சனி, 31 ஜூலை, 2021

காக்கைபாடினி பெயர் எப்படி வந்தது?

 காக்கைபாடினி என்ற பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட புலவர்கள் இருந்திருக்கிறார்கள் என்று ஆய்வாளர்கள் சிலர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.  இருவர் என்றே வைத்துக்கொள்வோம். இதுபோலும் கருத்துக்களை மறுதலிப்பது தேவையில்லை. இவ்வாறே வைத்துக்கொண்டு யாம் சொல்லவந்ததைச் சொல்லி முடிப்போம்.

காக்கை என்பது ஒரு பறவையின் பெயர். ஆனால் காத்தல் என்ற வினைப்பகுதியை எடுத்து,   அதில் கை என்ற தொழிற்பெயர் விகுதியைச் சேர்ப்போம்.  கா+ கை = காக்கை என்றே அதுவும் வரும்,  வரவே, அதற்குக் காத்தல் என்பதே பொருளாகும். ஆதலின், எதையோ ஒன்றைக் காப்பதற்காகவே பாடினவர் என்ற பொருள் இப்பெயரிலிருந்து வெளிப்படுகின்றது.

இந்தக் காக்கைபாடினியார் ஓர் இலக்கணநூலைப் பாடிச் சென்றிருக்கிறார். அதுவும் தொல்காப்பியம் போன்ற ஒரு நூலாயினும் தொல்காப்பியத்துக்குப் பிற்பட்டதென்பதே ஆய்வாளர் கருத்து. யாமும் அப்படியே எண்ணுகிறோம்.  மொழியின் இலக்கணம் மாறும் தகைமை உடையதாதலின்,  அஃது அடைந்த மாற்றங்களை உள்ளடக்கிய  இலக்கணநூல்  ஒன்று பின்வந்த தமிழ்ப் புலவர்களுக்குத் தேவைப்பட்டிருக்கும்.  காக்கைபாடினியார் பெருந்தமிழ்ப் புலவர் ஆதலின்,  இலக்கணத்தை அவரெடுத்துக் கூற அதை அரசரும்  புலவர்கள்  பிறரும்  போற்றிப் பின்பற்றவே, கடினநிலை எளிமைபெறும். இலக்கணம் அறிய விழைவார் மகிழ்வர்.  இதனால் அவர் காலத்திய மொழிநிலை காக்கப்பட்டது என்பதே உண்மை.

தொல்காப்பியம் என்பது தொன்மை மொழிமரபுகளைக் காக்க எழுந்த நூலே.  இம்முனிவரும் காக்கும் பொறுப்புடைய குடியில் தோன்றிவர்  ஆதலின் அப்பெயரே  அவரும் பெற்றார். இதுபோலும் "சாத்திரங்களை"க் காப்போர் இன்று சாத்திரிகள் என்று குறிப்பிடப்படுவது போலவே  அவர் அன்று காப்பியர் எனப்பட்டார்.  இதை முன் ஓர் இடுகையில் யாம் கூறியுள்ளோம்.  கடல்கோளுக்குப் பின் மொழிமரபுகளைக் காக்கவேண்டிய பொறுப்பு தொல்காப்பியரிடமும் அதங்கோடு ஆசானிடமும் வந்துசேர்ந்தது;  அதை அவர்கள் செவ்வேனே செய்து முடித்தனர்.   பேராசிரியர் / ஆய்வாளர்  கா.சு. பிள்ளை அவர்களும் இதனை முன்னர்க் கூறியுள்ளார். 

காக்கைபாடினியார் வாழ்ந்த காலத்தும் முன்னரும் தோன்றி இறுகிவிட்ட மொழிமரபுகட்கு ஏற்ப, காக்கைபாடினியார் இலக்கணம் இயற்றினார்.  அதுவும் காக்கும் நோக்குடன் எழுந்த நூலே.  மொழியைக் காத்தல் அன்று  பொறுப்புடன் நிறைவேற்றப்பட்டது.

இவரும் காக்கைகளைப் பாடினாரோ இல்லையோ,  அதுபற்றிய குறிப்புகள் எம்மிடம் இல்லை.  அப்படிப் பறவையைப் பாடியவர் சங்ககாலப் புலவர் காக்கைபாடினியார் நெச்செள்ளையார் என்பதற்கு அவர்தம் பாடல் ஆதாரமாகிறது.  அல்லது காக்கையைப் பாடியது ஒரு வெறும் உடனிகழ்வாய் இருந்து,  அதுவே , அதனால்தான் அப்பெயர் அவருக்கு வந்தது எனப் பிறரை எண்ணத் தூண்டியது என்றும் எண்ணலாம்.  இவையெல்லாம் கற்றோர் கருத்துக்களே.  பின்வந்த  காக்கைபாடினியார் காக்கையைப் பாடினாரா என்று தெரியவில்லை. அவர் அவ்வாறு பாடியது எதுவும் நம்மை வந்து எட்டவில்லை.  காக்கை எங்கும் காணப்படும் பறவை ஆதலின், அதனைப் பலரும் பாடியிருப்பர். அவன் பாடவில்லை என்றும் கூறவியலாது. ஆனால் அவர் பெயர் அதனால் வந்ததா என்பதற்கு ஆதாரம் இன்மையினால்,  அவர் தமிழைக் காக்க இலக்கணம் எழுதினார் என்று முடிப்பதே பொருந்துவதாகத் தெரிகிறது.  அவர் பெயரில் உள்ள காக்கை, தமிழ்க் காவலைக் குறிக்கிறது என்று கொள்ளலாம்.

இரண்டாம் காக்கைபாடினியார் ,  தொன்மை உரையாசிரியர்கள்  பலரால் மேற்கோளாகக் காட்டப்பெற்ற  பெருங்கல்வியாளர். பெண்பாற் புலவர்.  இவர் இலக்கணம் முழுமையாய்க் கிட்டாதது தமிழ்த்தாய்க்கு வருத்தமளிக்கும் ஒன்றே ஆகும். பண்டை யாசிரியருடன் இவர் ஒட்டிச்செல்லாமல் வேறுபட்டு இலக்கணம் மேற்கொண்டவிடங்கள் சில உரையாசிரியர்கள் தரவுகளால அறியக்கிடப்பன ஆகும். இரு மலைகள் வேறுபட்டால் நாம் அது அறிதலும் வேண்டும். பின்னர் வந்த இலக்கணியர், காக்கைபாடினியார் இயலை எளிமைசெய்து பாடித் தந்துசென்றனர். இது கூர்ந்துணரத் தக்க தாக்கத்தைத் தமிழில் உண்டாக்கியது எனலாம்.

 காக்கைபாடினியார்கள் ஒருவர் அல்லர் இருவர்  இருந்தனர் என்பதை ஒப்புக்கொள்வதற்காக இது எழுதப்பட்டதன்று.  பெயர்க்காரணம் விளக்கமே எம் நோக்கமாகும். அதை யாம் தாண்டிச்செல்லவில்லை.

இதுவே யாம் தெரிவிக்க விழைந்த செய்தியாகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

ஓரிரு தட்டச்சுப் பிறழ்வுகள் சரிசெய்யப்பட்டன. 2152  01082021


 குறிப்பு: 

காக்கை -  காப்பு

பாடினி -(  இலக்கணம் ) பாடியவர்

பாண் > பாண்+இன்+இ > பாணினி. ( சங்கத இலக்கணம் தந்தவர்)  இவர் பாணர் வகுப்பைச் சேர்ந்தவர்.  இவர்கள் இசைப்புலவர்கள். காப்பியக் குடியவர் தொல்காப்பியர்,  அதுபோல் பாணினி பாணர்குடியினர்.  ஆரியர் என்போர் மரியாதைக் குரியவர்கள்,  எப்போதும் தமிழில் ஆர் விகுதிச் சொற்களால் சுட்டப்பட்ட படிப்பாளிகள்  ஆரியர்.   ஆரியரென்பது இனப்பெயர் அன்று.  வெளிநாட்டினர் பலர் இந்தியாவுக்குள் வந்துள்ளனர். மங்கோலியர், ஆப்கானியரின் பண்டை மூதாதைகள் எனப்பலர். இவர்களில் சிலர் வந்த பிற்காலத்தில் கற்றுப் புலமை அடைந்த பின் ஆர் விகுதியால் குறிக்கப்பட்டனர்..கல்வியால் உள்நாட்டினரும் அங்கனம் பணிவுடன் குறிக்கப்பட்டனர்.  . பெயருடன் ஆர் விகுதியைப் பெற்றுத் தருவது புலமையும் கல்வியும்.  கல்வி என்பது கற்றாலே வருவது கொரனா போல்வது  கற்காமலே வரும்.  என்ன செய்வது?

வெள்ளி, 30 ஜூலை, 2021

பெயர் குறிப்பிடாத கருத்துரைகள்

 கருத்துரைகள்  (பின்னூட்டங்கள் )  இட விரும்புவோர் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு பெயரில் அவற்றை  இடவேண்டும்.  உங்கள் கடவுச் சீட்டில் உள்ள பெயராகவோ நீங்களே எழுதுவதற்காகச் சூட்டிக்கொண்ட பெயராகவோ இருக்கலாம். எங்களுக்கு மறுப்பு ஒன்றுமில்லை. பெயரில்லாமல்  வருபவை நீக்கப்படும்.

Give your name or give yourself a name as reference for the benefit of other readers when submitting a comment.

"Unknown" is not a name and not considered by us as such.  Nameless, Noname etc not accepted.

ஒருவர் பயன்படுத்திவிட்ட பெயரை அடுத்தவர் மேற்கொள்ளலாகாது.

There is no reason why one should be shy of his own name. Given by our own parents, those names are part our selves and we should be proud of our names.  We should also respect our own parents.  If you do not feel convinced, then you can give yourself some name.  For example, "Thamizkkodi:" or "Vidiyan."

If your comment has been removed for namelessness, you can repost the same as comment  with a name. You may take the opportunity to check the accuracy of substance therein and make necessary corrections as you deem fit or enrich it with more convincing material.  Please do not lose confidence.  We want to encourage people to express themselves and be happy about it. We do not want to suppress thoughts of others including ones in disagreement with us. But at the same time please do not post anything which offends the law or adversely affect others and their feelings. Be relaxed and happy.

அவசியம் என்பது உணவுத்தேவைக் குறிப்பு.

 மனிதன் ஓரிடத்தில் இருந்து வாழாத நிலையில் (nomad),  எங்கு சென்றாலும் இடும்பை கூர் அவன் வயிறு அவனுடனே சென்று அவனை வெகுவாக வதைத்தது.  அவன் எல்லாச் செல்வங்களும் பெற்று இருந்து(settled) வாழத் தொடங்கிய போதும் அவன் வயிறு அவனை விடவில்லை.  அதற்கு வேண்டியதைக் கேட்டு வயிறு அவனை வாட்டத் தொடங்கியது. இதனின்று விளைந்த ஒரு மக்கள் சொல்தான்   " அவசியம்" என்பது.

அகத்திய இலக்கணம் தமிழுக்கு இன்றியமையாதது என்ற நிலையில்,  அகத்தியம் என்ற சொல்லே அவசியம் என்று திரிந்தது என்றார் சொல்லறிஞர் தேவநேயப் பாவாணர்.  இதுவும் நல்ல விளக்கமே யாயினும், உணவின் தேவை அடிப்படையில் இச்சொல் விளைந்தது என்று முடித்தலே பொருத்தமென்று யாம் கருதுகிறோம்.  அவசியம் என்பது தமிழன்று என்றனர் சிலர்.

இதுபற்றிய எம் ஆய்வு வருமாறு:

அவசியம் என்பதன் முந்துவடிவம் ஆவசியம் என்பதே.  

மனிதனின் தேவையெல்லாம் உணவின்பாற் பட்டதே  ஆகும்.  ஒருசாண் வயிறு இல்லாட்டா இந்த உலகினில் ஏது கலாட்டா என்பதே உண்மை.

செவிக்கு உணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்று நாயனார் கூறியிருந்தாலும்,  உணவு வயிற்றைச் சென்றடைந்த அமைதிநிலையின் பின்னர்தான் மற்ற தேவைகளைத் தேடுகின்றனர் மக்கள்.  அடுத்த மண்டபத்தில் பந்தி என்பதைக் கேட்ட பற்றர்கள், கோயிலில் இடையிலிருந்த கதவைப் பேர்த்துக்கொண்டு அந்த மண்டபத்தில் நுழைந்ததை யாம் நேரடியாகவே கண்டுள்ளோம். அங்கிருந்த பூசாரி, இவர்கள் சாமி கும்பிட வந்தார்களா சாப்பிட வந்தார்களா என்று தம் எண்ணத்தை வெளிப்படுத்தினார்.   தத்துவங்கள் பேசி உண்மையை மறைப்பதில் எமக்கு உடன்பாடில்லை.

ஆவ   அசி அம் என்பதே ஆவசியம் என்றாகி அவசியம் என்று குறுகிற்று.

அசித்தல் : உண்ணுதல்.    அசியம் -  அசி+ அம் :  உணவு.   இவ்வாறு இன்றியமையாமை உணர்த்தப்பட்டது.  இங்கு ஆவன உணவே,  அதாவது உணவின்றி ஆகாது என்பது. இது பின் தன் உணவு பற்றிய பொருளை இழந்து வழங்குகிறது.

ஆவது:  இது ஒருமை.  ஆவ அல்லது ஆவன :  இரண்டும் பன்மை.  ஆ+ அ > ஆவ.  ஆ+ அன் + அ> ஆவன. இரண்டாம் வடிவத்தில் அன் இடைநிலை உள்ளது.

ஆவ அசி  அம் > ஆவசியம் என்பது குறுகி,  பின்னர் அவசியம் ஆயிற்று. 

அசியம் என்ற தனிச்சொல்  அமையவில்லை. அசித்தல் - வினைச்சொல்.  அசித்தல் என்பதன் மூலம் அயில்-தல்.   அயி -  அசி: இது யகர சகரத்  திரிபு.  இத்திரிபில் அயில் என்பதன் லகர ஒற்று வீழ்ச்சி.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.



வியாழன், 29 ஜூலை, 2021

கச அடிச்சொல். இரு வெளிப்பாடுகள்.

 கச என்ற அடிச்சொல் :

ஓன்று:  கச > கசத்தல் என்ற வினைச்சொல்லிலிருந்து விளைந்த சொற்கள்.  இவை முன்பு எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

இன்னொன்று:  கழிச்ச என்ற சொல். இது எழுத்தில் கழித்த என்று எழுதப்படும். நமது வீட்டுமொழி கழித்த என்று சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை.  மலையாளத்தில் கழிச்சு  (ஊணு கழிச்சு) என்பதே இலக்கிய வடிவம். எது இலக்கிய வடிவம் என்பது இனமொழிகளுக்கிடையில் வேறுபடும். இலக்கிய வடிவத்தில் உயர்வுமில்லை. இலக்கியத்திலில்லா வடிவத்தில் தாழ்வுமில்லை. கருத்துக்கள் ( அபிப்பிராயம் அல்லது ஆங்கிலத்தில் ஒபினியன்) அருகியே பொருட்டாகும். பெரும்பாலும் தள்ளுபடி செய்யப்படவேண்டியவை. இலக்கிய வடிவம் இன்சொற்களாய் மலருங்கால் ஒருவன் அவற்றை நுகர்ந்து பாராட்டிக் கொண்டிருக்கலாம்.  அப்போது அது உயர்வு உயர்வு உயர்வு என்று உரத்துக் கூவிக்கொண்டு அதன்மூலம் அவனது இரத்த அழுத்தம் குறைந்து நன்மை நேர்கிறதா என்று கவனித்துக்கொண்டு  வாழ்க. எமக்கு எந்த மறுப்புமில்லை.  யாமும் அப்படி இலக்கியத்தைப் புகழ்வதுண்டு.  புகழாமல் இருப்பதுமுண்டு. இக்கணத்தில் அவற்றை மனித ஒலிகள் என்ற நிலைக்குத் தள்ளி திறனாய்வின்றிப் பேசுகிறோம். ஆய்வு நாற்காலியில் அமர்ந்தால் உடனே இந்த நிலைக்குத் திரும்பிவிடவேண்டும்.  அதாவது காய்தல் உவத்தல் என்பது ஆய்வுக்கு விலக்கு.

கழிச்ச என்பது இடைக்குறைந்தால் கச என்று வந்துவிடும்.

ஆகவே இரண்டு கச என்னும் வடிவங்கள் உண்டு. ஒன்று முதலாவது. இன்னொன்று அடுத்துக் கூறிய இடைக்குறை வடிவம். 

இந்த இடைக்குறை வடிவத்தைப் பயன்படுத்தி எந்த இடுகையும் இன்னும் இடவில்லை.  தக்க தருணத்தில் அது செய்யப்படும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர். 


வாழ்வில் பொம்மை அவசியம் (படம் ) நாய்க்குட்டி




 சோறும் கிடைத்து

நீரும் கிடைத்தாலும்

நேரம் இருந்தால்

பொம்மைகள் வைத்த

புதுமை விளையாட்டு!

இல்லை என்றால்

இல்லையே இன்பம் வாழ்வில்!

சின்னஞ்  சிறுகுட்டி  எனக்கு

என்னதான் வாழ்வில் இனி?


கவிதை தந்தவர்: சிவமாலை.

படம் தந்தவர்: திரு ரோஷினி அவர்கள்.

சின்ன நாயின் பெயர்:  யூகி.


 சோறு என்று கவிதையில் சொன்னாலும்

நீங்கள் எங்களின் சிறப்புணவு என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

சோறு தின்னமாட்டோம்  

எங்கள் வீட்டுக்கு நீங்கள் வந்தால்

நான் கைகொடுத்து வரவேற்பேன்


இப்படிக்கு  உங்கள் யூகி.  

.



முகம் மூஞ்சி தமிழ்தான்

 ஒரு காலத்தில் தமிழில் முகம் என்ற சொல்லைப் பற்றிச் சந்தேகம் அல்லது  ஐயுறவு சிலரிடை இருக்கவே செய்தது. அவர்கள் அச்சொல்லைத் தமிழன்று என்று எந்த ஆய்வும் ஆதாரமும் இன்றிக் கூறினர்.

முகம் என்பதைத் தமிழ் என்று அறிய வெகு எளிதான வழி::

மு  - இது முன்னிருப்பதைக் குறிக்கும்.

கு - என்பது தமிழ் தோன்றிய காலத்திலிருந்து  (  அது எக்காலமோ ) [முன் பக்கத்தில்] சேர்ந்திருப்பது எனல் குறித்தது.  அது (முகம்)  தலையில் அமைந்துள்ள பகுதி.

அம் - இந்த விகுதி பெரும்பாலும் அமைந்தருத்தலைக் குறிக்கும்.

அம் >  அமை > அமைதல் > அமைத்தல்.  அம் என்பது இவ்வாறு (பல சொற்களின்) வினைச்சொல்லின்/ வினைச்சொற்களின்  முதனிலை  அசையாக வுள்ளது.

முகுஅம் >  முகம்.

பண்டைப் புலவருள் சிலரும் மூஞ்சி என்பது தமிழ் ஆனால் முகம் என்பது தமிழன்று என்றனர்.  இவர்கள் ஏன் "முகுஅம்" என்று சிந்திக்கவில்லை?  செய்யுள் பல கற்றனரே அன்றிச் சிந்திக்கவில்லை என்றுதான் நாம் முடிவு செய்யவேண்டும்.  அவர்கள் புலவர் என்பதனால் நாம் இதைக் கூறாமல் விடமுடியாது.

முகம் என்பது பிடிக்கவில்லை என்றால்  முன்+ கு+ அம்  என்று சொல்லைப் புனைந்து,  முன்கம்    என்பதையே பயன்படுத்தியிருக்கலாம்.  அது முங்கம் அல்லது முற்கம் என்று திரிந்திருக்கும்.   அதுவும் ஏற்புடையதாகவே இருந்திருக்கும். முங்கம் இடைக்குறைந்து முகமாகும் வாய்ப்பு அதிகம்.

முகு + இன் + சி >  மூ +ன்  + சி >  மூஞ்சி என்பதையும் அவர்கள் அறியவில்லை. மனிதனுக்குக் காதுகள் தலையின் பக்கலின் உள்ளன.

மூக்கு, கண்கள், வாய் எல்லாம்  முன்னே உள்ளன. இவை மூன்று  உறுப்புகள். அதனாலும் மூ + இன் + சி >  மூஞ்சி   (மூன்று உறுப்புகளை உடைய தலையின் பகுதி) என்பது தெளிவாகவே உள்ளது. [ மூன்று + சேர்ந்தது >   மூன்சே>  மூஞ்சே  மூஞ்சி  எனலும் பொருள்தரும் விளக்கமே ]  முகு என்பது மூ என்று திரியும்.   மூன்று என்பதும் மூ  எனலாகும்.  இருவழிகளிலும் மூஞ்சி என்பதில் எந்த ஐயப்பாடும் எழவில்லை.  காரணம் கூறாமல் ஐயப்பாடுகளை எழுப்பிக்கொண்டிருப்பவன் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.  காரண காரணிகளுடன் இதைக் குறிப்பிட்டு எதிர்த்தவர்களை யாம் அறிந்ததில்லை. இருந்தால் பின்னூட்டமிட்டுத் தெரிவிக்கவும்.

முகு என்பது மூ எனலாகும்.  இதுபோன்ற திரிபுகள்:  பகுதி >  பாதி. இதில் பகு என்பது பா என்றானது.   மிகுதி >  மீதி.  இதில் மிகு என்பது  மீ என்றானது.  தொகு > தோ > தோப்பு.    நகுதல் : ஒளிசெய்தல். பாம்புத்தோல் சித்திர வேலைகளுடன் கூடி ஒளியுடைய விலங்கு.  நகுஅம் > நாகம்.  இதில் நகு  என்பது நா என்று வந்தது.  இனி,  நகர்வதனாலும் நாகமென்பர்.  நகர் > நாக > நாக+ அம் > நாகம். இது நகர் என்பதில் அர் கெட்டு, நக என்பது நாக என்று நீண்டு, அம் விகுதி பெற்று அமைந்ததென்பர் அறிஞர் சிலர்.  என்றிவை கூறினும் தமிழ் ஆகும்.

இதுகாறும் கூறியவற்றால் முகம் தமிழே.  சமத்கிருதமென்பது மந்திரங்கள் ஓதி வீட்டுமுன் வந்து  பூசைகள் செய்வாரிடைத் தோன்றிய இந்திய உள்நாட்டு மொழியே அன்றி  ஆரியர் என்று யாரும் வரவல்லை.  வெளிநாட்டினர்  லடாக்கில் வந்து எல்லையில்லாமையால் இடம்பிடித்தனர் பலர்.  அவர்கள் யாரும்   ஆரியர் எனலாகாது.  வெளிநாட்டினர் வருவது எல்லா நாட்டிலும் நடந்த ஒன்றாகும். வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அகரவரிசை கொண்டுவந்தனரோ?  அவர்கள் கொணர்ந்தவை எங்கே?  

ஒரு அமைப்புறவும் இல்லாத சொற்களை நம்மவை என்று பெருமைப்படுவதாயின் நமக்கு தலைக்கிறுக்குப் பிடித்திருக்கவேண்டும். உலகில் கோடிக்கணக்கான மொழிகளில் சொற்கள் உள்ளன.  நாம் நமவென்று கூறுபவை இங்குக் கணக்கெடுத்தால் ஓர் ஆயிரம் இருக்கலாம். கோடியில் ஆயிரம் எத்தனை விழுக்காடு?  நமக்கு ஒன்றும் பைத்தியம் இல்லை.  வெகு நிதானமாகவே உள்ளோம், காண்பீர்.  தொடர்பு இருப்பவற்றைக் கூறாதொழிதலும் தவறு;  தொடர்பு இலாதனவை தொடர்பு கூறுதலும் தவறு. இதை நாம் அறிவோம்.

பிறர் கூறியன மேற்கோளானால் நாம் அவற்றை மேற்கோளாகக் காட்டுவோம்.   எம்மவை என மாட்டோம். யாமே சிந்தித்த கருத்துக்களையே எழுதுகிறோம்..  பிறர் கருத்துக்களாயின் அவர்கள் நமக்கு முந்திய அறிஞர் பெருமக்களாக இருக்கவேண்டும். தொல்காப்பியர், சங்கப் புலவர்கள், தலைசிறந்த தமிழறிஞர்கள் எனக்காண்க. அல்லாரை நாம் உள்கொணர்வதில்லை. நீங்களும் இவற்றை அறிவீர்.  நன்றி உரித்தாகுக.  யாம் எழுதத் தொடங்கியே 30 ஆண்டுகள் ஓடிவிட்டன.  1958 முதல் தமிழ் ஈடுபாடு உடையோரும் நம்முடன் உள்ளனர்.  

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்


புதன், 28 ஜூலை, 2021

கங்கணம் - கயிற்றுக்கட்டு அல்லது காப்பு

 எடுத்துச் சொல்லவேண்டுமென்று பல சொற்கள் தலைப்பசைக்குள் போட்டி யிட்டுக் கொண்டிருப்பன வாகையால், இவற்றுள் எதை எழுதுவ தென்பது ஒரு போராட்டமே. இதில் இன்று நாமெடுத்துக் கொள்ள எண்ணியது  கங்கணம் என்ற சொல்லாகும்.  ஆனால் அது முன்னரே  வரைதரவு செய்யப்பட்டுள்ளது.  அது இங்கிருக்கிறது.  அதையும் படித்து மகிழுங்கள்:

கருங்கண்ணும் கடுங்கண்ணும்

கங்கணம் https://sivamaalaa.blogspot.com/2018/07/blog-post_3.html

கருங்கண் என்பதுபோலவே, சிலருடைய கண்கள் " கடுமை" யான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை என்று அஞ்சுவோருண்டு.  இந்த கடுங்கண்ணை மாற்றுவதற்குக் காவற்கயிறு கட்டிக்கொள்வதுமுண்டு.  அதுவே காப்பு.   உண்மையில் கருங்கண் என்றாலும் கடுங்கண் என்றாலும்  ருகரம் மற்றும் டுகரம் இடைக்குறைந்தால் கங்கணம் என்றே ஆகும்.  ஆகவே இவற்றுள் பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை என்பதை அறிவீர்.

ரகர டகரத் திரிபு விதி

மேலும் ரகர டகரத் திரிபு விதியுமுண்டு.  ஒன்று மற்றொன்றாகத் திரிய வல்லது. இதற்கு இன்னொன்றை எடுத்துக்காட்டாக முன்வைக்கலாம்.  மடி> மரி என்பது காண்க.  மடிதலும் மரித்தலும் ஒருபொருளன.  மடிதல் என்பது உயிருடைப்பொருள் இறத்தலுக்கும்  மடித்தல் என்பது உயிரற்ற பொருள், காலக்கழிவினால் கெட்டுப்போவதற்கும்  பயன்பாடு பெறும்.  ஆதலின் இவை வழக்கில் வந்த வேறுபாடுகள்.  சொல்லமைப்பில் பெரிய வேறுபாடுகள் ஒன்றுமில்லை. கடமென்ற பதம்  கட என்ற வினையடித் தோன்றிய சொல்லெனினும்,  கடு என்ற அடியுடன் தொடர்புள்ளதே.

கடங்கணம்:

இனிக் கடங்கணம்  என்பது ஒரு கடமை பூண்டு செயல்படுதலையும் குறிக்கும்.  கடம் என்பது கடமை.   கணம் -  கண்ணுதல் என்பது கருதுதல்.  கண்+ அம். (கண்+ நுதல் என்பது வேறு.)   கடங்கணம் என்பது இடைக்குறைந்தாலும் கங்கணம் என்றே வரும். இது: கடமை மறவேன் என்று கழறிக் கையிற் கயிறேற்றிக் கொள்ளுதல் குறிக்கும்.  சிலேடையாகக் கவிபாட வல்ல பெரும்புலவர் கையில் இச்சொல் கிட்டினால் இதைப் பயன்படுத்தி  அவர் நல்ல செய்யுளை யாத்துத் தந்திடுவார் என்பதில் ஐயமில்லை.  சீவகசிந்தாமணி ஆசிரியர் இத்தகு பெரும்புலமை உடையவர்.  அவர் போன்றோர் இச்சொல்லைக் கூறியவாறு கையாளும் திறலர்.

அடிச்சொற் பல்பொருள்:

கண் பல்பொருளொருசொல். கண்: 1. விழி. 2  இடம் ( உருபு).  "ஒண்டொடி கண்ணே உள" என்ற தொடர் காண்க.  3.  கண்ணுதல் என்ற வினைச்சொல். கண் என்பதே வினைப்பகுதி. கருதுதல் என்பதே பொருள். இச்சொல் எவ்வாறு பொருந்துகிறதென்பதே மேலே விளக்கப்பட்டது.

கை, கால் ஆகிய உறுப்புகட்கு ஓரம் உள்ளது.  எடுத்துக்காட்டு: கணுக்கை, இது ஓரம் .  இந்த ஓரத்திற்கு இன்னொரு சொல்:  கங்கு என்பது.  கங்கில் அணியப்படுதால் கங்கணம்  ( கங்கு+ அண்+ அம் ) என்று வரும்.  அணிதற்கு அடிச்சொல் அண்.  அணவி நிற்பது எனினுமாகும்.  

இவை எல்லாம் தமிழ் அடிச்சொற்களே.  கள் என்பது மூலச்சொல். அதை இங்கு விளக்கவில்லை.  அதனை ஆய்ந்தக்கால், இந்த அமைப்புப்பன்மை என்பது ஒரு தோற்றமே என்று புலப்படுமாதலின்,  இங்கு கூறப்பட்டவையுள் எதனை மேற்கொள்ளினும் எம் துருவலில் போந்த விளக்கங்களில் பேதம் காணப்படவில்லை என்று தெளிக. ஆதலின் எதைக் கொள்ளினும் ஏற்புடைத்தாம். 

எவ்வாறாயினும் இச்சொல் மூன்று அல்லது அதனின் மிக்க பிறப்புடைய சொல் என்பதை அறிந்து மகிழ்க.

அறிந்து இன்புறுவீர்.

மெய்ப்பு பின்னர். 

மெய்ப்பு பார்க்கப்பட்டது:  29072021 0732


கவசம் அணிந்து

மனித இடைவெளித் தொலைவு கடைப்பிடிக்கவும்.

நாமும் வாழ்க, பிறரும் வாழ்க.

செவ்வாய், 27 ஜூலை, 2021

அங்கீகாரம்

 அங்கீகாரம் என்ற சொல்லுக்கு முன்பு யாம் கருத்துவெளியிட்டதும் உண்டு; எழுதியதும் உண்டு.  இங்குத் தேடியதில்,  அதைக் காணவில்லை.  அஃது அழிந்துபோயிருக்கலாம்;  அல்லது வேறு எங்காவது அதை யாம் எழுதியிருந்திருக்கலாம்.  அதைத் தேடி நேரத்தை வீண்செய்யாமல், இப்போது ஆய்வு விவரங்களைச் சுருக்கமாக எழுதிவிடலாமே என்று எண்ணுகிறோம்.  இதை மறந்ததில்லை.  காரணம், இச்சொல் எளிமையான உட்பகவுகளைக் கொண்ட ஒன்று என்பதுதான்.

இங்கு என்பது நாம் இருக்கும் இடம்.  அங்கீகாரம் இங்கு இல்லை.  இதன் காரணி யாதென்றால்,  நாமே ஒன்றை அங்கீகரித்துக்கொள்வது ஒரு குறிக்கத்தக்க நிகழ்வு ஆகாது.

அங்கீகாரம் என்பது அங்கிருந்துதான் வரவேண்டும்.   அங்கு என்பது ஓர் அரசுச் செயலகமாகவோ நம் அப்பன் அம்மாவாகவோ அல்லது ஏதேனும் ஓர் இணக்கம் தரத்தக்க அதிகாரம் உள்ளவராகவோ  இருக்கவேண்டும்.  அங்கீகரிக்க வேண்டும் விழைவு அல்லது வேண்டுதல்மட்டுமே இங்கிருந்து செல்வதாகும்.

நம் வேண்டுதல் அங்குச் சென்று  ,  ( அங்கு )  ஆமென்ற இசைவை இங்கு ஈர்த்து வருதல்.  ஈர்த்து  என்றால் "இழுத்து". 

அங்கு  +  ஈர் + கு + ஆர் +ஆம்.

கு  என்பது சேர்விடம் குறிக்கும் சொல்.  எ-டு:  மதுரைக்கு.

ஆர்தல் -  இங்கு செயலைக் குறிக்கிறது.  வந்து பொருந்தும் செயல்.

அம்   விகுதி.

எல்லாம் புணர்த்த, அங்கீர்காரம்  ஆகி,  ர் இடைக்குறைந்து  அங்கீகாரமாகும்.

பேச்சுமொழியில் தள்ளுபடி என்பது " ஈர்ததல்" [ " ஈ(ர்)காரம் " ] என்பதற்கு எதிர்ச்சொல் ஆகிவிடுகிறது  எனக்காண்க.

இது அழகிய சொல்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.







சீனாவில் தமிழர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் | Tamil Temple in China Wins W...

ஞாயிறு, 25 ஜூலை, 2021

திவ்வியம்

 

இன்று திவ்வியம் என்ற சொல்லைத் தெரிந்துகொள்வோம்.


திருவெல்லாம் திரண்டு புனிதமாகிவிட்ட திருவடிகள் இறைவனுடையவை. திருவெல்லாம் அங்கு இயல்கின்றது, இயங்குகின்றது, திகழ்கின்றது. திருவென்பதோ எண்ணிக்கைக்கு இயலாத துய்யதான திரட்சி ஆகும். மற்றும் திருவென்ற சொல், இவ்வுலகத்துச் செல்வங்களையும் மொத்தமாய்க் குறிக்குமொரு சொல். இதனின்று சொல்லாய்வில் கல்லி எடுக்கும் அடிச்சொல் திர் என்பது. இவ்வடிச்சொல் தனித்தியக்கம் அற்றதொன்றாம். ஏனெனில் திர் என்ற சொல்லை யாரும் பேசுவதில்லை.


திர் > திரள் ( அள் )

திர் > ( - முன்னிருப்பு குறிக்கும் சுட்டும் விகுதியும்)

திர் > திரை ( - உயர்வும் குறிக்கும் விகுதி )

திர் > திரி ( இ விகுதி; மாறுதலும் ஓரிடத்து நில்லாமையும் உணர்த்துவது)

திர் > திறு > திறம்: ( திரட்சியில் வரும் வலிமை, திரிந்து அம் விகுதி பெறுதல்)

அர் இர் ~ர் ஈறு றுகரமாதல்: திடர் > திடறு ( -கா).

திர் > திரம் ( திறம் குறிக்கும் விகுதி). -டு: திறமாகவும் சரியாகவும் சொல்லப்படும் நேர்வுத்தொகுப்பு. " சரித்திரம்".

[ வரலாறு]

திர் > திரணை உருட்டிப் பிடிக்கப்பட்டது. (திரள் > திரண் > திரணை)


திர் > திரவியம்

திர் > திரவணம்

திர் > திரவம்


திர் > திராணி. மனத்து வன்மைத் திரட்சி.


திர் > திரளை (உருண்டை)


இன்னும் பல.


திர் > தி ( கடைக்குறை)


தி > தி + இயம் > திவ்வியம். ( திருத்திரளமைவு).


அறிக மகிழ்க. மெய்ப்பு பின்



Woman comes out of flat banging a gong ...



நீ மணியடித்தால் நான் டமாரம் அடிப்பேன்.   போட்டி.

சபாஷ்  சரியான போட்டி!!

கோவிட் காரணத்தால் வீட்டில் அடைந்து கிடப்பதனால்

பெரும் கோளாறு ஏற்படுகிறதோ?

உட்கார்தல் தொங்கிருக்கை. குரிச்சி.

 ஒரு சட்டிக்குள் இருக்கும் குழம்பை அகப்பையால்  சுற்றிவிட்டு   அந்தச் சட்டிக்குள் சிறு  அலைகள் போல் எழும்படி கிண்டிவிட்டுக்கொண்டிருந்தால் அதைத் திராவுதல் என்பர்.  இச்சொல்  தமிழ்ப் பேரகராதியில் காணப்படவில்லை. கடைகளில் சட்டி கிண்டுகிறவர்கள் இச்சொல்லைப் பயன்படுத்தக் கேட்டிருக்கிறோம். ஆனால் எல்லாக் கடைகளிலும் இச்சொல்லை அறிந்திருப்பார்கள் என்று யாம் எதிர்பார்க்கவில்லை.  சென்னையில் உள்ள ஓர் உணவகக்காரர்க்குப்  பொட்டலம் கட்டுதல் என்பது புரியவில்லை.  நீங்கள் வாழும் நாட்டிலிருந்து இன்னொரு நகருக்குச் சென்றால் அப்போது பொட்டலம் என்ற சொல்லுக்கு  "பார்சல்" என்ற ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியவரும்.  எனவே சிங்கப்பூர் அல்லது மலேசியாவில் எந்த உணவகத்திலும் யாம் திகைகவேண்டியதில்லை என்பதை யாம் உணர்ந்தோம்.  தமிழில் பேசித் தமிழனுக்கு "விளங்காமல்" போய் அல்லல் உறுவதினும் சீனனிடம் சீனன்பாசையிலேயே பேசி எதையும் வாங்கி வந்துவிடலாம். இங்கு அப்படித்தான் செய்துகொண்டிருக்கிறோம்.

ஒரு மலேசியப் பட்டணத்தில் உந்துவில் போய்க்கொண்டிருந்த போது பசி வந்துவிட்டது. ஒரு மலாய்க்காரர் பொரித்த வாழைப்பழம் விற்றுக்கொண்டிருந்தார்.  இந்த உணவு இந்தியாவில் எங்கும் கிடைக்காது. வாழைப் பழத்தைக் கரைத்த மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் இட்டுப் பொரித்து வெளிக்கொணர்ந்து  கொஞ்சம் ஆறியவுடன் கடித்து உண்ண நன்றாக இருக்கும்.  முக்கியெடுத்தல் என்றால்  முழுக்கி எடுத்தல். எண்ணெயில் மூழ்குவித்துப் பொரித்தல்.  சைவ உணவு கிட்டாத இடங்களில் இந்த மாதிரியான மலாய்ச் சைவப் பலகாரங்களை உண்டு  சில மணிநேரங்களையாவது சமாளிக்கலாம்.  இவற்றில் கவிச்சுப் பொருள்கள் இல்லை. என்ன நடந்தது என்றால்,  "கோரேங்  பிசாங்"  ( மேற்படி பொ.வா)  வேண்டுமென்று கேட்க,  அந்தக் கடைக்கார மலாய்ப் பெண்,  அது "பிசாங் கொரேங்க்"  எனவேண்டும் என்றாள்.  அப்புறம் விளையாட்டாகவே கொஞ்சம் இலக்கணம் பேசி மகிழ்ந்தோம்.  இறுதியில் எல்லாம் ஒன்றுதான் என்று அவளே சொல்லி முடித்தாள்.  நீங்கள் எங்கே மலாய் படித்தீர்கள் என்று கேட்க, எம்  ஆசிரியர் பெயரையும் படித்ததையும் சொன்னோம்.  மீண்டும் வந்து வாங்கும்படி கேட்டுக்கொள்ள,  விடைபெற்றோம்.  பொட்டலத்தை  "புங்குஸ்" என்று யாம் சொல்ல, புரிந்துகொள்வதில் சிரமம் எதுவும் ஏற்படவில்லை.. 

தமிழ்நாட்டில் பார்சல் -----. சிங்கப்பூரில் பார்சல் என்றால் அஞ்சலகத்தில் அனுப்பப்படும் பெட்டிகளில் அடைக்கப்பட்டவைகளையே அது குறிக்கும்.

ஆனால் உட்கார்தல் என்ற சொல் இங்கும் தமிழ்நாட்டிலும் ஒருமாதிரியாகவே பொருள்கொள்ளப்படுகிறது.   இது உண்மையில்  உட்கு  ஆர்தலாகும்.  ஆர்தல் என்பதற்குத் தங்குதல் என்ற பொருளும் உள்ளது.  ஒரு வீட்டுக்குள் போய் உள்ளே ஆர்தலென்றால்  உள்ளே தங்குதல்.  அமர்தல் என்பதும் இவ்வாறு பொருள்கொள்ளப்படுதல் கூடும்.  மலையாளத்தில் "இரி" எனப்படுகிறது.  கன்னடத்தில் "குளித்துக்கொள்ளி" என்பர்போல் தெரிகிறது.  ( நம் நேயர்கள் இதை விரிவாக எமக்கு கருத்துரையிட்டுத் தெரிவிப்பார்களாக. அதற்கு முன் கூட்டியே நன்றி.

உள் + கு >  உட்கு.  இதில் ஆர்தல்  என்பதை இணைக்கவேண்டும்.  இந்தச் சொல் உளுக்கார்தல் என்றுமாகும்.   உள்+கு  என்பது உட்கு என்றும் உளுக்கு என்றும் இருவகையாகவும் முடிபு கொள்ளும். இந்த வழக்கமான செயலுக்கு ஏன் இருசொல்லொட்டாகச் சொல் அமைந்தது என்று தெரியவில்லை. வீட்டிற்குள் வந்தவரை  அமரவைக்கும் வழக்கம் அவ்வளவாகத் தமிழரிடம் இல்லையென்று முடிவு செய்யலாமா? .  தமிழன் விருந்தோம்பலில் மன்னன் என்பர்.  சொல் இருந்து தொலைந்துவிட்டது போலும். இந்த உலகினில் இருக்கும் மாந்தரில் எழிலுடையோன் எங்கள் தமிழன் என்று பாடுகிறார் எம்.எம், மாரியப்பா!  சைவ அடியார்களையும் வைணவ அடியார்களையும் அமரவைத்துத்தானே அமுதிட்டு விருந்தோம்புதல் கூடும்?

நாற்காலிகளும் வெள்ளைக்காரன் வந்தபின் வழக்குக்கு வந்தவையோ?  கல்வெட்டில் இச்சொல் (நாற்காலி) கிடைத்துள்ளது.  குரிச்சி என்பது உருது என்றனர். ஆனால் முன் காலங்களில் வீட்டில் உள்ளே அமர்வதற்குப் பலகையுடன் தொங்கும் இருக்கைகள் இருந்தன. இவை மேலுள்ள சட்டத்தில் கட்டப்பட்ட தொங்கிகள். ஊஞ்சல் என்றும் சொல்லலாம்.   பின்னர் கால்கள் இணைக்கப்பட்டு நாற்காலிகள் அமைந்தன.  மேலே கட்டு இருந்த நிலையில் அவை "குயிற்சி" கள் ஆயின.   குயில் என்றால் கட்டு என்பது பொருள். கட்டித் தொங்கும் இருக்கை.  குயிற்சி என்பது பின்னர் குரிச்சி என்று அமைந்தது  என்பதே சரியான விளக்கமாகும். உருது மொழி அமைந்த பிறகு இது அங்குப் பரவிய சொல்லாகும்.  நேரமிருந்தால் இதை விரிவாகப் பின் அறிவோம்.

விர் >< விய்.   அதுபோல் குர் .>< குய்.  குரங்குதல் என்ற வினைச்சொல் தொங்குதல் பொருள்.  குர்  அடிச்சொல்.    குய்+ இல் > குயில்.  (பறவை அன்று).  குர் + சி > குர்ச்சி > குரிச்சி என்றும் இதை அறியலாம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.


The copy delete passion (English )

A unique way to each of us 
To do whatever we may wish; 
In reading books, watching films or 
Immersing in pool like fish. 

Writing be my passion project,
Or relaxing close to kids;
No such thing as one fits all;
Not all will deserve your kiss.

The space is crafted all with care
With not many rules and moulds;
And these do fit my special dare
With greenery for your souls.

The outside world remains away;
Do come here, espy my code;
And well relax, recharge yourselves
Not in copy delete mode.


By Sivamala




சனி, 24 ஜூலை, 2021

பரிதாபம் சொல்.

 பரிதாபம் என்ற சொல்லைப் பார்ப்போம்.

இதில் இரண்டு தமிழ்ச் சொற்கள் உள்ளன. ஒன்று பரிதல்,  இன்னொன்று தவித்தல்.  இரண்டையும் திறமையாக ஒட்டுவதன்  மூலம் ஒரு புதிய சொல்லைப் படைத்து உலவ விட்டுள்ளனர்.  இவ்வாறு கூறுகையில்,  சொல் மக்கள் படைப்பா அல்லது புலவர் புனைவா என்று கேட்டால்,  இது சிற்றூர் மக்களிடம் வழங்கிப் பின்னர் அயல்வழக்கிலும் ஆணியடித்ததுபோல் உட்கார்ந்துகொண்டிருக்கிறது என்பதே சொல்லற்குரியது ஆகும்.

யாராவது எந்தக் காரணத்துக்காகவாவது தவித்தால்,  அவர்மேல் ஒரு பரிவு ஏற்படுவது ஒரு மனிதத்தன்மை ஆகும்.  இதைத்தான் பரிதாபம் என்று சொல்வர். பிள்ளைகளுக்கு வேண்டியதைச் செய்ய முடியாமலோ,  கணவனைப் பிரிந்ததாலோ துயரத்தில் வீழ்ந்தோர் பலர்.  " பரிதாபமில்லையா, பரலோக மாதா!  "  என்பது ஒரு பழைய துயரப்பாட்டு.  பரதேசி ஆனோம் என்று வரும் அந்தப் பாட்டு.  யாரும் பரதேசி ஆகாமல் பார்த்துக்கொள்வதே மனித நேயம்.

தவித்தல், ஒரு வினைச்சொல்.  தவி + அம் >  தாவம்.  இதில் தவி என்பது தன் இகரம் இழந்து  தவ்+ அம் > தாவம் என்று முதலெழுத்து நீண்டு சொல் உண்டானது.  இச்சொல் பின்  வ- ப பரிமாற்றத் திரிபின்படி  தாபம்  ஆகும்..  பகரம்  வகரம் ஆவதைப் பல சொற்களில் காணலாம்.  பசந்த > வசந்த என்பதும் பகு> வகு என்பதும் நினைவுக்கு வருகின்றன.

வரு > வாராய் .  இது பாரோ என்று கன்னடத்தில் திரியும்.

வேகமாய் >  பேகன  என்று அம்மொழியில் திரியும்.  

இவை பகர வகரத் திரிபுகள்.

சில ஜெர்மன் - பிரித்தானியத் திரிபுகளும் இவ்வாறே.

இது பல உலக மொழிகளில் காணப்படும் திரிபுவகை.

ஆபத்து என்பதைத் தமிழருள் சிலர் ஆவத்து என்று பேசிக் கேள்விப்பட்டிருக்கிறோம்.  பெரும்பாலும் படிக்காதவர்களிடம்  இது காணப்படும்.  இப்போது குறைந்துவிட்டது.

வாளி ( Tam)  -    பல்டி  baldi  (Malay).

பழைய இடுகைகளில் பல காணலாம்.  முதலெழுத்து நீள்வதை,  வரு > வாரம் என்பதில் காண்க.  படு > பாடு என்பதிலும் ,  படி+ அம் >  பாடம் என்பதிலும் காண்க.   வாக்கிய  வார்த்தைகள்  புணர்வு வேறு;  சொல்லாக்கப் புணர்வு வேறு.    நடி+ அகம் > நாடகம் என்பதுமது.

பரி என்ற சொல் பரி என்றே நின்றுவிட்டது.  பரிதாபம்:  பரிகின்ற தாப நிலை.

இது ( பரி) ----- அயலில் முன்னொட்டாகக் கொள்வர்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்

குறிப்புகள்:

வரு>  வார்  >  வார்த்தை.   ( வாயினின்றும் வரும் ஒலி).

வாய் >  வாய்த்தை > வார்த்தை.  ( திரிபு).

இதைப் பல வழிகளில் காட்டலாம்.



Nancy turns to streetwalking after falling on hard times



சந்து பொந்துகளில் சுற்றித் திரிந்து
கொரனா வந்தாலும்  பிற தீராநோய் வந்தாலும் 
அது ஒரு பேராபத்துத்தான்.

உங்களை நீங்கள் காத்துக்கொண்டு,
உலகில் பிறரையும் காப்பாற்றுங்கள்.
நன்மை செய்யுங்கள்  தின்மை தீண்டாதீர்.

கொரனாவில் வேலையிழந்தோர் பலர்.
பரிதாபம் தான்.  விரைவில் நல்லது நடக்கட்டும்.

தீட்சை சொல்லுருவாக்கம்.

 தீட்சை அல்லது சமய இணைப்புத் தொடக்கம் ஏழு வகைப்படும் என்பர். இவற்றுள் குருவானவர் மாணவனை தொட்டும் தொடாமலும் பல்வேறு முறைகளில் சமயத்தில் இணைத்துக்கொள்வார்.  நெற்றியில் விரலால் தீட்டிவிடுதல் ஒருவகை.  யோக முறையில் மாணவனுள் புகுந்து அவனைத் தூய்மைப் படுத்துதலில் தொடுதல் இல்லாமலும் இருக்கலாம். அருட்பார்வையினாலும் தீட்சை பெறுதலுண்டு.

தீட்சை என்ற சொல் எவ்வாறு உருப்பெற்றதென்பதையே நாம் இங்கு ஆய்வு செய்கின்றோம்.  அது சுருக்கமாக:

தீட்டுதல் வினைச்சொல்

தீட்டுதல் -  தீட்டுகை  >  தீட்கை >  தீட்சை,

தீட்டுகை >  தீக்கை.

இச்சொற்கள் உருப்பெற்றமையை வேறுவிதமாகவும் காட்டுவதுமுண்டு.

அறிக மகிழ்க.\

மெய்ப்பு  பின்னர்.

வெள்ளி, 23 ஜூலை, 2021

முன்றில், முற்றம், பாகவதர்

 ஒரு வீட்டின் முன்பக்கத்தைக் குறிக்க ஒரு சொல் தேவைதான். இல்லாவிட்டால் வீட்டின் முன்பக்கம்,  இல்லத்தின் முகம்  என்று வேறு மாதிரி சொல்லி அதைக் குறிக்கப் பேசுவோர் முயற்சி செய்வார்கள்  ஒரு மொழியைக் கூடுமான வரை இடர்ப்படாமல் பயன்படுத்த வசதிகள் செய்து தருவது கற்றோர் கடன். இல்லாவிட்டால் மக்களே புலவர் உதவியின்றிச் சொல்லாக்கம் செய்ய வேண்டிவரும்.  இப்படி மக்களால் படைக்கப்பட்ட சொற்கள்  ஒன்றிரண்டு இங்குத் தரப்பட்டுள்ளன 

https://sivamaalaa.blogspot.com/2020/12/blog-post_10.html  சொல்:  (இ)டற்பம்.

இவ்வாறு மக்களால் அமைந்த சொல் இன்னொன்று:   (இ)டப்பா என்பது ஆகும்.

இந்த டப்பாக்கள் முதலில் மருந்து முதலியன இட்டு அப்பிவைக்க உண்டான சிறு உள்ளடைப்பிகள்.  இந்த இடு+அப்பிகள்,  இடப்பி என்று அமைந்து டப்பி என்றாயின.  அடைப்பிகளும் டப்பி என்று திரிதல் கூடுமாதலால் இது ஓர் இருபிறப்பி ஆகும்.

மீண்டும் முன்றிலுக்கு வருவோம்.  இதில் முன் உள்ள சொல் முன் என்பதேதான்.

முன் + து + இல் >  முன்றில்.

இச்சொல் பின் வல்லொலி பெற்று,  முற்றில்  ஆனது.

இன்னொரு விளக்கம். 

முன் என்பதன் மூலச்சொல் முல் என்பது.   முல் என்றாலும் முன் உள்ளது என்பதே.

முல் + து + அம் >  முற்றம்.

முல் + து + இல்  >  முற்றில்.

இவற்றில் து என்னும் எழுத்து இடைநிலையாய் வந்துள்ளது.

து (துகரம்) இடைநில்லாமல்  முகு+ இல் >  முக்கில் என்று அமைத்திருக்கலாம். முக + இல் > முகவில் என்றும் அமைந்திருக்கலாம். இவ்வடிவங்கள் அமையவில்லை ஆதலின்,  இனிப் புதிய அறிவியல் பொருட்களுக்கோ அல்லது புதிய புழக்கப் பொருட்களுக்கோ பெயர்களாக அமைக்கச் செயலிடம் உள்ளது.  முகு+ அம் > முகம் என்பதும்   முன்+ சி >  மூஞ்சி (முன்> மூன்>மூஞ்சி முதனிலை நீட்சிப் பெயர்), மூஞ்சூறு  (  மூஞ்சியானது உறுதல்,  உறுதலாவது மிகுதலே) என்பதும் முன்னரே அமைந்துவிட்ட பெயர்கள்.  ஒருவீட்டுக்கு முன் பாகம்  நீண்டிருந்தால் மூஞ்சூறு  என்று பெயர்வைப்பது சொல்லமைப்புப் பொருள் என்ற அளவில் சரியானது ஆயினும் வழக்குடன் ( அதாவது நடப்பில் உள்ள பெயருடன்) மாறு கொள்தலால் அது கூடாமை உணர்க. (கொள்தல்  > கோடல்).  நாலுகால் உள்ள ஒரு புதிய விலங்கு கண்டுபிடிக்கப் பட்டால், அதை நாம் "நாற்காலி" என்று பெயரிடுதல்  தவறு. காரணம் வேற்று வழக்குண்மைதான்.

து இடைநிலையாக வருவதுபோல  அது, இது உது என்பனவும் சொல்லாக்கத்தில் இடைநிலைகளாக வரும்.   எடுத்துக்காட்டு:  பருத்தல் என்ற வினையிலிருந்து,  பரு  + அது + அம் =  பருவதம் ( மலை).

இனிப் பாகவதர் என்ற சொல்லிலிலும் அது வந்துள்ளது.  ஒரு நீண்ட சமயச் சரிதையைப் பல  அல்லது சில பாகங்களாகப் பிரித்துப் பாடி மக்களுக்கு அல்லது மன்னர்களுக்கு / பிறர்க்கு உணர்த்துகிறவர்.

பாகம் +  அது + அர் >  பாக + அது + அர் >  பாகவதர். அதர் ( அது அர்) என வரவேண்டியது, ~வதர் என்று வருவது புணர்ச்சியினால் .  ( வகர உடம்படுமெய்).  இது விட்ணு கதை சொல்வோருக்கு வந்து, இப்போது பிற தெய்வ வணக்கத்தினருக்கும் பயன்படும் சொல்.

பாகவதம் என்பதினின்று வந்த சொல் இது என்பாரும் உளர்.  

[ து, அது முதலிய சொல்லாக்க இடை நிலைகள் இந்தச் சொற்களில் கருதப்பட்டன.  ]


பாகவதம் என்பதும் பாகங்கள் பல உள்ளதுதான்.

பகவானும் மன்னுயிர்க்கு வேண்டியதைப் பாகங்களாக்கி அவரவர்களுக்கும் உரித்தானதை வழங்குபவன் தான். (பகவு அன்,  பகவு ஆன்).

எப்படிச்சொன்னாலும்  பகு > பாகம்  (முதனிலை நீட்சித் தொழிற்பெயர்). ஓடமுடியவில்லை இதிலிருந்து.


பொழிப்பு:

இடு அப்பி  >  இடப்பி   டப்பி > டப்ப > dabba

அடைப்பு >  அடைப்பி > டப்பி >  dabba




அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.



பாரோ கிருஷ்ணையா: பொருள் தமிழ்

 இந்தக் கர்நாடகப் பாட்டின் பொருளைத் தமிழில் தருகிறோம்:

இதன் மூலப்பாடலைப் பாடியவர் கனகதாசன் என்னும் கருநாடக இசைப் பண்டிதர். (1509 – 1609).. இந்த மூலம் கீழே தரப்படுகிறது.


பாடல் சொல்வது:

வாராய் கிருஷ்ணையா

பக்தரின் மனைக்கேக, வாராயோ ( வாராய் கிருஷ்)


வாராய் முகம்காணத் தாராய் உன்நிகர் யாரோ

செகதலச் சீலனே ( வாராய் கிருஷ்)


அணிந்தபா துகைமற்றும் கால்களில் சிறு கச்சை

திம் திமி திமி திமி திமி என்னுதே

பொன் குழல் ஊதுக-வா ராயோ (வாராய் கிருஷ்)


பொன்னொளி வீசும் வளையல்களே அணிந்தாய்

கிண்கிணி கிணிகிணி கிணி என்னுதே

பொன் குழல் ஊதுக வாராயோ (வராய் கிருஷ்)


உடுப்பிலி வாசனே நிலையாதி கேசவனே

உன் பாத தாசன் பாததாசன் பாத தாசன் பாததாசன்

கனகன் வாராயோ



பொருள்


மனைக்கேக -  (பற்றரின் வீட்டுக்கு   வர).


(மூலம்)

பல்லவி

பாரோ கிருஷ்ணய்யா பாரோ கிருஷ்ணய்யா பக்தர மனகீகா

அனுபல்லவி

பாரோ நின்ன முக தோறோ நின்ன சரி யாரோ ஜகதர ஷீலனே

சரணங்கள்

அந்துகே பாதுகவு   காலந்துகே கிறு கஜ்ஜெ திம் திமி

திமி திமி திமி எனுதா பொங்குளலூதுத பாரையா    ( பாரோகிருஷ்ணய்யா)

கங்கண கரதள்ளி பொன்ங்குற ஹொளெயுத கிங்கிணி கிணி 

கிணி கிணி எனுதா பொங்குளலூதுத பாரையா  ( பாரோ கிருஷ்ணய்யா)

வாச உடுப்பிலி நெலயாதி கேசவனே தாச நின்ன பாத தாசா பாத தாச 
நின்ன பாததாச கனகனு பாரய்யா


அருஞ்சொற்பொருள்:  24072021

கிரு =  சிறு

கங்கணம்  -  காப்பு , வளையல்

மெய்ப்பு : 1700      24072021 


திங்கள், 19 ஜூலை, 2021

விரைவு, அதிரடி, திடீர்

 திடீர் என்ற சொல் மிக்க அழகாக அமைந்த சொல்போல் தோற்றமளிக்கின்றது.  பல்வகை உணவுகளில் இந்தத் திடீர் என்ற சொல் வந்து இணைந்துகொண்டு, திடீர் சாம்பார், திடீர் இட்டிலி,  திடீர்த் தோசை   என்று ஒரு கவர்ச்சியையும் உண்டாக்குகிறது.  திடீர் நடவடிக்கையும் உள்ளது. இப்போது  "அதிரடி" என்ற சொல் அதிகமாகப் புழக்கம் காண்கிறது.  பலகாலம் ஆலோசனையிலிருந்து எடுக்கப்பட்ட முடிவுகூட, ஊடகவியலாளர்களுக்கு "அதிரடி" யாகத் தோன்றலாம்!  படிப்போரையும் கேட்போரையும் கவர்வதற்காக இந்தச் சொல் பயன்படுத்தப் படுவதாகவும் இருக்கலாம்.  

ஒரு பொருளின் விலையை " அதிரடியாய் இருக்கிறது" என்று சொல்லலாம் என்பது சென்னைப் பல்கலைக் கழகக் கல்வியாளர்களின் கருத்து என்று தெரிகிறது.  பொய்யையும் அதிரடி என்னலாமாம்.  அச்சந் திகிலு மதிரடியுஞ் சொற்பனமும் என்று இணைத்துச் சொல்லப்படுவதுண்டு.  சொப்பனம் தான் சொற்பனம்.  ( உளறும் உறக்கம்).  அதிர்ச்சிதரும்படி பேசுபவன் அதிரடிக்காரன்.

அதிர்வு, அடித்தல் என்ற இரு கருத்துக்களும் அதிரடியில் உள்ளன.  திடீர் என்பது உள்ளறுத்து விளக்கச் சற்றுக் கடினமுடையதாய் இருக்கலாம்.

நீர் திடுதிடு என்று கொட்டியது என்பதில் வேகமும் மிகையும் தெளிவாகத் தெரிகிறது. திடீர் என்பதில் இந்தக் கருத்து இன்னும் இருக்கின்றது.  ஈர் என்ற இறுதி,  இவ்வேகத்தையும் மிகுதியையும் ஈர்க்கத் தக்க ( இழுக்க அல்லது உண்டாக்கத் தக்க ) தன்மையைக் காட்டுகிறது. எதிர்பாராமையும் விரைவும் திடீர்த்தன்மையில் முதன்மை பெறுகின்றன.  எ-டு:  பெண்ணுக்குத் திடீர்க் கல்யாணம்  என்ற வாக்கியத்தைக் காண்க. குப்பென்று,  திடுதிப்பென்று, திடுமென்று என்றெல்லாம் செயலடைகள் பேச்சிலும் எழுத்திலும் வருவன.

சட்டென்று என்பதும் விரைவுக்குறிப்பு.  ஆங்கிலத்தில் sudden என்பது இதுபோல் அமைந்த சொல். இத்தகைய விரைவுணர்ச்சி, அவ்வம்மொழியிலும் தோன்றியிருக்கலாம். டபார் என்ற வெடிப்பு.  "daab! There was an explosion" என்பன நீங்கள் செவிமடுத்திருக்கலாம்.  இயல்பாகவே இதுபோலும் கதைசொல்பவர்களிடம் இவற்றைக் கேட்கவேண்டும். சடார்  படார் என்பவும் அவ்வாறே.

சட்,  சடு, சடுதி என்பனவும் உள. சடுதி - ஜல்தி அணுக்கமுடையவை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.



ஞாயிறு, 18 ஜூலை, 2021

கவலையைத் தீர்ப்பது இறைப்பற்று,

உங்களுக்கும் எத்தனையோ வேலைகள்.  இந்நிலையில்,  கடவுள் கண்ணுக்குத் தெரியவில்லை என்று வாதிட்டு நேரத்தை வீணாக்கவேண்டாம்.  உங்கள் வேலைகளில் ஈடுபடுங்கள்,  ஆனால் வேலைகளக் கவலைகளாக மாற்றிக்கொள்ளவேண்டாம்.  கடவுள் இருப்பதாகவே பாவித்து,  சூடன் சாம்பிராணி கொளுத்திக் கும்பிட்டுக் கொண்டிருந்தாலும்,  நல்லதுதான்.  செலவு ஊதுபத்தி சாம்பிராணிக்கு!அந்த நேரத்தை அப்படிச் செலவிடாமல் வெளியில் போய்ச் சண்டைகளிலும் கொரனாத் தொற்றுத் தொடர்புகளிலும் ஈடுபட்டு ஏன் துயரத்தை வரவழைத்துக் கொள்கிறீர்?  சூடன் சாம்பிராணிக்குச் செலவு என்றால் வேறுவழிகளும் உள்ளன.  தியான வழிபாடு செய்யுங்கள். (ஊழ்குதல்). செலவு ஒன்றுமில்லை.  ஆனால் புகை இல்லை என்றால் கொஞ்சம் கொசுத்தொல்லை ஏற்படலாம். பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். உங்கள் மதப்படி பின்பற்றுங்கள். நன்மை உங்களுக்குத்தான்.  இறையுணா  [ பிரசாதம் ]  உட்கொள்ளுங்கள் ( நீங்களே சமைக்கலாம், நேரமிருந்தால்.).  மனம் என்பது கவலைகளின் வங்கியாக மாறிவிடக்கூடாது.  நீங்கள் செய்வது எதுவும் உங்களுக்கு நல்லதாக அமையவேண்டும்.  அதன் பலன் உங்களுக்குத் தானே வருகிறது.  குடித்துவிட்டு ஆடும் இடங்களைத் தவிர்த்து விடுங்கள். உங்கள் வாழ்வு மலரவேண்டும்.

இதுதான் இந்த வரிகளை எழுதக் காரணம். இதைத்தான்  இவ்வரிகள் முழங்குகின்றன.



கடவுளைக் காணாய்நீ -- -- -  அதனால்

கவலை  ஏனுனக்கு,     --- மனிதா!

அட எத்  தனைகவலை ----  சேர்த்தே

இந்தக் கவலையும் வேண்டுவதோ?


இருப்பதாய்ப் பாவிக்கிறாய் ---  பணிந்தபின்

எழுந்து இன் சோறுனக்கே ,

பருப்புடன் சமைத்ததுவோ  ---- ஆன்மப்

பசிக்கும்  உணவதுவே.


பழங்களால்  மாலையிடு ---  பலவும்

பாடுக   பாராட்டி.

வழங்கி வண்மைதரும் ---  உள்ளம்

வந்துவிடும் உனக்கே. 


கவலைகள் காப்பகமாய் ---- உன்மனம்

காசினியில் தவித்தால்

உவகை தருவாழ்வினை ----  நீயும்

ஒத்து நுகர்வதெங்கே?


சோடனை செய்வது எப்படி?  தெரிந்துகொள்க





அரும்பொருள்:


பாவிக்கிறாய் -  பாவிக்கவேண்டும் என்பது

இறைவன் நாமம்  -  பாவன நாமம்.  இறைமை  மறைவாக உள்ளது.  கண்ணுக்குத் தெரியவில்லை. காதுக்கும் கேட்கவில்லை.  உற்றும் அறியமுடியவில்லை.  நறுமண வடிவில்லை - மூக்கினை எட்டவில்லை.  நாவிலும் இனிதா, கசப்பா என்று அறியமுடியவில்லை.  ஐம்புலன்களுக்கும்  அப்பால் உள்ளது அது.  இறைவனின் ஐந்தொழிலில் " மறைத்தலும் " ஒன்று.   மறைவாக இருக்கிறது.

இருக்கிறது என்று தொழுவதில் உனக்கு நட்டம் விளக்கு, ஊதுபத்திச் செலவுதாம்.  எப்படியானாலும் போகும் காசு போய்த்தான் தீர்கிறது.

இதில் மிச்சம் பிடித்தேன் என்பான். அவன் வாழ்க்கையை
ஆராய்ந்தால் கடனில் இருப்பான்.

சிவன் நாமம்,  முருகன் நாமம்,  அம்மையின் நாமம் எல்லாம் பாவன நாமங்கள்.  நாமம் ஒன்றும் அவனுக்கில்லை என்கிறது சைவசித்தாந்தம்.  இந்த நாமங்கள் கடவுளை அறிதற்கு நம் மொழியில் நாம் பயன்பாடு செய்யும் நாமங்கள்.

நாவில் பயில்வது நாமம்.

பாவன நாமத்தை ஒரு பொழுதாவது பாவனை செய்வீர்.

நன்மையே நல்கும் அது.


.
வண்மை -  வளம்

காப்பகம் -  பொருள் அடையும் இடம்.

காசினி - உலகம்.

நுகர்தல் - அனுபவித்தல்

 

Conversation between grandfather and grand- daughter with photo

 ஒரு தாத்தாவுக்கும் பேத்திக்கும் நடைபெற்ற உரையடல்.


There has been an error. The photo and material are lost. Recovery will be effected as soon as possible.
Apologies to readers.

------------------------------------------------------------------------------------------------------------------------------

RECOVERED

-----------------------------------------------------------------------------------------------------------------------------

SAID THE GRANDFATHER: If there are no cats and dogs this world would have been a lousy place.
I saw a hitch-hiker's YouTube video : He had camped by a large river near the Himalayas and he was visited by 3 dogs at different times of the day. They licked his face and ate some of his biscuits with him serving them. His happiest time was with them in a stretch of 2 weeks.
God made them as companions for us, humans


GRAND DAUGHTER SAID:  Yes thatha I agree. The world will be boring without our four legged friends

------------------------------------------------------------------------------------------------------------------------
Comment:

Your dog does more than your dearest friend to make you feel you are his Maharaja.


அம்மை தமிழென்பது அமைப்பில் தெரியும்.

 மகர ஒற்று  0னகர ஒற்றாக மாறும். இது தமிழ்ப் பண்டிதன்மார் அறிந்த திரிபுதான்.  இதைப்போய்ப் புதிதாகக் கண்டுபிடிக்க வேண்டியதில்லை.

எடுத்துக்காட்டுகள் சில:

திறம்  -   திறன்.

அறம் -   அறன்.

இது கவி எழுதுவோனுக்கு அல்லது பாடுவோனுக்குத் தமிழில் ஒரு நல்ல வசதி. இதைப் பாருங்கள்_

"அறன் எனப்  பட்டதே இல்வாழ்க்கை; அதுவும்

பிறன் பழிப்......."  (குறள் )

எதுகைகள் அழகாய் அமைகின்றன.  பிறன் என்பதற்குத் தக,  அறம் என்னாமல் அறன் என்றே வந்தது. 

திறம் என்பது திறல் என்றும் திரியும். இவ்வாறு  இது  அறல் என்பதற்கு எதுகையானது.

மகர ஒற்று லகர ஒற்றாகவும் திரியும் என்றோம் அன்றோ?   

அப்படியானால் வேறு சில சொற்களிலும் இது இருக்கும்.  எல்லாச் சொற்களிலும் இது நிகழ்வதில்லை.

அம்மை என்பது அன்னை என்றாகும்   மகர  0னகரமானது.

அம் என்ற அடிச்சொல், தமிழில் தோற்றம் என்னும் பொருளை உடையது. இந்தப் பாட்டைப் பாருங்கள்.

"அமைவாம் உலகின் மக்களை எல்லாம்

அடிநாள் ஈன்ற அன்னை தந்தை

தமிழர்கள் கண்டாய் அறிவையும் ஊட்டிச்

சாகாத் தலைமுறை ஆக்கிய நாடு.   ---   தமிழ்நாடு.

இது கவி பாரதிதாசனார் பாட்டு.

உலகம் அமைந்த [தோன்றிய] ( போதே) அனைத்து  மக்களை(யும்)  தமிழ் அன்னையும் தந்தையும்  [ அடிநாளில் ]  ஈன்றனர். 

( உலகம் அமைந்த அடிநாளிலே அனைத்து மக்களையும் தமிழ் அன்னையும் தந்தையுமே ஈன்றனர் ). இவ்வாறு வாக்கியமாய் அமையும்.

அம் >  அமைவு  ( தோற்றமுற்ற காலம்).

அம்  - அழகு என்றும் பொருள்.

உலகின் மிக்க அழகான பெண் யார்?  உங்கள் அம்மாதான்.  சிறு பிள்ளையாய் நீங்கள் பார்த்துப் புன்னகை பூக்கவில்லை?  இதை  எந்த நாளும் மாறாதீர்.  உலக அழகிகளெல்லாம் பின்னர்தான்.

"ஊரெல்லாம் நீயே சென்றாலும் தானே

அம்மா போலே அழகும்

எங்கேயேனும் காணவும் ஆகுமோ சாமி?"   என்றார் இன்னொரு கவி.

கணேசன் என்னும் விநாயகன்,  எனக்கு அம்மாவைப் போலவே அழகான பெண் வேண்டுமென்று குளக்கரையில் காத்துக்கிடந்தும் அத்துணை அழகி யாருமே காணப்படவில்லை.  அம்மாவை எப்போதும் பாதுகாத்துக் கர்மவினை அண்டாமல் காத்துக்கொள்ளுங்கள்.  முற்றத் துறந்த முனிவரான பட்டினத்தடிகளும் 

முன்னை இட்ட தீ முப்புறத்திலே

பின்னை இட்டதீ தென்னிலங்கையில்

அன்னை இட்டதீ அடிவயிற்றிலே

யானு  மிட்ட தீ  மூள்க மூள்கவே

என்று கதறியுள்ளார்.   எவ்வாறு மறப்பீர்  அன்னையை.   " அம்மைய்ப்பா உங்கள்  அன்பை மறந்தேன், அறிவிலாமலே நன்றி மறந்தேன்"  என்பது பாட்டு.

தாயினும் ஒண்பொருள் ஏது?  ஈன்ற தந்தை சொல் மிக்கதோர் மந்திரம் ஏது.

அம்மா அழகு. 

அம்மை,  அன்னை என்ற திரிபுகள் உண்டு.  ஆனால் அல்லை என்ற திரிபு இல்லையோ? திறம், திறன், திறல் என்பதுபோல்,  அம்மை, அன்னை, அல்லை என்றுமாகி,  தாயைக் குறிக்கும்.

அமைப்பு என்ற சொல் தமிழாதலின், அம்மை தமிழாகும்.  இரண்டுக்கும் அம் என்பதே அடிச்சொல்.

இதை அம் என்ற அடிச்சொல் நமக்குத் தெரிவிக்கிறது.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

மெய்ப்பு 2300 17072021


வெள்ளி, 16 ஜூலை, 2021

வாக்கில் - வக்கீல். மற்றும் ஒரு வழக்குமன்ற நிகழ்வு.

 இரவு நேரங்களில் சில அயல்மொழிப் பாடல்களையும் கேட்டு நான் ஆனந்தமாக இருப்பேன்.  சொற்களை இசையுடன் இணைத்து எப்படிக் கையாளுகிறார்கள் என்பதைச் சுவையுடன் எடுத்தறிவதுதான் என் நோக்கம்.  வீட்டில் நாய்க்குட்டி இருந்த காலங்களில் அதுவும் அமர்ந்து கேட்கும். "என் இயமானனின் குரல்" என்று அது நினைத்துக்கொண்டது போலும்.  பாட்டுகளைக் கேட்டு முடித்துவிட்டு  அதற்குப் பாலூற்றினால் நன்கு குடித்துத் தன் விழிகளினால் ஒரு நெஞ்சுநிறைவைப் புலப்படுத்தும்.    பாடல்களில் சீன மொழியிலும் நெரடுதலான வரிகளும் கையாளப்படுகின்றன.  மலாய்  மொழியிலும்  இவ்வாறு உள்ளன. "பூருங்க்  காக்கத் துவா" என்ற மலாய்மொழிப் பாட்டு அரசியல் அறிஞர் திரு. லீ குவான் யூவையும் கவர்ந்திருந்தது என்று சொல்கிறார்கள். மனித வாழ்வில் இசையுடன் மகிழ்தலும் வசைகெட வாழ்தலும் அல்லனவாய்ப் பிறிதோர் ஊதியம் இலது  காண்க.

உருதுமொழிப் பாடல்களை அம்மொழிக்காரர்கள் சுவைத்துப் போற்றுகின்றனர். சிலர் தங்கள் பின்னூட்டங்களில் வானளாவப் புகழ்கின்றனர்.  உருது இனிமை என்னும் இது உண்மை என்றே தெரிகிறது.  அவ்வம்மொழிக் காரர்களுக்கும் அவர்கள் மொழி இனிது என்பதில் ஐயம் ஒன்றுமில்லை. நாம் கேட்பதற்கே மிக நன்றான பல பாட்டுகள் உள்ளன.

கால ஓட்டத்தில்,  உருது என்பது ஓர் இளமை தோய்ந்த மொழியாகும். வக்கீல் என்ற சொல்  உருதுச் சொல் என்று சிலர்  கூறியுள்ளனர்.  வக்கீல் என்னும் சொல்லின் உள்ளறைகளை யாவை என்று புகுந்து அகழ்ந்து காண்போம். அதன்முன்  வக்கீல் தொழிலில் சொல்வன்மையையும் சிறிது காண்பதை மேற்கொள்வோம்.

சொல் ஆய்வு எவ்வாறாயினும் ஒரு வழக்கின் வெற்றி வக்கீலைச் சுற்றியோடும் திசாபுத்திகளைப் பொறுத்துத்தான் அமைகிறது என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்கக் கூடும். அவர்தம் வாதத் திறனே வெற்றியைத் தீர்மானிக்கிறது என்பீர்கள். இருக்கலாம்.

ஒரு வழக்குக்காக நீதிமன்றில் இருந்தோம்.  காலையில் 9.30 மணிக்கு வரவேண்டிய வக்கீல் பத்தரை மணிக்குத்தான் வந்து சேர்ந்தார். மன்றம் தொடங்கிய வுடன்,  அவர் எழுந்து, ஒரு  சாலையின்  பெயரைச் சொல்லி அங்கு வாகன நெருக்கடி நேர்ந்துவிட்டது என்றார். அதற்கு நீதிபதி, "  அதுதான் தினமும் நடக்கிறதே.  அதற்கென்ன"  என்றார்.  அதற்கு வக்கீல்,  சில கல் தொலைவு அந்த நெரிசல் நீண்டுவிட்டது என்றார்.  " அதுதான் தினமும் நடக்கிறதே.  ஏன் அதைச் சொல்கிறாய் ?"  என்றார்.  " அங்கு,  காவல் துறையினர் யாரும் வரவில்லை!" என்றார் வக்கீல்.   அதற்கு நீதிபதி, "அதைப் பற்றி எல்லாம் எனக்கென்ன கவலை?"  என்றார்.   அதற்கு வக்கீல்,  " இது நாட்டிலே தினசரி நிகழ்வாகி விட்டது.  பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்! " என்றார்.  " நான் போய் சாலைப் போக்குவரத்தைச் சரிசெய்ய முடியாது.  என்னுடைய வேலை என் முன் இருக்கும் வழக்கை விசாரிப்பதுதான் அதற்கான முடிவைத் தெரிவிப்பதுதான்.  தொடர்பற்ற செய்திகளை என் முன் வைக்கவேண்டாம்!"  என்றார்.  "நான் சொல்வதைக் கொஞ்சமும் செவி சாய்க்க மாட்டேன் என்று நீதிமன்றம் என்னிடம் சொல்கிறது!" என்றார் வக்கீல்!

"இதோ பாருங்கள்  திருவாளர் வக்கீல்! நீர் ஒன்பதரைக்கு இங்கு வந்திருக்கவேண்டும்.  நீர் குறித்த நேரத்தில் வரவில்லை என்று குறித்துக்கொண்டேன்.  நீர் இந்த வழக்கில் இல்லை. உம்மை இல்லாமல் இந்த வழக்கு நடைபெறும்!  நீர் கிளம்புவீரா இருப்பீரா என்பதைப் பற்றி நீதிமன்றத்துக்குத் தெரியாது.  நான் ஏற்கெனவே  நீர்  வாராத நேரத்தில் நீர் வராவிட்டாலும் வழக்கை நடத்துவது என்று தீர்மானித்துவிட்டேன்! இந்த வழக்கு எண்ணிறந்த முறைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  நீர் செய்யவேண்டியதெல்லாம் இனி  உம் விருப்பம்!" என்றார் நீதிபதி.

" இது காரண காரியங்களைப் புரிந்துகொள்ளாத நீதிமன்றம்.  நான் எனது எதிர்ப்பையும் மறுப்பையும் பதிவிட விரும்புகிறேன்!" என்றார் வக்கீல்.

"நீர் பதிவிட விரும்புவதை நான் குறித்துக்கொள்ளவில்லை!" என்றார் நீதிபதி.

" நானே இவ்வழக்குக்கு வக்கீல். என்னை இல்லாமல் எப்படி இது போகும்? " என்றார் வக்கீல்.

" நீர் குறித்த நேரத்தில் வரவில்லை.நீதிமன்றத்தைப் பொறுத்தவரை நீர் இதில் இல்லை. போவீரோ இருப்பீரோ, நீதிமன்றம் இதில் கவலை கொள்ளவில்லை!" என்று சொல்லிவிட்டு,  வழக்குரைஞரைப் (பிராசிக்யூட்டர் ) பார்த்து,  " உன் சாட்சியைக் கூப்பிடு" என்றார் நீதிபதி.

இப்போது மக்கள் பார்வை வரிசைகளில் இருந்தவர்கள் அனைவரும் விழிக்கத் தொடங்கிவிட்டனர்.

வழக்குரைஞர் அப்போது எழுந்து கொஞ்ச நேரம் ஒத்திவைக்கும்படி கேட்டார். அதற்குப் பத்து நிமிடங்கள் வழங்கியது நீதிமன்றம்.

வழக்குரைஞர் வக்கீலிடம் போய், " என்னய்யா இது! மன்னிப்புக் கேட்டுக்கொண்டு வழக்கை நடத்துங்கள் " என்றார்.

" இந்த நீதிபதி வீணாக என்னை அலைக்கழிக்கிறார்" என்றார் வக்கீல்.

" இல்லை! இல்லை.  நீர்தான் இந்த வழக்கில் குற்றவாளிக்காகத் தோன்றுகிறீர். இன்று நீர் வாகன நெருக்கடியில் மாட்டிக்கொண்டதனால் மன்னிக்க இப்போது  வேண்டுகிறீர்.  வழக்கை நடத்தவேண்டி அனுமதி கேட்கிறீர்----- என்று இதுவரை சொல்லவில்லையே!" என்றார் வழக்குரைஞர்.

" ஆ!  அதைச்சொல்ல மறந்தேன்.  இந்தச் சாலை நெரிசல்கள் உயிரை வாங்கி நம்மை எல்லாம் தடுமாற்றம் அடையச் செய்பவை " என்று வழக்குரைஞரிடம் சொன்னவர் , மன்றம் மீண்டும் கூடியவுடன் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு,  அவரே நெருக்கடியில் மாட்டிக்கொண்டதையும் விவரித்தார் வக்கீல்.

" சரி, ஏற்றுக்கொள்கிறோம். எப்படியானாலும், நீர் மன்றத்துக்கு நடந்து வருவீரா பறந்துவருவீரா, எங்களுக்குத் தெரியாது. வரும் வழியை நீர்தாம் தீர்மானிக்கிறீர்.  அது எங்கள் கையில் இல்லை!" என்று நீதிபதி சொல்ல, அதன் பின்பு,   வழக்கு  அட்டவணையில் கண்டபடி -- ஆனால் காலம்தாழ்ந்து தொடங்கிற்று.

இவ்வாறெல்லாம் இருப்பினும்,  குமுகத்தில் வக்கீல்களுக்கு இருக்கும் மதிப்பு அதிகமாகும். ஆனால் பலர் வாதங்களில் மாட்டிக் கொண்டு விழிக்கிறார்கள். புத்தகம் படிப்பது வேறு. வாதத் திறன் வேறு ஆகும்.

வழக்கின் வெற்றி பல காரணங்களால் தீர்மானம் அடைகிறது.  அது வக்கீலின் வாக்கில் அமைந்துள்ளது என்போமா?  இருக்கலாம். வக்கீலின் வாதம், இருண்ட அறையில் ஒரு விளக்கு என்றனர் பெரியோர்.

வழக்கின் வெளிச்சமும் வெற்றியும்,  நம்      நோக்கில்,   வக்கீலின் வாக்கில்  உள்ளது என்பது  எவ்வாறோ உண்மைதான். அதனால், இங்கு  வாக்கில் என்ற சொல்தான் வக்கீல் என்று அமைந்துள்ளது என்று சொல்வோம். 

வாக்கு இல் என்றால் வாக்கு என்பதன் இல்லம் வக்கீல். இது திரிந்து வக்கீல் ஆனது. வாக்கு - means arguments      இல் (residence of those arguments)

ஈல் என்று நாம் நீட்டி ஒலித்தாலும் பலர் வாக்கில் என்றும் சொல்கிறார்கள்.

வாக்கு என்பது தமிழிலும் சங்கதத்திலும் உள்ள சொல்தான்..  

இது உருதுக்குச் சென்றாலும் பெரிதும் திரியாத ஒரு சொல் என்னலாம். தமிழில் பொருள் தருகிறது. பிற மொழிகளுக்குத் தாவி இருக்கலாம்.  வாக்கு என்பது தமிழ் சங்கதம் இரண்டிலும் உள்ள சொல்தான்.

வாய்க்கு > வாக்கு. இடைக்குறை யகர ஒற்று. வாய்க்கு  வருவதே வாய்மொழி. இதுபோன்ற யகர மெய் குறுகிய இன்னொரு சொல் வாய்த்தி > வாத்தி > வாத்தியார் ஆகும்  உப அத்தியாய >உபாத்தியாய என்பது வேறு. வாய்த்து >வாத்து என்பதும் காண்க. வாய் நீண்ட பறவை.

இல் -  இருக்கும் இடம்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.


வியாழன், 15 ஜூலை, 2021

பகை, பரம்பு, வரம்பு

பரம்பு  என்றாலும் வரம்பு  என்றாலும் ஒன்றுதான். இரண்டும் தமிழில் உள்ள சொற்கள்.  திரிபு விதிகளின்படி  பகரம் வகரம் ஒன்றுக்கொன்று மாற்றீடு கொள்ளும்.  இங்குப் போலி என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை.  போலி என்பதற்கு நாட்டில் மோசடி செய்யும் மனிதன் என்ற அர்த்தம் ஏற்பட்டுவிட்டது. ஒன்றுக்கு ஒன்று போலி என்று  விளக்கும்போது,  அது எப்படி?  இரண்டும் போலி என்று சொல்கிறீர்?   அப்போது உண்மையான மூன்றாவது எங்கே என்று கேட்கிறார்கள்.இது வாழைப் பழக்கதை போலாகிவிடுகிறது.  சிலர் போலி என்பதை வைப்பாட்டி என்ற பொருளில் வழங்குகிறார்கள்.  இவள்தான் அசல், மற்றவள் போலி என்கிறார்கள். போலியை முழுமையாகக் கைவிட்டுவிடவில்லை. தற்காலிக நிறுத்தம்தான்.

பகை என்பது வகை எனற்பாலதை நோக்க போலித்திரிபு வகையினது,   ஆனால் போலி அன்று.  பகை என்பது எதிரித்தன்மை கொண்டோரிடம் நிலவும் சூழலைக் குறிக்கும். இரு குழுக்களாகவோ அல்லது அவற்றுக்கு மேலாகவோ பிரிந்து நிற்கின்றார்கள்,  அடிக்கடி விரோத குரோதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பது பொருள்.  பகுதல் வினைச்சொல்.  பகு> பகு+ ஐ > பகை.   பகு <> வகு,   வகு+ ஐ > வகை எனல்  கண்டுகொள்க. இதனை நம் தமிழறிஞர்கள் சென்ற நூற்றாண்டுக்கு முன்னரே எடுத்துக்காட்டியுள்ளனர். வசந்தம் > பசந்த் என்று பிறமொழிகளில் வழங்கும்.  பிறமொழிகளில் பெரும்பாலும் அம் விகுதி இராது. வ என்ற முதலெழுத்து ப என்றாகும்.  இத்தகைய  ப -வ திரிபு இந்திய மொழிகளல்லாத பிற உலக மொழிகளிலும் உள்ளபடியால் இதனை "not language specific"  என்று மொழிநூலறிஞர்கள் வகைப்படுத்தியுள்ளனர். எனவே இது பன்மொழிப் புழக்கப் போலித்திரிபு  எனலாம்.

சொல்லமைப்பில் பாகுபாடு என்றுமட்டும் பொருளுடைய பகை என்னும் சொல்,  அதனினும் மேலானதும் விரிந்ததுமான பொருளைத் தரும் சொல்லாக இன்றிருப்பதால்,  அதைத் தொல்காப்பிய முனிவரின் இலக்கணப்படி, திரிசொல் என்றே சொல்லவேண்டும். பகு என்ற சொல்,  பல்கு (பல்குதல்) என்ற வினையுடன் தொடர்பு கொண்ட சொல்.  பல்கு என்பதில் ல் என்னும் லகர ஒற்று இடைக்குறைந்துவிட்டால் அது பகு  ஆகிவிடுதல் தெளிவு ஆகிறது. ஒன்று பலவாதல் உட்பகவினால் ஆவதொன்றாய்க் கொளற்கும் உரித்தாம். பாகுபாடு என்ற சொல், இரு முதனிலை த்திரிபொட்டுச் சொல் ஆகும்.

இணைந்திருங்கள். நன்றி.

உரையாடலை இன்னோரிடுகையில் தொடர்வோம்.

Edited 1746  16072021 edits lost

To be reviewed.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.





 

உலாச்செல்வோர் தங்கிடத்தின் அழகு.

 இந்த இடம் சுவிட்சர்லாந்தில் உள்ளது.  "சாத்தூ டி ஷில்லியோன்"

chatteau de chillon

இது கோட்டையின் வெளியழகைப் புகழும் கவிதை.

----------------------------------------------------------------------------------------

பேராற்றின் கரைபாதி

நீரோட்டம் மருவிமகிழ்

ஊறாத தரைதன்னில்

நேருயர்ந்த நெடுங்கோட்டை.  1


பேராறு - பெரிய ஆறு.

ஊறாத தரை - ஆற்றுநீர் புகாத தரை.


முன்மாந்தர் முடித்துவிட்ட

மண்காணாச் சாளரங்கள்!

தண்காற்று நாள்முழுதும்!

வெண்ணீரில் இரவிமுகமே. 2


முன்மாந்தர்- பழங்கல மக்கள்  (ஆட்சியாளர்கள்.)

தண் - குளிர்ந்த

மண்காணா - நீரைமட்டுமே காணக்கூடிய

சாளரங்கள் - சன்னல்கள்

இரவி - சூரியன்

வெண்ணீர் - வெள்ளை நீர்


ஊறிமலைப் புறத்திருந்து

ஓடிவரும் நீரின்மிகை

மீறிவரும் காற்றினிலே

ஆடியகல் சிற்றலைகள்  3


ஆடி அகல் - ஆடிக்கொண்டு அகன்று செல்லும்

மீறி -  கூடுதலாக

நாற்புறமும் சாய்கூரை

நடுவிலெழும் கூர்முகமே

மேற்புறத்து நெடுங்கூடு

கொடும்புயலில் மடங்காது.   4


இது ஓர் எழும் கூடுபோன்ற கட்டிட அமைப்பு

இது மேற்பறந்து பார்க்கையில் தெரியும் காட்சி


உலாவருவோர் தங்குதலை

வளாகமெனில் கலாச்சுவையே..

எலாயிரவும் நிலாவெனவே

சொலாமகிழ்வு மெய்துவரே.   5


தங்கு - தங்கும்.

தலை வளாகம் - தலைமையான கட்டிடம்.

எலாயிரவும் - எல்லா இரவும்.

நிலா - சந்திரன்.

சொலாமகிழ்வு - சொல்லவியலாத ஆனந்தம்.

எலாயிரவும் ( இல்பொருள் உவமையின்பால்படும்)

கலாச் சுவை -  கலையழகு தரும் இரசனை.



புதன், 14 ஜூலை, 2021

துவும் அதுவும் வந்தவை இன்னொரு மொழிக்கா?

 ஒரு சொல்லை வடிக்கும்போது  பெரும்பாலும் அஃறிணை விகுதி என்று உணரப்படும் து-வோ,  அல்லது அதன் முழுச்சொல்லாகிய அது ( மற்றும் இது, உது )வோ வந்துவிட்டால் அது தமிழா என்ற ஐயப்பாடு சிலர்க்கு வந்துவிடுகிறது. இப்போது இதைக் கவனித்து உண்மை அறிய முயல்வோம்.

தென்றல் என்பது வீசும் காற்று -   அது இனியது கவிகளைத் தூண்டிவிடுவது என்பதெல்லாம் ஒரு புறம் இருக்க, நாம் அதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் இருக்கலாம் என்பதை கவனத்திலிருத்துவோம்.

தென்றல் நம்மை வந்து தழுவும் காற்று.  மெல்லிய இன் காற்று எதுவுமே மனிதரையும் மரங்களையும் செடிகளையும் எதிரில் உள்ள எதையும் வருடித் தடவிச் செல்கிறது.  அதனால் மருவுதல் என்ற சொல்லிலிருந்து இக்காற்று வகைகளுக்குப் பெயர்கள் அமைந்துள்ளன.  இது மிக்க இயல்பான ஒன்றன்றோ?

தொழிற்பெயர்கள் பலவகைகளில் அமைவன.  தொழிற்பெயர் என்றால் வினைச்சொல்லிலிருந்து அமைவது. வினையிலிருந்து ஏற்பட்ட பெயரைத்தான் அப்படிச் சொல்கிறார்கள். பல வேளைகளில் மற்ற உரிச்சொற்களிலிருந்தும் பெயர்கள் அமையும்.

வினைச்சொல்: கடு(த்தல்.)  இதன் பொருள்: கடுமையாகுதல்.

கடு+ இன் + அம் =  கடினம்.   கடு: பகுதி,  இன் - சொல்லமைப்புக்கு உதவும் இடைநிலை; அம் - விகுதி.  பொருள்: கடுமையான சூழல்.

கடு > காடு.  ( கடுமையான நிலப்பகுதி).   முதனிலை ( அதாவது முதலெழுத்தாகிய "க",   இங்கு "கா" என்று நீண்டு, இடப்பெயராகிவிட்டது.

இதேபோல் பிற:  சுடு- சூடு,  படு - பாடு என்று ஏராளம்.

இப்போது பாருங்கள்:

மரு(வுதல்) - வினைச்சொல்.  அடிச்சொல் மரு என்பதே.  மரு என்பது முதலெழுத்து நெடிலானால்,  மாரு என்று வருமே.

மரு + அது + அம் >   மரு + து + அம் >  மாரு + ~து + அம் > மாருதம்.

மனிதரையும் பிற அனைத்தையும்  மருவிச்செல்லும் காற்று.  காற்று வீசினால் மருவாமல் ஓடிவிடாது. மருவித்தான் செல்லும். அதனால்தான் அதற்கு மாருதம் என்று பெயர்.  மரு என்ற அடிச்சொல்லின் பொருளை மனத்துக்குள் நுழைக்க வேண்டுமென்றால் மரு மரு மரு மருவு என்று சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். அப்போது காதிலேறி அது தமிழ் என்று தெரிந்துவிடும்.

இந்தச் சொல்லில் அது என்ற இடைநிலை வந்துள்ளது. அதனால் அது பிறசொல் ஆகிவிடாது.  சொல்லின் எல்லா உள்ளுறுப்புகளும்  தமிழே ஆகும்.

மலை என்று நாம் சொல்லும் உயர்ந்த - எழுந்த - தரையினின்று மேலோங்கிய நிலப்பகுதி,  பருத்தது;  அதாவது பெருத்தது என்று சொல்லலாம்.   அது பருத்தது:  பரு+ அது >  (புணர்த்தினால்) பருவது. அதனோடு அம் சேர்த்தால் பருவதம் .  மொத்தத்தில் உருவில் மலைக்க வைக்கும் நிலத்து மேலெழுச்சி ஆகும்.  அது என்ற இடைநிலை இருப்பதால் கேட்க நன்றாக இல்லை என்று கருதினர் போலும்.  அது என்பதை நடுவில் போடாவிட்டால், பரு + அம் > பரம், அல்லது இடையில் ஓர் உடம்படுமெய் கொடுத்து பருவம் என்றன்றோ வரும். அப்போது பொருள் மாறிவிடும். வேறுபடுத்துவதற்காகத்தான் அது நடுவில் வைத்தனர், சொல்லாக்கத்திலே.

மலை பருத்தது என்றுஎப்படிச் சொல்லலாம்?  அதிகம் சாப்பிட்டு வயிறு பருத்தது எனலாம். மலை எப்போது ஒரே வாட்டசாட்டத்தில்தான் இருக்கும்.  ஆகையால் தவறாய் அமைந்த சொல் என்று வாதத்தை எழுப்பலாம். இதற்கு நீங்கள், ஆம் ஆம், மலை எப்போதும் ஒரே அளவில் உள்ளதுதான்.  இந்தச் சொல்லைப் பயன்படுத்திக் கவி எழுதக்கூடாது என்னலாம்.  

இப்படி எல்லாம் விதண்டை பேசினால், நாய்க்கு நாய் என்று பெயர் வைத்தது தவறு.  நா என்ற நாக்கு மட்டுமா நீட்டிக்கொண்டிருக்கிறது?  வாலும் அன்றோ நீட்டிக்கொண்டிருக்கிறது. நாய் என்னாமல் நாவாலி என்று சொல்லவேண்டும் என்று நீங்களும் ஒப்பலாம்.

நாய் என்ற சொல்லைப் பாண்டியன் அவையில் பயன்படுத்தாமல் ஒதுக்கிவைத்துக் கவிதை பாடிவிட்டுப் பரிசில் பெற்று வருவீர்.  ஆகவே தமிழ் என்ன ஆனது என்றால் பருவதம், நாய் என்ற சொற்கள் கவிதைக்கு ஆகாதவை என்று வெற்றிகரமாகத் தீர்மானித்துவிட்டுத் தமிழுக்கு இருசொற்களைக் குறைத்துவிட்டீர். 

இப்படி அது சரியில்லை, இது கூடாது என்று தவிர்த்த சொற்களெல்லாம் சொர்க்கத்தில் சென்று தனிமொழியானது தமிழனுக்கு வைத்த ஆப்பாகவும் கருதலாம்.  இன்றேல் இவை தொலைந்துவிடாமல் பாதுகாக்கும் ஒரு வங்கிமொழியாகவும் அதைக் கருதலாம்.

எப்படியானாலும் இவை தமிழே ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.