திங்கள், 28 பிப்ரவரி, 2022

சாமிக்குச் செய்தது கேசரி.


சாமிக்குச்  செய்தது கேசரி  -----  சீனிச்

சார்பினில் இனிக்கும் கேசரி!

நேமித்துத்  தந்தனர்  பேறிது ---- இதை

நித்தலும் கொள்வ தெடைதரும்.


இறைவன் தந்த  தென்பதால் ---  தீமை

ஏதும் கூடாமல் காப்பதால்,

குறைவாய்க் கொஞ்சம் உண்ணலாம் --- ஆத்தும

குதூக  லம் மகிழ்ந்  தெண்ணலாம். 


சீனியை  மிஞ்சிய இனிமையில் ---  இதைச்

செய்து முடித்தது  மடைப்பளி, 

மேனிலை ஏய்ந்ததும் எப்படி  --- அறிவார்

சீனியை ஆய்ந்தவர் காண்கிலம்.


சார்பினில் -  ( சீனி அதிகமான ) பாங்கினால்

நேமித்து -  எம்  ஏற்பாட்டினால் பூசை செய்து,

நித்தலும் -  தினமும்

கொள்வது - உண்பது

பேறிது -  பேறு இது : இது எம் பாக்கியம் என்றபடி.

மடைப்பளி,  மடைப்பள்ளி, கோயிலில் சமைக்கும் இடம்

மேனிலை ஏய்ந்தது ---  (சீனி) கூடிய  நிலையை அடைந்தது

அறிவார் சீனியை ஆய்ந்தவர் --- சீனி ஆய்வு செய்தவர்களுக்கே தெரியும்.

இவ்வளவு இனிப்பாக இருப்பது எப்படி என்பது தெரியவில்லை.  சீனைய

மிஞ்சிய இனிப்பாய் உள்ளது.

காண்கிலம் -  எமக்குத் தெரியவில்லை.



கேசரி என்ற சொல்:

கூழ் என்பது முன்பாதியில் உள்ள சொல்.  இன்னொரு பின்பாதிச் சொல்: சரி.

அதிகமாகக் கூழாகிவிடாதபடி,  சற்று இளகிய நிலையிலே  :" சரியாகச்" 

செய்யப்படுவது.   கூழ் என்ற சொல்,  

கூழ் வரகு என்பதில் கூழ் -   கேழ் ஆகிற்று. அதுபோலவே இங்கும் சொல் திரிந்துள்ளது.  கேழ்வரகு என்பது பின்னும் கேவர் என்ற் திரிந்து வழங்குகிறது.

 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

[இரண்டு எழுத்துப் பிறழ்வுகள் திருத்தம்

02032022 1126]






தனிக்குறிப்பு

==========================================================

இது தனிவாசிப்புக்காக எழுதப்பட்டாலும் கவனக்குறைவான்  வெளியோரும் வாசித்துவிட்டனர்.  ஆகவே இந்தப் பகுதி இங்கு கைவிடப்படுகிறது. அழிக்கப்படவில்லை.


ஆசிரியர்க்கு not for public - do not read

 பஞ்சமி

வலை -  வளை  தொடர்பு

சாம்பவன் - ஜம்பவான்

பணவழங்கி முன் பதற்ற உரையாடல்

 தவறான எண்களை அழுத்தி,  அதனால் பணவழங்கி  ( ATM  ) எந்திரம் உங்கள் தொடர்பு  அட்டையை விழுங்கிவிட்டால், அதனால் பதற்றம் அடைவோர் உண்டு. நீங்கள் ஒரு குற்றமும் அற்றவர்,  ஞாபகக் கோளாற்றினால் தவறான எண்களைப் பலமுறை அழுத்திவிட்டீர் என்பது அந்தப் பணவழங்கிக்குத் தெரிய வழியில்லை. என்னதான் செய்வதென்பதை அந்த இயந்திரங்களின் ஒரு புறத்திலே எழுதிவைத்திருப்பார்கள். அங்கும் தெரிந்துகொள்ளலாம்,  அறிந்தோரிடம் கேட்டும் தெரிந்துகொள்ளலாம். அதிக வயது ஆனவர்களுக்குத் தாம் இத்தகு தடுமாற்றங்கள் ஏற்படுகின்றன போலும்.

இதுதொடர்பாக, இங்கு இன்னொரு படமும் உள்ளது. கண்டு மகிழ்க; இதுபோலும் நிகழ்வுகளின்போது இளைஞர்கள் உதவலாம் என்பதை முன் இடுகையில் பரிந்துரைத்திருந்தோம்.

அந்த இன்னொரு படம் இங்கு:-



உந்துகள் நிறுத்திடத்துடன் இந்த இயந்திரங்கள் உள்ளபடியால் யாவர்க்கும் வசதியாய் உள்ளது.. மறுபுறம் கடைகள் உள்ளன.

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

தனிவாழ்வு முதியோர்க்கு உதவுங்கள்

 


பணம்பெறு இயந்திரத் தின்முனில் பற்பலர்

இணைந்தனர் உரைபரி மாறியே கவன்றனர்

இணக்கறு இலக்கமே அழுத்தியே அட்டையை

குணக்குற இழந்தவர் கூட்டமே காண்கவே.


அகவையும் மிகுதியே அடைந்வர் என்றிடில்

உகப்பொடும் அவர்க்குமே உதவிகள் செய்விரே

மகப்பெறு மணிநல மாண்பினும் தனிநிலை

இகத்தின ரெனவிருந் துழல்பவர் பலர்பலர்.


முனில் - முன்னில். ( தொகுத்தல் விகாரம்)

கவன்றனர் - துன்புற்றனர்

இணக்கறு - பொருத்தமற்ற, தவறான

அட்டை - இட்டுப் பணமெடுக்கும் அட்டை ATM card

குணக்குற - குழப்பமுற்று

இழந்தவர் கூட்டமே- இழந்தவர் பின்னால் கூடிய கூட்டம்

அகவை -வயது

உகப்பு - விருப்பம்.

மகப்பெறு மணிநலம் - மக்களைப் பெற்ற பேறு உடைமை

மாண்பு - சிறப்பு

தனிநிலை இகத்தினர் - இவ்வுலகில் தனியாக வாழ்பவர்

சமத்கிருதம் பரப்பியவன் தமிழன்.

 மொழிகளை ஆய்வு செய்தவர்களும் செய்கின்ற பலரும்  சமத்கிருதத்தை இந்தோ ஐரோப்பிய மொழி என்று நினைக்கிறார்கள்.  அப்படி அவர்கள் நினைக்கக் காரணம்,  வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்டகாலத்தில் அவர்கள் வெளியிட்ட "ஆரியர்கள் இந்தியாவைப் போரிட்டு வென்று குடியேறினமை" பற்றிய தெரிவியலும்"  ( theory) "இந்தியாவுக்கு ஆரியர் புலம்பெயர்வு" பற்றிய தெரிவியலும் ஆகும்.  இவையெல்லாம் அவர்கள் புனைந்துரையாக வழங்கிய , எண்பிக்கப்படாத தெரிவியல்கள் ஆகும்.  இப்போதுள்ள கருத்துகளின்படி ஆரிய என்ற சொல்,  ஓர் இனத்தைக் குறிக்கவில்லை.  இட்லர் முதலியவர்கள் வாழ்ந்த காலத்தில் அப்படி ஓர் இனம் இருந்ததாகக் கருதப்பட்டது. இந்தத் தவறான தெரிவியலாலும் "புரிதலாலும் " இட்லர் பல யூதர்களைக் கொன்றுவிட்டார் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுவதுண்டு.

இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து தங்களின் ஆட்சி விலகிடாத நிலை உறுதிப்படவேண்டும் என்பதற்காகவே இந்தத் தெரிவியல்கள் வெளியிடப்பட்டன. இன்னொரு காரணம் என்னவெனில்,  ஐரோப்பியர்களுக்கு ஒரு வரலாற்றுத் தொன்மை தேவைப்பட்டது. அதைச் சீனாவினோடு தொடர்புபடுத்திப் பழமையை மெய்ப்பிப்பது கடினம் என்பதை அவர்கள் அறிந்துகொண்டனர்.  ஐரோப்பிய மக்களின் மொழிகள் சீனமொழி மற்றும் கிளைமொழிகளோடு ஒத்துப்போகும் தன்மை உடையவாய் இல்லை.  பழம்பெரும் நாகரிகங்கள் கொண்ட நாடுகளில் இந்தியாவுடன் ஓரளவு தொடர்பு புனைவிக்க, ஐரோப்பிய மொழிகட்கு இணக்கம் கற்பிக்க வழி இருந்ததை அவர்கள் கண்டறிந்தனர். சமத்கிருதம் பல சொற்களில் ஐரோப்பியச் சொற்களுடன் இணக்கம் காட்டினமையால், அதை இந்தோ ஐரோப்பிய மொழி என்றனர்.  அம்மொழிக்கு இந்தோ என்ற  அடைமொழி இன்றி, முற்றிலும் சமத்கிருதம் ஓர் ஐரோப்பியமொழி என்று கூற அவர்களாலும் இயலவில்லை.  ஆதாலால் அது ஐரோப்பாவிலிருந்து வந்தது என்று புனைய இயலாமல்,  ஆசியாவிற்கும் ஐரோப்பாவுக்கும் இடைப்பட்ட ஓரிடத்திலிருந்து வந்ததாகக் கூறிக்கொண்டனர்.

ஆரியர் வந்தனர் என்ற புனைவினால்,  முன்னும் நாங்களே வந்தோம், கலைகளைத் தந்தோம், இப்போதும் நாங்களே வந்தோம்  என்று கூறினர்.  இந்தியாவிலிருந்த அறிஞர்களும் புலவர்களும் இக்கருத்தினை ஏற்றுக்கொண்டனர். ஆட்சியாளர்களை எப்படி எதிர்ப்பது என்பது காரணமாக இருக்கலாம். சமத்கிருதத்தில் காணப்பட்ட சொற்கள் பல,  தத்தம் மொழிகளிலும் இருந்தனவாதலால்,  தமிழரும் பிறரும் இச்சொற்களை அயலிலிருந்து வந்தவை என்று கருதி வெறுக்கலாயினர். இதில் அதிக வெறிப்பினைக் காட்டியவர் தமிழராவர்.

கல்தோன்றி மண்தோன்றா முன் தோன்றிய  மூத்த குடியினரான தமிழர்க்கு, இந்தச் சமத்கிருதச் சொற்கள், தங்கள் மொழியை மாசுபடுத்தின  என்ற  கருத்து விளைந்தது.  அதனால் அவற்றை விலக்கிட,  தனித்தமிழ் வேண்டும் என்ற கருத்தும் ஏற்பட்டது.

மறைமலையடிகள் தனித்தமிழை விரும்பிக் கடைப்பிடிக்கக் காரணம்,  சமத்கிருதமென்பது கலவாத தமிழ் இனிமையாக இருந்தது என்பதே . இன்னொரு காரணம்,  சமத்கிருதத்தால், பண்டைத் தமிழ்ச் சொற்கள் பல வழக்கொழிந்தன என்பதும் இவ்வாறு நேர்ந்தால் சங்க இலக்கியங்கள் முதலியவற்றை கற்றறிய இயலாமற் போய்விடும் என்ற அச்சமுமே ஆகும். தம் மகளுடன் இதுபற்றிய கருத்துப் பரிமாற்றங்கள் நேருமுன்,  அடிகள் சமத்கிருதம் கலந்த தமிழே எழுதிவந்தார்.


ஆரியர் என்பது ஓர் இனத்தைக் குறிப்பதன்று.  ஆரிய என்ற சொல்,  அறிவாளிகள்,  நல்லவர்கள் என்ற கருத்திலே பழைய இந்திய இலக்கியங்களில் வழங்கப்பட்டுள்ளது.  ஆனால் வெள்ளைக்காரனுக்கு இச்சொல்லின் மூலம் எது என்று தெரியவில்லை.  ஆரியர் என்றால் மரியாதைக்குரியோர் என்பதுமட்டும் தெரிந்தது.  இந்தப் பணிவு மரியாதை எல்லாவற்றையும் ஆர் என்ற தமிழ் விகுதியே காட்டியது.  வந்தார், கண்டார், சென்றார் என்று தமிழில் வழக்கும் சொல்லும் உள்ளது.  ஆர்தல் என்ற வினைச்சொல்லும் தமிழிலேதான் உள்ளது.  ஆதலின் சமத்கிருதத்தில் நாம் காணும் ஆரிய என்பது தமிழ்ச்சொல்லே ஆகும்.  இதில் எந்த ஐயமும் இல்லை. இதை யாம் முன்னரே எழுதியுள்ளோம்.

தமிழை நோக்க,  சமத்கிருதமென்பது பெரிதும் திரிசொற்களால் இயன்ற மொழியெ ஆகும்.  தமிழின் திரிசொற்களும், இந்தியத் துணைக்கண்டத்தில் வந்து வழங்கிய அயற்சொற்களும் கலவையாக எழுந்த மொழியே சமத்கிருதமென்பது. ஆனால் சமத்கிருதத்தை நோக்கி, தமிழானது  பிற்பட்டமொழி என்று கருதியவர்களும் இருந்தனர். அயற்சொற்களைச் சமத்கிருதம் ஏற்றுக்கொண்டமையே இதற்குக் காரணம்.  பண்டைத் தமிழில்,  அயல் ஒலிகளை வடவொலிகள்  ( வடவெழுத்து) என்று வகைப்படுத்தி   அவற்றை விலக்கினால் அது தமிழாகிவிடும் என்று தொல்காப்பியனார் சூத்திரம் செய்தார். அப்படியானால் தமிழுக்கும் சமத்கிருதத்துக்கும் உள்ள வேற்றுமை,  அக்காலத்தில் (தொல்காப்பியர் காலத்தில் )  அவ்வளவே (ஓலி அளவே)   இருந்தது. எடுத்துக்காட்டு: குஷ்டம் என்பதை குட்டம் என்று மாற்றிவிட்டால் அது தமிழ்.  குட்டம் என்பதை குஷ்டம் என்றால் அது சமத்கிருதம்.  தொல்காப்பியர் ஒலி (வேறுபாடுதான்) அப்போதிருந்த மொழி வேறுபாடு என்று கூறுகிறார் என்பது தெளிவு.  குட்டம் என்ற சொல்லோ,  நோயினால் உருக்குலைந்து கைகால்கள் குட்டையாகிவிடுவதைக் கொண்டு ஏற்பட்ட பெயர்தான் என்பதைத் தொல்காப்பியர் தந்த உணர்நெறி, தெளிவுபடுத்துகிறது. இந்நோய் தமிழிலும் சமத்கிருதத்திலும் ஒரே சொல்லால் குறிக்கப்பட்டது. இருமொழிகளும் தமிழ்நாட்டிலும் அதற்கயலான நிலப்பகுதிகளிலும் வழங்கினமைதான் காரணம். குட்டம் என்ற சொல் வழங்கிய இடத்தில் இருமொழிகளும் இருந்தன.  ஒன்று மக்கள் மொழியாகவும் இன்னொன்று இறைவணக்க மொழியாகவும் இருந்தன. ஒரே ஆசிரியன், தமிழிலும் நூல்வரைந்து,  சமத்கிருததிலும் ( சிலவேளைகளில் வேறு  ஆக்கியோன்பெயரில்  வெளியிட்டதும் காரணமாகும். பூசாரிகள் கோவிலில் சமத்கிருதத்தில் பாடிவிட்டு வீட்டுக்கு வந்து அதே சொற்றொகுதியைப் பயன்படுத்தியமையும் காரணமாகும்.

நாம் தமிழ் முன்னது என்பதற்குக் காரணம் : தமிழ் இல்லத்தில் எழுந்த மொழி. பின் அரச மொழியானது.  மதங்கள் கடவுட்கொள்கைகள் மனிதன் நாகரிகம் அடைந்தபின் உருவாகும் தன்மையன ஆகும். ஆகவே சாமிகும்பிடும் மொழி,  நல்ல சோறும் நீரும் கிடைத்தபின் ஏற்படுவது. இதுவே மனிதவரலாற்றுக் கருத்தாகும்.   அதனால் தமிழ் முன்மொழி என்கின்றோம்.  கல்லும் மண்ணும் தோன்றாத காலத்தில் கடவுட் கொள்கைகள் தோன்றுதல் அரிதாகும். பிணங்களுடன் தொடர்புடையவர்கள் தோன்றி, பின் அவர்கள் நெஞ்சில் சிந்தனைகள் தோன்றி, அச்சிந்ததைகளைக் கூறும் சொற்கள் தோன்றி அப்புறம் அதற்கொரு மொழி தோன்றும் என்பதறிக.

வடம் என்றால் மரத்தடியைக் குறிக்கிறது. வடசொல் என்றால் மரத்தடியில்  பேசிய சொற்கள்.  மரத்திலிருந்து அறுக்கப்பட்ட பலகைகளில் வீட்டுக்கு வெளியில் அமர்ந்துகொண்டு சாமி கும்பிட்ட மொழிதான் வடமொழி --- பின் சமத்கிருதம் எனப்பட்டது.

தமிழ் என்பது தம்+இல் என்று பிரித்து, தம் இல்லமொழி என்று பொருள் கூறினர்,  கமில்சுவலபெல் என்ற செக் நாட்டுத் தமிழறிஞரும்  தேவநேயப் பாவாணரும்.  தமிழ் என்பதில் வரும் இழ் என்பது உண்மையில் இல் - (வீடு) என்பதுதான் இவர்களின் கருத்து. இதை யாம் கூறவில்லை. இவர்கள் கூறுவது உண்மையாகவிருக்கலாம்.  

சமத்கிருதம் என்ற மொழியை முன் பயன்படுத்தியவர்கள்,  நான்கு நிலங்கள் என்ற வரையறைக்குள் அடங்கிவிடாமல் பரந்துபட்டு வாழ்ந்து பல நிலவகைகளிலும் திரிந்துகொண்டிருந்த பரையர் எனப்படுவோரே.  அவர்கள் அதில் வல்லவராயிருந்தனர். சமத்கிருதத்தில் முதல் பாவலர், வால்மிகி முனிவர், இவர்களுள் ஒருவரே.  சமத்கிருதத்துக்கு இலக்கணம் இயற்றியவர், பாணினி.  இவர் ஒரு பாணர்.  பாணர்கள் குலோத்துங்க சோழன் காலம்வரை அரசுகளாக இருந்துள்ளனர்.  அதன் பின்னும் இருக்கலாம். வரலாற்று நூல்களைக் காண்க.  பாலாற்றுக்கு வடக்கே புங்கனூரிலிருந்து காளத்தி வரையுள்ள நிலப்பகுதியை நெடுங்காலமாக ஆண்டு வந்தவர் பாணர் எனப்பட்டனர். அவர்கள் ஆண்ட நாடு பாணப்பாடி என்று வரலாற்றாய்வறிஞர் கூறுவர். அரசிழந்தோருள் பாணர் குடியினரும் அடங்குவர். இவர்கள் மரபில் தோன்றியோனே பாணினி என்ற சமத்கிருத இலக்கணியன். ஆனால் காலத்தால் முற்பட்டவன். பாண்+இன்+இ : பாணினி.  வில்மீன்கொடி என்னும் நம் நண்பர் பாணர்பற்றிப் பல எழுதியுள்ளார்.  அவற்றையும் படித்து அறிந்துகொள்ளுங்கள்.  வியாசன் என்போன் மீனவன்.  பாரதம் எழுதினான். பரதவர் என்ற தமிழ்ச்சொல் மீனவர் என்று பொருள்படும்.  பாரதம் என்பது மீன ஆட்சிக்காலத்துக் காட்சிகளை முன்வைக்கும் இலக்கியம். இதன்மூலம் யாம் கூறுவது யாதென்றால்,  சமத்கிருதம் என்பது இந்திய மொழிதான்.  அது இந்தோ ஐரோப்பியமொழி என்பது வெள்ளையர் அதன் தொடர்பை விரும்பிப் புனைவுகள் இயற்றியமையையே காட்டுகிறது. அது, சடாம் உசேன் அணுகுண்டு வைத்திருந்தான் என்ற புளுகு போன்ற ஒன்றே ஆகும்.நீங்கள் எதை நம்புகிறீர்கள்?  அது உங்கள் உரிமை.

இங்கு நாம் சமத்கிருதம் என்று சுட்டும் சொற்கள்,  இந்திய மொழி என்று யாம் சொல்லும் ஒரு மொழியுடனான ஒப்பீடே ஆகும்.  எமக்கு ஆரியர் என்றால் நம் சங்கப் புலவர்களே. அவர்கள்தான் ஆர் விகுதியை அணிந்துகொண்டவர்கள். பின் ஆரியவர்த்தா என்றொரு தேயமும் இந்தியாவில் இருந்தது.  அந்நாட்டு மக்களையும் அவ்வாறு குறிக்கலாம்.  ஆனால் அது பிற்காலத்தது. எல்லாரும் அறிவாளிகளே. சமத்கிருதம் என்பது தமிழுடன் உலவிய ஒரு மொழி.  வெளிநாட்டு மொழியன்று. 

சமத்கிருதம் வெளியார் மொழி என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அது பரவலாக வாழ்ந்த நானிலங்களில் அவ்வந் நிலங்களுடன் அடங்கிவிடாத மக்களால் ஆளப்பட்ட மொழி.   அவர்கள் பெரும்பாலும் சாவுச்சடங்குகளையும் கையாண்டனர்.  சாத்திரம் ( சாஸ்திரம்) என்ற சொல்லே அவர்களால் ஏற்பட்டதுதான்,  அடிக்கடி பிணங்களைக் கையாள்பவனுக்கே கடவுள் பற்றிய எண்ணங்கள் முகிழ்க்கும். அவனே சாவின் திறத்தை அறிய முற்படுவான். மனிதனுக்கு சாவே இல்லையென்றால் கடவுட் சிந்தனை ஏற்படவழியில்லை.  மதங்கள் பெரும்பாலும் சாவின் பின்னுள்ள நிலையை யாது என்று வினவி எழுந்தவைதாம். இதுவே பிறநாட்டு அறிஞர்களின் கருத்துமாகும். வாழ்க்கை நிலையாமையினால் கடவுள், மதம், வீடுபேறு என்று பலவும் எழுந்தன. இவற்றை எல்லாம் சிந்திக்கவும் அதற்குச் சடங்குகளை ஏற்படுத்தவும் அவற்றுட் பெருந்தொடர்பு உள்ளவனே முனைவான் என்பதையும் அறிக. வால்மிகி என்ற அறிஞரின் எழுச்சி அதையே வலியுறுத்துகிறது. சமத்கிருதத்தின்பால் பரையருக்கிருந்த தொடர்பு பின்னாளில் அறுக்கப்பட்டது.

ஆகவே சமத்கிருதம் இந்திய மொழி என்ற கருத்தில்தான் யாம் ஆய்வு செய்கின்றோம். இன்னும் சொன்னால், சமத்கிருதத்தை எங்கும் தமிழ்மன்னர்களே பரப்பினர். இவர்களில் இராசராச சோழன் அதை தென் கிழக்காசியா முழுமைக்கும் பெரிதும் பரப்பியுள்ளான். தமிழ் மன்னர்களும் அவர்களுடன் பிற மாநிலத்து மன்னர்களும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். அவர்களில் நாத்திகர் யாரும் இருந்ததாகத் தெரியவில்லை.  இக்காலத்து மக்களின் நம்பிக்கைகளிலிருந்து அவர்களின் நம்பிக்கைகள் வேறுபட்டிருக்கலாம். 

தமிழ் மன்னர்கள் இமயம் தொட்டு மீண்டனர் என்று நம் நூல்கள் கூறுகின்றன.  தமிழும் அதன் இலக்கணமும் கடினமானவை ஆனபடியால், சற்று எளிதான சமத்கிருதத்தைத் தமிழர்களே எங்கும் பரப்பினர்.  அதனால் பிறமாநிலங்களின் மொழிகளும் மாறியமைந்தன என்பதே உண்மை. நாடுகளை வென்று ஆங்குக் கிட்டிய செல்வங்களைக் கொள்ளை கொண்டவருள் தமிழ் மன்னர்கள் முன் நிற்கின்றனர் . இவர்கள் மொழியில்தான் புறப்பொருள் என்ற போர்பற்றிய தத்துவங்கள் உள்ளன. தமிழன் அக்காலத்தில் நாடு பிடிக்கும் ஆசை கொண்டவனாயிருந்தான். கலிங்கத்து பரணி போலும் நூல்கள் பிறமொழிகளில் காணப்படுகின்றன என்றால் அவற்றை ஆய்ந்து சொல்லுங்கள். கேட்போம். வீரகாவியம் எழுவதென்றால் அடுத்தவன் நாட்டைக் கொள்ளையடிக்காமல் முடியாது. அந்தக்காலத்தில் செல்வம் திரட்ட அதுவே முதல்வழியாய் இருந்தது.

இமயவரம்பன் என்ற பட்டம் சூட்டிக்கொண்டவன் தமிழன்.

இவனே பரப்பினான். இவனே வேண்டாமென்பதா?

கால் முன்னே சென்று மற்றவனை இடித்தால் அது உதை. சூரியன் முன்னே கிளம்பினால் அதை உதையம் > ( ஐகாரம் குறுகி) - உதயம்.  உகரம் என்ற சுட்டடிச் சொல்லல்லவா இது?  முன்மை குறிப்பதல்லவா இது?   தொடர்பை எப்படி மறுப்பது? இரண்டும் பழங்காலத்துச் சொற்கள். இந்தமாதிரி எத்தனை?  ஒரே மூலத்திலிருந்து கிளம்புகின்ற சொற்கள்?  இவற்றையெல்லாம் ஆரியன் கீரியன் எவனும் ஏற்படுத்தவில்லை. இவனே பரப்பிய மொழிதான் சமத்கிருதம்.  சம - சமமான  கது அம் - ஓசை. கது என்பது கத்து என்பதன் இடைக்குறை. கத்து - ஒலி.  அமை> சமை > சம   > சமம். தமிழன் தான் தன்மொழிக்குச் சமமாக இன்னொன்றை உண்டாக்கினான்.  சீனன் உண்டாக்கியிருக்கமாட்டான்!

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

[   சிலர் நாம் எழுதுவதைப் பார்த்துவிட்டு அதற்கு எதிர்வினைபோல் அதே பொருளுக்கு வேறு விளக்கம் எழுதுகின்றனர்.  ஆனால் வெளியிட்ட திகதியை முன்னாக்கி,  நம் இடுகையைப் பார்த்திராததுபோல் நடித்துக்கொண்டு எழுதுவதும் தெரிகிறது.  ஏன் அப்படிச் செய்கின்றனர் என்று தெரியவில்லை. நாம் பிறர் சொல்வதற்கு மாற்றுக்கருத்து ஏதும் எழுதுவதில்லை.  பிறர் என்ன சொல்கிறார்கள் என்பதில் எமக்கு ஒன்றும் அக்கறை இல்லை. சமகாலத்தவர் கருத்துகளுக்கு ப்  பதில் எழுதுவதில் எமக்கு ஆர்வம் இல்லை.  எழுதுவதற்கு இவர்களுக்கு எதுவும் தலைப்புக் கிடைக்கவில்லை போலும் ]  

சனி, 26 பிப்ரவரி, 2022

தூற்றுதலும் தூவுதலும். இவற்றின் விளைபதங்களும்.

தூற்றுவது என்ற சொல்லை இயல்பான நிலையில்  அறிய வேண்டுமானால் அதனை  ஒரு வாக்கியத்தில் இட்டுக் காட்டலாம்.  இதற்கு ஒரு  பழமொழி பொருத்தமாய் வருகிறது.  அஃதாவது:  " காற்றுள்ள பொழுதே தூற்றிக்கொள்" என்பதாகும்.

இந்தப் பழமொழியிலிருந்து இது விவசாய மக்களிடை ஏற்பட்டதென்பது தெரிகிறது.  உமி வேறாகப் பிரிப்பதற்கு அவர்களே பெரும்பாலும் தூற்றுதலைச் செய்வார்கள். இது பொலிதூற்றுதல் எனவும் படும்.

விவசாயம்:  இங்குக் காண்க:  விவசாயம்   https://sivamaalaa.blogspot.com/2017/04/blog-post_54.html   (சொல்லமைப்பு)

ஒரு மனிதனைப் பற்றி இன்னொருவன் சென்று தவறான செய்திகளைப் பரப்புதலாவது,  விவசாயிகள்   பொலி  " தூற்றுவதற்கு"  ஒப்பானதென்று கண்டு, அதற்கு பழிதூற்றுதல் என்ற பொருளும் மொழியில் ஏற்பட்டது.

தூற்றுதலும் தூவுதலும் தம்மில் ஓர் ஒற்றுமை உடைய செயல்களாகும்.  அதனால் தூவுதல் என்ற சொல்லையும் தூற்றுதல் என்பதன் பொருட்சாயல்கள் பற்றிக்கொண்டது.  இவற்றில் அடிச்சொல்லாவது : " தூ"  என்பதுதான்.

தூ >  தூத்து  >  தூற்று.

இதைப்போலவே  ஏற்று என்ற சொல்லும் ஏத்து என்று வழங்கும்.  எது முதல் என்பதை ஈண்டு விளக்கவில்லை.  சிற்றம்பலம் > சித்தம்பரம் > சிதம்பரம் என்று வந்ததுபோலுமேயாகும்.  (போலி:  ற-  த;   ல - ர முதலியன).  நிற்றல்> நித்தல் ( ஒவ்வொரு நாளும்) என்பதும் அன்னது.

போலி என்றால் ஒன்றைப்போல் மற்றொன்று நிற்றல்).

ஒரு மனிதனைப் பிடிக்கவில்லை என்றால், அவனைப் பற்றித் தூவி எடுத்துவிடுவார்கள்.

எடுத்துவிடுதலாவது,    சொல்வதைத் திடப்படுத்தித் தூக்கிப் பிடிப்பது போலும் செயல்.  இதைக் காற்றுடன் நெருப்பு என்றும் வரணிப்பதுண்டு.

எடுத்துப் பிடிப்பது என்ற வழக்கையும் நோக்கி,  எடுத்தல் என்பதன் சொற்பயன்பாட்டை உணரலாம்.

தூவி எடுத்தல்.

தூவு எடு+ அம்.

எடு அம் என்பது ஏடம் என்று முதனிலை திரிந்து ஏஷம் என்றாகிப் பிறசொற்களின் பகுதியாய்  நிற்றலும் உண்டு.  

தூவு + ஏடம் >  தூவேடம் > துவேசம் என்று ஆனது.  மூலம் தலை குறுகுதல்.

வா > வ(ந்தான்).  எடுத்துக்காட்டு. வினை பெயர் எங்கும் குறுக்கம் உண்டு. நீட்டமும் உண்டு.

தூவேஷம் > துவேஷம் > த்வேஷம்.

இவ்வாறன்றி,  தூவு( தல்)  + ஏசு (தல்  >  தூவேசு+ அம் >  துவேசம் எனினும் அமையும்.

இஃது இருபிறப்பி என்பதும் தமிழினின்று புறப்பட்ட சொல் என்பதும் அறிக.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

Please do not copy, republish and/or backdate. There are

thousands of words for you to work on. Take notes when you 

hear people talk. You may use this for study .  But when you copy you

are adding nothing to the existing knowledge.  Backdating your publication

after copying is fraud.









 


புதன், 23 பிப்ரவரி, 2022

செடிகள்மேல் வந்த ஆசை.

 நீரில்லா இடத்தினிலே தாகம் போல----ஆசை

நெஞ்சமதில் சிங்கப்பூர் மக்கள் கொண்டார்

பாரெங்கும்   செடிப்பசுமை மாணும்  முன்னால்---சிங்கை

பகருமொரு பசுநகராம்   பாதை கண்டார்.


வீதிகளில்  தெருவோரம் ஊர்தி  செல்லும்  ----- நடு

விரிவாகு  எனவெங்கும்  பசுமை யாக்கி, 

யாதுமொரு  வெற்றிடமும் இல்லா வண்ணம் ---செடிகள்

எழுமரங்கள் கொடிகளிவை வளர்த்தி வென்றார்.


குப்பைகொட்டும் வழித்துளையே என்ற போதும் ---  மக்கள்

கூட்டெனவே அரசுடனே  ஒத்தி சைந்து, 

சப்பைநிலை போலியங்கிச்  சார்ந்து நின்றார் ---  செடிகள்

சட்டிகளில் கொடிகளென எட்டி   னார்கள்.


தாகம்:   தவி+ அம் > தாவம் > தாபம் > தாகம். (போலித்திரிபு)

தாகம் தவிக்கிறது என்பது  பேச்சில் பயன்பாடு.

ஆசை - ஒரு பொருளின் அணுக்கத்தினால் மனத்துள் அசைவு உண்டாதல்.

அசை >  ஆசை (முதனிலை நீண்டு திரிந்த தொழிற்பெயர்)

இதுபோல் திரிந்த இன்னொன்று:  சுடு >  சூடு.

நடுவிரிவாகு:  சாலையின் நடுவில் அமைந்துள்ள விரிந்த ஒரு வாகு.

இந்த வாகிலும் செடி புல் முதலியவை நடப்பட்டுள்ளன.

மாணும் - சிறக்கும்

பசுநகர் -  பசுமை நகர்

பகரும் - எடுத்துரைக்கும். ( தகுதியான என்று பொருள்).

குப்பை வழித்துளை - ரப்பிஷ் சூட் என்னும் குப்பைக்கிடங்கு.

கூட்டெனவே -  அரசுடன் ஒத்துழைத்தவாறு.

எட்டினார்கள் - அடைந்தார்கள்.




 

 இங்குச் சில சட்டிச் செடிகள் உள்ளன.  ஒன்றில் விதைகள் தூவி உள்ளனர்





நாய்க்குட்டி - காயமுண்டாக்கும் களிப்பு

சிங்கார மாய்விளங்கு நாய்க்குட்டியே ----எனைச்

சீண்டியே காயம்செய்யும் வெள்ளைக்   குட்டியே

பங்காக நொறுப்பளமே தந்துவிட்டாலும்  --- காலால்

பறண்டிஎனைத் தொல்லைசெயும்  சின்னக்குட்டியே.



அருஞ்சொற்பொருள்:

காயம்செய்தல் -- காலநகத்தால் கிழித்துவிடுதல்.

பறண்டு -  காலால் ( நகத்தால் )கீறு(தல்).  கால்சிதைதல், நகம்பதிதல் என்றும்

கூறுப.

நொறுப்பளம் -  பிஸ்கட்.

நகம்:  உடலின் பகுதிகளில்,  வெண்மையாக இருந்து ஒளி தருபவை பற்களும் நகங்களும்.  இவற்றுள், நகம் என்பதுமட்டுமே ஒளிசெய்தல் என்னும் பொருளதாம்,   நகுதல் என்னும்  தமிழ் வினையினின்று போந்துள்ளது.  ஆகவே காரண இடுகுறியாகின்றது. உகிர் என்பது இன்னொரு பெயர்.  உ+ கு+ இர் என்று அமைவதால்,  முன்னுள்ளது என்ற பொருடரும்.   உ = முன்,  கு -  சேர்ந்து, இர் - இருப்பது என்ற குறிப்பைத் தருவதுடன்,  இர் விகுதியாகவும் இருபண்புடைமை கொள்கின்றது. எல்லா விகுதிகளும் இவ்வாறு பொருள்தருபவை அல்ல.

பழைய மொழியான தமிழ், இத்தகு உயர்வளர்நிலை  தன் சொற்களிற்காட்டுவதால், மிக்கப் பழமை நாளிலே சிறந்து வளர்ந்துவிட்டதென்பது தெரியும் 

கீழுள்ள கவிதை

தெருட்டுதல் - மனத்தெளிவு தருதல்

பரந்த - பரவிய

உடை - அதன் தோலின் முடியைக் குறிக்கிறது

மாண் திணிந்த --  மிகச் சிறந்த,

கனிவு =  முதிர்ந்து இனிக்கும் அன்பு








விளையாட ஆளில்லையென்றால் இது அமைதியாய் இருக்கும்!



இதுவும் காயம் ஏற்பட்டபின் எடுத்ததுதான்.  அது களிப்பில் ஆடிக்கொண்டிருந்தபோது எதுவும் எடுக்கமுடியவில்லை,




இது அதன் ஆட்டம் தொடங்குமுன் எடுத்தது.


நாய்க்குட்டியின் அன்பு ( கவிதை)

தனிமையை ஓட்டுகின்ற இனிமை ஆட்டம்

தாவித்தாவி ஆடுவதில் தனக்கீ  டில்லை!

பனிபரந்த வெண்ணிறத்தில் உடையு  டுத்து

பாணிகளில் மாண்திணிந்த நடையி  னோடு

கனிவுடனே முத்தமிட்டு  அணைக்க வந்து

காட்டுகின்ற காட்சிதனை என்ன சொல்வேன், 

மனிதரிலே யாருமிதைப்  போல  அன்பை

மறுபடியும் மறுபடியும் தெருட்டு வாரோ?

செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

ஓமிக்ரோனுடன் சமரசம் செய்துகொள்


 


இன்னலே  செய்திவ்  விகந்தனை அச்சுறுத்தி

அன்னலில் ஆம்திசை காணாமல் ---  பன்னாளும்

அல்லாட வைக்கும் அழிதொற்று நோயகல

இல்லரசு மின்னலார்பூ   சை.



இகம் தனை -   உலகத்தை

அன்னல் -  புகை

ஆம் திசை -   ( தப்பிக்க ) ஆகும் திசை.

மின்னலார் -  பூசை செய்த குடும்பத்துப் பக்தமணி அம்மையார்

பெயர் மின்னலார்.


இந்த நோய்க்கிருமிகளுடன் சமரசம்   (ஒத்திசைவு) செய்துகொள்வதைத் தவிர வேறுவழியில்லை.  சாமிகும்பிட்டு  உருகி, பற்று பெருகினால், நோய் மெல்ல மெல்ல மறையும்.   அதுதான் உங்கள் முன்னுள்ள வழி.


மெய்ப்பு  பின்னர்


திங்கள், 21 பிப்ரவரி, 2022

ஆசாரம் மதம் நல்லிணக்கம் (காணொளி)


 இதற்கு முன்னுள்ள இடுகையின் தொடர்ச்சி.  


  இங்குள்ள காட்சி ஒரு சீன மங்கையின் வீட்டின் முன்புறத்துள்ளது.  இம் மங்கை கிறித்துவத்தைப் பின்பற்றினாலும் சீனக் கலாச்சாரத்தையும் கடைப்பிடிக்கிறார். இவர் மதக் கலையாசார வேறுபாடுகளோடு இணக்கமாகச் செல்பவர்.

அறைகுறுக்கை ( சிலுவை) யும் உள்ளது.
பழைய சீனச் சமயத்தின் சின்னங்களும் உள்ளன.

துடியன் சொற்பொருண்மை மீட்டெடுப்பு

 துடை என்ற சொல்லைக் கவனிப்போம்.  மேசை முழுவதையும் துடைத்தால்தான் அது "துடைத்த மாதிரி இருக்கும்"  என்ற நிலை உண்மையானால்,  சிறிது ஒரு புறம் துடைத்துவிட்டு எல்லாம் முடிந்தது என்று சொன்னால், அது சொல்பவனுக்கே மனநிறைவளிக்காது.  மேசையின் மேல்புறத்தையாவது முற்றும் துடைக்கவேண்டும்.  ஆனால் துடுப்பு என்பது முயற்சியைக் குறிக்கிறது.  அது நட்டாற்றில் விட்டு நீங்காத ஒரு முயற்சி..  துடுப்பு எடுத்தால் கரைசேரும் வரை அதைப் பயன்படுத்தி நீரைக் கடத்திக் கரை சேரவேண்டும்.  பாதியில் விட்டால் முழுமை ஆகாத களங்களிலே துடை, துடுப்பு முதலிய சொற்கள் உலாவருதலைக் காணலாம்.

துடிப்புடன் செயலாற்றுவது என்பதும் ஒரு எழுச்சியுடன் விரைந்து செயலாற்றுதல் குறிக்கும்.

துட்டு என்ற பணம் குறிக்கும் சொல்லும் துடு என்ற முற்செலவுக் கருத்தையும் உடனுக்குடன் செல்லுதல் என்பதையும் ஒருசேரக் குறிக்கும்.

ஆகவே,  துடு என்ற அடிச்சொல் பொருத்தமாக  இவ்வாய்வுக்கு வருகிறது. ஒரு அழுந்திறுக்கி   ( rubber band )  போல அப்படியே பிடித்துக்கொள்கிறது.  செறிந்து பற்றுகிறது.

துடி என்னும் சொல்லின் முதலாகிய "து"  என்பதும்,  சிறிய இடையில் உடம்பின் மேல் இறுகப் பற்றிப் பொலிவதை நன்றாகவே குறிக்கிறது.  ஒட்டுதல், மென்மையுடன் தொடுதல் என்றும் பொருள்தரும். 

பகைவரை அழித்தாடும் கூத்து "துடிக்கூத்து"  என்பதும் பொருந்துவதே.  இதற்கு ஒரு பொருத்தமான சாத்திரமும் இருந்தது.

பகைவர்பால் எழுந்து செல்ல,  உதவிய படைஞர்  நிலை துடிநிலை.

வற்றிய நீரில் துடிக்கும் சிறுமீனும் நம் கண்முன் வந்துநிற்கிறது.

பழந்தமிழ் நாட்டில்,  போருக்குமுன் துடித்தாடி, பவைவீரர்களின் மறப்பண்பை வெளிக்கொணர்ந்தவன் துடியன் என்பதை இவ்வாய்வு  நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

பண்டைத் தமிழரின் நான்கு நிலங்களிலும் ஊடுருவிப் படைகளுக்குத் துடியன் துடிப்பினை ஊட்டினான்.  அதற்கு அவன் கண்டுபிடித்துப் பயன்படுத்தியதும் "துடி" என்றே போற்றலுற்றது.  துடு என்ற அடிச்சொல், இப்பொருளைத் தருகிறதென்பதை அறிந்து, அது நாலு நிலங்களிலும் முன்னெடுத்துச் செல்லப்பட்டதென்பதை தெளிவாகக் காண்க. அந்நிலங்களாவன:  குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் என்பன  ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின். 





ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

வேறு மதமானாலும் ஊரும் மொழியும்.

 இங்கு உள்ள படத்தை பாருங்கள்.  இவ்வீட்டினர் கிறித்துவ மதமாயினும் சீன பெருநாளையும் தவறாமல் கொண்டாடுகின்றனர்.

சீனப் பெருநாளில் பொம்மை  ---- சீனக்

கிறித்துவ-ரும் வைத்துக்  கொண்டாடும் உண்மை,

ஆன மதங்களோ வேறு  ---- ஆயின்

அகிலத்தில் இனம்-மொழி ஒன்றான வாறு.













வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

முன்வாழ்வைப் பின்பற்றும் இனிய புதுவாழ்வு.

 மறத்தலும் கூடுமோ மரஞ்செடி  கொடிகளை

அடுத்துமுன் அன்னவர் அடைந்துயர் வளவாழ்வு

அடுக்குயர் மாடியில் அகஞ்செலும்  நலத்திலும்

கொடுக்குபோல் பைஞ்செடிக் கொளுங்கலப்  பயிர்செய்வர்


அடுத்துமுன் அன்னவர் அடைந்துயர் வளவாழ்வு  ---

முன் இவர்கள் இருந்த இயற்கையை அடுத்த வளமான வாழ்வு;

அகஞ்செலும் -   மனம் ஆழ்ந்திருக்கும்.

நலத்திலும் -  வாழ்க்கை நலத்திலும் அல்லது உயர்விலும்

கொளுங்கலம் -   செடிவளர்க்கும் கலங்கள்

கொளும் -  கொள்ளும்.  தொகுத்தல்விகாரம்.:

கொடுக்குபோல்  -  முன்னைப் போக்கிலே போவதுபோல்


இக்கவி தொடுக்கபட்ட விதம்:  இரண்டாம் அடியின் நான்காம் சீரும்,  நாலாம் அடியின் நான் காம்சீரும், புளிமாங்காய்ச் சீர்களாகத் தொடுக்கபட்டன. மற்ற சீர்கள் ஆசிரியத்துக் கிசைந்த இயற்சீர்கள்,  ஆசிரிய அல்லது வெண்டளை. இக்கவியில் எழும் ஓசை. பிடிக்கிறதா பாருங்கள். பின்னூட்டம் இடவும். 

 


கண்டு மகிழ்க

.  மெய்ப்பு பின்

வியாழன், 17 பிப்ரவரி, 2022

முதியோர் இளைப்பாற வசதிகள்.

 முகமிகத்  திரைந்து  முடிநரை மிகுந்த

அகவையிற் பெரியோர் அமர்ந்திளைப்  பாற

நகுதரு சொற்களில் உரைதர மகிழ,

மிகுவல இரும்பில் இருக்கைகள் காண்க.


அடுக்கு மாடி வீட்டின தொகுதிகள்

அடித்தள வெற்றிடம் அனைத்திலும் உளவாம்

மடக்கியும் கால்களை மடித்திரு கைகளைத்  

துடிப்புறு சிறுபயிற் சிகளும் பெறுவரே.


காரை வடிப்பில் காண்பன பலவாம்

ஓரும் மரப்பல கையிலும்  நிலையல்

சீருடன் திகழும் சிங்கை நகர்தனில்

யாரும்  மகிழ வசதிகள் பலவே.



அருஞ்சொற்பொருள்

மிகுவல(ம்)  - மிகுந்த பலமுடைய

வீட்டின தொகுதிகள் -  வீடுகளையுடைய தொகுதிகள்.

காரை  -  சிமென்ட்.

வடிப்பில் --  வடித்தலில் ( செய்யப்படுவதைக் குறிக்கும்)

நிலையல் -  இருக்கும்

மெய்யெழுத்தெல்லாம் புள்ளியொடு நிலையல் என்ற தொடரில்

நிலையல் என்ற சொற்பயன்பாட்டினை அறிக.


கண்டு மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்


 




புதன், 16 பிப்ரவரி, 2022

மரியாதைராமன்

" எனபடுவது யாதெனின்" என்ற இருசொற்களையும் புணர்த்தினால்,  "எனப்படுவ   தியாதெனின்" என்று,  து> தி என மாறிவிடும்.  இது தமிழினியல்பு.  ஐரோப்பியப் பல்கலைக் கழகங்களில் படிக்கும் ஒரு மாணவி  "தியாதெனின்" என்ற சொல்லை அகரவரிசையில் தேடிக் காணாமல்  ஓர்  இணைய வலைத்தளத்திற்கு எழுதினார்.  தமிழ் எளிதான மொழியன்று என்பதுதான் நாம் இங்குக் கூறுவது. கொஞ்சக் காலம் தமிழுடன் நெருக்கம் கொண்டிருந்தாலன்றி இதுபோன்றவை எளிதில் புரிவதில்லை.

மேற்கண்ட புணர்ச்சியில் ஈற்று உகரம் இகரமாகிவிட்டது.  மிகவும் நுட்பமான ஒலிநூல் அறிவுடையோர் தமிழ்-  சமத்கிருத மொழிகளுடையோர்.

இப்போது மரியாதை என்ற சொல்லிலும் இத்தகு மாற்றம் உள்ளடங்கிக் கிடப்பதை அறியவேண்டும்.

மருவு, யாத்து, ஐ என்ற மூன்று துணிப்புகளா  னியன்றதே  மரியாதை என்னும் சொல். 

மருவுதல் என்பது வினைச்சொல்.   அதன் அடிச்சொல் மரு என்பது.

யாத்தல் என்பதாவது, கட்டுதல் என்பது.  யாத்து என்பது வினை எச்சம்.  இது இடைக்குறைந்து "யாது" என்று இச் சொல்லமைபில் வந்துள்ளது.  இது யாது என்ற வினாவன்று.

மரு + யாது + ஐ >  மரியாதை  ஆகிறது.

அதாவது, ஒரு விருந்தாளி வரும்போது,  கைகளால் அவரை மருவி  ( தழுவி ), யாத்து  ( கட்டிப்பிடித்து ), வருக என்பதே மரியாதை.  ஆணுக்கு ஆணும் பெண்ணுக்குப் பெண்ணுமாக இது நடைபெறும்.  

இத்தகைய வழக்கமும் தமிழரிடம் -  இந்தியரிடம் இருந்தது என்பதை இச்சொல் காட்டுகிறது.  இது பிறரிடமும் உள்ளது.

பிற்காலத்தில் இவ்வாறு அணைத்து வரவேற்றல் இன்றி வெறும் சொற்களால் "வாருங்கள்" என்று சொல்லிக் கைகூப்புதலையும் மரியாதை என்றனர்.  வணங்குதல் என்பது உடம்பையும் தலையையும் முன்பக்கலில் சாய்த்துத் தன் அன்பைத் தெரிவித்தல்.  இன்று சொல்லால் மட்டும் தெரிவித்தாலும் வணங்குதல் தான்.

பேச்சுவழக்கில் இதை "மருவாதை" என்போரும் உண்டு. இது திரிபு. இதை நீங்கள் விளக்கலாமே!

மரியாதை என்பதைப் சற்றுப் பேதமுறவும் விளக்கலாம். எல்லாம் சரிதான். சமத்கிருதம் பாலி முதலிய மொழிகளில் எச்சச் சொற்களினின்றும் சொல்லாக்கம் நிகழ்ந்துள்ளது அறிக.

மரியாதைராமன் என்பது, " மரியாதை அறா மன்" என்ற தொடரின் மரூஉ ஆகும். அதாவது மரியாதை அற்றுபோகாத மன்னவன் என்பது.  எப்போதும் மரியாதை வழுவாதவன் என்று கொண்டாடும் தொடர்.  அறாமன் என்பது ராமன் என்று திரிந்தது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.





திங்கள், 14 பிப்ரவரி, 2022

பாசிப்பயறு - முளை.

 

காசைச் செலவுசெய்து கார்மழையில் வண்டியேறி

ஆசைப் பயற்றுமுளை ஆம்காண ----கூசொளியில்

செம்மைச் செடிகாணும் சீர்மனைக்குள் செல்லாரே

தம்மகத்துக் காண்க தழைப்பு .


அருஞ்சொற்பொருள்:   ஆசைப் பயற்றுமுளை ஆம்   -- விரும்பும் பயற்றுமுளை ஆவதை.  இங்கு ஆவது என்றால்  முளைத்துச் செடியாய் ஆவது.   காண - ஆவதைக் காண என்று இசைக்க.  கூசு ஒளி -  ஒளி மிகும் மின் விளக்குகளால் கூசுவது.   செல்லாரே -  அங்குப் போகாதவர்கள்.  தம்மகத்து -  தம் வீட்டில்.   தழைப்பு  - செழித்து வளர்வது.  


ஒருசட்டி மண்ணில் இருசிறங்கை தூவிச்

சிறிதளவில் நீர்தன்னைச் சேர்க்க -- வருபயிரால்

பாசிப் பயற்றுமுளை பார்க்கும் பயன்பேறு

தேசத்தார் யார்க்கும் எளிது.


அருஞ்சொற்பொருள்:

இருசிறங்கை  -  இரண்டு கைம்மண்ணளவு.   வரு பயிரால் -  முளைத்து எழும் பயற்றுப் பயிரால். பயன் பேறு  --  (பார்க்கும் ) வாய்ப்பு பெறுதல்.  தேசத்தார் - பொதுமக்கள்.

[வெளியில் மழை.  ஆனால் காட்சிமனைக்குள் கண்கள் கூசும் ஒளி. பலபயிர்களையும் காசுகொடுத்துக் காணலாம்.   ஆனால் வீட்டுமுன்னே வேண்டிய செடிகளை சட்டிகளில் நட்டுவைத்தும் கண்டுமகிழலாம்.]


படம்:


இவை பாசிப்பயற்றுச் செடிகள்.


மீள்பார்வை: பின்னர்.


ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

நோய்த்தொற்றில் எடை கூடுதல்

நம் அன்பருக்கு உடலெடை கூடி முதுகு வலி வந்துவிட்டது. தொற்றுப் பரவலால் வெளியில் ஒன்றும் செய்ய இயலவில்லை. உங்கள்

ஆலோசனையை வழங்குங்கள் 


இக்கவிதை நடமாட்டக் குறைவினால் ஏற்படும் விளைவுகளை

முன்வைக்கின்றது.


 மகுடமுகி உலவுதொற்றில் மனையைப் பூட்டி

மக்கள்தொடர் பேதுமின்றி உட்கி டந்தேன்.

வெகுநலமே தந்திடுவீட்  டுணவி   னாலே

வீக்கமொத்த சதைபோட்டு உடல்க   னத்து

தகுபயிற்சி  ஒன்றுமின்றித் தவிக்கின் றேனே

தசைகொழுப்பு தணிபதற்கோ வசமி  ழந்தேன்

நகுபகடி செய்திடாது கருத்தை என்பால்

நல்லபடி  சொல்லிடுவீர் இல்லம் வெல்க!


உடலெடை குன்றவே  உண்டோ  மருந்து

படுகின்ற  என்புவலி  ஏறித்    -----  தொடர்ந்திடவே

யான்துன்பம்  கொண்டேனே  என்னதான் செய்வது

தான்தன்னில் தீராத  நோய்.


நீங்கள் எப்படிச் சமாளிக்கிறீர்கள். பின்னூட்டம் செய்யுங்கள்


பொருள்:  மகுடமுகி ---  கொரனா வைரஸ்.  

உட்கிடந்தேன் -  உள்ளே இருந்தேன்.

வீட்டுணவு -  வீட்டில் சமைத்துத் தரும் உணவு.   

கனத்து - எடை கூடி

வசமிழந்தேன் -  வழியில்லாமல் போய்விட்டேன் 

 நகுபகடி -  சிரித்துக் கேலி கிண்டல் (செய்யாமல். )

 என்பு - எலும்பு.  தான் தன்னில் - தானாகவே



நம் நேயருக்கு முதுகுவலி
எடை கூடிவிட்டது.
கொரனாவால் வீட்டைவிட்டு  வெளிப்பயிற்சிகள் செய்ய
இயலவில்லை.

மெய்ப்பு: 14022022

சனி, 12 பிப்ரவரி, 2022

கருத்துத் திருடர்கள்

 சிலர் மொழியாய்வு  செய்து புகழ்பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். பாவம் எதை ஆய்வு செய்வது என்று தெரியவில்லை. நாம் எழுதிய ஆய்வை எடுத்து , அதில் சில மாற்றங்களைச் செய்து வெளியிடுகிறார்கள். அப்புறம் அவர்களுக்கே அச்சமோ நாணமோ வந்து,  வெளியிட்ட தேதியை ஓர் இருவாரங்களுக்கு முன் போட்டுச் சரிப்படுத்திக்கொள்கிறார்கள். இதுபோன்ற ஒன்றை இன்று பார்க்க  நேர்ந்தது.

இத்துணை சூனியமானவர்களெல்லாம் ஏன் எழுதப் புறப்படவேண்டும்?

தேதியை மாற்றி எழுதினாலும் காவல் துறையினர் கண்டு பிடித்துவிடுவார்கள். ஆதலால் இதைச் செய்யக்கூடாது.

மடையன் என்பதும் ஒரு சொல்தான். அதையே ஆராய்ச்சி செய்வது நல்லதன்றோ?

Warning :  Things you delete are not completely erased. These can be retrieved in forensic examination by  law enforcement.  When something is published, there may be others who copy and keep it, with date of publication. When you change the date later, ..............!

வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

பகிஷ்கரித்தல் - விலக்குறுத்தல்.

விலக்கிவைத்தல், ஒதுக்கிவைத்தல், ஒதுக்கிவைத்துத் தரம்தாழ்த்துதல் என்றெல்லாம் பேச்சுவழக்கில் பொருள்தருவது --  பகிஷ்கரித்தல் என்னும் என்னும் வினைச்சொல். சங்கதம் என்று இதைக் கருதலாம்,  இச்சொல்லில் "  ஷ்  " வந்திருத்தலே அதற்குக்  காரணமாகும். 

ஆனால் " ஷ் " வந்துவிட்டாலே அது சங்கதம் ஆகிவிடாது.   நம் புலவர்கள் சங்கதம் என்று சொல்வது "  சமத்கிருத"  மொழியை.

மனத்தை ஒன்றிலோ அல்லது ஆடவனொருவன்பாலோ  இடுகின்றோம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.  அதற்கு ஒரு புதுச்சொல் வேண்டுமானால்,  இடு+ அம் > இட்டம் > இஷ்டம் என்ற சொல்லைப் படைத்துக்கொள்ளலாம். ஊர்மக்கள் இதை இசுட்டம், இஸ்டம், இஷ்டம் , [ (  அயலொலி நீக்கி ) :  இட்டம் ( இது புலவர் அமைப்புச் சொல்)]  எனப்பலவாறு ஒலித்து வழங்குவர்.  இந்திய விடுதலைக்குப் பிறகு மக்கள் படிப்பு மேன்மை அடைந்துள்ளபடியால்,  சில வடிவங்கள் மறைந்திருக்கவேண்டும்.

இன்னொரு சொல்லும் இருந்தது.   இடு>  இடுச்சி(த்தல்) > இச்சி> இச்சித்தல் என்பது.  அதுவும் ஒருபுறம் இருக்கிறது.  இங்கு டு என்ற கடின ஒலி விலக்குண்டது.  இச்சொல்லிலும் மனம் இடுதலே அடிப்படைக் கருத்து.  ஒரு டு-வை எடுத்துவிட்டால்  ஏதோ சிங்கியாங் நிலப்பகுதியிலிருந்து வந்த புதுச்சொல் போல இது  புலவனையும்  மருட்டவல்ல சொல்.---- அமைப்புபற்றி ஆய்கின்றபொழுது.

இத்தன்மைபோல்,   "பகிஷ்"  என்பதில்வரும் ஷ் ஒரு வெற்றுவேட்டுதான்.

பகு + இஷ் + கு + ஆரம் என்று பிரிக்கவும்.  அதாவது வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்று நம் காரியங்களில் ஈடுபாடு கொண்டவர்களைப் பிரித்துவிட்டால்,  --  இங்கு காட்டப்பட்ட சொல்லையே பயன்படுத்திச் சொல்வதானால் :  " பகுத்துவிட்டால் ",    அத்தகைய வேண்டாதவர்களை ஒரு புறத்தே  இட்டு வைத்துவிடுவோம்.  கு என்பது சேர்தல் அல்லது அடைதல் குறிக்கும் இடைநிலை.  இது ஒரு வேற்றுமை உருபாகவும் வேறிடங்களில் இருக்கும்.  இங்கு அதற்கு அந்த வேலை இல்லை.  ஒரு சேர்ப்பு அல்லது இணைப்பு குறிக்கும். மேற்கண்டவாறு பகுக்கப்பட்டோர், ஒன்றாகுவர் அல்லது ஒன்றாக்கி இடப்படுவர்.  இப்போது, பகு, இடு, கு எல்லாம் விளக்கிவிட்டோம். ஆரம் என்பது நிறைவு என்று பொருள்படும் ஒரு விகுதி அல்லது பின்னொட்டு. இப்போது பாருங்கள்:

பகு+ இடு + கு + ஆரம் >  பகிடுகாரம்,  இதை மெலிவு செய்ய, ஒரு ஷ்.  பகி(ஷ்)காரம் >  பகிஷ்காரம் ஆகிவிட்டது.  பகுத்து ஒதுக்கப்பட்டோர் இந்தச் சொல்லுக்கு ஏற்றவர்கள் ஆகிவிடுகின்றனர்.

எழுதவேண்டும் என்று யாம் நினைத்த சில, சுருக்கம் கருதி, எழுதவில்லை. இவ்வளவில் நிறுத்தம் செய்வோம்.

நாம் எதையும் இயன்றவாறு பகுக்கலாம்.  கோயிலில் கிட்டிய ஒரு வடையை இரண்டாகக் கிள்ளி,  அருகில் நிற்கும் பையனுக்கு ஒரு பங்கு கொடுத்துவிட்டு, மிச்சத்தை வாயில் போட்டுக்கொள்வதும் "பகுத்தல்"தான்.  ஆனால்  இந்தப் பகுத்தல் வினை,  நிலத்தில் பதுங்குவதற்குப் பள்ளம் தோண்டி அதில் பதுங்கியவர்கள் இன்னும் நிலவேலை செய்தவர்கள் அமைத்த சொல்லென்று நாம் அறிந்துகொள்ளலாம்.  பள்ளம் என்ற சொல்லில் அடிச்சொல் பள்.  ஒரு பள்ளம் வெட்டி, நிலத்தை இரு பாகமாக்க, அல்லது தேவைக்கு ஒரு குழி உண்டாக்க ,  "பள்குதல்"  செய்வர்.  பள்ளம் உண்டாக்கி, இருகூறு செய்வர். அல்லது பள்ளத்தில் பதுங்கிக்கொள்வர்.  ( படையணியினர்,  திருடர்,  வயல்வேலைகளில் ஈடுபடுவோர் முதலியோர் இது செய்வர். )  இச்சொல்,  பழ்குதல் என்றும் உலவியதுண்டு.

பள் > பள்ளம்.

பள் >  பள்கு >  பள்குதல்.

பள்குதல் >  ( ள் இடைக்குறைந்து ) பகுதல் > பகுத்தல் ( பிறவினை).

பழ்கு > பகு எனினுமாம். இடைக்குறை.

நேரம் கிட்டினால் இதை இன்னோர் இடுகையில் ஆழ்ந்து ஆய்வு செய்யலாம்.

பகு இடு கு ஆரம் என்பதை ஓரளவு விளக்கமாக்கியுள்ளோம். பகிடுகாரம்.

பகிடி, பகடி, பகிடிக்கதை ---  இவற்றையும் விளக்க நேரமிருக்குமா என்று பார்க்கலாம்.

அறிக மகிழ்க.   

மெய்ப்பு பின்

[அம்மாவுடன் மருத்துவமனைக்குச் சென்று வந்தபின், நேற்றிலிருந்து சளி, காய்ச்சல், தும்மல் உள்ளன. எழுத்துபிழைகள் இருந்தால் திருத்திக்கொண்டு வாசிக்கவும்  நமக்கு உதவும் திருமதி ஷீபா  அவர்களுக்கும் உடல்நலம் சற்று குன்றியுள்ளமையால் ஓய்வில் உள்ளார். நன்றி .]


புதன், 9 பிப்ரவரி, 2022

திங்கள் முதல் ஞாயிறு வரை!

[  அன்பர் ஒருவர் ஒவ்வொரு நாளும் வாழ்த்துச்செய்தி அனுப்புவார். நானும் அவருக்கு பதிலனுப்புவேன்.  என் பதில்களில் இருந்த சொற்களைக் கோவை செய்து,  இங்கு ஒரு கவிதைபோல் வடித்துள்ளேன். வாசித்து மகிழ்க. அழித்துவிடலாம் என்று எண்ணியபோது அதிலொரு கவி இன்பம் ஒளிந்துகொண்டிருப்பது தெரிந்தது.  அழிக்காமல் இவ்வாறு எழுதினேன்.  நன்றி ]



திருவெலாம் வரவாய் ஆக்கும்

திங்கள்தித் திக்கும் நாளே!

செல்வமே சேர்க்கும் செவ்வாய்

செவ்வனே நிகழும் யாவும். 

புதுமைக்குப் புதுமை செய்யும்

புதன்பி(ன்)னே வியாழன் வந்து,

வியப்புற இனிமை சேர்க்கும்

வெள்ளியால் விரிந்த நன்மை!


மகிழ்ச்சியோ மலையாய் ஆகும்.

சனியினால் தனித்த வெற்றி.

சோதனை மாறக் கண்டு

சாதனை யாகக் கொள்வீர்

ஞாயிறு தன்னில் நீங்கள்

நாயக  மாய்ச்சொ  லிப்பீர்/

வழிவழி முழுமை பெற்று

வாழ்வெலாம் வெற்றி  வாழ்வே.




தாங்கலாக வைத்த குத்துக்கல் - அதற்குப் பெயர்.

கட்டடத்தைக் கட்டிக்கொண்டு இருக்கின்ற போது,  அங்குப் பணிபுரியும் கட்டுமான வல்லுநர்,  கரைத்து ஊற்றி இறுக்கிய ஒரு தட்டுக்குத் தாங்கலாக,  அல்லது கட்டுமானத்தை உறுதிப்படுத்து மாறு,  ஒரு செங்குத்தான கல்லை நட்டு நிறுத்துகிறார்.  கட்டுமானத்தில் கையாளப்பெறும் பலவேறு திறவேலைப்பாடுகளில் இதுவும் ஒன்று.  மற்ற திறங்களுக்கெல்லாம் நமக்குப் பெயர் தெரியவில்லை.  அதற்குக் காரணம், நாம் அந்தத் தொழிலில் இல்லை. இந்தக் கல்நாட்டுக்கு மட்டும் எப்படியோ நமக்குப் பெயர் தெரிந்து,  அதை இப்போது ஆராயப் புகும் "பாக்கியத்தை" ( நற்பாகத்தை) நாம் இன்று பெற்றிருக்கிறோம்.

உலகில் எல்லாம் தெரிந்தவன் எவனுமில்லை. நமக்குத் தெரியாத ஒன்றுக்கு அருகில் உள்ளோன் விடைகூற இயல்பவனானால், அந்த நேரத்தில் நமக்குப் பேராசிரியன் அவனே  ஆவான்.  அவனுக்கு நாம் நன்றி நவிலக் கடன் கொண்டுள்ளோம்  அதனால்தான் "கல்லாதது உலகளவு" என்றாள் நம் ஒளவைப் பாட்டி.

ஒரு செங்கல்லைச் செங்குத்தாக நிறுத்தி, மேலிருப்பதைத் தாங்குமாறு அப்பணியாளன் நிறுத்துகிறான்

நாம் அதற்குப் பெயர் வைக்கவேண்டுமென்றால்:

குத்து + தாங்கல் > குத்துத்தாங்கல் என்று சொல்வோம். அதில் மனநிறைவும் கொள்வோம்.

இப்படி வைத்த பெயர், நாளடைவில் திரிந்தது.

குத்து + தாங்கல் > குத்துத்தாங்கல் >  குத்தாங்கல்   ஆயிற்று.

இச்சொல் திரிந்தமைந்ததற்குக் காரணம்,   நாவிற்கு ஒலித்தடை ஏற்படுத்துதல்போல் இச்சொல் வருவதால்,  அதை அகற்றுமுகத்தான்,  "துத்" என்ற அசை விலக்குறுகின்றது.

இத்தகைய -  மக்களால் நிறுவப்பட்ட -  ஒலித்திறச் சொற்களை நாம் பாராட்டாமல் இருக்கமுடியாது  எந்தச் சொல்லும் திரிபே அடையாமல், எல்லோரும் எழுதியவையே சரி என்று பேசிக்கொண்டிருந்திருந்தால், தமிழில் திரிபுகள் ஏற்பாடாமலே உலகம் சென்றிருக்கும்.  கன்னடம், களிதெலுங்கு, கவின்மலையாளமென்ற பல்வேறு மொழிகள் ஏற்படாமலே இருந்திருக்கும்.  சீனாவில்கூடக் கிளைமொழிகள் என்பவை ஏற்படாமலே காலம் ஓடியிருக்கும்;  சாவகத்தீவில் பல மொழிக்கிளைகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை.  ஐரோப்பா முழுமைக்கும் ஒரே மொழிதான் கோலோச்சி யிருக்கும். உலகின் உண்மை நடப்பு அப்ப்டி இல்லை.  எனவே சொல் திரிபு என்பது நிகழ்ந்தமை ஒரு வியப்பன்று.  நிகழாமை இருப்பின் அதுவே வியப்பு என்பதை நாம் உணர்ந்துகொள்கின்றோம்.

தொல்காப்பியர் கலத்திலே பல திரிசொற்கள் இருந்தன.   ஆகவே அவ்வறிஞன்  இயற் சொல்லை அடுத்து திரிசொல்லை ஓதினான்.  திரிசொற்கள் பல திரட்டித் தன்னகத்து அடைந்துவைத்துக்கொண்ட மொழி பின்னாளில் சமத்கிருதமாகிற்று.  சில திரிபுகள் தமிழிலே தங்கிவிட்டன. மொழியை வளம்செய்தன.

மக + கள் >  மக்கள் என்று எப்படி வரலாம்?    மகக்கள் என்றன்றோ வரவேண்டும்?  இடையிலிருந்த ஒரு ககரம் எப்படி வீழ்ந்தது.  பெரிய வழு, விண்போல் மிகுந்த பெருந்தவறு என்று குதிக்கலாம். ஆனால் ஒன்றும் செய்ய முடியாது. நாமெல்ல்லாம் இந்த உலகின் முகத்திலிருந்து காணாமல் கரைந்துபோன பின்பும், இச்சொற்கள் இருக்கும், நாம் இருப்போமா?  குத்தாங்கல் என்பதும் அதுபோலும் ஓர் அமைப்பே ஆகும்.  அதுவே விதியாகிவிட்டது என்றும் ஓதலாம்,. பல கிட்டுமானால்.  இதுபோல் வேறு குறுக்கல்கள் இல்லை என்று நாமே மகிழ்ந்திருந்துவிடக் கூடாது.  பொறுமையாகத் தேடிப்பார்த்து இருந்தால் அதுவே விதியாகவோ தலைவிதியாகலோ ஆகிவிட்டதென்று கொழுந்துநீர் ( டீ) கிடைத்தால் ஆனந்தம் அடையவேண்டியதுதான். 

பக்கு என்பது பகுதி என்னும் பொருள்தரும் சொல்.  குடுக்கை என்பது ஒன்றாகத் தைக்கப்பட்ட , தோளில் மாட்டும் பைகள்  தொகுதி.

பக்கு + குடுக்கை >   பக்குடுக்கை என்று மாறிற்று. ஒரு குகரம் தொலைந்து, பக்குடுக்கை ஆயிற்று.

குடு >  குடவு;

குடு > குடா  ( குடாக்கடல் )

குடு > குடை

குடு > குடல்

குடு > குடுக்கை1

1என்ன தெரிந்துகொள்கின்றோம்?  குடுக்கை என்பது என்ன பொருள்தரும் சொல்?

குத்து + ஆம் + கல் > குத்தாங்கல் என்று சொல்லி இரு பிறப்பியாகக் கொள்ளலாம், தப்பிக்கலாம்.

இன்னொரு நாள் தொடர்வோம்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்


செவ்வாய், 8 பிப்ரவரி, 2022

சர்வம் - சருவம் என்பது

"ஆல்" என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில் "எல்லாம்"  ( எல்லா)  என்ற சொல் பொருளொற்றுமை உடையதாய் உள்ளது. அதுமட்டுமின்றி, ஓரளவு ஒலியொற்றுமை உடையதாயும் இருக்கின்றது.  தமிழில் பல சொற்களில் இவ்வாறு ஒற்றுமை காணமுடிவதால், இதனை ஏனை ஐரோப்பிய மொழிகளோடும் ஒப்பு நோக்கி.  சமத்கிருதம்போல் தமிழும் ஓர் இந்தோ ஐரோப்பிய மொழி என்ற முடிவுக்கு வரலாமெனினும்,  ஐரோப்பிய ஆய்வாளர்கள் இதனில் நாட்டம் செலுத்தவில்லை.  ஓர் இருபது ஆண்டுகட்குமுன் இதைச் சிலர் எழுதிவந்தனர் என்றாலும், இப்போது அவர்கள் சற்று அசதி அடைந்துவிட்டார்கள் என்று சொல்வது உண்மையே ஆகும்.

எல்லாம் என்ற சொல்லின் பொருளில் எது எதுவெல்லாம் உள்ளடங்கும் என்பது இடம் பொருள் என்பனவற்றை வைத்தே தீர்மானிக்க வேண்டும். " எல்லாம் சாப்பிட்டுவிடு"  என்று ஒரு தாய் பிள்ளையிடம் சொல்வாளாயின்,  அது தட்டில் அல்லது இலையில் உள்ள எல்லாம் என்றே பொருள்படும்.  " உலகில் உள்ள எல்லாம் " என்று பொருள்படமாட்டாது.  அதுபோலவே, சர்வம் என்ற சொல் வரும்போதும், எல்லாம் என்று பொருள்தருவதும் ஓர் எல்லைக்கு உட்பட்டதாகவே இருக்கும்.

சருவுதல் என்ற வினைக்கு என்ன பொருளென்றால்:  பழகுதல் என்பதே ஆகும். எனவே சருவம் என்பது முதலில் ஒருவன் தான் பழகியவற்றையே குறித்தது. ஆதலின் சருவமும் பயன் அற்றது என்று சொன்னால், தாம் பழகிய அனைத்தும் பயனின்றி முடிந்தது என்பதுதான் பொருள்.  தமக்குப் பழக்கமற்றதையோ தான் அறிந்திராதவற்றையோ பெரும்பாலும் பேசுபவர் குறிப்பதில்லை.  இன்னும் சொல்வதென்றால்  எல்லாம் என்பதும் இடம் பொருள் ஆகியவற்றுக்கு ஒப்பவே பொருள் உணர்த்தும்.

சருவு என்ற வினையினின்று உண்டான சரி என்ற சொல்லும் "எல்லாம்" என்ற பொருளைக் குறிக்கக்கூடும்.  பலகாரமெல்லாம் சரியாகிப் போய்விட்டாது  என்றால் அது முடிந்துவிட்டது, எல்லாம் தீர்ந்துவிட்டது என்று பொருள். எல்லாம் என்ற சொல்லைப் பயன்படுத்தாமலே,  சரியாகிவிட்டது,   ஆகிவிட்டது என்றெல்லாம் சொற்களைப் பயன்படுத்தி  "அனைத்தும்" என்ற பொருளைத் தமிழில் உணர்த்தும் திறனைப் பேச்சுத்தமிழ் வழங்குவது அறிந்து இன்புறத் தக்கது.

ஆகவே,  சருவு என்பதன் அடிச்சொல்லாகிய சரு என்பதில் தோன்றிய சரி என்பதை நினைவிலிருத்திக் கொள்ளுங்கள்.

விழாவுக்குச் சமைத்த உணவுக்கும் வந்த கூட்டத்துக்கும் சரியாக முடிந்தது என்றால் எல்லாம் தீர்ந்துவிட்டதென்ற பொருளையே முன்வைக்கின்றனர். சிலவேளைகளில் எல்லாம் என்ற சொல்லைப் பயன்படுத்துவது பணிவுக்குறைவாகக் கருதப்படுதலும் கூடும்.  ஆகவே இடமறிந்து சொற்களைக் கையாளுதல் வேண்டும்.

சருவுதல் என்பதிலிருந்து வந்த "சருவம்" என்பதும் முதலில் அறிந்த அனைத்தும் என்று குறித்து, பிற்காலத்தில் பொருள் விரிவு கொண்டதென்பது தெளிவாகிறது.  சருவம் என்பது இப்போது சர்வம் என்ற வடிவில் உலவும்.

தேசம் என்ற சொல்லும் சங்க காலத்தில் தேஎம் என்றிருந்து பின் தேயம் என்றாகி,  யகர சகரப் போலியால் தேசம் ஆனது.  இப்போது "சர்வதேசம்" என்பது சமத்கிருதம் என்று கருதபடுவதுடன்,  அருகியே வழங்குகிறது.

சரு என்பதன் மூலம் அரு என்பது.   அரு > சரு.   அருகில் உள்ள என்று பொருள்தரும்  அரு  பின் சரு ஆனதில்,  அருகில் இருத்தலே பழக்கம் உடைத்தாதல் என்பதினால் மேல் சருவுதல் என்ற சொற்பொருளுடன் ஒப்புமை உடையதாதலைக் கண்டுகொள்க.

வருத்தகம் (  பொருள்களைத் தருவித்தல் அல்லது வருவித்தல் ) என்பதனால் வந்த சொல், பின் வர்த்தகம் என்று திரிந்து பொருளும் ஏற்றுமதி இறக்குமதி என இரண்டையும் குறித்தது.  அதுபோலவே சருவம் என்பதும் சர்வம் என்று திரிந்து, பொருளும் விரிவுற்றது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்

திங்கள், 7 பிப்ரவரி, 2022

வீட்டுச் செயல்பாடுகள்

 கோயில்குளம் போய்வருவாள் பாட்டி யம்மா,

கும்பிடுமப் போதினிலே குதூக லந்தான்!

நோயினொரு தொற்றுமிக்கு வந்த காலை,

நுடங்கிவிட்ட நடபடிகள் அடங்கா எண்ணில்,

வாயிலையே திறந்துவைத்தே உள்ளுக் குள்ளே,

வந்துவந்து  பார்த்துப்போம்  நடமாட் டத்தை

மேய ஒரு எழுத்தாண்மைச் செல்வி தன்னை

மேதினியில் காண்கதிரு விளைத்த வாறே.


குதூகலம் -  மகிழ்வு

நடபடிகள் -  செயல்பாடுகள்

நுடங்கி -  முடங்கி

மேதினி - உலகம்

திருவிளைத்த -  மேலான நடபடிக்கைகள் உண்டாக்கிய


ம்


சனி, 5 பிப்ரவரி, 2022

ஷோக்கு, சோக்கு என்ற சொற்கள்.

ஷோக் அல்லது ஷோக்கு என்ற சொல் உருது மொழிச்சொல் என்று நினைத்தனர். அவ்வாறே அது இருக்கலாம்.  ஒரு சொல் உருதுச் சொல்லாக இருந்தால் என்ன, அல்லது இன்னொரு மொழியின் சொல்லாயின் என்ன? எந்த மொழியாகவும் இருக்கலாம்.

பக்கத்தில் வாழ்வோர் பேசும் மொழியில் நம் மொழியில் உள்ளதுபோலவே ஒலிக்கும் ஒரு சொல்லிருந்து,  இரண்டிலும் ஓரளவு பொருள் அணிமை இருந்துவிட்டால்,  சிலவேளைகளில குழப்பம் ஏற்படலாம். இது தமிழ் அல்லது இது உருது என்று வாக்குவாதமும் ஏற்படக்கூடும்.  இவைபோல்வன, ஏறத்தாழ ஒரே சொற்களாகவோ வெவ்வேறு சொற்களாக இருக்கலாம்.  ஆய்ந்து காணுதலே சிறிது ஒளிதரும் செயலாகும். 

ஆய்வின் முன்:

ஷோக்கு அல்லது ஷோக் என்பது உருதுவாக இருக்கலாம்.  இது ஆடம்பரம் செய்தல் என்று பொருள்தரும் என்பர்.  இது உருதுவில் எப்படி வந்ததென்பது தெரியவில்லை.  "காட்டிக்கொள்ளுதல் " எனற்பால பொருள்தரும் "show" என்பதன் திரிபாக இருக்கலாம்.  திரிபுகள் முதல்வடிவத்திலிருந்து சற்றே வேறுபட்டுமிருக்கலாம்.

ஆய்வு

Show என்ற ஆங்கிலச் சொல்லும்,  கு என்ற தமிழ் உருபும் இணைந்து, " ஷோவுக்கு"ப் பண்ணுகிறான் என்ற கலவையானது,   ஒரு சொன்னீர்மை அடைந்து  " ஷோக்கு" என்று வந்தது என்றே எம் ஆய்வில் தெரிகிறது. உருது மொழிக்கு இது சென்றேறிற்று என்பதே பொருந்துவது.

ஷோ > ஷோவுக்கு>  ஷோக்கு.   [ கலவைச்சொல்: "வு" இடைக்குறை]

முடிவு: இது கலவைச்சொல். (hybrid word).

இது வேறு சொல்:  சோக்கு.

சொக்குதல் என்ற வினை,  காதலினால் மயங்குதல் என்று பொருள்தருவது.  இதிலிருந்து சொக்கன் என்ற சொல்லும் வந்துள்ளது.  சொக்கத்தாண்டவம்,  சொக்கன்சம்பா,  சொக்குப்பொடி என்றெல்லாம் சொல்பயன்பாடுகள் தமிழ்நாட்டில் உள்ளபடியால், சொக்கு > சொக்கன் என்ற சொல் வடிவம் தமிழினது என்று முடிபுசெய்யலாம். சொக்கத்தங்கம், சொக்கப்பனை  என்ற சொற்புழக்கத்தால்  சொக்கம் என்பது செம்மையும் குறிக்கக்கூடும்.  செம் என்ற செம்மை குறிக்கும் சொல், சொம் என்றும் திரியும். சொம்> சொக்கு> சொக்கம் என்று வரும்.  சொம்> சோம்> சோமன் என்பன காண்க.  செம் என்பதனடி வந்த செம்பு என்பதைச் சொம்பு என்பதும் உண்டு. சொம்பு என்பது அழகு என்றும் பொருள்தருவது.

சொ என்பது செ, செம் என்பவற்றின் திரிபு எனக்கொண்டு, அழகு என்றால், சொக்குதல் என்பது அழகிய பொன்னிறம் கண்டு மயங்குதல் என்பது பொருத்தமாகிறது.  சொக்குதல் என்பது மயங்குதல், நிறத்தழகால் மயங்குதல் என்று பொருள்விரிய இயலுகின்றது.  ஆகவே செம்மை, சிவப்பு, சொ> சொக்கம் என்பவை தொடர்புடையவை ஆகும்.

இவற்றை இங்கு தொட்டுச்செல்கிறோம். யாம் நோக்க விழைந்தது சோக்கு என்பதே. சொக்குதல் வினை, முதனிலை நீண்டு, சோக்கு என்று திரியும்.  இது படு > பாடு ( படு> பாடு)  என்பது போல்வதே ஆகும்.  ஆகவே சோக்கு என்பது முதனிலைத் திரிபுத் தொழிற்பெயராக,  காதல்மயக்கினைக் குறிக்கும் என்பது காண்க.

CONCLUSION

Our research shows that "ஷோக்கு"  comes from  show+கு  >  ஷோக்கு and therefore is a hybrid word. It also shows the other word சோக்கு is a noun that emanates from சொக்கு.(தல்).  Thus சொக்கு> சோக்கு  is formed from the verb and is "முதனிலை திரிந்த தொழிற்பெயர்". These words are  homonyms. At the end of this research we have reached a conclusion and we are now certain.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.


வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

நகரனைத்தும் போற்றத்தக்க நல்லழகுச் செடிகள்


 அன்பின் பிணைப்போதான்  ஆர்வளம் சேர்செடிகள்

ஒன்றின் உடல்தன்னை ஒன்றுபற்றி  ----  மென்குழைவில்

தோய்ந்திவ் வுலகின்பம் துய்த்தெழுந்து   தோன்றின

ஆய்ந்துணரா அன்புத்  திறம்.


இதன்பொருள்:  ஆர்வளம் சேர்செடிகள்  -   நல்ல வளமுடன் மேலெழும் இந்தச் செடிகள்,   அன்பின் பிணைப்போ --- அன்பின் பிணைப்பையோ காட்டுகின்றன?    ----  மென் குழைவில்  - மென்மையாக மனம் குழைவினால்,  ஒன்றின் உடல்தன்னை ஒன்றுபற்றி  ---  கட்டிப்பிடித்துக் கொண்டது போல,  தோய்ந்து --  ஆழ்ந்து,  இவ்வுலகின்பம் துய்த்து எழுந்து ---  பற்றின் காரணமாய் வரும் இவ்வுலகின் உடலின்பம் பெறுவதுபோல்,   தோன்றின -  அப்படிக் காட்சி அளிக்கின்றன,  ( இது)   ஆய்ந்துணரா -   ஆராய்ச்சி செய்து உணரவியலாத, அன்புத் திறம் -  அன்பின் வந்த வன்மை.




குவைத்தொட்டி  மூடி  குறுகும் இடத்தில்

நவைதீர்ந்த நல்லழகாய் நட்டார் ---- இவைசீர்த்த

தூயநக  ருக்குத் துளிகவின் சேர்த்தன

மேய நலச்சித்தம்   மேல். 

இதன் பொருள்: குவைத்தொட்டி மூடி(க்குக்)  குறுகும் இடத்தில் -  அடுக்குமாடி வீட்டில் குப்பை கொட்டும் வீழ்பாதையின் மூடி இருக்கும் இடத்தில்,  நவைதீர்ந்த நல்லழகாய் நட்டார் --  குற்றமொன்றும் இல்லாத இனிய அழகினைச் சேர்க்கும் பொருட்டு, இச்செடிகளை நட்டுவைத்தனர்;   இவை -  இவ்வாறு அழகுறுத்துதலானது,  தூய நகருக்கு -  உலகின் மிக்கத் தூய்மையான நகரென்று பெயரெடுத்த சிங்கப்பூருக்கு,   துளி கவின் -  ஒரு சிறு திவலை போலும் அழகையாவது சேர்த்துள்ளன,  மேய -  மேற்கொண்ட,    நலச்சித்தம் -  நல்ல சிந்தனை,  மேல் - மிகவும உயர்ந்தது ஆகும்.

மூடிக்கு :  இது மூடி என்று வந்தது,     குறுகுதல் - சென்று இணைதல் என்னும் கருத்து.  

மூடி குறுகும்  -  மூடி குறுகும் என்பது  வலி மிகவில்லை, காரணம் " மூடிக் குறுகும்" என்றால் பொருள் வேறுபடும்.   மூடியின்பால் குறுகும் எனினும் ஆகும். எனின், இன் , பால் என்பன தொக்கி நின்றன.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

இப்பாடல்களை அலகிட்டு நோக்குக.  செப்பலோசையைச் சரிபார்ப்பது இன்னும் நடைபெறவில்லை. வழுவின் தெரிவிக்கவும். 



வியாழன், 3 பிப்ரவரி, 2022

சீராட்டும் ஐயப்பன்

 ஐயப்ப சாமியைக் கும்பிடுவாய் --- பல

அன்றே நலம்வரும் நம்பிடுவாய்.


கோயிலானாலும் குடியிருப்பானாலும்

கும்பிடுவாய் நம் ஐயப்பனை!

ஆயிஅப்பன் பிள்ளை  குட்டிகள்

அத்தனை பேரையும் காப்பாத்துவான்,

மாயமும் இல்லே மந்திரம் இல்லே

மனத்திலே வைத்தாய் அன்பதனால்

தாயின்நாட்டில் மலைக்குப் போய்வர

தடையிருந்தால் வீட்டில் தாள்பணிவாய்.


மலையில் பார்த்தாலும் அழகானவன்

ஊரில் பார்த்தாலும் அழகானவன்

சிலையில் பார்த்தாலும் அழகானவன்---- உன்னைச்

சின்னப் பிள்ளைபோல் சீராட்டுவான்.





சிலையில் இருப்பதோர் அழகு ---  அதைச்

சிந்தித்து  அடங்கிச் செவ்வனே பழகு..


( எந்த வீட்டுச் சிலை என்று தெரியவில்லை.

எங்கிருந்தாலும் ஐயப்பனே.)


தாயின் நாட்டில் -  தாயின் இன் நாட்டில் :  தாய் பிறந்த இனிய நாட்டில்.

  

புதன், 2 பிப்ரவரி, 2022

அடுக்குமாடி வீட்டிலும் பசுமை



 


அடுக்கு மாடி வீட்டினில் வாழ்பவர்கள் ----   அவை

விடுத்தே  எங்கும் செல்லுதற் காவதில்லார்,

ஒடுங்கி  ஆங்கே உள்கிடப்  பாரெனினும்---- சட்டிச்

செடிகள் வைத்துச் சீர்பெறற்  கானவரே.


சட்டிச் செடிகள் பட்டென வளர்ந்தனவே ----   தம்மில்

கட்டிப் பிடித்து  நிற்புறும் நெருக்கமுடன்,

ஒட்டிப்  பசுமை  உற்றுநிற் கிறபடியால் --- காண்மனம்

எட்டிப் பிடிக்கும் எல்லையை மகிழ்வினிலே. 


பொருள்:

விடுத்து -  விட்டு நீங்கி 

செல்லுதற்காவது இல்லார் --  செல்ல முடியும் நிலைமை இல்லாதவர்.

ஒடுங்கி உள்கிடப்பார் ---  அந்த வீடுகளுக்குள் நடமாட்டமின்றி இருப்பவர்கள்

பட்டென -  பட்டுத் துணி போல

நிற்பு - நிற்கும் நிலை

உறும் -  அடைகின்ற 

மகிழ்வினிலே -  களிப்பின்மூலமாக.

இது ஆசிரியத்தளை கொண்டு எழுதப்பட்டுள்ளது. தனிச்சொற்கள்

வந்துள்ளன.  வெண்டளை விலக்கப்படவில்லை.









காலை எழுந்தவுடன் உள்ளக் கனிவுடனே

சோலைப்  பசுமைதனைச் சொந்த  அகத்ததன்முன்

வேலை  அழுத்தமெனும் வேண்டாத் துயரமில்லா

மாலைச் சரமகிழ்வை மாந்தத்  தருவனமே. 


பொருள்:

அகத்ததன்முன் ----  வீட்டின் முன்பக்கத்தில்

வேலை அழுத்தம்  - -- நீங்கள் செய்துமுடிக்கும்வரை உங்களை வருத்தும்

சோலிகளின் சுமை.

மாலைச் சர மகிழ்வை --- பூமாலை  அடுத்தடுத்துத் தொடுக்கப்பட்டுக்

காட்சிதரும் களிப்பைப் குறிக்கும் தொடர்.

தரு -  தருகின்ற

வனமே -  பசுந்தோட்டம் ஆகும்.


இது செப்பலோசை  தழுவி வெண்டளையில் பாடப்பெற்றுள்ளது.

மாந்தத் தருவனமே என்பதை   மாந்து என்று நிறுத்தினால் ,  இது இன்னிசை

வெண்பா போல் சென்று முடியும்.  ஆனால் துள்ளலோசை பிறக்க 

முடிந்துள்ளது. இது  சீர்கள் நிரலால் எழுகிறது.






செடிச்சட்டிகளின் படம்.

அறிவீர் மகிழ்வீர்.

மீள்பார்வை பின்னர்.