உந்தி என்ற பதம் கொப்பூழ் என்று பொருள்படும். சூரியகாந்தி என்பது ஒரு மலர் என்பது நீங்கள் அறிந்ததே. இரண்டிற்கும் ஏதும் பொருள் தொடர்பு
இருப்பதாக யாரும் கூறார்.
சூரிய காந்தி என்ற சொல்லை விளக்கிய இடுகையில் காந்தி என சொல் காண்+தி என்று அமைவுற்றது என்று காட்டினோம். ஆனால் இதற்கு எடுத்துகாட்டு ஏதும் தரவில்லை.
இப்போது ஒன்று காட்டுவோம்.
குழந்தை கருவில் உள்ளபோது அது தன் உணவைத் தாயிடமிருந்தே கொப்பூழ் மூலம் பெறுகிறது. கொப்புழ் தொப்பூழ் எனவும்படும்.
குழந்தை உண்பது கொப்பூழால் ஆதலின் அது உண்+தி = உந்தி எனபட்டது. இங்கு கவனிக்கவேண்டியது ண்+தி = ந்தி என்பதே.
உணவு குறிக்க வருவது : உண்+தி= உண்டி. அதே சொல்லும் விகுதியும் இருவேறு விளைவுகளை உண்டாக்குவது இயல்பேயாகும்.
அறிவீர் மகிழ்வீர்.