செவ்வாய், 31 ஜனவரி, 2023

சகஜம் தமிழில்

 மக்கள்  குழுக்களிடையே  அக்குழுவிலில்லாத வெளியாருக்குப் புரியாத பல்வேறு எழுத்துருவற்ற இலக்கணங்களில்லாத மொழிகள் வழங்கிவந்தன என்பது உண்மையாகும்.  இத்தகைய மொழிகளில் சிலவற்றையாவது நாம் கேட்டு  அது புரியாமல் விழித்திருக்கிறோம்.  இவற்றுள் ஒன்றிரண்டு பரவி அவற்றில் பாடல்களுமிருந்தால்,   புரியாதவன்,  அது வெள்ளைக்காரன் கொண்டுவந்தது,  அல்லது "ஆரியன்" கொண்டுவந்தது என்று ஏதாவது சொல்வான்.  இந்தோனேசியாவில் பல மொழிகள் குழுமொழிகளாய் உள்ளன.  அவற்றுக்கு எழுத்து ஒன்றுமில்லை.   மேடான் ( சுமத்திரா)  பகுதிகளிலும் உண்டு.  ஜாவா மொழி மலாய் மொழியிலிருந்து வேறுபட்டது.  அதிலுள்ள சொற்களை ஆய்ந்து ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளனர்,  பலவருடங்களுக்கு முன்பு.  

தெரியாதவன் அப்படி ஒன்றுமில்லை என்று சொல்லி மனநிறைவு கொள்வது அவனது இயலாமை.

சமஸ்கிருதம் என்பது  இப்படி உண்டாகி, பின்னர்   புதிய புகுந்த சொற்களால் வளம்பெற்று இலக்கியம் பெற்ற உயர்ந்த மொழியாகும்.  இதன் முதல்கவி வால்மிகி முனிவர்.  இவருடைய வழித்தோன்றல்கள் இன்று கவனிப்பாரற்ற குலத்தவரானது  ஒரு சோகமே ஆகும்.      ( சோர்(வு)+கு+அம் > சோகம்). [ துயரமே சோர்வு தருவது]

இனிச் சகஜம் என்ற சொல்லைத் தெரிந்துகொள்வோம்.

அகம் என்பது வீடு.   வீட்டில் அடுத்தடுத்து நடக்கும் பல  நிகழ்வுகள்,  இயல்பானவை என்று மக்கள் கண்டுகொண்டனர்.   வீட்டில் பாயில் படுத்துக் கிடப்பது  இயல்பு  ( சகஜம்).  இதுபோது குறிப்பாக யாராலும் எடுத்துக்கொண்டு கவனத்தில் கொள்ளப்படாதவை இயல்பாகும்,  ( சகஜம்!).     அகவட்டத்தில்  ( வீட்டுச் சூழலில்) தோன்றிய சொல்லே சகஜம் என்பது.

அகத்தில் அடுத்தடுத்து நடக்கும் முன்மையற்ற செயல்கள். 

அகம் -   சகம்.

அடு(த்தல்)  ( அடுத்தடுத்து )  -  அஜ்.  (  அடிக்கடி ).

அம் -   அமைந்தது.

சக + அஜ + அம் >  சகஜம்.

இதைச் சகசம் எனலாம்.  இது சிற்றூர் வழக்கில் உள்ள சொல்.



கடைதல்.*

கடையம் கடயம் கடம் கஜம்  ( கடைந்த முகமுடையதுபோல் தோன்றும் ஆனை).

*This etymology is given by European scholars.

இன்னொன்று:

படி  ( பாடு என்ற பொருளில்)  >  பஜி,

"முருகனைப் பஜி மனமே -  திருமால் 

மருகனைப் பஜி  மனமே!"

"பாண்டுரங்க நாமம் பஜி மனமே..."

"உன்னை நினைச்சேன்  , பாட்டுப் படிச்சேன்"   - படி என்பதை அறிக.

பண்டைத் தமிழில் உரையிடையிட்டவை தவிர யாவும் பாடல்களே.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்ன

Reviewed  on  01022023 



சனி, 28 ஜனவரி, 2023

பேச்சுமொழியில் சமீபம். கிட்ட, எட்ட.

 சமீபம் என்ற சொல்லை நாம் முன் கவனித்திருக்கிறோமா?  அஃது இங்கு இன்னும் உள்ளது.

சமீபம் என்ற சொல், சிற்றூர் வழக்கிலும் உள்ளது. நேரகாலத்தால் ஒன்று அணிமையில் இருப்பதும்  இடத்தொலைவினால் ஒன்று அருகினில் இருப்பதும் என்பவற்றில்  சமீபம் என்பது இருவகையாகும்.  இதுதவிர,  கிட்ட  எட்ட என்ற பேச்சுமொழிச் சொற்களும் இருந்து நம் பேச்சுத் தமிழை மிக்க வளம்பொருந்திய மொழியாக்குகிறது.

மனித வாழ்வில் எப்படித் தொலைவு ஒரு பொருண்மையுள்ள கருத்தாகத் தோன்றி உதவுகிறது?    வாழைப்பழம் உண்ண விரும்பும் மனிதன், அக் கனிதரு மரம் அருகில் உள்ளதா  என்று அறிய விரும்புவான்.  கிட்ட இருக்கிறது, போய் எடுத்துவருகிறேன்  என்று கிளம்பிடுவது இயல்பாக நடைபெறுவது.   கிட்ட -  கிடைத்திடும் தொலைவு  .  ஒன்றை  முயற்சி மேற்கொண்டுதான் அதை எட்டிப் பிடிக்கவேண்டிய நிலை இருக்குமானால்  எட்ட என்ற சிறு எச்சவினை, இதை நன்றாகக் குறிக்கின்றது.

தம் என்பதே சம் என்பதன் மூலம்.  தம் என்பது பன்மை. மகர ஒற்று அடிநாளில் பன்மைப் பொருள் தந்தது. சீனமொழியிலும் அஃது பன்மை காட்டுவதுண்டு. அப்போது மகரத்தோடு அன் கலந்து முடியும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

வியாழன், 26 ஜனவரி, 2023

அகப்பை, ஆப்பை, சட்டகப்பை , சிரட்டை.

 சட்டிக்குள் இருக்கும் குழம்பை சோற்றுக்குப் பரிமாறும் பொழுது,  சிந்திவிடாமலும் சுற்றிடத்தை அழுக்குப்படுத்திவிடாமலும் வெளியிலெடுத்துச் சாப்பிடும்  மேசைக்குக் கொண்டு  செல்லுதல் வேண்டியிருந்ததனால், ஓர் அகப்பை தேவைப்பட்டது.  பழங்காலத்தில் தேங்காய்ச் சிரட்டைகள் இதற்குத் உதவின.  அகப்பை என்பது இதற்குப் பெயர்.  குழம்பை அகப்படுத்தி ப் பின் இலையில்   பெய்யும் கருவி என்னும் பொருள் இன்னும் இதில் காணக்கிடக்கின்றது.  பெய் என்பது எடுத்தலைக் குறித்தது. எடுப்பது பெய்தற்பொருட்டு என்பது தொக்கது.

சட்டி என்பது குழம்பை  அட்டி   (சமைத்து) அணியமாக்கும்  (தயார்ப்படுத்தும்)  அடுபாத்திரம்.  அடுதல் - சமைத்தல்.  அட்டி -  சமைபானை.  அகப்பைக்குச் சட்டுவம் என்ற பெயரும் ஏற்பட்டது.   அடு> சடு> சடு+ அம் >  சட்டுவம் ஆகும். இங்கு,  சடு என்பது சட்டு என்று இரட்டித்தது.

பகு > பா என்று திரிந்தது போலுமே,  அக என்பது ஆ என்று திரிந்து,  அகப்பை என்பது ஆப்பை ஆனது.  உட்பெய்துவைக்க உதவுவது  பெய்> பை ஆயிற்று.

உடலானது,  வயிறு, கணையம்,  ஈரல், நுரையீரல்,  சிறுநீர்ப்பை இன்னும் உள்ள உறுப்புகளை உள்ளடுக்கி வைத்திருக்கும்  பெரும்பை.  உள்ளுறுப்புகளை அடுத்தடுத்து  அடுக்கி வைத்திருக்கிறது நம் உடம்பு..  அடுக்கு என்றவினைச்சொல்லிலிருந்து,    அடு> சடு> சடு+ அகம்>  சட்டகம்,  உடலைக் குறிக்கிறது.  அகர முதலாயின சொற்கள், சகர முதலாகும்.   அமண-  சமண் என்பது இதற்கு எடுத்த்துக்க்காட்டு.  உடல் என்பது ஒரு பைதான்.  சட்டகப்பை என்பது பொருந்திய அமைப்புச்சொல்லே ஆகும்.

அடு(தல்)  ( சமைத்தல் )  என்பது சடு என்றும் திரிதலால்,   குழம்பை எடுக்கும் அடுப்படியில் பயன்படுத்தும் அகப்பையும்  சட்டகப்பை எனப்படும். சில அகப்பைகள்,   தட்டு இணைக்கப்பட்டிருப்பன வாகும்..  தோசை திருப்புவதற்கு இது உதவியானது.  தட்டு அகப்பை >  சட்டகப்பை என்றுமாகும்.  

ஒன்றின் மேற்பட்ட பொருளைத் தரவல்லது சட்டகப்பை என்னும் சொல்.

ஓட்டாங்கச்சி,  கொட்டாங்கச்சி, சிரட்டைக்கச்சி, கொட்டகச்சி என்பன ஒரு பொருளன.  இரண்டாய் உடைந்த தேங்காயில்,  இரு பாகங்கள்.  ஒன்று ஒரு கைப்பக்கம், இன்னொன்று இன்னொரு கைப்பக்கம்,  என இரு பக்கங்கள் (கைப் பகுதிகள் ) எனவே,  " கை -  கைச்சி". என்று சொல்லப்படும்.  

தேங்காய் உடைத்தால் இருகைப்பாலன வாகும்.   கச்சி > கைப்பாற்று.

சிறு அடு ஐ >  சிரட்டை.   சிறட்டை என்றும் எழுதப்படும்.

தட்டு அகப்பை என்பதே சட்டகப்பை என்று திரிந்தது.  இதைச் சட்-டகப்பை என்ற படி உணர்க.   சட்ட - அகப்பை என்று பிரித்து  ஒலித்தால் இதன் பொருள் வழுவும்.

மெய்ப்பு பின்னர்.















பாகவதர்

புதன், 25 ஜனவரி, 2023

"பைண்ட்" என்ற ஆங்கிலச் சொல்லும் பந்து என்பதும்.

 தமிழ்ச்சொற்கள்  அவற்றோடுகூடச் சங்கதச் சொற்களும் ஐரோப்பிய மொழியில் பலவாறு கலந்துள்ளன என்பதையும்,  தமிழ்ப் புலவர்கள் உரோமபுரிக்கு அழைத்துச் சொல்லப்பட்டு அவர்கள் அளித்த பல்வேறு சொற்கள் எப்படித் தெரிவுசெய்துகொள்ளப்பட்டன என்பதையும் அறிந்துகொண்டால்,  தமிழ் உலக மொழிகட்கு எவ்வாறு ஊட்டம் கொடுத்துள்ளது என்பதை அறிந்து இன்புறலாம்.

சென்னைப் பல்கலைக் கழக  வரலாற்றுப் பேராசிரியர் ஒருவர் இதிலீடுபட்டு உழைத்துள்ளார் என்பதை,  மயிலை சீனி வேங்கடசாமி தம் நூலில் நினைவுபடுத்தியுள்ளார்.  இஃது முன் எவராலும் கண்டுபிடிக்கப்படாத வரலாறு அன்று.

இரண்டாயிரமாம் ஆண்டு வாக்கில்தமிழ்ச்சொற்களின்  ஒரு பெரிய பட்டியலே இணையத்தில் கிடைத்தது.  இப்போது அது மறைந்த இடம் தெரியவில்லை. இதுபோன்ற வரலாறுகளைப் பகர்ப்புச் செய்து சேமித்து வைப்பது உதவக்கூடியது ஆகும்.  ஒருவர் கண்டுபிடித்தது காணாமற் போகாமலிருப்பது முதன்மையன்றோ?

நாம் கருதுவதற்குரியது "பெந்த்"  என்ற  இந்தோ ஐரோப்பிய அடிச்சொல் ஆகும். இதனின்றே  பைண்ட் என்பது வருகிறது.

கட்டுதல் என்பது ஒன்று மற்றொன்றைப் பற்றிக்கொண்டிருக்கச் செய்வதே. பற்று என்பது அதுவன்றி வேறில்லை.

பல் > பன்  ( லகரனகரத் திரிபு  ,  அல்லது போலி).

பன் + து > பந்து.  ( பந்து என்ற கயிற்றினால் உண்டையாகக் கட்டப்பெற்றது).

பந்து   பந்தம்  -  உறவுக் கட்டு.

எ-டு  இன்னொன்று :  எல் > எல்+பு > என்பு.  (எலும்பு)

எல்லு : மலையாளம்.

எற்புச்சட்டகம்  , உடலுக்கு இன்னொரு பெயர்.     எற்பு என்பதும் எலும்பு.

எல்+பு என்பது  எல், எலும்பு,  என்பு, எற்பு என்று பல்வடிவம் கொள்தல் காண்க.  அன்பு என்பது அற்பு என்றும் வருமாறு அறிக. ( எ-டு: அற்புத்தளை)

முன் - முந்து,  பின்- பிந்து என்பவற்றில் இத்தகைய புணர்ச்சித் திரிபுகள் வரல் கண்டுகொள்க.

ஆகவே,  பந்து, >  பைண்ட் என்பதன் திரிபையும் பொருளணிமையையும் கண்டுகொள்க. 

 அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

சனி, 21 ஜனவரி, 2023

சளிநோய் பிடித்ததனால்........ தொல்லை.

 தென்றலதும் உலவிவரும் தேகநலம் தருமே

அன்றலரும்  பன்மலர்கள் ஊரெங்கும் மணமே

என்றெனினும் மாலையிலே இனிதாக உலவிச்

சென்றுவரும் அரசர்களும் அரசிகளும்  பலரே!

மன்றினிலும் வந்துலவும்  மாருதமோ  இலதே

நின்றுலவும் நோய்நுண்மி  நெருங்கியத  னாலே

வென்றிடினும் ஓய்வடைந்தோம் சின்னாட்கள் கேளீர்

உலவுதலில் ஒற்றுமையே பிறவற்றில் இலையே.


சிலநாட்களாய் சளிபிடித்தலினால் தொல்லையாகி,  எதையும் எழுத இயல்வில்லை.. 

அதைக் கூறும் கவிதை இது.

தென்றலென்பது,  சுற்றிவந்து இனிதாக வீசி அதனால் தேகநலம் தருகிறது. அரசு அதிகாரம் உடையவர்கள்,  அஃது இல்லாதோர் எல்லோரும் அந்நலம் நுகர்வர்.  ஆனால் என்னைப் பீடித்ததோ,  உலவும் தென்றலன்று.  அது நோய்நுண்மிகளை அள்ளிவந்த காற்றுப்போல் தெரிகிறது. அதை இறுதியில் வென்றிட்ட போதும்  என்னுடைய அன்றாட நடவடிக்கைகள் ஓய்வு அடைந்துவிட்டன.  சில நாட்கள் அங்கனம் கடந்தன.  உலவுதலைச் செய்வன,  1.  தென்றல்.  அதுமட்டுமோ  ?   2 நோய் நுண்மிகளும்தாம்.  

இறுதியடி தவிர. ஏனை அடிகளிலெல்லாம் எதுகை வரும்படி அமைந்துள்ளது இக்கவிதை.

தென்றலதும்  ,  அன்றலரும்,  என்றெனினும்,  சென்றுவரும்,  மன்றினிலும். நின்றுலவும்,  வென்றிடினும் என்று எதுகைகளே  அடுக்கப்பட்டுள்ளன.  நுகர்ந்து இன்புறுவீர்.

உடலானது,  தேய்ந்தழியும் தன்மை உடையது.  அதனாலே  அது தேகமெனப்பட்டது.   தேய்>  தே+கு+அம்,  தேகம்.  தேய்தல் தன்மையது. "அவுணர்த் தேய்த்த"  என்ற குறுந்தொகைத் தொடரில்,  அரக்கரை அழித்த என்ற பொருள் பெறப்பட்டது போல்,  தேய்தல், தேய்த்தல் என்ற இருசொற்களிலும் அழிதற்பொருள் பெறப்படும்.

அவுணர்  என்பது  ஆ+ உண்+ அர் >  மாட்டிறைச்சி உண்டோர் (படை).  பெரும்பாலும்  ஆ உண்டோர்.  ஆ என்பது பின்னாளில் அ என்று குறிலானது. இவ்வாறு அகர ஆகாரக்  குறுக்கம்  நீட்டல் வந்த சொற்களைப் பழைய இடுகைகளைப்  படித்து பட்டியலிட்டுக் கொள்ளவும். எப்போதும்  அவித்த அல்லது ஆவிபரியும் உணவினையே உண்டவர்கள் என்பதும் கொள்ளலாம்.

அவி >  ஆவி.  இங்கு ஆவி என்பது அவி என்ற வினையிற் பிறந்து நீண்டு திரிந்த தொழிற்பெயர் என்பதும் அறிக.   காய்  பழங்களையே உண்ட இயற்கை உணவினர் ஞானிகள் என்னும் அறிவாளிகள். அவுணர் என்பது பல்பிறப்பிச் சொல்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்



சனி, 14 ஜனவரி, 2023

பாலித்தல் ( அருள்பாலித்தல் ) லிங்கம் என்பதென்ன.

 இன்று பாலித்தல் என்ற தொழிற்பெயரை அறிந்துகொள்வோம்.

தொழிற்பெயர் என்பது ஒரு இலக்கணக் குறியீடு.   இதன் பொருள்,    ஒரு வினைச்சொல்லிலிருந்து  உருக்கொண்ட பெயர்ச்சொல் என்பதுதான்.  எடுத்துக்காட்டாக,  participate ( verb)  - என்பதிற்றோன்றிய   participation (noun). என்ற சொல்லுரு   ஆகும்.   இதனை வேறுபெயரிட்டுக் குறித்த இலக்கணியரும் உண்டு.

நன்னூலின் சுவடி கிடைத்த பின்னர்,  அதை ஐரோப்பாவிற்குக் கொண்டு போய் அவர்கள்  மொழியில் பெயர்த்துக் கொண்டனர்.  அதன்பின்  அவர்களும் இலக்கணம் வரைந்து அறிந்துகொண்டனர்.  ஆகையால் நம் இலக்கணங்கள் ஒன்றுபோல்   காணப்படும். யார் இதை எடுத்துக்கொண்டு போனவர் என்னும் குறிப்புகள் உள்ளன. அதை இங்கு எழுதவில்லை. நன்னூலைக் புகழ்ந்துள்ளனர்.  அறிக.  இயற்றிய பவணந்தியாருக்கு  நன்றி. 13ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பர்.  யாம் கால ஆய்வுகள் செய்வதில்லை.

இப்போது பாலித்தலுக்கு வருவோம்.

ஆங்கிலத்தில் "participate"  என்பது  பாலித்தல் என்பது போன்ற ஒரு சொல்லாகும்.   பால் - பகுதி.  பாலி -   பகுதி  தருதல் என்று சொல்லவேண்டும்.  அருளில் பகுதி தருதல்,   அல்லது பகுதி இங்கு தருதல்  பாலித்தல்.   பால்,  மற்றும் இ எனபது இங்கு தருதல், பெறுதல் என்றெல்லாம் அறிந்துகொள்க.

இறைவி  அருள் தரும்போது,  அவர்தம் கொடைத்திறம் மிளிரும் அனைத்தும் உமக்குத் தந்து விடுவதில்லை.  அது எல்லையற்றது.    உமக்குச் சோறில்லை என்று அறிந்துகொண்டு,  அதனைத் தந்து பசி போக்குகிறார். ஆகவே பகுதி அல்லது ஒரு சிறு துளியைத் தந்து காப்பாற்றுகிறார்.   ஆகவே  பாலிக்கிறார்.   அது இச்சொல்லின் கருத்து.

பாலி(த்தல்) என்ற சொல்லமைப்பில்  இ என்பது சுட்டுச்சொல், இங்கு என்பது இங்குப் பெறப்படுவது என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது.

இங்கு என்பதில் இ என்பது மட்டுமின்றி, இங்கு என்ற முழுச் சுட்டுச் சொல்லும் உள்வந்த சொல்லமைப்பும் உண்டு.  அவற்றுள் ஒன்று இலிங்கம் என்பது.  இதை லிங்கம் என்பதும் காணலாம்.  

இல்  - இடம்.

இங்கு -  இருப்பது என்னும் கருத்து.

அம் -  அமைந்தது.

இடத்தில் இங்கு அமைந்திருப்பது.

காரண இடுகுறிப்பெயர்.

இதன் பொருள் என்னவென்றால்,  மேல்தோலைப் போல் உடல்முழுமைக்கும் காணப்பெறாமல், ஓரிடத்தில் மட்டும் அமைந்துள்ள ஓர் உறுப்பு.  கண்கள் இரண்டிடத்தில்.  விரல்கள் பலவிடங்களில் ஆனால் வரிசையாக. வாய் ஓரிடத்தில் என்றாலும் முகத்தில் பரவலாக உள்ளது.  மூக்கு இரு துளைகளாக.  காதும் அப்படியே. இலிங்கம் மட்டும் ஓரிடத்தில் ஒட்டி வெளியில் உள்ளது.  ஆகவே இல் இங்கு அம் > இலிங்கம் என்பது மிகவும் பொருத்தமான பெயரமைப்பு.  இது ஒரு தமிழ்மூலங்களை உடைய சொல் தான்.  இதன் இடக்கர்ப் பொருண்மையால்  இது பெரிதும் விரவிப் பயன்படாதொழிந்தது. இந்த இடக்கர்ப் பொருண்மை  இதன் சொல்லமைப்பு அறியாமையால் உண்டானது.   ஆனால் சமத்கிருத (சமஸ்கிருத ) மொழியில் இலக்கணக் குறியீட்டில் பயன்பாடு கண்டது.  சமத்கிருத மென்பது பூசைப் பயன்பாட்டு மொழியாய் இங்குத்  தோன்றி,   பின் பரவியது. இதுவும் நல் நிகழ்வே.  உலக முழுதும் சிவனின் இடம்தாம்.  சிவ - சிவனின் ,  இல் -  இடம்,  இங்கு-  இவ்வுலகமும் ஒட்டியுள்ள எல்லா இடங்களும், அம் - (ஆகிய) அமைப்பு.  இல்+ அம் :  இல்லம் = வீடு.  இல் என்பது இடம் குறிக்கும் வேற்றுமை உருபும் ஆகும்.  இவ் வுருபுகள் சொல் துண்டுகள்.  இன்றளவும் வழங்குவன, தமிழின் மாண்பு குறிப்பன ஆகும். இவை உணராமல் வேற்றுமொழி என்றது மடமை.  சமஸ்கிருதத்தில் முதல் கவி யார்?  வால்மிகி.

 தாழ்த்தப்பட்ட கவி என்றனர். அப்படியானால், அது எப்படி இந்தோ ஐரோப்பிய மொழி ஆனது?  கேள்விகள் பல உண்டு. எல்லாம் எழுத எமக்கு நேரமில்லை.

இல் இங்கு என்பது இல்லிங்கு என்று வரவேண்டும் என்பது மடவாதம். அதுதான் இடைக்குறைந்து இலிங்கு  ஆகிவிடுமே.  இலிங்கம் அல்லது லிங்கம் . கெட்டவார்த்தை ஆகாது.

இரண்டு இயல்பான அன்றாடச் சொற்களை இணைத்தால் அது அந்தரத்திலிருந்து வந்த சொந்தமில் சொல்  போல உம்மை மருட்டுவதுதான் தமிழ்மொழியின் திறம் ஆகும் அறிக.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.




வெள்ளி, 13 ஜனவரி, 2023

பொங்கல் வாழ்த்து

 பழமையிற் புதுமை பாங்குடன் அறிந்து

வழமையில் வளர்ந்த  பொங்கற் பண்டிகை

கிழமையிற் செறிந்து விழவுகொள் அருமை

முதுமையில் இளமையில் என்றும் பற்றுவோம்.


பொங்கலோ பொங்கல்      இணங்கி முழங்கி

தங்கிடு  மகிழ்வுடன் ஆடுவர் பாடுவர்

எங்கணும்  தமிழர்  இல்லம் அனைத்திலும்

பங்குறும் அனைவரும் வாழ்கவே வாழ்கவே. 



வழமை  - தொடர்ந்து கடைப்பிடித்தல்

கிழமை - உரிமை.

செறிந்து  - நிறைந்து

விழவு - விழா

பங்குறும்  - கொண்டாடும்

பழமை - தமிழர் பண்டுதொட்டுப் போற்றிக் கொண்டாடிய நாள்.

புதுமை -  புதுநெல் அறுவடை முதலியவை.

ஞாயிறு, 8 ஜனவரி, 2023

துர்க்கை உன் கருணை


 அடியர்   உனையே  வணங்கி  மகிழ்ந்தனர்

அடுத்திருந்  துன்னைப்   பாடிப் பரந்தனர்  

மடியில் மழைபொன் னானதிம் முறுவலில்

வடியும்  கருணை  உலகுக் களித்தனை.


அடியர்  ----  அடியார்கள்,  பற்றர்.  ( பக்தர் என்பது திரிபு)

உன்னையே ----   அம்மனையே

வணங்கி  - பணிந்து

அடுத்திருந்து -    உன்முன் ( அம்மன்முன்)  அமர்ந்து

பாடிப் பரந்தனர் ---  பாடலால் புகழ்ந்தனர்,

மடியில் மழை பொன்னானது ----   மடியில் பொன்மழை பெய்தது போலாம்,

முறுவலில் -  ( உன்) புன்னகையில்

கருணை  வடியும் -  நெஞ்சிரக்கம் வடிந்தது,

உலகுக் களித்தனை ---   இதனை உலக மக்கட்குப் பகிர்ந்தனை,  பகிர்ந்தாய்.


யாம்  அம்மனிடம் வைத்த விண்ணப்பங்கள் கேட்டுக்கொண்டபடி நடந்துள்ளன.  சில வேளைகளில் அம்மன் கோபமாய் இருப்பதாகத் தெரியும். வேறுசில சமயம் புன்னகையாய் இருப்பாள் அம்மை.  இது யாமே கண்டது.

இது ஒரு நேரடி நிகழ்வு, யாம் அறிந்துகொண்டது.  இதை யாம் யாரிடமும் நிறுவ வேண்டியதில்லை.  அம்மன் முறுவலிக்கும் போதெல்லாம் நல்லதாய் இருக்கும். பொருள்வரவு போலும் எதையும் யாம் முன் வைத்ததில்லை. பிறர்பொருட்டுச் சில வேண்டியுள்ளமை நினைவுக்கு வருகிறது. எவனிடமும் எப்பொருளும் வேண்டியதில்லை.   


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பரத்துவாசர் பொருள். சொல்.

 பரம் என்பதன் பொருள்

பரத்துவாசர் என்ற சொல்லில் அடிப்படை முதன்மை வாய்ந்த சொல்லாய் இருப்பது  " பரம் "  என்பதே ஆகும்.

பரம் என்பது பரத்தல்  என்ற   வினைச்சொல்லினின்று வருகிறது.  பர  ,  வினையால் எடுத்துக்காட்ட,  "பரந்த பூமி" என்ற தொடரைப் பார்க்கலாம்.  பல்வேறு பொருட்களை உடைய சொல் என்பதற்கு,  " பரந்த பொருள்தரும் சொல்"  எனினுமாகும். கடலும் பரந்த இயற்கை இடமே.  அதனால் அதற்குப் "பரவை"  என்ற சொல்லும் தோன்றியது.  பறவை என்பது குருவி முதலானவற்றைக் குறிக்கும்.

பரம் என்றாலே அவன் எங்கும் பரந்து இருப்பவனாக உணரப்படும் கடவுள்.   பரம்பொருள் என்ற இருசொல்லொட்டும் அஃதே ஆகும்.

இராமாயணத்தில் பரத்துவாசர்   ஒரு முனிவர்.  பரதன் அவரைத் தந்தைக்குரிய பணிவுதந்து வணங்கினான் என்ப.

வந்த   மாதவத்    தோனையம் மைந்தனும்

தந்தை     யாம்எனத் தாழ்ந்து வணங்கினான்;

இந்து மோலி அன்   னானும் இரங்கினான்,

அந்த   மில்நலத்   தாசிகள் கூறினான். 


மேல் என்பது மோல்- மோள்  என்று திரியும்.    மேலி(டு) >  மோலி.    மேல்- மோள் - மோட்சம் என்பதும் காண்க.  மோலி - மகுடம் 

பரத்து என்பது  பர(ம்) +  அத்து என்பதில் மகர மெய் குன்றிய சொல்.   அத்து என்பது சாரியை.  இது "அது"  என்ற சொல்லினின்று தோன்றி.    தகர மெய் இரட்டித்தது ஆகும்.

இம்முனிவர் பரந்து பல இடங்களிலும் தோன்றி அறியப்பட்டவராக இருக்கலாம்.   இவ்வாற்றல் இருந்தோராக எண்ணப்பட்டவர்களும் உளர்.  பரத்துவாழ் > பரத்துவாஜ்  எனல் திரிபு காண்க.  வாழ் >  வதி > வசி திரிபுகள்.

வாழ்த்து  என்பது வழுத்து என்று குறுகுதலும் காண்க.   வழுத்துதல்.

வசி >  வசி + அர் >  வாசர்.

பரதவர் என்ற மீனவர் குறிக்கும் சொல்லும் பரத்தல் என்ற வினையினுடன் தொடர்புடைய சொல்லே.  பரவை - கடல்.

இதை விளக்கும் பழைய இடுகைகள் காண்க. இங்கு உள்ளன.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.


சனி, 7 ஜனவரி, 2023

எழுப்பிவிடும் காலைக் கதிரோன்

 


கதிரவனின் ஒளிவீச்சில் கண்கள் கூசும்

கட்டிலிலே கிடந்திடவே வொட்டா தன்றோ!

உதிர்ந்துவிழும் தொங்குசீலைத் துளைகள் தம்மில்

ஒளித்துகள்கள்  எழச்செய்யும் விழவும் செய்யும்

பதிந்தபடி படுத்துறங்க  இதந்தான்  இல்லை!

எழுந்தப்பால் சென்றுவிடின் முற்றும் தூக்கம்.

இதந்தருமிவ் வுறக்கத்தைத் தொடர்ந்து  மேவ,

இனியிரவு வரும்விழித்தும் இருக்கப் போமோ? 


ஒட்டாது -  இயலாது

தொங்குசீலை -  சன்னல் துணி

 துளைகள் -துணியின் இழைகளின் இடைத்துவாரங்கள்

இதந்தான் -   நுகர்வுதரும் நிலைதான்

எழச்செய்யும் -  படுக்கையிலிருந்து எழும்பிவிடச்செய்யும்,

விழச்செய்யும் -  மீண்டும் கிடக்கச் செய்யும்,

முற்றும் - முடிந்துவிடும்

இதம் தரும் -  இன்பம் தரும்

மேவ மேற்கொள்ள,

விழித்தும் இருக்க - இனித்தூக்கம் என்பது வருமென்று இருக்க

வெள்ளி, 6 ஜனவரி, 2023

தஞ்சாவூரில் பிறந்த புதுவருடக் குழந்தை


 தஞ்சாவூருக்குப் பற்பல புகழுரைகள் உலவுகின்றன.  அதிலொன்று அதன் பெயருக்கே பெருமை தருவது ஆகும்.   தண்செய்  என்பதே  தஞ்சை என்று திரிந்தமைந்தது என்பதுதான்.  இந்நிலப்பகுதியைக் காவிரியாறு தண்மைப் படுத்துகிறது.. சோழர் பெருமையை மலர்களால் சொரிவதும் தஞ்சைதான்.

தஞ்சையிற் பிறப்பதே தணிவிலாப் பெருமை.  படத்தில் காணும் குழந்தை இங்கு முதல் மாதத்தில் 2023,ல்  முதல் நாளில் பிறந்த பெருமையைப் பெறுகிறது.   புத்தாண்டுக் குழந்தைக்கு  எங்கள் வாழ்த்துக்கள்.

எல்லா நலமும் பெற்று நற்புகழ் எய்தி வாழ்க.


படம் உதவியவர்: வ. கௌரியம்மா.  தஞ்சாவூர்.

ஏகாதசி - எப்படிப் பொருள்கொள்வது? ஏகம், நவம், தசம் சொல்தோன்றுதல்.

ஏகம் என்ற சொல்லுக்கு  ஒன்று என்பது பொருள்.

தசம் என்பது  பத்து என்ற பொருளுடையது.

தசம் + இ >  தச + இ  >  தசி: (   என்றால் பத்தை உடைய(து) .


ஏகம் என்பது பொருளுருவாக்கம் பெறுவதை,  இப்படி உணர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு மனிதனின் உயிரும்,  தான் ஒன்றாகவே உடலை விட்டு நீங்குகிறது.  இது கண்ணால் அறியமுடிகிறதா என்பது பற்றிக் கூற இயலாது..  இந்த உயிரை ஒன்றாக்கி வைத்திருந்தது உடலே ஆகும். ஈருயிர்கள் வெவ்வேறாக நீங்கினவா, ஒன்றாகச் சென்றனவா என்பது   அறிய முடியாதவை.  ஏகுதல் என்பதிலிருந்து இரண்டின்மையை உணர்ந்துகொள்கிறோம்.  ஏனை உலகப் பொருள்கள் இரண்டாகவிருக்கும்.   எனவே சமஸ்கிருதம் என்னும் இறையியல் மொழி,  இதிலிருந்து   ஏகுதல்  என்ற அடியைக் கொண்டு, "ஏகம்"  - ஒன்று என்று பொருள்தரு சொல்லைப்  படைத்தது.  

ஏகம்: -

இது ஒரு காரண இடுகுறி  எண்ணுப் பெயர்.

தசைத்தல் என்பதும்  உடலில்  பருமன் ஏறுதல் என்பதிலிருந்து அறியப்பட்டே,  தசை >  தசை + அம்> தசம் என்றபடி உணரப்பட்டது.  தசையும்  பற்றுதல் என்ற தன்மை உடையதே.   பல் -பற்று.  பலவான தன்மை குறித்த ஓர் எண் ஆகும்.  ஒன்பது என்பதன் பின்,  பல  ஆனது  பத்து.  ( அதிகமானது).   தசம் என்ற சொல்லினமைப்பிலும்  பண்டை மக்கள் இவ்வாறே சிந்தித்தமை அறிகிறோம். பருமனாக இருக்கும் ஒரு மனிதன், தசைப்பற்று உடையவன் என்பதிலிருந்து,  தசை, பற்று (பத்து)   என்பவை  பலவானதன்மைக்கு ஏற்ற நிலைக்களன் என்பதை உணரலாம்.   ஆதிமனிதன் எண்ண அறியாதவன். அவன் எண்ணிக்கையை,  " அதிகமானது, பலவானது, கூடிவிட்டது"  என்பவற்றிலிருந்து அறிந்துகொண்டே  பின் எண்ணிக்கையை அறிந்து அமைதி அடைந்தான்.   எடுத்துக்காட்டாக,  ஒன்று இருந்தது,  அதனுடன் இன்னொன்று இருந்தது,  ஆகவே ஒன்றாய் இருந்தது>  இவை ஒன்றாய் இருந்தன > இரு > இரு+ அண்டு> அண்டி இன்னொன்று ஒன்றுடன் இருந்தது, இரு+ அண்டு>  இரண்டு  என்பதற்கு வந்து சேர்ந்தது  என்று பொருள்..  குழப்பமே தெளிவின் தாய்   கலங்கியதே நிலை நின்றபின் தெளிநீராகிறது.  உணர்ந்துகொள்ளுங்கள்.

பல்>  பல் + து > பற்று .   இதில் ஒருமை பன்மை மயக்கம் உள்ளது.. பத்து என்பது பலவாகிய ஒன்று. அந்த ஒருமை விகுதி  'து' அங்கு உள்ளது.  பலவாகியது  (பல). ஒன்றானது  (து).  பின்னர்தன் தெளிந்து பத்து என்ற எண்ணுப்பெயர் உண்டாயிற்று.

ஆதிமனிதன்,  குழம்பி மீண்டவன்.  ஓர் இடத்தைக் கூட்டும் போது தூசி.  அதையெல்லாம் ஒருவாறு அடக்கிவிட்டால் அப்புறம்தான்--- தூய்மை. தெளிவு.

சமஸ்கிருதம் என்பது இந்திய மொழி.  தமிழுடன் இணையாய் வளர்ந்தது.

பத்தில் ஒன்று சேர்ந்து பதினொன்றாகி,  பதினோராம் நாள் என்பதே :  ஏகாதசி.

பொருள் "ஒன்றுடன் பத்து" என்பது.   அதாவது பதினொன்று.

ஒன்பது என்பது  பத்தில் ஒன்று குறைந்தது என்று பொருள் என்பர்.  வேறொரு சொல்   இருந்து வழக்கிறந்தது என்பது,   அ றிஞர் பிறர் கூறியது.   

எடுத்துக்காட்டுகள்: 

நவம் என்பது " குறைந்தது"  . நவைத்தல் -  குறைத்த.ல்.    அதாவது,   பத்தாகிய முழுமையில் குறைந்தது.

நவமை -  some shortage.  a defect.

ஆயிரம் -  ஆ = ஆக,  இரு =  பெரிய,  அம் -  எண்ணிக்கை;  விகுதி. அமைவுப் பொருள்.

சமஸ்கிருதம் என்பது இந்திய மொழி. பூசாரிகள் தொழுகைகட்கு ஏற்படுத்திக்கொண்டது..   தமிழைச் சார்ந்து எழுந்தது.  வால்மிகி-  முன் சிறந்தோராய் இருந்தோர் இன்று தாழ்ந்துவிட்டவர்களின் குழுவில்  தோன்றிய ஆதிப்புலவன்.   பாணினி -  பாணர்களிடைத் தோன்றிய இலக்கணப் புலவன்.   வேதவியாசன் -  மீனவரிடைத் தோன்றிய ஆதிப்புலவன்.   பரதவர் -  மீனவர்.  இந்தியா என்பது மீனவ நாகரிகமும் மலைவாழ்நர் நாகரிகமும் செழித்திருந்த ஒரு கண்டம்.  பண்டை மக்களிடை பழைய வேதங்களை   மக்கட்குப் போதித்தவரகள் ஒரு கூட்டத்தார் இருந்தனர்.   கடல்நாகரிகம்,  ஆற்று நாகரிகம், மலைநாகரிகம் எல்லாம் கலந்ததே பாரதநாடு.    இவற்றுள் அடிப்படை :  பரதவ - மீனவர் நாகரிகம்.  (மீனாட்சி).  ஆர்  என்பது உயர்வு  குறிக்கும் ஒர் தமிழ்ச்சொல்.  அர் என்பதும் அது. ஆரியர்  (ஆர்+இ+ அர்)  என்பவர்கள் வெள்ளைக் காரர்கள் அல்லர்.  ஆர் விகுதிக்கு உரிமை உடையவர்கள்.  ஆசிரியர் என்ற சொல்,  சி  குறைந்து,  ஆரியர் என்றுமாகும்.  வாத்தியா(ய)ர் என்பது வேறுபுலங்களில் "பாத்"  என்று பட்டப்பெயராய் வழங்குவதும்  ஒப்பிடுக.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

ஞாயிறு, 1 ஜனவரி, 2023

இலட்சோப இலட்சம்

 இன்று இலட்சோப இலட்சம் என்னும் தொடரைத் தெரிந்துகொள்வோம்.

இலட்சோப  இலட்சம்  என்ற சொற்புணர்வில்,  வடமொழிச் சந்திகளுக்கான இலக்கணம் உள்ளது என்று கூறுவர்.  இதை அமைத்துச் சொன்னவன் பாணகுலத்தைச் சேர்ந்த  பாணினி என்ற இலக்கண ஆசிரியன். 

பாணர் என்போரில் பலர் பிற்காலத்தில் பார்ப்பனர் ஆய்விட்டனர் என்பதும் ஆய்வுக்குரியதாகும்  ஐந்துவகை  நிலங்களிலும்   பரவலாக வாழ்ந்து, (  குறிஞ்சி, முல்லை,  மருதம், நெய்தல், பாலை எனப்படுபவை )  சிறந்த காரணத்தினால்,  பரமாணர் என்ற சொல்லே,  பிராமணர் என்றானது என்ற கருத்தும் உள்ளது.   பர - பரவலான வாழ்க்கை;  மாண் -  சிறப்பு.  அர் -  மக்கள் குறிக்கும் விகுதி. ).  பிரம்மன் என்ற கடவுளை வணங்கியோர் என்பதுமுண்டு.  பிரம்மன் என்பதும் பரமன் என்பதும் கடவுளைக் குறிக்கும் சொற்கள். மொழி தோன்றிய காலத்திலிருந்து பயன்பாடு கண்ட அத்தனை சொற்களையும் காப்பாற்றிவிட்டவன் எவனும் இல்லை..

பாணர்கள் அல்லது "பாடிவாழ்ந்தோர்"  பாடியவையாக    வேதங்களில் பலபாடல்கள் உள்ளன,  இவை பாணர்களுடையவையாகலாம். இவர்கள் இரந்துண்டு வாழ்தலே கடைப்பிடித்தவர்கள்.  இவர்கள் பிற்காலத்தில் வலிமை பெற்று அரசுகளும் அமைந்தனர்.

  இவர்கள் நடமாடும் பூசாரிகளாகவும் செயல்பட்டிருப்பர். இவர்கள் வீடுவீடாகச் செல்வோர்  ஆதலின்,   ஆக்கித் தின்னும் வசதி இல்லாதவர்கள். யார்வீட்டிலும் சென்று  சமையல் கட்டினை மேற்கொண்டு ஆட்சிசெலுத்தினால் சண்டைகள் வரும். இதையெல்லாம் அறிந்தே,  ஆக்கியதை வாங்கிச் சாப்பிடுபவனே அமைந்த வாழ்க்கை உடையோன் என்பது  விதியாயிற்று. இறைவன் அப்படி அமைத்தான் என்று அறியவேண்டும்.

இப்போதெல்லாம் ஒரு பொத்தானைத் திருகியவுடன் எரிவாயு வெளிப்பட்டு நெருப்புப்பற்றிக் கொள்கிறது. சொல் அமைந்த காலத்தில் பிள்ளைகளை அனுப்பி  ஒருகல் தொலைவோ அதற்கு மேலாகவே விறகுபொறுக்கி வந்துதான் பலமுறை ஊதி நெருப்புப் பற்றவைக்கவேண்டும்.  விறகு வேண்டுமென்று  வீதியில் போராடினால் ஆடிக்கொண்டிருக்கலாமே தவிர,  எதுவும் நடைபெறாது.  நடமாடித் திரியும் இடத்திலே வாங்கிச் சாப்பிடுவது  ( பிச்சை எடுத்துக்கொள்வது ) வசதி..  நீங்கள் இன்னோரிடத்தில் அப்படி மாட்டிக்கொண்டால் உங்களுக்கும் அதுவே விதி.  எல்லாரும் வரட்டு கவுரவமும் ஆணவமும் இன்றி வாழ்ந்தனர். இதனால்தான் பகிர்ந்து தின்னவேண்டுமென்பது அழுத்திச் சொல்லப்பட்டது.

கா+ உரவு + அம் -  கவுரவம்.  தன் பெருமையை அமைத்துக்கொண்டு செயல்படும் தன்மை.    உரு + அ +வு -  உரவு.  மனத்துள் கொள்ளும் தன் உரு  ஆகிய எண்ணம்.

எண்ணழுத்திக்  (டிஜிட்டல்)  கருவிகள் இல்லாத காலம்.

இனி இலட்சோப  என்பது.

இலட்ச  --- எண்ணிக்கை.

ஓர்ப  -(   இலட்சங்களாக) எண்ணுதல் -    இங்கு ஓர்ப என்பது ஓப என இடைக்குறைந்தது.  வினைச்சொல்: ஓர்தல்.  ஓர்ப -  வினைமுற்று.  செய்ப, செய்வர் என்னும் முற்றுக்கள் காண.

மீண்டும் இலட்சம் என்ற சொல்.

இங்கு  இல் என்பது இருத்தலைக்குறிப்பது.    "குளத்தில் இருப்பது "  என்பது பொருளிருப்பைக் குறிக்கும்.  ( தண்ணீர்)

அடுத்த >  அடுச்ச.>  அட்ச.     இல் + அடுச்ச .  இலட்ச.  ( பொருள் சேர்ந்த இடம்,  சேர்ந்த பொருள் .   இல் என்பதற்கு வீடு எனினும் பொருள் வரும்.  த -  ச போலி.

இடத்தில் சேர்த்து வைத்த பெரும் பொருள் என்பது இதன் பொருள்.

இவ்வாறுதான் இலட்சம் என்ற சொல் ஆக்கம் பெற்று நடப்புக்கு வந்தது.

அட்சரம் என்பதும் இவ்வாறு வந்ததே.  எழுத்துக்கள் ஒலிமுறைப்படி,  அடுத்தடுத்து வைக்கப்பட்டன.    அடு - அடுத்தடுத்து,   சரி  -   சரியான முறையில்,  அம் -  அமைக்கப்பட்டது. 

தரு > சரு > சரம்.    ( அடுத்து அடுத்துத் தரப்படுதல் . )  தரப்படுதல் என்றால் யாராலும்   எடுத்துத் தரப்படுதல் வேண்டியதில்லை. அதுதானே அவ்வாறாயினும் விந்தை நிகழ்வாயினும்  வேறுபாடில்லை.   கடல்தரு செல்வம்,  கடல் உம்மைத் தேடி வந்து தரவேண்டும் என்று நினையாதீர். கடல்பஃறாரம்  -   அறியவேண்டும்.

அட்ச என்ற சொல்வடிவை மேலே விளக்கினோம்.

அமைவில் இலட்சமாக ஓர்ந்ததே இலட்சோப என்று வருகின்றது.

Later grammarians would   isolate "oba" or a conjunctive piece according with it to form other words.  We have not gone into this matter.

பாணினி தமிழன்.

அறிக மகிழ.

மெய்ப்பு  பின்னர்.