள்ளது.  அர் என்ற விகுதி  பல சொற்களில் இறுதியாக வருகிறது.  எனவே,  இது அறவே எண்ணிப்பார்க்க முடியாத சொல்லன்று.  இப்படி ஒரு சொல் இருந்திருக்க,  வாய்ப்புகள் உள்ளன என்பது தெளிவாகிறது.  எளிதில் அதை மீட்டுருவாக்கம் செய்ய முடிகின்றது.

பரமாணர் என்போர், கடவுட் சேவையில் சிறந்து  ( மாண்புற்று)  வாழ்ந்தோர் என்ற பொருளும் தெளிவாகவே கிட்டுகின்றது.

தமிழ் தோன்றிய காலத்திலிருந்து அதில் அழிந்துவிட்ட இலக்கியங்களும் சொற்களும் மொழிப்பயன்பாடுகளும்  எண்ணிலடங்காதவை என்பது தெளிவு. பெயர்கள் மட்டும் நாம் அறிந்த இலக்கியங்களும் புலவர்களும் மிகுதி. அகத்தியம் என்று பெயர் தெரிகிறது, நூல் கிடைக்கவில்லை அல்லவா?  இடத்தை அடைத்துக்கொண்டு இருக்கின்றன என்று நீங்கள் வெளியில் எடுத்தெறிந்து விடுகிறீர்கள்.  மற்றவர்களும் எறிந்துவிடுகிறார்கள். யாரும் காத்துவைக்கவில்லை என்றால்,  அவை அழியத்தாம் செய்யும்.  ஆகவே, ஏதேனும் ஒரு நூலில் பரமாணர் என்ற சொல் இருந்திருக்கலாம்.  

பிரமாணம் என்பது மாணம் என்று முடியும் சொல்,  அது உள்ளது.  பரிமாணம் , பரிமாணனார் என்பன உள்ளன. எனவே மாணம் என்று முடியும் சொல் தமிழில் இல்லை என்று கூறிவிடல் இயலாது.

ஐந்து நில வகைகள் தமிழில் சொல்லப்படுகின்றன.  அவற்றுள் ஒன்றில் வாழ்ந்தோர் இடையர்.  முல்லை நிலத்தார்.  அவ்வாறே,  மலையில் மட்டும் வாழ்ந்தோர் குறவர். இவ்வாறு ஒவ்வொரு நிலத்திலும் வாழ்ந்தோர், அதற்குரிய பெயருடையவராய் அறியப்பட்டனர்.

பரமாணர் என்போர், எங்கும் பரந்து வாழ்ந்து  பரமன் போலவே, அறியப்பட்டோர்.

இச்சொல் காணாமற் போய்,  அதுவே இன்று பிராம்மணர் என்று வழங்குகிறது என்று அறிந்துகொள்வது எளிதாம்.  பரந்து எந்நிலத்திலும் வாழ்ந்தோர்.  பிரம்மத்தை உணர்ந்தோர் என்ற விளக்கம் பிற்பட்டதாகும்.  உணர்வின் காரணமாகப் பெயர்பெறுதலென்பது,  அவ்வளவு எளிதன்று. உணர்வு என்பது காண்பொருளன்று. அருவமானது ஆகும்.  இடம் பொருள் முதலியவற்றால் பெயர் பெறுதலே பெரும்பான்மை.  இவ்வாறு நோக்கின்,  பரமாணர் என்பது எளிதாய்ப் பொருந்துமொரு சொல்.  இச்சொல்லிலும் மாண் என்பது அருவமானது என்றாலும், அவர்கள் எந்நிலத்திற்கும் உரியராய் இருந்தனர்.  இதுவேபோல், பரையர் ( பறையர்) என்போரும் எந்நிலத்திலும் வாழ்ந்தோர் ஆவர்.

பெருமானார் > பிராமணர் என்பதிலும் பரமாணர் > பிராமணர் என்பது அணுக்கமுடையதாகும்.

அறிக மகிழ.

மெய்ப்பு பின்னர்.



உடம்படு மெய் என்றால் என்ன?

 உடம்படு மெய் என்பதென்ன என்றும் முன்னம் கேள்விப்படவும் இல்லையென்றால் நீங்கள் இதைப் படித்து அறிந்துகொள்ளுங்கள். தெரிந்திருந்தால் இதைப் படித்து நேரத்தை வீணாக்குதல் வேண்டா.

தமிழ்மொழியின் இயல்பு என்னவென்றால் முன்வந்த சொல்லும் அடுத்து வந்த சொல்லும் ஒட்டிக்கொண்டு நடைபெறுதாகும்.  சிலமொழிகளில் இவ்வாறு சொற்கள் ஒட்டிக்கொண்டு இயல்வதில்லை.  ஒட்டிக்கொள்வதை அம்மொழிகளின் இலக்கணம் வெறுத்து ஒதுக்கும் மரபுடையன என்னலாம்.

தமிழில் சொற்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளில் ஒட்டிக்கொண்டு வழங்கும். ஒட்டிக்கொள்வதில் என்ன நன்மை என்றால்,  சொல்லை  வாயினின்று வெளிப்படுத்துதல் எளிதாக்கம் பெறுவதும் சொல்லில் இனிமை தோன்றுதலும் ஆகும்.  சில மொழிகளில் ஒட்டிக்கொள்ளுதலால்  பொருளில் கெடுதல் அல்லது புரிந்துகொள்ளுதலில் மாறுபாடு உண்டாகலாம்.  இனியும் சொல்வதானால் ஒட்டுதலால் சொற்களில் நீட்சி ( நீளமாகுதல் ) ஏற்பட்டு,  சொற்கள் தனித்தனியாய் இல்லாமல் ஒரு மருட்சியை விளைவிக்கலாம்.  எடுத்துக்காட்டாக,  லிம் சிம் என்பவற்றை ஒட்டினால்  அது லிங்சிம் என்று   வந்து லிம் என்ற சொல் லிங் என்ற சொல்லுடன் பொருள்மாறுபாட்டினை உண்டாக்கலாம். இரண்டனுக்கும் ஒருபொருளாயின் சரிதான், வெவ்வேறு பொருளானால்  மாறுபாடு ஊர்ந்துவிடும் என்பதை அறிக.  ஆனால் சிலவேளைகளில் லிம் என்பது இன்னொரு கிளைமொழிக்குச் சென்றேறும் காலை லிங் என்றாயினும் அதே பொருண்மை உடையதாய் இலங்குவதும் உண்டு.  இன்னொரு கிளைமொழி ஆவதால் அஃது எந்தப் பொருள் மாறுபாட்டையும் ஏற்படுத்துவதில்லை.

கோ இல் எனின் தமிழில் அரசனின் கட்டடம் அல்லது இடம் என்னும் பொருளுடையது. ஆனால் ஒட்டு இன்றி அவ்வாறே விட்டுவிட்டால், அரசனின் இடம் என்று மட்டும் பொருள்தராமல்,  அரசனைத் தனியாகவும் இடத்தைத் தனியாகவும் குறித்தலையும் கொண்டு இருபொருளாய் முன்வரவைக்கும்.  இஃது சரியன்று. கோயில் என்று ஓரிடத்தையே குறிக்கின்றோம். ஆகையால் ஒட்டிச் சொல்வதே சரியாகும்.  ஆனால் கோ இல் இரண்டினையும் ஒட்டுப்படுத்துகையில் கோயில், கோவில் என்று இரண்டு வகையிலும் சொல்ல இயல்கின்றது.  கோயில் என்பதில் ய் என்ற யகர மெய் ஒட்டெழுத்தாக வருகிறது; கோவில் என்னும்போது வகரமெய் ஒட்டெழுத்தாக வருகிறது.   சிலசொற்கள் இவ்வாறு வருமாயின் பொருள் மாறுபட்டு விடுகிறது.   ஆகவே இருவேறு ஒட்டுக்களிலும் பொருண்மை மாறுபாடுதலும் அஃது இன்மையும் காணலாகும்.

இத்தைய மெய் எழுத்தையே நாம் உடம்படு மெய் என்று சொல்கிறோம். இவ்வாறு வருபவை சொல்லொட்டிகள். இது மொழிமரபாகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்


செவ்வாய், 26 ஜூலை, 2022

நலம்பெற்று வீடு திரும்புக.

 விரைவில் நலம்பெற்று, 

வீட்டுக்குத் திரும்பிவந்து,

விழைந்தபூ வனங்களிலே

கரையில் மகிழ்விலேறி

கன்னித் தமிழேகூறி

காலமே  வென்றுவாழ்வீர்!


கரை -  எல்லை.

கரை இல் -  கரையில் - எல்லையற்ற.


வணக்கம்.




 

இலஞ்சம் தமிழில்

 ஓர் அதிகார வட்டத்தில்,  இல்லை என்று சொல்ல அஞ்சி  மறுக்காமல்   வாங்கிக்கொள்ளும்  செயலும், கொடுக்கும் செயலுமே இலஞ்சம் ஆகும்.

சொற்கள்:

இல்   ( இல்லை எனல்).

அஞ்சு   (  அச்சம் வெளிப்படுதல் ).

அம் -  நிலைமையும் ஒத்துப்போதல் அல்லது அமைதல்.

எல்லாம் சேர்த்தால் இலஞ்சம் ஆகும்.  தலை எழுத்தை நீக்க, லஞ்சம் ஆகும்.

கொடுக்காவிட்டால் கேட்பது நடைபெறாது என்று அஞ்சுவதும் அச்சமே.

பலவகை அச்சங்கள் உள்ளன.

எல்லாரும் வாங்கும் இடத்தில் நீங்கள் வாங்கவில்லை என்றால் உங்களை ஊறுகாய் போட்டு உள்ளே அனுப்ப்பிவிடுவார்கள் மற்ற ஊழியர்கள். அதுவும் அச்சத்தையே ஏற்படுத்தும்.

கொடுக்காவிட்டல் தம் வேலை நடைபெறாதெனலும் அச்சமே.

தேர்தல் சமயத்தில்,

இல்  -  இல்லை வெற்றி என்று,

அஞ்சு -  அச்சம் கொண்டு,

அம் -  ( பணம் கொடுக்கும் அமைவும்)

அதுவாகும்!

அச்சம் அனந்தம்! எல்லாம் எழுதமுடியாது. கைவலிக்கும்.

லஞ்சம் என்று வரும் இலஞ்சம் பலவகையில் அவிழ்க்கக்கூடிய ஒரு முடிப்பு. முன்னர் வந்த கருத்துக்களும் உள.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

திங்கள், 25 ஜூலை, 2022

உடம்படு மெய்கொண்டு வெவ்வேறு சொற்கள்.( தலையன், தலைவன்)

goog_1596888458 சங்ககாலத்தில் மக்கள் அனைவரும் இடம்நோக்க ஒன்றாக வாழ்ந்தனர் என்று கொள்வதற்கில்லை. மலைவாழ்நன் குறவன் எனப்பட்டான். ஆனால் விளைச்சல் நிலமுள்ள பகுதியில்  வாழ்ந்தவன்  ஊரன் என்றும் பிறபெயர்களாலும் அறியப்பட்டான். அங்குத் தண் துறைகள் இருந்தன.  இதனால் இவனைத் தண் துறை ஊரன் என்று கவிகள் சிறப்பித்தனர்.  துறையன் என்ற சொல்லும் வழக்குக்கு வந்தது.  இவர்கள் வேளாண்மை விளைச்சலில் ஈடுபடுபட்டவர்கள்தாம்.  கன்னடர் சிலர் கோவைப் பகுதிகளில் அமர்ந்து வாழத் தொடங்கிய காலை,  துறையர் என்ற  பெயர் அவர்களுக்கு உரித்தாக்கப் பட்டு, பின் ஒரு சாதியாகவும் மாறிவிட்டது!  நெய்தல் நிலத் தலைவனுக்கு  இதே அடியிற் பிறந்த துறைவன் என்ற சொல் பயன்படுத்தப் பட்டது.  ஆக:
துறை > துறைவன்,
துறை >  துறையன் 
என்று இருவேறு விதமாகச் சொற்கள் அமைந்தன.  ஒன்று யகர உடம்படு மெய் கொண்டு அமைந்தது.
தலை என்ற சொல்லினை அடியாய்க் கொண்டு அமைந்த சொல்லினின்று " தலைவன்" என்ற சொல் அமைந்தது.  அவ்வடியிலிருந்து  தலையன் என்ற சொல்லும் அமைந்தாலும்,  " மாங்காய்த் தலையன்,  பலாக்காய்த் தலையன், மொட்டைத் தலையன்,  சொட்டைத் தலையன்"  முதலிய வழக்குகளில்  இஃது ஒட்டாகவே வந்தது.  சட்டித்தலையன் என்று ஒருவகை மீனும் கடுக்காய்த் தலையன் என்று ஒருவகைப் பாம்பும்  பெயர்பெற்றன.  சற்று நீட்டலாகத் தலையாரி என்ற சொல்லை அமைத்துக்கொண்டனர்.
வலைகொண்டு உயிர்களைப் பிடித்து வாழ்ந்தவன்   வலையனென்று பெயர்பெற்றனன்  எனினும்,  வலைவன் என்ற சொல்லும் அமைந்து சொற்பெருக்கம் ஏற்பட்டது.
கலைவன், கலையன் என்ற சொற்கள் அமைப்புறவில்லை.  இவற்றை இன்னும் பயன்படுத்தாமல் இருப்பதால் எதிர்காலத்தில் ஏற்ற வழியில் அவை ஒரு புதுப்பொருளுக்குப் பெயராய் அமைய வசதி உள்ளது.
உடம்படுமெய்களை மாற்றுவதன் மூலமே இவ்வாறு ஓர் அடியினின்று
 ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் கிட்டி, மொழி வளம்பெற்றது காணலாம்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்

வெள்ளி, 22 ஜூலை, 2022

காவூர்தியணி ( convoy)

 முன்னர் நம் வலைத்தளத்தில் "கன்வோய்" என்ற ஆங்கிலச் சொல்லுக்கேற்ற தமிழ் மொழிபெயர்ப்பு பற்றிப் பேசப்பட்டது.

கன்வோய் என்பதில் பாதுகாப்பு பற்றிய கருத்து வழக்கினால் அல்லது பயன்பாட்டினால் வருகிறது.  கன் (con )  -  ஒன்றாக.   வோய் என்பது பயணிப்பது என்ற பொருளதாம்.  இந்த  அடிச்சொல், வோயேஜ் என்ற ஆங்கிலச் சொல்லின் தொடர்பை உள்ளடக்கிய சொல்.

கன்வோய் என்ற இற்றைநாள் வரையறவு ( definition),  பாதுகாப்பையும் உட்கருத்தாகக் கொண்டது.

ஆகவே இதன் கருத்துகள் இவையாம்:

பாதுகாப்பு.

ஊர்தல் ( வண்டி அல்லது வாகனம் செல்லுதல்).

அணியாகச் செல்லுதல்.

இப்போது இதை மொழிபெயர்த்தால்:

"காவூர்தியணி"  என்றாகும்.

இதுவே சரியானதாகும்.

ஊர்தியணி என்றுசுருக்கியும் சொல்லலாம்.


கா - காவல், பாதுகாப்பு.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.


புதன், 20 ஜூலை, 2022

பண்டைத் தமிழகத்தில் பேரிகை கொட்டிப் பிழைத்தல்.

 பண்டைத் தமிழ்நாட்டில்,  பேரிகை என்றோர் இசைக்கருவி இருந்தது.  இது ஒரு முரசு போன்றே  தட்டி ஒலியெழுப்பி மகிழ்வித்துக்கொள்ளும்-   மகிழ்விக்கும் ,ஒரு கருவியாகும்.  ஆனால் இதைக் கொட்டிப் பிழைத்தவர்கள்,  வயிறு வளர்ப்பதற்கே அதைச் செய்தனர் என்பது தெளிவு.  அதன் மூலம் அவ்விசையைக் கேட்டோரிடமிருந்து அவர்கள் ஒரு வருமானத்தைப் பெற்றனர்.  அது ஒரு நாளைக்கோ இரு நாளைக்கோ போதுமானதாக இருந்திருக்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.  ஆகையால் பின்னும் அவர்கள் அதைக் கொட்டி இசைக்கவேண்டியே இருந்தது.  அதனால் அவர்கள் பிழைத்தனர்.  பிழைத்தல் என்பது அது (கொட்டுதல்) ஒரு தொடர்வருமானம் தேடுதற்குரிய  நீள்செயலாய் இருந்தது  என்பது திண்ணம். 

இக்கருவியை வாசிப்பதில் இடப்பெயர்வு  வாசித்தோன்பால் இருந்தது.  அவன் ஓரிடத்தில் நின்றுவிடாமல்,  இடம் பெயர்ந்து அடித்துக்கொண்டுசென்றான்.   அதாவது பெயர்ந்து பெயர்ந்து இசைத்தான்.  இங்கு பெயர்(தல்) என்ற வினைச்சொல், பேர் என்று திரிந்தது.  இச்சொல்லே பேரிசை என்பதில் முன் நிற்கும் சொல்லாகும்.  கொட்டுவதில் எழுவது ஒலி.  அதை இசை என்றும் சொல்லலாம்.  எனவே  பேரிசை என்ற பெயர்,  நாளடைவில் பேரிகை என்று பெயர்மாற்று அடைந்தது.  இஃது திரிபு ஆகும்.

பேரிசை என்பது பெரு + இசை என்றும் பிரித்துக் கூறற்கு வசதி யுள்ள சொல்.   இவ்வசதி சொல்லிலே அமைந்து கிடப்பதால் அதையும் மறுத்தற்கில்லை. பெருமை என்ற சொல்லில் அடியுடன் புணர்த்திக் கெடுத்த மை விகுதி, இலக்கணத்திற் சொல்லப்பெறும்.  பெருமை என்ற பண்பினால் எழுந்தது என்பதை அறிந்துகொள்ள இத்தகை விளக்கங்கள் கொள்ளப்பட்டன. ஈண்டு அதன் பயன் சற்றுக்குறைவானதே.  

இப்பொருளை ஏற்றுக்கொள்வதாயின்,  இஃது  அதிக ஒலி எழுப்பிய கருவியைக் குறிக்கிறது என்னலாம்.  பல முரசுகளும் அதிக ஒலி எழுப்பும் தன்மை வாய்ந்தவையேதாம்.   பெரிது சிறிது என்பது ஒரு பொருளை இன்னொன்றுடன் தொடர்புறுத்துவதால் எழும் கருத்து.  இந்த இரண்டாவது பொருளையும் நீங்கள் கவர்ந்து கொள்ளலாம்.  இதில் மறுப்பொன்றும் இல்லை. யாம் இதை இருபிறப்பிச் சொல் என்றே விடுப்போம்.

காரிகை கற்றுக் கவிபாடாதவன், பேரிகை கொட்டிப் பிழைக்கலாம்  என்ற பழமொழி,  இதை வாசித்தவர்களின் திறனின்மையையும் ஏழ்மையையும் விளக்கவல்லதாகும்.  கவிவாணரே உயர்ந்தோர் என்ற பொருளை நீங்கள் மருவிக்கொண்டு நின்றகாலையும்  பலரின் திறனின்மையையும் ஏழ்மையையும் நாட்டின் அற்றை நிலையையும் நாம் உதறித் தள்ளிவிடுதல் இயலாமை காண்க

முரசு கொட்டும் வேலையைப் பலர் செய்தமைக்கும் பொருளியல் நிலையே முதற்காரணமாகும். மக்களின் பொருளியல் நிலை ஒருவருக்கொருவர் வேறுபடுதல் இன்றுபோலவே அன்று மிருந்தது.

எனவே,  பேரிசை >  பேரிகை   ( திரிபு)  கண்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

Edit: some minor changes made. 21072022 0622


முரு ஆட்டோடிரேடிங் ( உந்துகள் விற்பனை)

  சிங்கப்பூரில் தமிழர் நடத்தும் உந்துகள் விற்பனை நிலையம் ஒண்ணே ஒண்ணு , கண்ணே கண்ணு என்று ஒன்றுதானே இருக்கிறது?  அதையும் நாம் போற்றுவோமாக.  தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது  இவ் விற்பனை நிலையம் பற்றிய ஒரு தொகுப்புரை சிங்கப்பூர் தொலைக்காட்சியில் வந்தது.  அதை ஒரு நேயர் படம்பிடித்து அனுப்பினார்.  நன்றி. நன்றி.  அதை இப்போது பதிவேற்றுகிறோம்.

கண்டு மனமகிழ்க.




அதன் உரிமையாளர், விளக்கம் கூறிக்கொண்டிருப்பது காண்க.




ஞாயிறு, 17 ஜூலை, 2022

காலை வணக்கம் ( பண்டிகை, விழா வேறுபாடு)

 இந்நாளே பொன்னாள்.  

நலமாகும்  நன்னாள். 

இனிதாகும் கனவில். 

விடிந்தாலும் நினைவில். 

பனிபோலும் தண்மை. 

மனத்துக்குள் உண்மை . 

வினைதீர்க்கும் காலை 

விழைகின்ற வணக்கம்.



விழைதல் - விரும்புதல்.

விழை என்ற வினைச்சொல்லிலிருந்தே விழா என்ற சொல் வந்தது.

விரும்பிக் கூடி ஆடுதல், பாடுதல் உண்ணுதல் என்று எதுவேனும் ஆகும்.

பண்டிகை என்பது முன்பே உள்ள நாள்.  பண்டு என்பது அடிச்சொல்.

பண்டு. இகத்தல். ஐ.

இகத்தல் - நெருங்குதல், கடத்தல்.  something you have to pass through.  These may have been imposed or prescribed  by the norms of society or previous monarchs who are no longer alive and therefore are hardened by social adherence.

இகத்தல் = இயத்தல்.   பண்டு+ இக + ஐ.

இக என்பதன் ஈற்று அகரம் கெட்டு, ஐ விகுதி ஏற்றது.

பண்டிருந்து உம்மை நெருங்கிவந்து, நீர் கடந்து செல்ல வேண்டிய நாள். அதை மகிழ்வாய்க் கடந்து செல்லுதல் விரும்பப்படுவது ,  வழக்கம்.  

அடிக்கடி அரசைக் குறைசொல்வது மனிதனின் வழக்கம்.  இதை மாற்றுவது எப்படி?  எதாவது கூடி மகிழும் நிகழ்வுகள் வேண்டும்.  எடுத்துக்காட்டு: இந்திராவிழா,[ பூம்புகார் (பழைய நகரம்) என்ற நகரில் கொண்டாடினர்.]  வாழிபாட்டு முறைகளின் கட்டமைப்பு மூலமாகக் கூடி மகிழச்செய்வது.  எ-டு: தீபாவளி.  வேளாண்மை விளைச்சல் அமைப்புகளில் மூலமாக மகிழ்ச்சி யூட்டுவது. எ-டு:  பொங்கல்.  There are many other ways too.

In ancient societies, there were "social engineers"  who helped the monarchs to organize each society.

Separate them into different organisations.  Senior Officers. Junior Officers.  separate organisations for each category.

உலக சரித்திரத்தில் எப்போதுm இவற்றை அமைத்துக்கொண் டிருந்திருக்கிறார்கள்.  சாதி அமைப்புகளும் இவ்வாறு நடப்புக்கு வந்தவைதாம்.

Preservation of existing social order is important. You see the point?   Art of ruling the masses.

சாப்பாடும் கொடுக்கவேண்டும்.  அப்போதுதான் மனிதன் சும்மா இருப்பான்.

மனிதன் எதை நம்புகிறான் என்பது முக்கியமன்று. அதை அவனவனும் தீர்மானித்துக்கொள்ளலாம்.  அரசுக்கு அதன் ஆட்சி ,  முறையாக நடைபெறுவது முதன்மையாகும்.

முடிந்தால் அரச குடும்பங்களுக்குள் புகுந்து குத்தியும் விடுவான் மனிதன்!! ஆகையால் விழாக்கள், பண்டிகைகள் பயனுள்ளவை. 

பிள்ளைகட்கு வீட்டுச் சூழலில் அக்கறை ஏற்பட வேண்டுமானால் வீட்டில் சில கட்டமைப்புகள் இருக்கவேண்டும்.  தீபாவளி,  பலகாரம் இருக்கவேண்டும். பிறந்தநாள் இறந்தாள் ஆடின நாள் பாடினநாள் இருக்கவேண்டும். பாரம்பரிய உணர்வு வேண்டும்.  அதற்குப் பழைய இசைமுறைகள் உதவும். நடனம் கூட உதவலாம்.   பிற இனங்களுடன் இணக்கப்போக்கு வேண்டும்.  பிற மொழிகளை அறியவேண்டும்.  உம் மொழியோடு பிறமொழி எப்படி இணங்குகிறது என்று கண்டறியவும் வேண்டும்.

நன்றி வணக்கம்.

மேலும் வாசிக்க:

https://sivamaalaa.blogspot.com/2020/11/blog-post_18.html


அறிக மகிழ்க.

மெய்ப்பு (edit)   பின்


சனி, 16 ஜூலை, 2022

வாழ்த்துச் செய்திகள் தொகுப்பு.

 நேற்றும் இன்றும்  இறையருள் பெருகிட

நாளை  அருவியாய் அருளாசி  வருகவே!

ஆத்தாள் கருணையில் காலை வணக்கம்!

அரிய  நலங்கள்  அடைவீர் பலப்பல!


வெள்ளிவந்  திடிலோ  அள்ளித் தருவது

வியனுல கறிந்திடாப்  பயனுறு பரிசே.

உள்ளொளி  உலகத்து உயிர்களுக் கெல்லாம்

வெள்ளுறு விடியலும் விரிந்திடப்  பெறுக.


திருவருள்  என்பது தித்திக்கும் தேனே

பெறுமவற்றுள்ளே அறவில் வானே.

பொருள்:

வெள்ளுறு -  வெள்ளையாகும்.  ( வெளிச்சம்)

அறவு இல் -  எல்லை இல்லாத. முடிவு இல்லாத.

அறவு: இதன் வினைச்சொல் , அறுதல். என்றால் முடிதல்.

வானே -  விரிவானதே.  அருளுவிரிவுக்கு வான் உவமையானது.

ஒப்பீடு: துறவு என்ற சொல்லில் துற - வினைச்சொல். வு என்ற விகுதி சேர, இயல்பாய் அமைந்தது.  ஆனால் அறவு என்பதில் அறு என்பதன் உகரம் கெட்டு விகுதி வந்தது.  அறு  என்பது அற என்று எச்சம்போல ஆகிப் பின் விகுதி ஏற்றது. உறு என்பது  உறவு என்பதைப் பிறப்பித்ததும் ஈற்றுகரம் கெட்டே ஆனது.  இலக்கணத்தில் கெடுதல் என்றால் எழுத்து மறைதல்.


இவை ஒரு நண்பருக்கனுப்பிய வாழ்த்து வணக்கத்தில் போந்த சிறப்புச் செய்திகளின் தொகுப்பு.



வெள்ளி, 15 ஜூலை, 2022

ஏகாரத்துக்கு இகரம் வருதல். சொல் வித்தியாசம்.

 சில சொற்களில் திரியும்போது நெடிலுக்குக் குறிலாய் வந்து திரியும்.  எ-டு:

பூ  >   பு  :     பூ(வு)  >  புஷ்பம்.

பூத்தல் என்பது வினைச்சொல். திரிதலில் பலவேறு விதம் என்றாலும்,  வினையிலிருந்து திரிதலையே சிறப்பாய்க் கொள்வர்.  எ-டு: 

தோண்டுதல்:  தோண்டு> தொண்டை.  ( விகுதி:  ஐ).

ஐ விகுதி வந்த சொற்கள் பிற:  கல் > கலை;  கொல் > கொலை.

தோண்டு என்ற வினை.  தொண்டை என்றாவதற்கு நெடில் முதல் குறில் முதலானது.

பூ என்பது பூப்பு என்றாகி,  அம் விகுதி பெற்று பூப்பம் என்று  ஆகி  புப்பம் என்று  குறுகி,  புஷ்பம் என்று தமிழிலில் இல்லாத ஒலியை அணிந்துகொண்டது.  வல்லொலி தவிர்த்து மெலிந்தது. இவ்வாறாவது தமிழின மொழிகளில் பெருவரவு. தமிழிலும் உண்டு:  உயர் >  ( உயர்த்தி )>  ( உசத்தி)  >  ஒஸ்தி.  உகரம் ஒகரமாதல்.

சில சொற்கள்,  திரிந்தவுடன் இடைவடிவங்கள் மறையும்.  உயர்த்தி என்ற சொல் மறைந்தது. புப்பம் மறைந்தது.     உசத்தி என்பது ஒசத்தி என்று பேச்சில் வருகிறது.  வந்தபின் ஒஸ்தி தோன்றுகிறது.

வேறு என்பது வினையன்று.  வினையல்லாத ஏனையவும்  விகுதிபெற்று இன்னொரு சொல்லாகும்.

வேறு + மை >  வேற்றுமை.

வேறு  >  வேற்று > (விற்று) > (வித்து)

இடைவடிவங்கள் முன்னரே வேறு பொருளுடன் சொற்களாக மொழியில் பயன்பாட்டில் இருந்தால், அவ்வடிவங்கள் மேலும் திரிந்து இறுதிபெறும். இன்னோசை இல்லாதவிடத்து மேலும் திரிந்து செவிக்கினிமை பெற்றுச் சொல்லாகும்.

வித்து>  வித்தி+ ஆ + அம் >   வித்தியாயம்.>  வித்தியாசம்.  

ய - ச என்பன மொழிகடந்த ஆக்கமுடையன. Non language specific.

ஆ -  ஆகி என்றும்

அம் -  அமைவது என்றும்

பொருள்கூற வசதி இங்குள்ளது.  சில சொற்களில் இடைநிலையும் விகுதியும் பொருளற்ற வெற்றாக இருக்கலாம்.

இந்த உதாரணத்தில் ஏகாரத் தலை இகரமாயது காண்க.

க, க, க என்பது ஓர் ஒலி.

இந்த ஒலி காக்கை செய்யும்.

கொ கொ கொ என்பது ஒலி. கோழி செய்யும்.

க+ து >  கத்து (து வினையாக்க விகுதி ) >  கத்துதல்  ( தல் தொழிற்பெயர் விகுதி).

கத்து என்பதில்  த்  புணர்வொலி.

கத் என்பதை அடியாக எடுத்துக்கொண்டால் இன்னொரு வடிவம் கைவருகின்றது.

கத் > கித் > கீத்   (கீதம்).  அம் விகுதி இல்லாமல்.  இது அயல் பாணியாய் உள்ளது.

கீ+ து + அம் > கீதம்..

கீத் + ஆ > கீதா,    ( ஆ - ஆதல் வினை).

ஒலி வெளிவர உதவி ஒலியும் ஆகும்.

ஒலியே முதன்மை. அதுவே நாத பிரம்மம்.  ஐம்புலன்களில் ஒன்று.

காக்கை கத்துதல் ஐந்து மூலப் புலன்களில் ஒன்றன் வெளிப்பாடு.

புழுக்கள் ஒலி செய்வன அல்ல;  அல்லது அவை செய்யும் ஒலியை உணர

நம் செவிக்கு ஆற்றல் இல்லை. 

பகவன் ஒலி மூலம் நமக்கு உணர்த்தியவை கீதை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.




புதன், 13 ஜூலை, 2022

அருச்சுனன்

 உள்ளுறை சொற்கள்.

அருமை

சுனை

அன் விகுதி.

அரு + சுனை+ அன் = அருச்சுனன்.

அரிய சுனை போலும்‌ ஊறும் அறிவினன்.

மற்ற தேடல்களில் கிட்டாத பொருள்களெல்லாம் தமிழில் கிட்டுமென்றார் ஸ்ரீ அரவிந்தர்.

.பதிவு: ( தொலைப் பேசியிலிருந்து)

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

செவ்வாய், 12 ஜூலை, 2022

பிராந்தியம், கப்பம்

 அஸ்திரம் என்ற சொல்லை முன்னமே விளக்கியுள்ளோம்.  அது இவண் உள்ளது. ( இவண் -  இங்கு).  ஆதலால் எழுதவில்லை.  ஆனால் இச்சொல் அண்மைச் செய்திகளில் இடம்பெற்றிருந்தது.  தொடர்பினதான இடுகையை இங்குக் காண்க: https://sivamaalaa.blogspot.com/2020/08/blog-post_20.html

ஆகவே பிராந்தியம் என்ற சொல்லை இன்று தெரிந்துகொள்வோம். இதையும் சுருக்கமாகச் சொல்வோம்.

[ஒரு அரசன் என்று சொன்னால் அது இலக்கணம் பிழைத்த செயல் என்பர்.  பிழைத்தலாவது பிழை ஆகுதல்.  அரசன் ஒருவன் என்றுதான் சொல்லவேண்டும் என்று  வித்துவர் சொல்வர்.  அது உண்மைதான் என்றாலும் இந்த மிக்கப் பழமையான இலக்கணத்தைப் பின்பற்றவில்லை.  இப்புலவர்கள்  ஒரு என்பது அஃறிணை வடிவம்,  அரசன் என்ற உயர்திணை வடிவினோடு இணக்குறாது என்பர்.  ( There is no accord ).  இத்துணை ஆழ்தமிழ் இதுகாலை வழக்கில் குன்றிவிட்டது. நிற்க.]

அரசன் ஒருவன் ஒரு நாட்டின் பெரிய மையப்பகுதியை ஆண்டுகொண்டிருக்கும் போது அவன்றன் ஆளுகைக்கு உட்படாமல் எல்லையை ஒட்டியபடி இருக்கும் நிலப்பகுதிகள் சிவற்றை  ஆளுநன் ஒருவனிடம் விட்டு ஆட்சி செய்துகொண்டிருப்பான். அப்பகுதியிலிருந்து பண்டங்களும் பணமும் வருசூல் செய்யப்பட்டு அவனுக்கு வந்துகொண்டிருக்கும்.  அந்த ஆளுநன் கப்பம் கட்டுகிறாரன் என்றும் சொல்லலாம்.  கப்புவது தொகை  என்றால் அது "விழுங்குதொகை " என்று சுருக்கமாச் சொல்லாம்.  வாயில்வைத்து மென்று தொண்டைக்குள் கடத்துவதும் கப்புதல். "அவல் பொரி கப்பிய கரிமுகன் அடிபேணி" என்பது காண்க.  குறுநில ஆளுநனிடம் கடத்தித் தன்பெட்டிக்குள் வைப்பதும் கப்புவதுதான். ( "கடப்பு" ச் செய்வதுதான்). பொருள் தொடர்புகளையும் தமிழையும் அறிக.)  கடப்பு > கப்புதல் ( வினையாகும் சொல்)  > கப்பம். கவர்தல் > கவர்ப்பு > ( இடைக்குறைந்து) : கப்பு> (வினையாக்கம்) > கப்புதல் எனினுமாம். இச்சொல் இந்தோஐரோப்பிய மொழிக்குள் புகுந்துள்ளது தெரிகிறது.

இப்படிக் கப்பமோ திறையோ வரியோ கட்டியோ கட்டாமலே அடுத்துள்ள பகுதி  "பிராந்தியம்".

பிற >  பிர. பிறத்தல் என்பது தாயிலிருந்து பிரிதல்தான்.  இது பிரி > பிரு என்றும் திரிவது,   ( பிரிந்து நிற்கும் முற்றாத கிழங்கு: பிருகு).

அண் :  அடுத்து அமைந்துள்ள.  ஆம் என்று வேறுபட்டும் விளக்கலாம்.

தி + அம் -  இவை விகுதிகள்.

1. பிற ஆம் தி  அம்;   2 பிற அண் தி அம்.

ஆகப்  பிராந்தியம் ஆயிற்று.    அண் தி - அண்டி என்ற வர வேண்டியதில்லை.

இதன்மூலம் பிராந்தியம் என்பதன் பிறப்புணர்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர். 



திங்கள், 11 ஜூலை, 2022

இதர என்ற....

 "இதர  மாதருடன் நீ களிப்பதோ " என்று ஒரு கண்ணன் பாட்டிலே வரும்.

இதர என்பதும் தமிழ்தான்.

இதர என்றால் மற்ற என்பது.

இது அற என்பது இதனை  அறுத்துவிட, பிற அனைத்தையும் குறிக்கும்.

இது அற >  இதற > இதர.

இதில் றகரம் ரகரமாக மாறியதே திரிபு.

சொல்லாக்கத்தில் இது மாறும்.   அறு+ அம் + பம் >  அரம்பம்,  தலையிழந்து ரம்பம்.  இதனைத் தலை நீக்கி எழுதியோரும் உளர்.  றம்பம் என்று.  பின்னர் ரம்பம் ஆனது.  

ரகரம், றகரம் வேறுபாடின்றி வழங்கிய பல சொற்களைப் பாவாணர் பட்டியலிட்டுள்ளார்.அவர் நூலில் காண்க.

வேறு இலக்கண நூல்களிலும் தேடிப் பார்க்கலாம்.

இனி, இதுதவிர என்பது.

இ(து)த(வி)ர  > இதர என்றுமாகும்..   இருவேறு எழுத்துக்கள் குறைந்த ஒரு சொற்றொடரிலிருந்து திரிந்தமைந்த சொல் -  இதர.

இதுதவிர என்று "தத" என்று நாவில்தடை விளையும்படியாக ஏன் சொல்லி இடருற வேண்டும் என்று எளிமைப்படுத்தி ( simplified ) விட்டனர் எனினும்,  திரிபு என்பது ஓடிப்போய் விடாது.  நல்லபடியாகவே பயனுறும். வாழ்க

றகரம் என்பது இரு ரகரங்களின் கூட்டு எழுத்து.  ர - ரர > ற.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

ஞாயிறு, 10 ஜூலை, 2022

பண்டை அரசர் முறைகேடுகள்

 அரசனைக் குறிக்கும் அடிச்சொல்:  அர் என்பது.  பழைய இடுகைகள் காண்க. தொடர்புடைய சொற்கள் விளக்கப்பட்டுள்ளன. இவ்வடிக்கு வேறு பொருள்களும் உண்டு.  எ-டு:  அர் (சிவப்பு)  :  அரக்கு.

ஆகுதல் என்பதை  ஆவுதல் என்றும் சிலர் பேச்சு வழக்கில் உச்சரிப்பர்.  க- வ திரிபு.

 ராவ் என்ற பட்டப்பெயர் .

அர +  ஆவு(தல்) > அராவு > ராவ் ( தலையெழுத்து மறைவு).

ராவ் அது >  ராவது > ராவத்

இது தமிழிலிருந்து போந்த அயல் திரிபு.  அரசனின் ஆட்கள்/உறவினர் ஆனவர்கள் என்பது பொருள்.

அது என்பது அஃறிணை விகுதி என்ற இலக்கணம் பின் போற்றப்படவில்லை. கந்தா சொன்னிச்சு, செல்வம் கடைக்குப் போச்சு என்றெல்லாம்  பயன்பாடு அலைப்புறுவது காண்க.

ராண ( மகாராணா)  என்பது:

அரண்> (அரணன்) >  அரணா > ராணா.  ( அரசன், அரண் உடையான்).

பழங்காலத்தில் அரசர் பல பெண்களுடன் தொடர்புகொண்டிருந்தனர். இது அவர்கள் தங்கள் வேலையில் இருந்த கவனத்துக்கு முரணாய் அமைந்தது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இதற்குப் பல பெண்கள் போட்டி போட்டகாரணத்தால்,  சில சிற்றிலக்கியங்கள் தோன்றி, அரசனின் மேய்வினை உயர்த்திப் பாடின.  அரசன் போரில் வென்ற காலை அவனைப் பல பெண்டிரும் அணைக்க விரும்பியதாகப் பாடுவதுண்டு.  ( கலிங்கத்துப்பரணி).  அரசனுடன் தொடர்பு கொண்டோருக்குப் பல பட்டங்கள், வாய்ப்புகள் சென்று சேர்ந்தன. இப்பெண்கள் அவர்களின் குடும்பங்கள் முதலியவை பதவி ஏற்றம் அடைந்தனர். எல்லா அரசர்களும் இவ்வாறு நெகிழ்வுடையவர்களாய் இருந்தனர் என்பது இதன் பொருளன்று.

மற்றும்:

ராணா + ஆவுது >   ராணாவுத்.  ( அரசனின் உறவினர்)

வைப்பாட்டி என்ற சொல்:.

ஆயிரத்துக்கு மேற்பட்ட வைப்பாட்டிகள் இருந்த மன்னர்களும் உலகில் உண்டு.

இதனால் அரசனின் சுற்றம் விரிந்து, அவன் ஒருவகையில் அரசாட்சியில் வலிமையுற்றான். ( enlargement of ground support).   They (those who were so connected)  could also function as eyes and ears of  the monarchy.  This was better than appointing unknown and inexperienced outsiders. 

வைப்பு என்பது பணம் கொடுத்துவைத்தலையும் குறிக்கும்.  பணம் - பொன், மணி, இதர செல்வங்களையும் குறிப்பது தெளிவு.

வைப்பாட்டி என்ற சொல் இதனையும் மறைமுகமாக/ நேரடியாகக்  குறிக்கும். நாடு எதிரியால் கைப்பற்றப்படும்போது, இச்செல்வங்கள் ஒருவகையில் காப்பாற்றப்பட்டன. பட்டம்கொள் மன்னன் பகைவரிடம் நாட்டை இழக்க நேர்ந்தால், அவன் இக்கூட்டங்களுக்குள் மறைந்து வாழவும் ஒருவேளை வாய்ப்பு அடையலாம்.

இவற்றைப் பண்டை ஆட்சியாளர்களின் வலிமையாக்கம் என்றும் கருதலாம். இவற்றில்  கருத்துவேறுபாடுகள் இருக்கலாம்.

ராசபட்சே தம் உறவினரையே உயர்பதவிகட்கெல்லாம் நேமித்து  ஆண்டது கவனிக்க.  இன்றை அரசியல் நெறிகள் இதை ஏற்கவில்லை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு ( edit) :  பின்.

குறிப்புகள்.

 1. இது முன்னிருப்பவரை  உளப்படுத்தாத தன்மைப் பன்மை விகுதி,  ஏம்.

2  விசனம் <  வீசு + அன் + அம், > விசனம்,  சொல்லமைப்புப் பொருள்: வலிமையாய் விரித்து வீசுதல்,. துயரத்தை வீசுதல்.  முதனிலை குறுகி அமைந்த தொழிற்பெயர்.  தாவு என்ற சொல், ஒருவன் இல்லறத்திலிருந்து துறவுக்குத் தாவுதலையும் குறிக்கும்.  தாவு+ அம் > தாவம், முதனிலைக் குறுக்கம்., >தவம்.   தப்பு+ அம் > தபம் > தவம்,  (ப - வ போலி);,  இல்லறத்திலிருந்து  தப்பித் துறவியாதல்,  ---- எனப்பலவகையாய் பொருள் கூறக்கூடிய சொல் தவம் என்பது,


இன்று தித்திக்கும் திங்கட்கிழமை. அன்பர்கள் எமக்கு தினமும் வாழ்த்துகள் அனுப்புகிறார்கள். அதில் திங்கட்கிழமை தித்திப்பதாக எழுதுவார்கள். யாமும் அவ்வாறே ஏற்றுக்கொள்வேம். மனம் மகிழ்வாய் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அதற்காகத்தான் முன்  காலத்தில் மனம்போல் வாழ்வு என்றனர்.  வாழ்த்துக்கள் உங்களுக்கு.

சனி, 9 ஜூலை, 2022

நீந்திய இடத்திலேயே நீந்துவது.....

 நீந்திய  இடத்திலேதான் நீந்துவாயா?

ஆழ்ந்தமிழ்  நீரினுள்ளும்  நீந்துசென்று!

வீழ்ந்துகவிழ் மீன்களும் ஒன்றிரண்டு,

வாழ்ந்துயர்ந்த நீந்துவன பலவேஉண்டே. 


சிவமாலை.


ஆழ்ந்தமிழ் -  ஆழ்ந்து அமிழ்கின்ற

கவிழ் - கவிழ்கின்ற பேரிடர் உள்ள

கோவிட்டினாலும் நன்மையா?

 மருந்துகளும் முடிந்துபோச்சு நம்மகடையிலே  ---  அம்மே

மாந்தர்களும் சோர்ந்துபோன கிருமிகளாலே!

இருந்திடப்பலர் நோய்விலக்க மருந்துதேடினார் ----  அதனால்

இன்றுலகின் மருந்தாலைகள் பெருதொகைகண்டார்.

இருந்தவர்கள் இறந்துபோனார் வருந்துகிறோம்நாம் ----ஆனால்

இறந்திடாமல் மருந்துகொண்டு சிறந்தவர்பல்லோர்!

திருந்துதொழில் வளர்ந்தசில நாமுமறிந்தோம்  ---- கண்டாய்

அழிந்தசில தாமுமுண்டிப்  பரந்த ஞாலமே


பல்லோர் -  பலர்

ஞாலம் -  உலகம்

பரந்த -  விரிவான.

திருந்துதொழில் -  நல்ல தொழில்கள்.

கண்டாய் -  நமக்கும் தெரிகிறது என்பது.

தாமுமுண்டிப்  -  தாமும் உண்டு இப் (பரந்த)

முடிந்துபோச்சு -  இங்கு முடிந்தனவே என்பதுதான்  இலக்கணபடி வரும். இது பேச்சுவழக்குத் தழுவி,  போச்சு எனப்பட்டது.




இப்படம் கடையில் மருந்துகள் குறைந்தன என்பதனைக் காட்டுகிறது. தேடிய மருந்து கிட்டவில்லை.

வெள்ளி, 8 ஜூலை, 2022

ஆங்கிலம் " சோரோ" - சோர்வும் சோகமும் பொருள்தொடர்பு

 சோகம் என்ற சொல்லை முன் ஓர் இடுகையில் விளக்கியிருந்தோம். அது சோர்தல் என்ற வினைச்சொல்லைத் தொடர்ந்து எழுந்தது என்பதே அங்குக் கூறப்பட்டதாகும்.  இதை மீண்டும் தெரிந்துகொள்ள 

https://sivamaalaa.blogspot.com/2019/03/blog-post_23.html 

என்னும் இடுகையைக் கண்டு படிக்கவும் ( அல்லது வாய் > வாயிக்கவும்> வாசிக்கவும்).

ஓர் அமங்கலமான நிகழ்வை நாம் கேள்வியுற்ற பொழுது, சோர்வு அடைகிறோம். இது  உடற்சோர்வாகவும் இருக்கலாம்; மனச்சோர்வாகவும் இருக்கலாம், இரண்டும் உள்ள கலவையாகவும் இருக்கலாம். ஏனைக் காரணங்களாலும் இருத்தல் கூடும்.  இந்தச் சோர்வுதான் சோகம்.

சோர் என்ற வினையடிகாகவே  ஆங்கிலச் சொல் அமைகிறது.

சோர் > சோரோ sorrow ஆகிறது.

சோர்க என்பது பழைய செக்சன் மொழியிலும் இருந்ததாக ஐரோபிய ஆய்வாளர் உரைப்பர்.  சமஸ்கிருதத் தொடர்பு வடிவம்  கணடறியப்பட்டுள்ளதாகக் கூறுவர்.

சோர் என்ற வினைச்சொல் தமிழில் உள்ளது. 

கவனித்தல் என்ற பொருளுடைய சமஸ்கிருதச் சொல் நெருக்கமுடையதாக இல்லை.

இதன் தமிழ்த் தொடர்பு தெளிவாய் உள்ளது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின்னர்.




புதன், 6 ஜூலை, 2022

சென்ற இருபது ஆண்டுகளில் உலகத் தலைவர்கள்.

 இருபது நீளாண்டுகள்  --- தம்பீ

இருந்தவர் மறைந்தவர் பற்பலரே,

தருபுதுக்  கருத்துகளால்--- அன்று இத்

தரணியை மலைப்புறச் செய்தனர்காண்!

வருபதி  யாயிருந்தோர்---- நமை

வருந்துமிந்  நோய்நுண்மி பரந்தழிக்க,

ஒருபழி செய்திலரே--- உலகு

ஒன்றித் தழைத்திடச் செய்ததன்றி.


சென்ற இருபது முப்பது ஆண்டுகளில் இருந்த அரசியல் தலைவர்கள் நோய்நுண்மிப் போர் எதையும் செய்யவில்லை.  உலகு தழைக்கப் பல செய்தனர்.  அவர்களைப் பழிசொல்ல ஒன்றுமில்லை. இதைக் கூறுவது இக்கவி.

வருபதி ....  - வந்த  அரசியல் தலைவர்கள்.

கோவிட் பரப்பியதுபோல பழிச்செயல்கள் எதையும் செய்யவில்லை.  ஆகவே இப்போது நிலை  மாறிவிட்டது.



சனி, 2 ஜூலை, 2022

போர்ச் சூழலில் கோவில்கள் தொழுமனைகள்.

 உலகெங்கிலும் பலவித நம்பிக்கைகளும் அவற்றுள் ஒன்றுக்கொன்று இணக்கமின்மையும் புரிதலின்மையும் ஆண்டாண்டாகவே இருந்துள்ளன. இதன்காரணமாக.  போர்களின்போது இடிக்கப்பட்டு அழிந்த கோவில்கள் பல. சண்டைபோட்டுக்கொள்ளுதல் என்பது விலங்குகள், பறவைகள், நீர்வாழ்வன என்று எல்லா உயிரினங்களிடமும் காணப்படுகிறது.  மனிதன் என்பவன் இதற்கு விதிவிலக்கன்று.

ஆகவே மனிதன் மற்ற உயிரினங்களைவிட மேலானவன், மாற்சாரியங்களை வென்றவன் என்று கூறிவிடமுடியாது.

மனிதன் பல விலங்கியல்புகளின் உறைவிடம்தான்.

புத்தர்போல் பல பெரியவர்கள் அவற்றை வென்று மேலெழுந்திருக்கலாம்.

பாரசீகப் படைகளுக்கும் 'கிரேக்க'ப் படைகளுக்கும் நடந்த ஒரு போரில், ஏதன்ஸ்  நகரத்துப்  பெருங் கோயிலொன்று ( அதினா தேவியின் கோயில் ) அழிக்கப்பட்டது.(ஏறத்தாழ கி.மு. 480 வாக்கில்).  அது இன்று சுற்றுலாக்காரர்கள் பார்த்துப் பெருமிக்கும் ஓர் இடிபாடாக  மாறியுள்ளது அல்லது மாற்றுப்பிறவி மேற்கொண்டுள்ளது. பாரசீகர்களுக்கு அதினாமேல் நம்பிக்கை இல்லை.

விலங்குகளுக்கு எதிலும் நம்பிக்கை இல்லை எனலாமா?   மெத்தையைக் கடித்து உதறிவிட்ட ஒரு வளர்ப்பு நாய்க்குட்டியை  அதன் இயமான்  அடித்துவிட்டான். அது அடியை வாங்கிக்கொண்டு ஒரு கட்டிலுக்குக் கீழே போய் படுத்துவிட்டது. சற்றுநேரம் கழித்து, அதன் இயமான் அதற்கு த்  தட்டில் உணவிட்டு அழைத்தான்.  அது அவன் மீண்டும் அடிக்கமாட்டன் என்று நம்பி வந்து சாப்பிட்டது எனலாம். 

அவன் நஞ்சைப் பரிமாறவில்லை என்று நம்பித்தானே அது உணவைச் சாப்பிடுகிறது?  ( இன்னும் சரியான உதாரணமாக)  அல்லது மீண்டும் உதைக்கமாட்டான் என்று நம்பித்தானே வந்து சாப்பிடுகிறது? எதாவது இருக்கட்டும்.   எனவே அதற்கும் நம்பிக்கைகள் உள்ளன. ஆனால் அதன் நம்பிக்கைகள் வேறு வகையின ஆகும். அதன் நம்பிக்கைகள் உயிர்வாழ்வு, உணவு பற்றியவை.  மனிதனின் நம்பிக்கைகள் இந்த எல்லையைக் கடந்தவை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

( அதினாவின் பெயரை பின்னொரு நாள் பார்க்கலாம்.)

இதை மறக்கலாகாது, மீண்டும் வருக.

சதுரம் என்ற இருபிறப்பிச் சொல்

சதுரம் என்ற சொல் எப்படிப் பார்த்தாலும் நல்ல தமிழ்ச்சொல். இது ஒரு புனைவுச் சொல்.  இருவகைகளில் நோக்கு மேற்கொண்டு  ஒருங்கிணைத்துச் செய்யப்பட்ட சொல். அந்த இரண்டில் ஒன்றை முன்னர் வெளியிட்டிருந்தோம். இதுவரை மீதமிருந்த இரண்டாவது வகையினை யாம் வெளிப்படுத்தவில்லை. அந்த இரண்டாவதை யாரும் கண்டறிந்தனரா என்று யாம் அறியவில்லை.

மற்ற வலை இடுகைகளை அவ்வளவாகப் படிக்கவும் நேரம் கிட்டவில்லை.

இப்போது அந்த இன்னொரு சொல்லவிழ்ப்பை எழுதுகிறோம்.

ஒரு சதுரம் என்பது நாற்பக்கமும் சரிதூரமாக இருக்கும்.

சரிதூரம் என்ற கூட்டுச்சொல்லை எடுத்து,  அதிலுள்ள ரி என்ற எழுத்தை எடுத்துவிட்டால் சதூரம் என்று வரும்.  அடுத்து தூ என்ற நெடிலைக் குறிலாக்கினால் சதுரம் என்பது விளைவாகும்.  சரி என்பதும் தூரம் என்பதும் தமிழே.

தூரம் என்பதை இந்த இடுகைகள் விளக்குவன.

தூரமும்  தொலைவும்:

https:/https://sivamaalaa.blogspot.com/2022/01/blog-post_38.html

தமிழ் ஆங்கில நெருக்கங்கள்

https://sivamaalaa.blogspot.com/2021/10/blog-post_03.html

தூரம் என்ற சொல்லின் இன்னொரு.....

https://sivamaalaa.blogspot.com/2022/01/blog-post_38.html

ஆகவே சதுரம் என்பதை இருவழிப் பொருத்தமும் உடைய சொல் என்போம்.

சரி என்பதற்கு இங்கு விளக்கம் இல்லை என்றால் எழுதுவோம். இன்னும் தேடுதல் முனையவில்லை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

சரி என்னும் ஒப்புதல் சொல்: https://sivamaalaa.blogspot.com/2018/08/blog-post_8.html


வெள்ளி, 1 ஜூலை, 2022

இலக்கணம் அறிந்த ஐரோப்பியர்கள்

 இலக்கணப் பெரும்புலவரான பவணந்தி முனிவர்  நன்னூல் என்று ஒரு நூலை இயற்றினார். பிற்காலத்தில்  தமிழ்நாட்டுக்கு  வந்த ஐரோப்பியர்கள் சிலர் தமிழ் கற்று  இலக்கணம் அறிந்துகொண்டனர். நன்னூலின் உள்ளுறைவைக் கண்டு அவர்கள் வியந்துபோயினர். அதைச் சில ஐரோப்பிய  மொழிகளில் மொழிபெயர்த்துக்கொண்டு,  அந்த அறிவினால் தம் மொழிகளுக்கும் இலக்கணங்களை அமைத்துக்கொண்டனர். ஐரோப்பியமும் எழுச்சி பெற்றது.

கீழை நாடுகளில் போய் வல்லாதிக்கம் செய்தது மட்டுமின்றி  அவர்களும் மொழியறிஞர்கள் ஆயினர்.

சீனாவுக்குப் போன ஐரோப்பியர்கள் அங்கிருந்து வெடிமருந்துகள் பற்றிய அறிவு அடையப்பெற்றனர். சீனப் பெருநாளில் பேய் ஓட்டுவதற்குச் செய்த வெடிகளிலிருந்து இப்போது அணுகுண்டு வரையிலும் அதற்கு மேலும் போய்விட்டது. இதுபோல அது. அதுவரை அப்போதையச் சீனர்களுக்குப் பேய் எப்படி இருக்கும் என்ற புரிதலோ காட்சியோ இல்லை.  வெள்ளைக்காரன் வந்துபோனபின் பேய் எது என்று கண்டுகொண்டனராம்.

ஆய்வும் அறிவும் பெற்று அவ்வறிவும் மறைந்துவிடாமல் இருக்கப் பதிவுகளும் முதன்மையானவை என்பதை அவர்கள் கீழை நாட்டாருக்கு உணர்த்தினர். வாழ்க.  இனிச் சதுரத்துக்கு இன்னொரு விளக்கத்தை அடுத்த இடுகையில் காண்போம்.