மனிதன் நினைவு நிலைத்திருக்கும்போதே இறைவனை நினைந்துருகித் தன் ஆன்மாவுக்குப் பற்றுக்கோட்டினைப் பெற்றுக்கோடல் அறிவுடைமை ஆகும். அவன் நினைவிழந்து நீங்கும் நேரத்தில் இஃது வாய்ப்பதில்லை.
ஆகவே நினைவுநிலை என்னும் ஸ்மரணம் மிக்க முன்மை வாய்ந்ததாகிறது.
இப்போது இச்சொல்லை அறிந்தின்புறுவோம்.
சுருக்கமாக:
மற அறு அணம்
அதாவது மறத்தலை அறுத்த நிலை.
அணம் என்பது நிலை குறிக்கும் விகுதி.
அறு அணம் என்பன அறணம் ஆகிறது.
மற அறணம் > மறணம் ( மறறணம் > மறணம் : ஈரெழுத்துக் கெட்டன )
வகர உடம்படுமெய் தமிழில் இரு முழுச்சொற்கள் புணர்வில் வரும். பிற மொழிப்புனைவில் மற்றும் தமிழ்ச் சொல்லமைப்பிலும் வராதும் போம். பழைய இடுகைகள் காண்க. மறணம் என்பதை ஸ்மரணம் ஆக்க அழகிய சொல் கிட்டிற்று.
இனி இப்புனைவில் பகுதி + பகுதி + விகுதி என்று சொல்லானது பழமை நெறியினாலே அமைவுண்டு அது பிறப்பிக்கப்பட்ட பின்புதான் முறைப்படி
தேவையற்ற ஒலிகள் விலக்குண்டன என்பதும் அறிக. தலையெழுத்தே பிற்சேர்க்கை ஆயிற்று. இஃது இரு பகுதிப் புனைவு,
இதுவே நினைவு நிலையைச் சுட்டும் சொல்.