வியாழன், 30 செப்டம்பர், 2021

அத்தான் என்ற சத்தான சொல் அமைதல்

 அத்தான் என்ற சொல்லை  அதிகமாகப் பயன்படுத்தியவர்கள்  திரைத்துறையினரா அல்லது மனைவியாகி இல்லறம் நடாத்தியவர்களா என்பது தெரியவில்லை. இந்திய மக்கள் பெரும்பாலும் அகமண முறையைப் பின்பற்றிக் குடும்பமானவர்கள் என்று தெரிகிறது.  ஆனால் இந்த மணமுறை எவ்வளவு காலமாகப் பின்பற்றி வரப்பட்டுள்ளது என்பதைப்  பற்றிய ஆய்வு  செய்யப்பட்டு  நூல்கள் எழுதப்பட்டுள்ளன என்று  தெரிகிறது.  இவற்றில் காணப்படும் ஆய்வு முடிவுகளைக் கொண்டு,  அத்தான் என்ற சொல் எவ்வாறு அமைந்தது என்பதை விளக்க முடியாது.  இதற்குக் காரணம்,  இந்நூல்கள் சொல்லாய்வு நூல்கள் அல்ல.

மேலும் அத்தான் என்பது தமிழ்ச்சொல்லாக உள்ளது.

இது அமைந்த விதத்தை மிக்கச் சுருக்கமாகவே விளங்கவைத்துவிடலாம்.

புருடனை அத்தான் என்று அழைத்தாலும்,  புருடன் அல்லாத  ஆனால்  முறை உள்ள ஆண்மகனையும் அவ்வாறு அழைக்கலாம் என்று தெரிகிறது.  திருமணம் ஆகாத பெண்ணாய் இருந்தால்,  திருமணம் செய்துகொள்ளும்  முறை உள்ளவரையும் அவ்வாறு அழைக்கலாம் என்று தெரிகிறது.

இதப் பற்றி நீங்கள் அறிந்ததைப் பின்னூட்டம் இடுங்கள்.

அத்தை என்ற சொல்லிலிருந்து அத்தான் என்ற சொல் அமைந்திருக்கலாம் என்று சென்னைப் பல்கலைக் கழகத்தின் பேரகராதி கோடிகாட்டுகிறது. அத்தன் என்ற சொல் அப்பனைக் குறிப்பதால்,  அத்தை என்பது அதன் பெண்பால் சொல் என்பது பொருந்துவதாகிறது.

அத்தன் என்பது தகர பகரத் திரிபுண்மையால் அப்பன் என்று மாறுகிறது. மேலும் தகர சகரத் திரிபுண்மையாலும் அச்சன் என்று மாறுதலுடையதாகிறது.   வாயில் வாசல் என்று யகர சகரத் திரிபுண்மையால் அத்தன் என்பதும் அய்யன் என்று மாறுவதுடைத்தாகிறது.  அத்தனை அய்யன் ( ayya )  என்றழைக்கும் முறை மலாய்க்காரர்களிடமும் உள்ளது.   ஆனால் அன் விகுதி இல்லாமல் அய்யா என்று குறிப்பர்.

தகரத்துக்கு  டகரம் பரிமாற்றமானால்,  அத்தன் > அட்டா > டாடா > டாடி > டாட் என்று வந்துவிடும்.  வெள்ளைக்காரனும் இந்தியாவுக்கு வந்த காரணத்தால் திரிபுகளில் அவனும் பங்காளி ஆகிவிடுகிறான்.  த் என்ற ஒலியை ட என்று அழுத்தி உளைப்பது ஆங்கிலருக்கு வழக்கம்.  சிதம்பரம் என்பது சிடாம்ப்ரம் என்றன்றோ ஒலிக்கின்றனர். சிதம்பரம் பெரியசாமி  ( imagined name )   என்பதும் சிடா பெரி என்று ஆங்கிலம்போல் ஆகிவிடுகிறது.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

 

கோவிட் தகவல்

 [Gov.sg அனுப்பிய தகவல் - செப்டம்பர் 30]


செப்டம்பர் 29, நண்பகல் 12 மணி நிலவரப்படி, கொவிட்-19 நோய்தொற்றால் 1,335 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், கடுமையாக நோய்வாய்ப்பட்ட 197 பேருக்குப் பிராணவாயு தேவைப்படுகிறது; 34 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.


கடந்த 28 நாட்களில், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில், 

- மிதமான அறிகுறிகள் உடையோர் அல்லது அறிகுறிகள் அறவே இல்லாதோர்: 98.1%

- பிராணவாயு தேவைப்படுவோர்: 1.6%

- தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டோர்: 0.2%

- உயிரிழந்தோர்: 0.1%

  

செப்டம்பர் 28 நிலவரப்படி, நம் மக்கள்தொகையில், 

- முழுமையாக / இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 82%

- குறைந்தது ஒரு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 85%


செப்டம்பர் 29 நிலவரப்படி, சிங்கப்பூரில் புதிதாக 2,268 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


go.gov.sg/moh290921

புதன், 29 செப்டம்பர், 2021

சொல் திரிபுகளை அறிதிறன் - நெறிமுறைகள்


திரிபுறு சொந்தரிகள்

( திரிபுற்ற, சொம் - சொத்து;  தரி - தரித்தோர்!)

 தனக்கு ஓர் இடர் விளையக்கூடும் என்னும் அச்சம் சட்டென்று உணரப்படுவதால் அதன் உடன்செயலாக  வேகமெடுத்துப் பாய்ந்து அப்பால் சென்று தப்பித்து விடுகிறது பாம்பு ( இங்கு யாம் ஓடுதல் என்ற சொல்லை வாக்கியத்தில் பயன்படுத்தவில்லை ).  சில சொற்களைத்  தமிழறிஞர் மு. வரதராசனார் ஆராய்ந்தபோது,  பாய்ந்து சென்று தப்புவதாலே அதற்கு அப்பெயர் வந்தது என்று முடிவு செய்தார்.

பாய்+ பு   > பாம்பு என்பது அவர் முடிவு.

பருப்பை வேவிக்கும் போது,  அது சில நிலைகளைத் தாண்டித்தான் இறுதியிற் குழைவு நிலையை அடைகிறது.  பருப்பு வெந்துவிட்டதா, வெந்துவிட்டதா என்று இரண்டு மூன்று முறை மூடியைத் திறந்து பார்க்கும் அம்மையார் எவருக்கும் அது அடையும் பல்வேறு நிலைகள் சொல்லவேண்டாதவை  ஆகும்.  அதுபோல் சொல்லும் உருமாறி மிகுங்காலோ சுருங்குங்காலோ பல்வேறு இடைவடிவங்களை அடையும்.    பாய்ப்பு  என்று வராமல் பாம்பு என்றன்றோ வந்துள்ளது.  இந்த இடைவடிவங்கள் எந்த அகராதியிலும் கிடைப்பதில்லை,  சில சொல்லாக்க வல்லுநர்கள் இவற்றையும் அறிந்து தங்கள் நூலில் கூறியிருப்பார்கள்.   சிலர் இடைவடிவங்களைப் பிறைக்கோடுகளுக்குள் இட்டு விளக்குவர்.  இந்த இடைவடிவங்களைச் சொல்லாவிட்டால் புதிதாக இந்த ஆய்வைச் சந்திக்கும் ஒருவனுக்குப் புரியாமற் போய்விடும் என்பதற்காகவே இடைவடிவங்கள் தரப்படுகின்றன.

ஐரோப்பியச் சொன்னூலில்  ( சொல் நூலில் )  சொல்,  தொடங்கிய மொழியிலிருந்து வெவ்வேறு ஐரோப்பிய மொழிக்கும் எந்த எந்த வடிவத்துடன்  பயணித்து இறுதியில் இன்று காணப்படும் நிலையை அடைந்தது என்பதைக் காட்டியிருப்பர்.  இந்த மாற்றங்கள் மக்கள் சொல்லை ஒலிக்கும் நாவின் கொள்திறம் காரணமாகவே ஏற்படுகின்றன.  மற்ற மொழிக்காரர்களிடம் நாம் வாழ்ந்து பழகியிருந்தால் சொற்கள் இவ்வாறு  தோன்றல்,  திரிதல், கெடுதல்,  குறைதல், மிகுதல்  என்ற விகாரங்களை அடைந்து இறுதிநிலையை அடைகின்றன என்பதை செவிப்புலன் மூலம் கண்டு அறிவறிந்து கொண்டிருப்போம்.  எடுத்துக்காட்டாக,  சீனமொழி மட்டுமே கற்ற ஒருவரிடம் " மாரிசாமி"  என்ற பெயர் சென்று சேர்ந்திருந்தால், அவர் அதை "  மாலிஸமே"  என்று உளைத்திருப்பார்.  யாம் இந்தக் கதையை உங்களிடம் கூறாமல்,  எடுத்த எடுப்பில்  " மாலிஸமே"  என்ற சொல்லைக் கொடுத்து இது என்ன என்று கேட்டிருந்தால் உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புக் குறைவே  ஆகும்.  எமக்கும் அவ்வாறே.  Sauce for the goose is sauce for the gander!!  அதாவது இந்நிலை பலருக்கும் பொருந்துவதே.

சொல் பொருள் இரு திரிபுக்கும் ஆங்கிலச்சொல் எடுத்துக்காட்டு:-

மேடம் என்ற ஆங்கிலச் சொல் சில திரிபுகளினுடனேதாம் நம்மிடம் வந்து சேர்ந்துள்ளது.  இலத்தீனில் அது "மியா டொமினா" என்றிருந்தது. இச்சொல் பழைய பிரஞ்சு மொழிக்குச் சென்றபோது,  மா டாம்  (என் பெருமாட்டியே) என்று மாறிற்று. இந்நிலையில் இவர் திருமணமானவராயிருப்பார். அல்லது மூப்பு அடைந்தவராய் இருப்பார். அல்லது தம் மேல்நிலையைப் பாசாங்கு செய்துகொண்டிருப்பவராய் இருப்பார். இந்தப் பயன்பாடு 1590களில்  ஆகும்.  ஆனால் 1719 வாக்கில் அது ஒழுக்கத்தில் மயக்கடைந்த ஒரு பெண்ணைக்கூடக் குறித்தது,  இது ஏறத்தாழ 1871 வரை தொடர்ந்ததாகத் தெரிகிறது.  மா என்பது மய் (my )  என்றும் டோனா ( லேடி) என்றும் அப்போது பொருள்கொள்ளப்பட்டது 

இன்று அதற்குள்ள பொருள் மீண்டும் மேனிலையில்தான் உள்ளது.  மேடம் என்பது பணிவுக்குரிய சொல்லாய் இப்போது உள்ளது.

இச்சொல்லில் பொருள் திரிபும் உள்ளது;  சொல்வடிவத் திரிபும் உள்ளது.  அது இருசொற்களாய் இருந்து  இப்போது ஒருசொல்லாய் மாறியும் உள்ளது.

நடராசன் என்பதை மடராசன் என்று ஒரு வேறுமொழிக்காரர் அடையாள அட்டையில் பதிவுசெய்திருந்தார்.  அவருக்கு ந - ம வேறுபாட்டில் திணறல். ஒரு வேற்றுமொழிக்காரர் தமிழனை  "ஓய்லாமா" என்று அழைத்தார்.  அது ஓ, ராமா என்று பின்னர் தெரியவந்தது.  இவற்றையும் இதுபோன்ற சறுக்கல் திரிபுகளையும் அறிந்ததிலும் மகிழ்ச்சியே.  துரை என்பது  Do Ray ஆனாலும் மகிழ்ச்சிதான்.

ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு -----  அல்லது ஓரிடத்திலிருந்து ஒரு மாதிரி பேசிப் பழகியவர்களிடமிருந்து இன்னொரு மாதிரி பேசுகிறவர்களிடம் ஒரு சொல் சென்று சேர்ந்தால், அது மாற்றம் அடையும்,  அடையவேண்டும்,  ---- அடைந்தே தீரும் என்றுகூடச் சொல்லலாம்.

எம் தமிழ் நண்பருடன் வழக்கறிஞரின் அலுவலகம் சென்றிருந்தோம். அன்று அவருடன் உணவகம் செல்லவேண்டும்,  ஆனால் அவருக்கு வழக்கு விசாரணை இருந்தது.  வழக்குமன்றத்துக்குப் போய்விட்டிருந்தார். . அப்போது இந்தி மட்டும் பேசும் ஒரு குடும்பம் வந்துவிட்டது. அலுவலகத்துச் சீனருக்கும் மலாய்க்காரருக்கும் இந்தி தெரியவில்லை.   எம் நண்பர்  இந்தி தெரியும் என்று அவர்களுக்கு மொழிபெயர்ப்பாளரானார். கொஞ்ச நேரத்தில் அவர்களுடன் பேசி அவர்களில் ஒருவராகவே ஆகி,  மொழிபெயர்ப்பும் செய்து வழக்கை முடித்துவிட்டார் என்றே சொல்லவேண்டும். அந்தக் குடும்பத்துக்கே பெருமகிழ்ச்சி.  அப்புறம் மின்தூக்கி வரை அவர்களைக் கொண்டு போய் விட்டு வந்தார்.  எல்லோரும் ஆனந்தமாயினர். 

பலமொழிகளையும் அறிந்திருப்பது மிகவும் உதவியாவதே ஆகும்.  திரிபுகளையும் உணர வழிவகுக்கும்.  நாம் சடுதி என்பதை அவர்கள் ஜல்தி என்பார்கள் என்றாவது தெரியுமே!  இந்தியச் சிற்றூரிலே வாழ்வதாயின் தேவை ஏற்படாது. கற்று வெளியுலகில் மேம்பாடு அடைவதா வேண்டாமா என்பது அவர்களே முடிவுசெய்யவேண்டும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

Edited  30092021 1334  1412



சிவனை வணங்கும் தெங்கரீசா...



கருத்துகளைப் பாருங்கள்

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

செவ்வாய், 28 செப்டம்பர், 2021

செருப்பு சொல்லமைபு.

 வீட்டிற்குள் செருப்பு அணியும் வழக்கம் தமிழரிடை இல்லை.  அது பிற இந்தியரிடமும் இல்லை என்றே தெரிகிறது.  ஆகையினால் எங்காவது செல்லும்போது அணிவதுதான் செருப்பு.

செல்லுதல் - வினைச்சொல்.

செல் >  செரு > செரு + பு > செருப்பு.

ஒப்புநோக்கு:     செல் - செரு,   புல் -  புரு.

                                      புல்லுதல் -  வினைச்சொல்.  பொருள்:                                                                                    பொருந்தியிருத்தல்.

                                  புல் > புரு > புருவம்.   விகுதி:  அம்.

                                   [ சொல்லமைப்புப்பொருள்: கண்களுடன் பொருந்தியிருக்கும்                                     முகப்பகுதி ] 

                                   புல் > புரு + டு + அன் >  புருடன்.  

                                    [சொல்லமைப்புப்பொருள்:  வீட்டில் பெண்ணுடன்

                                   பொருந்தி வாழ்கிறவன்.]

                                   இன்னும் பல உள.  பழைய இடுகைகளிற் கண்டு பட்டியல்                                            இட்டுக் கொள்க.       

இச்சொல் ( செருப்பு  )   ஒரு இருபிறப்பி.   

சேர்  -- வினைச்சொல்.

சேர் >  சேர்+ பு >  செரு+ பு > செருப்பு.

இது முதனிலை குறுகிய தொழிற்பெயர்.

(காலுடன் சேர்ந்திருப்பதான அணி.)

                                    இதுபோல்வது இன்னொரு சொல்:  முதனிலைக் குறுக்கம்.

                                    சா -  வினைச்சொல்.

                                    சா  + வு + அம் >   சவம்  ( பிணம்).     சா> ச.

                                    அம் விகுதி,  வு இடைநிலை.  

                                    சா என்பது முதனிலை வினைமுற்றிலும் குறுகும்.

                                    சா> சத்தான் ( திரிபு:  செத்தான் ).

                                    மலையாளம்:  சத்துபோயி.


ஒரு விலங்கு கொல்லப்பட்ட பின் அதை சாறுவைத்துக் குடிப்பது  சத்து என்று பண்டையர் நினைத்தனர்.  வேர் முதலியவற்றுக்கும் இது பொருந்துவது. 

சா + து >  சத்து.   து தொழிற்பெயர் விகுதி. 

இவ்வாறு து விகுதி பெற்ற இன்னொரு சொல்:  விழு > விழுது.

சில கூடுதல் விவரங்கள்:

சாறு என்ற சொல்லும் சாதல் வினையிற்றோன்றியதே. ஒரு வேரைப் பிடுங்கி வேவித்தால் அது இறந்துவிடுகிறது.  விகுதி:  று.  

சாறுதல் என்ற வினையும் உள்ளது.  வழுக்குதல் என்ற பொருள். கொல்லப்பட்ட , இறந்த அல்லது வெட்டுண்டவற்றிலிருந்து வழியும் சாறு வழுக்குதலால் இப்பொருள் ஏற்பட்டது.   ஆகவே பொருள்:  வழுக்குதல். 

பு விகுதி வலிமிகாமலும் வரும்.   உயர்பு.   ஒழிபு.  

மார்பு  ( மரு> மார்> மார்பு:  நெஞ்சுப் பகுதியை மருவி நிற்கும் உறுப்பு).

மார்பு என்பதில் வலி மிகவில்லை.  அதுபோலவே அமைபு என்று மிகாமலும் வரும்.    இவ்வாறு வருவது  அமையும் இயல்பும் இலக்கணமும் உடைமையைக் காட்டும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்.

 

சிங்கை கோவிட் நிலைமை

 [Sent by Gov.sg – 28 Sep]நிலைமை


As of 27 Sep 2021, 12pm, 1,288 COVID-19 cases are warded in hospital. There are 194 cases of serious illness requiring oxygen supplementation and 27 in the ICU. 


Over the last 28 days, of the infected individuals, 98.0% have mild or no symptoms, 1.7% requires oxygen supplementation, 0.2% requires ICU care, and 0.1% has died.


As of 26 Sep, 82% of our population has completed their full regimen/received 2 doses of vaccines, and 85% has received at least one dose. 


As of 27 Sep, there are 1,647 new cases in Singapore. 


go.gov.sg/moh270921

கோவிட் ஊர்மூடலில் மாடல் விலங்குகள்

மூடல் முடக்கத்தில் மாடல்  பிற அணிகள்  (பிராணிகள்)


மாடல் விலங்கு என்றால்  மாடு அல் விலங்கு -  மாடு அல்லாத

மற்ற சிறு விலங்குகளை வீட்டுக்குள் வைத்துக்கொஞ்சலாம்.

மாடல்விலங்கு:  தமிழில்.

ஆங்கிலத்தில் மாடல் என்பது வேறு.  ஆங்கிலச்சொல் என்று

நினைத்தீரோ அன்பர்களே! 


உங்களுக்குப் புதுக்கவிதை:


கோவிட் காலத்திலே

கூட்டுக்குள் குருவிபோல் இருந்துவிட்டாலும்

குக்கல் சிறிதொன்று பக்கம் இருந்துவிட்டால்

தக்கசிறு விளையாட்டுகளை அதனுடன் விளையாடிவிட்டு

மகிழ்ச்சியுடன்,  அக நெகிழ்ச்சியுடன், முக மலர்ச்சியுடன்

கிடந்து உறங்கி மறுநாள் வேலைக்குப் போக

வாய்ப்பாக அமைந்துவிடும்!


வீட்டிலிருந்து வேலை செய்வதாயினும்

கூட்டிலடைபட்ட  கொடுமைச் சூழல்

கொழுந்துவிட்டெரியும் தீபோல  நெஞ்சகத்து  ---

எழுந்திட இடமளிக்காது.

நாயும் நயமே! பூனை இருந்தாலும் 

இல்லை எலிப்பயமே.



 






குக்கல்  -   நாய்.






ஆலிங்கனம் சொல்லாக்கம்

 ஆலிங்கனம் என்ற சொல்லை இன்று ஆய்வு செய்வோம்.  பார்ப்பதற்கு இது கடிக்கமுடியாத கடலைபோலத் தோன்றினாலும் உண்மையில் மிக்க எளிதாக அறியக்கூடிய தமிழ் மூலங்களை உடைய சொல்லே ஆகும்.  ஆலிங்க்,  ஆலிங்கன, ஆலிங்கித என்ற சொற்கள் சமத்கிருத  அகரவரிசையில் உள்ளன.  இதே மாதிரியான  சொற்கள்  தமிழ் அகரவரிசைகளிலும் உள்ளன.  இன்னும் கூறினால், இந்திய மொழிகளிலும் திரிபுகளுடன் இல்லாமல் போகாது.  செந்தமிழில் அணைத்தல் என்பது இவற்றுக்கு ஈடான சொல் ஆகும். தமிழிலும் இப்பொருளுடைய சொற்கள் பல கிடைக்கும்.  சிற்றூரில் கட்டிப்பிடித்தல் என்பர்.

இதன் உள்ளுறைவுகள் யாவை:

அகல் என்பது ஆல் என்று திரிந்துள்ளது.  அகல இடங்கொண்டு விழுதுகளுடன் நிற்கும் மரத்தின் பெயரும் அகல் > ஆல் என்றே திரிந்துள்ளது.  இதுபோலவே பகு> பகு அல் > பகல் > பால்  ( பிரிவு) என்ற சொல்லும் இதே பாணியில் திரிந்துள்ளது. இன்னும் பல காணலாம்.  எல்லாம் ஈண்டு பட்டியலிட வேண்டியதில்லை. ஒன்றிரண்டு போதும்.

தகல் > தால்  என்பவற்றின் தொடர்பினை இன்னோர் இடுகையில் கூறுவது நலம்..  தகல் ( தகு அல் ) > தால் > தாலாட்டு என்பது தக்கபடி பாடிக்கொண்டு தொட்டிலாட்டுவதையும்  தொங்கும் தொட்டிலை ஆட்டுவதால்  "தால் ஆட்டுதல்" என்று வந்த இருவகை அமைப்பையும் குறிக்கும்.  மறக்காமல் பின்னூட்டம் மூலம் நினைவுபடுத்திடுவது உதவியாய் இருக்கும். அப்போது அவ்விடுகையை விரைவில் எழுதலாம்.

ஆலி~~ என்பதில் வரும்  இகரம் இங்கு என்று பொருள்படும்.  அதில் வரும் கு அகல விரிந்த இருகைகள் அடுத்துள்ள உடலின்மேல் சேர்த்து இடுதலைக் குறிக்கும்.  கு என்பது சேர்விடம் குறிக்கும் பண்டைத்தமிழின் சொல்.  சென்னைக்கு, மதுரைக்கு, கோட்டைக்கு என்று வரும் அந்தக் கு தான் இங்கு வந்துள்ளது.  அன் என்ற இடைநிலையான சொன் அண் என்பதன் திரிபு.  இது அன்பு என்ற சொல்லில் இன்னும் இருக்கிறது.  ஆக்ககாலத் தமிழில் அண் - அன் எல்லாம் ஒன்றுதான்.  அம் என்ற விகுதி,   (மிகுதி - விகுதி:  சொல் இறுதித் துண்டு வந்திணைதலைக் குறிக்கும்)  ஒ.நோ:  விஞ்சு ><மிஞ்சு.   போலி. )  அமைவு குறிக்கும் இறுதிநிலை ஆகும்.

அகல் + இ +  கு +  அன் + அம்.

எல்லா  உள்ளுறைவுகளையும் திரிபோடு புணர்க்க,   ஆலிங்கனம் ஆகிவிட்டது.

கையை அகட்டித் தான் தழுவ முடியுமாதலால் அகல் >  ஆல் முன்மைத் திரிபு.

எந்த நூலில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆலிங்கனம் தமிழ்தான்.

முந்தை நாட்களில், பரந்து ஐயர் வேலை பார்த்தவர்கள் பர ஐயர்களாகிய  பரையர்களே.  அவர்களின் மேலான கவி  வால்மிகி.  ( வலிமை மிக்கவர் அல்லது தூய்மை மிக்கவர் என்று பொருள் ).  இராமாயணம் பாடியவர்.  பாணன் - பாணினி இலக்கணம் எழுதினான்.  மீனவன் பாரதம் பாடினான்.  அவன் பரதவன்.  பரவை என்றால் பரந்ததாகிய கடல்.  இந்தப் புலவர்களால் இச்சொல் அமைக்கப்பட்டது என்பது அதன் துண்டுகளைப் பார்த்தால் தெளிவாய் இருக்கிறது.

அறிக மகிழ.

மெய்ப்பு பின்னர்.




திங்கள், 27 செப்டம்பர், 2021

தவ- தப என்ற அடிச்சொற் பொருள்.

 பல சொற்களை அணுகி ஆராய்ந்த பின்புதான் அடிச்சொல்லைக் கண்டுபிடிக்க முடியும்.   முடியுமென்றால் சிலவேளைகளில் முடியாமற் போவதையும் அது உள்ளடக்க வேண்டும்.  இதற்குக் காரணம், நாம் எதிர்பார்ப்பதெல்லாம் உலகில் நடந்துவிடுவதில்லை என்பதுதான்.

நந்தவனம் என்று குறிக்கும் ஓர் இடத்தில் காடுபோல பெரிய மரங்கள் இருப்பதில்லை.  செடிகள்,  கொடிகள்,  தாழ்வாக வளரும் சில சிறுவகை மரங்கள் இருக்கலாம்.  காடு எது, நந்தவனம் எது என்பது பெரும்பாலான மக்களுக்கு எடுத்துச்சொல்லாமலே புரியக்கூடியது என்பது எம் துணிபு.

தவனம் என்பதென்ன என்பதும் ஆய்வுக்குரியது.

தாவு + அள் + ஐ  என்ற உள்ளுறைவுகளையே தவளை என்னும் சொல்லுக்குக் காட்டியுள்ளோம்.  தாவு அளை எனினும் பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை.

தாவு என்பதற்கும் தவழ் என்பதற்கும் தொடர்பு உள்ளது.  இவை இரண்டும் முற்செலவு குறிக்கும் சொற்கள். இவைதமக்குள் நுட்பவேறுபாடு வழக்கில் ஏற்படுவது ஆகும்.  தாவுதலில் தாவும் எதுவும் தவழ்தலினும் மேலெழுந்து பின் தரைக்குச் செல்லும் என்பதுதவிர,  முற்செலவில் வேறுபாடு ஒன்றுமில்லை. எனினும் இவற்றுள் இருக்கும் செயல் வேறுபாட்டினும்  தரையில் முற்செலவு என்ற பொதுக்கருத்தினை உன்னவேண்டும். 

தவளை என்ற சொல்போலவே தவணை என்ற சொல்லிலும் ஒரு தாவல் கருத்து உள்ளுறைந்துள்ளது. ஒரு தொகையைக் கொடுத்து, அப்புறம் இடையீடு விட்டு மீண்டும் ஒரு தொகையைக் கொடுத்து இவ்வாறாக,  தாவுதல் போலவே இச் செயலும் அமைந்துவிடுதல் காணலாம்.

தவறு அல்லது தவறுதலும் எப்போதும் ஏற்படுவதில்லை.  ஒருமுறை பிசகியும் அப்புறம் அதனின்று வழுவாமலும் அப்புறம் வழுவியும் மாறிமாறி இதுவும் ஏற்படும்.  கால்தவறுதல் என்ற வழக்கைக் காண்க.  எப்போதாவது ஒருமுறை கால் தவறுகிறது.

தப்புதலும் எப்போதும் நடவாமல் எப்போதாவது நடப்பதுதான்.  இதிலிருந்து தபு என்ற சொல் இடைக்குறைந்து தோன்றுகிறது.  அதில் அம் விகுதி இணைந்து தபம்>  தவம் ஆகிறது.  ப  > வ போலியால் ஏற்படும் மாற்றம் இது.  தவம் என்பதும் ஒரு குறிப்பிட்ட காலம் நடைபெற்று அப்புறம் முடிவதுதான். அதன் முடிவு ஒரு வெற்றி என்றும் கூறப்படும். வேண்டியதைப் பெற்ற மனநிறைவுடன்  அது முடிகிறது.

இந்தச் சொற்களிலெல்லாம் தவ, தப என்ற அடிச்சொற்கள் இடையீட்டுடன் நடைபெறுதலை  அடிச்சொல்லின் உள்ளுறை பொருளாகக் கண்டு உண்மையை உணரவேண்டும்.

இதைப் பின்னர் விரித்துணர்வோம்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர். 

வருந்திய நாய்க்குட்டியை அழைத்துக்கொள்ளுதல்.


 வருத்தமோ கொண்டாய் குட்டி?

வந்துநான் அமர்ந்தேன் ஒட்டி!

அருத்துவேன்  பாலும் சோறும்,

அருகில்நான் அமர்ந்து விட்டேன்.

திருத்தமாய் முடியைச் சீவி

சீரிலே உன் தாய்   ஆக,

ஒருத்தன் நான்  போதும் வாவா

உண்மையில் நானுன் அன்பன்.


உணராத மொட்டை  ஞாலம்

ஓயாத கலகம் நீளம்!

அணர்தரு அன்பே  இல்லார்

அழிபோரை நடத்திக் கொள்வார்!

துணிவற்ற மனிதர் வேண்டாம்.

 தூணாக நிற்பேன்  வாவா!

தனியன்பு தழைக்க வாழ்வாய்

தயங்காமல் அடுத்து வாவா.!


----- என்று நாய்க்குட்டியை அழைக்கிறார் இந்த மூத்த குடிமகன்.


அரும்பொருள்:

அருத்துவேன் -  அருந்தச் செய்வேன்.

அருந்து - தன்வினை.  அருத்து -  பிறவினை.

சீரிலே உன் தாய் - உன்னைச் சீராட்டுவதிலே உன் தாய்போல

ஞாலம் -  உலகம்

மொட்டை - பண்பு இல்லாத

நீளம் - நீளமான,  தொடரும்

அணர்தரு --  உயர்வுதருகின்ற.

அணர்தல் -  மேலெழல்.  அடிச்சொல்:  அண் ( நெருங்கு )

அழிபோர் -  அழிவு ஏற்படுத்தும் போர்கள்.

துணிவு அற்ற - மனத்துத்  திடம் இல்லாத

தூணாக -  பக்க பலமாக

தனியன்பு  -  ஒப்பிலாத அன்பு.


தொடர்புடைய இடுகைகள்:

https://sivamaalaa.blogspot.com/2021/09/blog-post_27.html

https://sivamaalaa.blogspot.com/2021/09/blog-post_50.html




ஒரு நாய்க்குட்டியின் வருத்தம்

வரவேற்கவில்லை எனை யாரும் --- நான்
வந்து சேர்ந்து நிற்கிறேன் பாரும்!
துறவே மேற்கொண்டேன் போலும்  ---- எனைத்
தூரம் நிறுத்திவிட்டார் ஓரம் கட்டிவைத்தார்     (வர)

நாய்க்குட்டி  ஆகினேன் குற்றமோ----நான்
நல்லபடியே குலைப்பேன் ஒருதலைமை மதிப்பேன்,
பேய்க்குட்டியாய் என்னைப் பிறழ - -- நினைத்துப்
பேதப்படுத்துவர்  தொலைவிற் கடத்துவர்  (வர)  



இங்கு அருஞ்சொற்கள் இல்லை.  பொருள் வேண்டுமாயின்
பின்னூட்டம் செய்யுங்கள்





 

தொடர்புடைய இடுகைகள்:


விருந்தாளியாய் வந்த நாய்க்குட்டி

 ஒடுங்கி நின்றால் பூனைக் குட்டி

ஓங்கி எழுந்தால் நாயின் குட்டி!

பார்வையில் மயங்குறவே

பரமன் படைத்ததம்மா!

சீர்மேவும் அன்புதரு சின்னதொரு   குக்கல்குட்டி

சிந்தனையோ சேர்ந்திட்ட எசமான் நன்மைபற்றி!

இன்னுயிர் பொன்னுக்குட்டி இனிதாய்  வாழ்கவே.





படம்:  திரு.   க-லா  பழ,  ரூபன் அவர்கள். 


மற்ற தொடர்புடைய இடுகைகள்:


https://sivamaalaa.blogspot.com/2021/09/blog-post_50.html

https://sivamaalaa.blogspot.com/2021/09/blog-post_78.html


ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

கிருதம் - தமிழ் தோற்றமயக்குச் சொற்கள்: இருபொருள் கொள்பவை முதலாயின.

 சில சொற்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளில் உருப்பெற்று, ஒரே பொருளையோ இருவேறுபட்ட பொருளையோ குறிக்கக்கூடும். ஒன்றுக்கு  மேற்பட்ட பொருள்தரும் சொற்களைச் சிலேடை என்பர்.   பொருள் சிலவாக எடுத்துக்கொள்ளத் தக்க சொற்களைக் கவிதைகளில் பயன்படுத்தி புலவர்களையும் மக்களையும் அசத்திய பெரும்புலவர்களும் உளர்.  சீவக சிந்தாமணியில் இத்தகு வியக்கத்தக்க செய்யுள்கள் உள்ளன.   கவி காளமேகத்தின் பாடல்களும்  இத்தகு சிறப்புகள் உடையவை.  "ஓரு காலடி நாலிலைப் பந்தலடி" என்று அவ்வையைப் பார்த்துக் கம்பன் கவி கூறியதாகவும், அதற்குப் பாட்டி, " ஆரையடா சொன்னாய் அது" என்று முடியும் ஒரு வெண்பாவைப் பாடியதாகவும் தமிழ்ப் பண்டைப் புலவர்களின் கதைக்கொத்து எடுத்துக்கூறும்.  இவற்றைப் பலர் மறந்திருக்க மாட்டீர்கள்.  சில + எடு + ஐ = சிலேடை எனவாகும் =  சிலவாகப் (ஒன்றுக்கு மேற்பட்டனவாகப் ) பொருள் எடுத்துக்கொள்ளத்தக்கவை என்பதாம்.

சில >சில்.    எடு+ஐ>ஏடை. முதனிலை நீ ண்டு அமைந்த தொ -பெ.  எனவே சிலேடை ஆயிற்று.


சொற்களிலும் வெவ்வேறு வகைகளில் புனைவு பெற்று, ஓர் உருக்கொள்ளுதல்  உடையவை  தமிழில் பற்பல கிட்டுகின்றன.  இவற்றுள் அவுடதம் (ஓளடதம். ஔஷதம் ),  அவிடதம், அவிழதம் என்பவையும் உள்ளன.  சொல்லாக்கத்திலும் இவ்வாறு பல்பொருள் அமைதல் உண்டு.

புலவர் என்ற சொல் கேட்க இயல்பான சொல்லாகவே தோன்றினும் அதுவும் 1.புலவு + அர் >  புலவர் என்று வந்து புலால் உண்பவர் என்று பொருள்படுவதும், 2.  புலம் + அர் >  புல + அர்>  புலவர் என்று வந்து,  காட்சி உடையவர் என்று பொருள்படுவதும் உண்டு.  3. வடபுலவர் என்று வந்து,  வடபுலத்து வாழ்நர்  ( வடக்குத் திசை வாழ்வோர்) என்று பொருள்தருவதும் அறியலாம்.  இதன் காரணமாக,  உரையாசிரியன்மார் திணறுவதும் உண்டு.  பொருள்கொள்வோர் அலமருதலும் காணலாம்.

ஔடதம் என்ற சொல்லும் ஈண்டு இருவகையில் எழுந்ததாக  நம் இடுகைகள் காட்டும்.  இரண்டில் இரண்டும் சரியே ஆகும்.  நீங்கள் பொருத்தம் என்று எண்ணுவதை அல்லது உங்கள் பயன்பாட்டுக்குப் பொருந்துவதை நீங்கள் மேற்கொள்ளலாம்.

இருவேறு மொழிகட்கு இடையிலும் இவ்வாறு இருபிறப்பிகள் ( அல்லது பல்பிறப்பிகள் )

 உருவாதல் உண்டு.  எடுத்துக்காட்டு:

பேக்கட்  ( ஆங்கிலம் )

பைக்கட்டு  ( தமிழ்).

பார்லிமென்ட்  ( பிரஞ்சு )

பாராளுமன்று  ( தமிழ் )

நீர் என்ற தண்ணீர்  குறிக்கும் சொல் இவ்வாறு உருக்கொண்டதற்குக் காரணம்,  நிரந்து நிற்பதனால்.    அது மண்குவியல் போல் மேடு பள்ளமாக நிற்பதில்லை.  ஒரு குவளைக்குள் நீர் மட்டமுற்று நிற்கும்.  மாவு அவ்வாறு நிற்கவேண்டுமானால் அதை மட்டமுறச் செய்யவேண்டும்.   நீர் என்ற சொல் சமத்கிருதத்திலும் உள்ளது.  ஆனால் அது வேறு உருவாக்க விளக்கம் உள்ளதாகத் தோன்றவில்லை.  அதனால் அது தமிழே ஆகும்.

நிர >  நீர்.  முதனிலை திரிந்த தொழிற்பெயர்.

ஒநோ:  பர >  பார்.    பொரு >  போர்.

ஐந்திரம் என்ற இலக்கண நூல்:   இந்திரன் > ஐந்திரம் என்றும் வந்திருக்கலாம்.  ஐ+ திறம் > ஐந்திறம் > ஐந்திரம் என்றும் வந்திருக்கலாம்.   இந்திரன் எழுதியதாகச் சொல்லப்படும் இலக்கணம் கிடைக்கவில்லை.   ஆனால் தமிழ் இலக்கணத்தில் எழுத்து, சொல், பொருள், யாப்பு அணி என்ற பகுப்புகள் உள்ளன,  ஆகவே இவை அறிந்தவர் தொல்காப்பியர் என்று பனம்பாரனார் சுட்டுவதாகக் கொள்வது பொருத்தமானது.  இது Balance of Probabilities அடிப்படையில் செய்யும் முடிவாகும்.  மற்றபடி இது தமிழ்மொழியாளருக்கும் சமஸ்கிருதமொழியாளருக்கும் ஏற்படும் சண்டையோ அல்லது அடமோ அன்று. இந்திரன் என்று ஒரு புலவர் இருந்து அவர் அப்படி இலக்கணமொன்று எழுதியிருப்பதற்கான சான்றுகள் மிகுந்தால், தொல்காப்பியர் சமஸ்கிருத மொழி வல்லவர் என்று முடிவு செய்யலாம்.  ஆனால் தொல்காப்பியர் காலத்தில் சமஸ்கிருதத்துக்கு வழங்கிய மொழிப்பெயர் யாது என்று அறியோம்.  ஒருவேளை " சந்தாசா" என்பதாக இருக்கலாம்.  சமஸ்கிருதம் என்பது "வடமொழியா"  என்பதிலும் ஐயமுண்டு.  ~கிருதம்  தென்னாட்டில் எழுந்து வடபுலம் மேவியதாகச் சிலர் சொல்வர்.  அதன் ஒலிமுறை தமிழைப் போன்றதே ஆகும்..  (சுனில்குமார் சட்டர்ஜி).  அடிச்சொற்கள் ஒற்றுமையும் காணப்படலாம். சமஸ்கிருதம் சிரியாவில் வழங்கியது என்று சொன்னவர்களும் ஆய்வாளர்கள் சிலர் உளர். நண்ணில( மத்திய)க் கிழக்கில் தமிழ் வழங்கியதற்கான சான்றுகளும் உள.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

Edited 30092021 0418

A Talk on Introduction to Tirumandiram by Dr M A Hussain

சனி, 25 செப்டம்பர், 2021

கணக்கு கணிதம்

  சொல்லக்கூடிய,  அல்லது விரல்விட்டு எண்ணக்கூடிய நிலையினதாயும் தொகையினதாயும் இருந்தால் அது  சொல்+பு + அம் >  சொற்பம்.  சொற்பம் என்ற சொல்லின் பொருள்:  சொல்லக்கூடிய அளவினது. பசுபிக் மாகடலில் உங்கள் வீட்டுக் குவளையால் எத்தனை குவளை தண்ணீர் இருக்கும்?  இது சொல்லி முடிக்க முடியாது.  அந்த அறிவும் நமக்கில்லை.  ஆகவே அது சொற்பமன்று.  சொல்லக்கூடியதன்று.

ஒரு சொல்லுக்கு விளக்கம் சொல்லமைப்புப் புரிந்துணர்வுடன் சொல்லப்படுமானால் சொல்லின் பொருளும் தெரிகிறது;  அதன் உள்ளுறை சிறு துண்டுகளும் தெரிகின்றன. ஒரு சிறு சொல்லுக்குள் ஒரு காய்வொளி மிளிர்கின்றது. மனமும் அறிந்தமைவு கொள்கின்றது.

கணித்தலில் முக்கிய உறுப்பு  "இரண்டும் ஒன்றாகிய" கண்களேதாம்.  ஆகவே தமிழில் கணக்கு என்பதும் கணித்தல் என்பதும் கண் என்ற சொல்லினடிப்படையில் தோன்றியனவாகும்.  கண் என்பதனோடு இகரமாகிய வினையாக்க விகுதி  இணைந்து சொல் ஆனது.

கண் > கணி>  கணி-த்தல்.   கணி+ இது + அம் >  கணிதம்.   இது என்பதில் இ கெட்டது.  து என்பதில் த் எஞ்ச,  அம் ஏறிச் சொல் முற்றியது.  கெட்டவை அல்லது விடுபாடு கண்டவை, சொல்லாக்கத்துக்குத் தேவையற்றவை.

கண் + அ + கு =  கணக்கு, இங்கு,  அகர இடைநிலை வந்தது.  ககர ஒற்று சந்தியில் தோன்றியது.

முன் பழைய இடுகைகளிலும் சில இதனைச் தொட்டுச் சென்றுள்ளன.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

Edited 30092021 0406

இறந்த தொழிலாளர்களுக்கு இரங்கல்

 இந்தத் துயரச் செய்தியை அறிந்து வருந்துகிறோம்.  இறந்துவிட்ட தொழிலாளர்களுக்கு எங்கள் இரங்கல். காயமுற்ற பிறருக்கு, விரைவில் குணமடையப் பிரார்த்தனை.


செய்தி:


https://theindependent.sg/tuas-explosion-leak-was-a-small-thing-machine-not-dangerous-said-boss-to-worker-who-died/

மந்தைத் தடுப்பாற்றல் மருவினோம்

எண்பது விழுக்காட்டினர் தடுப்பூசி அதனால்

நோய்பற்றிய புள்ளிவிவரங்கள் மாறின.


 நூற்றிலெண்  பதின்மர் நுடங்கார் நோயினால்

மாற்றிய  மைத்ததே  மகுட முகிநோய்

ஏற்றிய  நோயுற் றுழந்தவர்  தொகையினை;

ஆற்றினர் நற்றொண் டறிந்த  மக்களே


நுடங்கார் - நோய்வாய்ப் படமாட்டார்.

மகுடமுகி - கொரானா நோய்

ஏற்றிய தொகை -  கூடின புள்ளிகள்

உழந்தவர் -  துன்புற்றோர்


தடுப்பூசியும் நோய்க்கிருமியை ஏமாற்றும் தந்திரமே 


தடுப்பும  ருந்தூ  சிதனை ஏற்றவர்

தடுப்பினை மேற்கொள் தந்திறம் போற்றினர்

கெடுப்புதம் வாழ்வில்  கிளைத்தெழா நோக்கமே

உடுப்ப துளத்தினில் ஓங்கிய  பெற்றியர்.


தந்திறம் -  தமது திறமை

ஏற்றவர் -  தடுப்பூசியை ஏற்றுக்கொண்டவர்கள்.

கெடுப்பு -  கெடுதல்.

உடுப்பது நோக்கம் உள்ளத்தினில் - -- 

உள்ளத்து நோக்கம் உடையவர்கள்.   உடுத்தல் - கொள்ளுதல்.


தடுப்பாற்றல் பெருகியது.


இறந்தவர் போக  இருந்தவர் பலவரும்

சிறந்தனர் நோய்த்தடை உடலில் திரண்டிட;

பெருந்திறல் நோயடைப் பிதுவெனச் சொல்வதால்

அருந்திறல் இனிமேல் வாழ்வினில் இயல்பே.


இறந்தவர் -  மகுடமுகி (கொரனா)வில் இறந்தவர்.

நோய்த்தடை உடலில் திரண்டிட -  மந்தைத் தடுப்பாற்றல் உடலில் உண்டாக.

பெருந்திறல் நோயடைப்பு  -  மிக்கத் திறனுடைய நோய்த்தடுப்பு.

வாழ்வினில் இயல்பே -  இனி,  வாழ்வு இயல்பாகிவிடும்.

herd immunity -  மந்தைத் நோய்த்தடுப்பாற்றல்


ந,ம் நம்பிக்கை


குறள்வெண்பா.

நோயிலா வாழ்வினி நோக்கயாம் மேயவோர்

ஆய்வுரை வேண்டற்பாற்  றன்று. 


பொருள்:  இனி ஆய்வு செய்யவேண்டியதில்லை! இயல்பு

வாழ்க்கை திரும்பிவிடும்.




 

உலகின் மாறுபாடுகள்.

 உலகின் மாறுபட்ட நிலைகளை ஏனென்று அறிய இயல்வில்லை.  அதைச் சிந்துத்து இந்த வரிகள் தாமே வந்தவை.  அதை ஒருபக்கம் எழுதிவைத்தோம்.


நீரிலை என்று நிரப்போர் ஒருபுறம்

மாரியின் பொழிவில் மாள்பவர் ஒருபுறம்

வாரி சூழுல கில்காண் வருத்தும்

மாறு பாடுகள் மலைவுறப் பலவே.


நிரப்போர் -    நீர் இருக்குமிடத்துக்குப் பரவுவோர்.  கூடுவோர்.   இவர்களைக் குறிக்கும்.  பரவுதற் கருத்து. ( நீரை நிரந்துகொள்வோர்).  

பொழிவு:  மழை.



இதைத் தொடர்ந்து சிந்தித்துப் பின்னூட்டம் இடுங்கள். உரையாடுவோம்.

வெள்ளி, 24 செப்டம்பர், 2021

ஆத்திகம் - வரையறவு defining...

  ஆத்திகம்* என்ற சொல்லுக்குப் பல்வேறு வரையறவுகளை( definition) க் கூறி " ~~* என்றால் என்ன?"  என்று விளக்கப் பலர் முற்பட்டுள்ளனர்.  ஒவ்வொரு வரையறவும் எந்தக் கோணத்திலிருந்து யாருக்காக யாரால் கூறப்பட்டது என்பதைக் கருத்தில் கொண்டே,  அது சொல்லமைப்பில்  பொருந்துகிறதா என்று முடிவு செய்யவேண்டும். மதுரையிலிருந்து மானா மதுரைக்குப் பல வண்டிகள் போகின்றன.  எனினும் நீங்கள் அங்கு போகவேண்டின், அவ்வண்டிகளுள் ஒன்றுதான் உங்களுக்கு அமையும். எல்லா வண்டிகளும் உங்களுக்குப் பொருந்தாமை போலவேதான். ஆனால் எந்த வண்டியும் பிசகுபடுவதில்லை. எல்லாம் நல்ல வண்டிகள் தாமே!  அதுபோலவே   நாம் எங்காவது எச்சொல்லுக்கும் வரையறவு முன்வைத்திருந்தால்,  அது பெரும்பாலும் சொல்லமைப்பு என்பதைக் கருத்தில் கொண்டு சொல்லப்பட்டது என்பது நேயர்கள் நன்கு அறிந்ததே ஆகும்.  சிவஞானபோத உரையில்  கூறியிருந்தாலலும்  அது இங்கு இதற்கு விதிவிலக்காகலாம்.

இவற்றையும் வாசித்தறிந்து கொள்ளுங்கள்:

ஆத்திகம்   https://sivamaalaa.blogspot.com/2020/04/blog-post_24.html

ஆஸ்திகம் https://sivamaalaa.blogspot.com/2016/03/blog-post_28.html

இனி இன்னொரு வகையிலும் இது விரித்துரைக்கப்படலாம்.

அகத்து   ( அகம் + து )  என்பது அகத்து என்று வந்து பின் ஆத்து என்று திரியும். எடுத்துக்காட்டு:  அகத்துக்காரி >  ஆத்துக்காரி.    அகத்திலே >  ஆத்திலே.  (வீட்டிலே).

இங்கு + அம் என்பது,  இகு+ அம் > இகம் என்று குறுகும்.  இதன் பொருள்: இங்குள்ளது, இவ்வுலகம்.  இது வேறு வகைகளில் பொருளுரைக்கப் படுவதுமுண்டு.  அதனை ஈண்டு கவனித்தல் வேண்டியதில்லை.  பழைய இடுகைகளில் அவற்றைக் கண்டுகொள்க.

ஆத்திகம் எனின்,  அகத்து இறைப்பற்று எண்ணங்களையும் நிகழ்வுகளையும் எவ்வாறு இங்கு முறைப்படுத்தி அமைத்துக்கொள்வது என்பதைப் பற்றிய நெறிமுறைகள் என்றும் கூறி விளக்கலாம்.  அவ்வாறு விளக்கினும் அழகாகவே வருகின்றது.  

அகத்து >  ஆத்து.

இங்கு அம் >  இகு அம் > இகம்.

எனவே,  ஆத்து இகம் > ஆத்திகம்

இது ஒரு பல்பிறப்பிச் சொல்.

அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்னர்.

சில விளக்கங்கள் சிற்றளவில் இணைக்கப்பட்டன. 



The Covid situation Singapore

[Gov.sg அனுப்பிய தகவல் - செப்டம்பர் 24]


செப்டம்பர் 23, நண்பகல் 12 மணி நிலவரப்படி, கொவிட்-19 நோய்தொற்றால் 1,120 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், கடுமையாக நோய்வாய்ப்பட்ட 163 பேருக்குப் பிராணவாயு தேவைப்படுகிறது; 23 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.


கடந்த 28 நாட்களில், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில், 

- மிதமான அறிகுறிகள் உடையோர் அல்லது அறிகுறிகள் அறவே இல்லாதோர்: 97.9%

- பிராணவாயு தேவைப்படுவோர்: 1.8%

- தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டோர்: 0.2%

- உயிரிழந்தோர்: 0.1%

  

செப்டம்பர் 22 நிலவரப்படி, நம் மக்கள்தொகையில், 

- முழுமையாக / இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 82%

- குறைந்தது ஒரு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 84%


செப்டம்பர் 23 நிலவரப்படி, சிங்கப்பூரில் புதிதாக 1,504 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


go.gov.sg/moh230921 




[Gov.sg அனுப்பிய தகவல் - செப்டம்பர் 24]


வீட்டில் குணமடைதல் - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் 😷   


அண்மையில் அதிகரித்துவரும் கிருமித்தொற்றுச் சம்பவங்களால், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கு, வீட்டில் குணமடைதல் வழக்கமான பராமரிப்பு முறையாக உள்ளது . 


🔗 பரவலான கேள்விகள்: go.gov.sg/faq-24Sep-tl


1️⃣ யார் தகுதிபெறலாம்? 

2️⃣ PCR பரிசோதனையின் முடிவில் கிருமித்தொற்று இருப்பது உறுதி எனத் தெரியவந்துள்ளது. ஆனால், யாரும் என்னைத் தொடர்புகொள்ளவில்லை. நான் என்ன செய்வது?

3️⃣ வீட்டில் குணமடைதலின்போது எனக்கு அறிகுறிகள் தென்பட்டால் என்ன செய்வது?

4️⃣ நானும் என் குடும்பத்தினரும் வெளியே செல்ல முடியாதெனில் மளிகைப் பொருட்களையோ மருந்துகளையோ எவ்வாறு பெறுவது?

5️⃣ உணவு பெறுதல், துணிமணி மாற்றுதல் ஆகியவற்றுக்கான தேவை ஏற்பட்டால் என் குடும்பத்தை நான் எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது?


📱 ஆக அண்மைத் தகவல்களைப் பெற, Gov.sg வாட்ஸ்ஆப் தகவல் இயலியைப் பயன்படுத்தவும்


🔹 சுகாதார அபாய எச்சரிக்கை ➡️ “631” எனப் பதில் அனுப்பவும்

🔹 வீட்டில் குணமடைதல், தடைக்காப்பு நெறிமுறை ➡️ “66” எனப் பதில் அனுப்பவும்

மூதாதையர் என்பது தமிழா?

 [இப்போது சிங்கப்பூர் மணி 3.47 மாலை.   மலேசிய நேரமும் இதுவே. இந்த இடுகை இட்டபின் உங்களுக்கு உங்கள் ஊரின் நேரம் தெரிவிக்கப்படுதல் கூடும்.  அது உங்கள் கணினி காட்டும் நேரம்.  அது எமக்குத் தெரியாது.] 

நாமெடுத்துக்கொண்ட தலைப்பு மேல் குறித்தபடி மூதாதை என்ற சொல்லாகும். 

மூதாதை என்பதில் தாதை என்பது தாதா அல்லது தாத்தா என்ற சொல் ,   மூ என்பதோடு சேர்க்கப்பட்டுள்ளது.  மூ என்பது மூப்புக் காட்டுவது.  ஆகவே இதைத் தாத்தாவுக்கு  தலைமுறைகள்  முன்னுள்ள தாத்தாமார் என்று  எடுத்துக்கொள்ளவேண்டும்.  நம் கண்ணுக்குத் தெரிந்த தாத்தாவினும் தெரியாத தாத்தாக்கள் பலர்.  அவர்களை நாம் அறியோம்.  நாம் அறிய முடிந்தது அவ்வாளவுதான்.  நம் உடலிலுள்ள அணுக்களுக்கும் அணுத்திரள்களுக்கும்  [ atoms, molecules ] இதுபற்றித் தெரிந்திருந்தாலும் நாம் இதை அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை.

தாத்தா என்பது ஆண்முன்னோரைக் குறித்தாலும்,  இதுபோலும் வாக்கியங்கள் சொற்றொடர்களில் ஆண் என்பது  பொருள்நீட்சி காரணமாகப் பெண்முன்னோரையும் உளப்படுத்தும்.

தாத்தா >  தாதா>  தாதா+ஐ >  தாதை,   தாதை+ அர் >  தாதையர்.
தாதை > தாதையர்,  தாதை > தாதா> தாத்தா   எனினுமாம் 
இவற்றை எப்படித் திருப்பிப் போட்டுக் காட்டினும், அடிச்சொல் தை என்பதே.
தம்+ தை > தந்தை,  எம் + தை > எந்தை,   நும்  + தை > நுந்தை  என்றெல்லாம் வரும்.

தை >  தா என்பது விளிவடிவம்.  தாதா என்பது இரு விளிகள் கோவை.
தந்தாய என்பது தந்தை ஆய என்பதன் ஒட்டு.
தந்தை  -  தம் + தை > தம் +  த் + ஆய > தந்தாய.   இங்கு வந்த த் என்பது  த்+ஐ என்பவற்றில் ஐ கெட்டது.

தாதை என்பது தந்தைக்குத் தந்தை.,  அதாவது தை தை.   அல்லது தைக்குத் தை.  (  அதாவது தந்தைக்குத் தந்தை).

அர் என்ற பன்மை விகுதியாலும்,  மூ என்ற மூப்புணர்த்தும் முன்னொட்டினாலும் இது   ஆண்முன்னோர் என்று பொருள்பட்டது.

தந்தையர் என்ற சொல்லும் இதுபோல்வதே.  இன்று இதை "முன்னோர்" என்றே சொல்லி நிறுத்திவிடலாம். எல்லாம் தமிழ்தான்.

அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்


வியாழன், 23 செப்டம்பர், 2021

மகிமை - மகவுத் தொடர்புக் கருத்து.

மகிமை என்ற சொல்லை இப்போது பார்ப்போம்.  ஒரு சிவலிங்கப் பதிமை மண்ணுக்கடியிலிருந்து எடுக்கப்பட்டதன் தொடர்பில் வரைந்த இடுகையில் யாமும் மகிமை என்ற சொல்லைப் பயன்படுத்தியிருந்தோம்.  மகிமை என்பது ஓர் அருஞ்சொல் என்று சொல்வதற்கில்லை.  இயல்பாகவே இது தமிழகச் சிற்றூர்களில் அறியப்பட்ட சொல் தான்.  

மக்கள் வழக்கு, எழுத்து வழக்கு இரண்டிலும் இச்சொல் உளது. 

மகி  (  மக ) என்ற சொல்  மா என்னும் அளவு குறிக்கும் சொல்லுடன் தொடர்பு உடையது.  இதை வாத்தியார் சொல்லாமலே தமிழர் பலர் அறிவர்.   மகா என்ற பெருமை குறிக்கும் சொல்லுடனும் இது உறவுடையதாக அறியப்படும்.

தமிழ் வாத்தியார்கள் இதனை ஒரு "வட சொல்" என்று கொள்வர்.  ஏனென்றால் மகிமை என்பதைச் சிலர் மஹிமை என்று எழுதுவதால் நாளடைவில் அது அத்தகுதி அல்லது வகைப்பாடு அடைந்துவிட்டதென்று தோன்றுகிறது.  வடசொல் என்றால் அது மரத்தடிச் சொல் என்று பொருள்படும் என்றும்,  வடம் என்று கயிறு என்றும் பொருள்படும் என்றும் திரு.வி.க. அவர்கள் சொன்னதுண்டு.

தமிழ் என்பது இல்லமொழி  ( தம் இல் மொழி) என்பதால் அதற்கு அப்பெயர் ஏற்பட்டது என்று தமிழ் ஆய்வாளர் கமில் சுவலபெல் கூறியுள்ளார்.  தமிழ் இல்லமொழியாகவே,  மரத்தடிகளில்  ( ஆல்> ஆல அ அம் > ஆலயம் , ஆலமரத்தடிக் கோயில்கள் )  பேசப்பட்டு உருப்பெற்றுக்கொண்டிருந்த மொழியே வடமொழி எனப்பட்டது.   இப்படி மரத்தடிகளில் சற்றுத் திரித்துப் பேசியவர்கள், அவர்கள் தங்கள் இல்லங்களில் தம் இல் ( தமிழ் மொழி)யையே பேசினர் என்பது கூறாமலே புரியும்.  பின்னாளில் வெள்ளையர்கள் தமக்கு ஒரு பழைய மொழியில் தொடர்பு தேவைப்பட்டமையால், வடமொழியை  ( அல்லது சமத்கிருதத்தை ) இந்தோ ஐரோப்பிய மொழியாக வைத்துக்கொண்டனர். இவர்கள் இந்தியாவிற்கு வந்தபின்புதான் இதை இவ்வாறு மேற்கொண்டனர். வருமுன்பு அவர்கள் அதனைப் பற்றி  குறிப்பிடத்தக்க அளவு அறிந்திருக்கவில்லை என்றே தெரிகிறது. சீனமொழியும் பழையானதே ஆனாலும் ஆங்குத் தொடர்பு கற்பித்துக்கொள்ள அவர்களால் இயல்வில்லை.

சமஸ்கிருதம் என்பது இந்திய மொழியே ஆதலால், ஆங்கும் தமிழ்ச்சொற்கள் உண்டென்பது ஒரு வியப்புக்குரியதன்று.

ஆதலால்  வடமொழி சமஸ்கிருதம் என்பவற்றைக் கருதாமலே மகிமை என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.

மனிதன் இவ்வுலகில் வாழுங்காலங்களில் அவன் திருமணம் செய்து பிள்ளைகளை உடையவனாய் இருந்தாலே அவன் தேவருலகை அல்லது சொர்க்கத்தை எட்டமுடியும் என்று நம் முன்னோர் நம்பினர்.  இதற்கு இலக்கிய ஆதாரங்கள் எண்ணிறந்தவை. பெண்ணும் தாயென்று பெருமையை அடையவேண்டும்.  இதன் தொடர்பில்தான்  மக + இம்மை > மக + இமை> மகிமை என்ற சொல் ஏற்பட்டது.  பிள்ளைகள் இல்லாவிட்டால் மகிமை இல்லை.  மகவு என்பது இல்லாவிட்டால் நரகம்தான்.  இது அக்காலக் கொள்கை.

இம்மை ( இவ்வுலக வாழ்வில் )( மக - பிள்ளை வேண்டும் ).  மறுமை அதனால் கிட்டுமென்பது.

இந்தக் கொள்கை சரியானதா என்பதன்று கருதவேண்டியது. இதை நம் முன்னோர் கடைப்பிடித்துக்கொண்டிருந்தனர். அவர்களின் சொல்லான மகிமை என்பதும் அதையே காட்டுகிறது.

இதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள்ளாத வள்ளுவனார்,  " அறிவறிந்த  மக்கள்" என்று அடைதந்து சொன்னார். பரிமேலழகரோ,  பெண்மக்களை விலக்கி, " புதல்வரைப் பெறுதல்"  என்று குறித்தார் என்ப.  இலக்கிய நோட்டம் எழுத நேர்ந்தால் இதனை விரித்தெழுதுவோம்.

இன்னொரு சந்திப்பில் சொல் திரிந்த விதத்தை ஆழ்ந்து சிந்திப்போம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.




3200 years old Underground In TN | Madan Go...

புதன், 22 செப்டம்பர், 2021

உயிர் காக்கும் தமிழர் க.லா. பழனிசாமி பால்.

 இங்குப் படத்தில் காணப்படுபவர் க. பழனிச்சாமி பால்.  சிங்கப்பூர் ஆயுதப் படையில் முப்பது ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர்,  அப்போது தாம் பெற்ற அறிவின் மூலம் உலகில் தொல்லையுள்ள இடங்களுக்கெல்லாம் சென்று கண்ணிவெடிகளையும் மற்ற வெடிபொருட்களையும் அகற்றும் பணியைச் செய்துவருகின்றார்.  சில ஆப்ரிக்க நாடுகளிலும் நண்ணில ( மத்திய)க் கிழக்கில் பல நாடுகளிலும் சென்று இவர் தம் குழுவினருடன் இப்பணியை மேற்கொள்ளுகின்றார்.  இதை எழுதும் இவ்வேளையில் இவர் ஈராக்கில் இருந்து இப்பணியினை மேற்கொண்டு வருகிறார்.  இவர்தம் சேவையைச் சில குழும்புகள் நிறுவனங்கள் ஆகியவை  பெற்றுவருகின்றன.  




இவர் செல்லுமிடங்களிலெல்லாம் இவருக்கு நிறையக் கூட்டாளிகள் -  பெரியவர்களும் குழந்தைகளும் இவர்களுள் அடங்குவர்.  மேலே படத்தில் இவர் சிரியாவில் குழந்தைகளுடன் காணப்படுகின்றார்.



விலங்குகளின்பால் மிக்க அன்புடையவர்.  இவர் அங்கு நாயை வளர்த்து அதனை அவர் பாதுகாக்க,  அது அவருக்குத் துணையாகவிருந்தது.  படத்தில் அதை அணைத்தபடி அவர் உள்ளார்.

இவர் செய்யும் வேலையில் ஆபத்து இருந்தாலும் தம் நுகர்வறிவு மூலம்  வெடிமருந்துகளை நல்லபடி கையாண்டுள்ளார்.  " எப்போதும் கவனமாக இருக்கிறேன்"  என்று இவர்  கூறுகிறார்.

நண்ணிலக் கிழக்கின் வரலாற்றினை நல்லபடியாக அறிந்துவைத்துள்ளார். புத்தகத்தில் படிக்கும் வரலாற்றுக்கு விளக்கங்கள் வேண்டுமானால்  அவற்றை இவரிடம் பெற்றுக்கொள்ளலாம்.  இவர் இதில் ஒரு நடமாடும் கல்லூரி ஆவார்.

ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு அகற்றும் பணியில் இருந்தவர்.  இதற்கு ஆங்கிலத்தில் "டிமைனிங்" என்று சொல்வர். {Process of removing landmines and explosive devices }.  மிக்க ஆபத்தான இடர்மிக்க நிலப்பகுதியாக இவர் ஆப்கானிஸ்தானையே குறிப்பிடுகிறார்.

இவர் சிங்கப்பூர்ப் படையில் இருந்தபோது  படைஞர் வேலைக்குப் பயிற்றுவிப்பாளராக இருந்ததால், இவரை இங்குப் பலரும்  ( சீனர், மலாய்க்காரர் தமிழர் ஆகிய படையில் தொடர்புடையோர்)   அறிந்துவைத்துள்ளனர்.  அவர்களுக்கு நாமெழுதுவது அறிந்ததைச் சொல்வதாகவே முடியும்.  அவர்கள் இந்த இடுகைக்கு மேலும் பல விவரங்களைத் தெரிவிக்க வல்லவராய் இருப்பர்.  கண்டகார் விமானப் படைத்தளத்தில் அமெரிக்க மற்றும் நேசநாட்டுப் படைகள் இருப்பிடத்தில் பணிபுரிந்த நாட்களை இவர் தம் தோழர்கள் பற்றிய பல விவரங்களுடன் நினைவு கூர்பவர்.  அப்போது தாலிபான்கள் சுட்ட பல எறிபடைகள் இவர்கள் தளத்தில் வந்து விழுந்து வெடித்ததுண்டு.  ஆனால் இவர் வாழ்விடத்தில் நல்லவேளையாக எதுவும் வந்து விழவில்லை.

அச்சமில்லையா என்றால், இருக்கத்தான் செய்யும். பொறுமையுடன் தான் பணிபுரிய வேண்டியுள்ளது என்பார்.   கவனம் முதன்மைத் தேவை என்று சொல்கிறார்.  கண்ணிவெடிகளை அகற்றுவது எளிது,  ஐ இ டி எனப்படும் வீடுகளில் வனையப்பட்ட வெடிகள் அகற்றுவதற்குச் சற்று கடினமானவை என்று சொல்கிறார்.

இவருடன் வேலைசெய்த சிலர் போய்விட்டனர் (மேலுலகம்).  அவர்களைக் கண்ணீருடன் தான் நினைவுப்படுத்திக்கொள்ள முடிகிறது.  சிலர் சிரித்துப் பேசிப் பழகிய அரிய நண்பர்கள்.

இவர் தமது தொழில் தொடர்பான வரலாற்றை வெளியிட்டுள்ளார்.  தாமும் தம் போன்ற சிலரும் இத்தொழிலில் இல்லையென்றால் இன்னும் ஏராளமான மக்கள் மரணம் அடைந்திருப்பர்.  அவர்களைக் காப்பற்றத் தாம் இத்தொழிலைத் தொடரவேண்டியுள்ளது என்று கூறுபவர் இவர்.

இவரைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளப் பின்னூட்டம் இடலாம். அவர் அதன்மூலம் உங்களிடம் தொடர்பு கொள்ளுவார்.

உயிர்காக்கும் தமிழர் வாழ்க.  மக்கள் இடர்நீங்கி உலகில் வாழ்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்பு

குறிப்பு:  "தாலிபான்கள் என்று எழுதினால் அது மென்பொருள் மூலம்  தாலிபாங்கள் ஆகிவிடுகிறது. திருத்துவோம்.

செவ்வாய், 21 செப்டம்பர், 2021

திவால் உருதுவா தமிழா?

தொடங்குரை:

ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் ஒரு சொல்லை அறிந்தின்புற்றால் அன்றைத் தினம் ஓர் இன்பநாளாக முடியும் என்பதால் அதைக் கடைப்பிடிக்க எண்ணினாலும் சில வேளைகளில் அது முடிவதில்லை. சில நாட்கள் சென்றுவிடினும் மனமும் தினமும் இணைதல் இல்லாதொழிந்துவிடுதலும் உண்டு. போயொழிந்தன மறந்து உள்ளன கண்டு மெள்ள முன்செல்வோம்.

இப்போது "திவால்" என்ற சொல்லை  ஆய்வு செய்வோம்.  


ஆய்வின் தோற்றுவாய்

இதை  dhee vaal என்று எடுத்தொலித்தால் அது தமிழில் இல்லாத ஒலிபோலும் உணர்வை உண்டாக்கிவிடும். ஆகையால் எளிமையாகத் திவால் என்றே தமிழ்ச்சொல்போல் ஒலிக்க.  இது உருது என்று முன்னையத் தமிழாசிரியர் கருதினர்.  அவர்கள் பிறந்து பள்ளிக்குப் படிக்கச் சென்ற காலை இச்சொல் வழங்கிக் கொண்டிருந்தது.  இதே சொல் உருது மொழியிலும் வழங்கிற்று.  ஆகவே அவர்கள் சொல்லாயிருக்கும் என்று எண்ணினர்.  பழந்தமிழ் நூல்களில் இல்லை. இதுவே அவர்கள் முடிவுக்குக் காரணம்.  

உருதுவின் இயல்பு - தமிழ் வழக்கின் விரிவு.

உருது என்பது பிற்காலத்தில் வழக்குக்கு வந்த மொழி.  பல சொற்களை அது உருவாக்கிக் கொண்டு இருக்கமுடியும்.  அரபியிலிருந்து எடுத்திருக்கவும் முடியும். சுற்றுவட்டங்களில் வழங்கிய மொழிகளிலிருந்தும் வரப்பெற்றிருக்கவும் கூடும்.

"பிறமொழியினின்று எடுத்த "  என்று மேலே குறித்தோமே யன்றி, கடன் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. திருப்பிக்கொடுக்காவிட்டால் வழக்கு ஏதும் போடமுடிவதில்லை. வாயால் உளறிக்கொண்டிருக்கலாம். வேறு ஒன்றும் செய்ய முடியாது.  கடன் என்பது சொல்லியலில் பெறும் பொருள் சற்றே வேறுபடுவது என்றாலும் அச்சொல்லை ஈண்டு விலக்குவதே சாலச் சிறந்த செயல்பாடு ஆகும்.

நண்ணிலக் கிழக்கு வழக்கு மொழிகளில்  தமிழ்ச் சொற்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.   தோகை என்ற சொல்லை எபிரேயத்தில் கண்டு கால்டுவெல் கண்காணியார் வியந்துள்ளார்.

திவால்

திவால் என்பது  திவள்வால் என்ற தமிழ்ச் சொற்சேர்க்கையிலிருந்து வந்துள்ளது. திவளுதல்:  கெடுதல்,  வாடுதல் என்னும் பொருளது. ஒரு குழும்பு  (கம்பெனி) திவாலாயிற்று என்றால் அது வாடிய பயிர்போல் வாடிவிட்டது என  அறிக. உடல் இல்லாதொழிந்து வால் மட்டுமே மிஞ்சி அதுவும் வாடிப்போயிற்று என்பதையே இது உணர்த்துகிறது.  வல் என்பது வால் என்று நீண்டு பெயராயும் வந்ததென விளக்கம் உரைக்க, அது இருபிறப்பி ஆகிவிடுகிறது.  வல் என்பதே அடியாகி , வாலிபன் (வாலி [ வலிமை பொருந்தியோன் ],  வாலை ,  வாலிபம்  ( வாலிவம் , பேச்சுவழக்கில் ) என்று வந்தன போலவே இதுவும்.  விலங்குகட்கு வால் வலிமையான இயங்காற்றல் தருவது. ஓடுகையில் ஒத்தியைவது ஆகும்.  அதாவது வால் என்பதில் வாடுதல் ஓரளவை மிஞ்சி,  தொடர்ந்து செயல்பட இயலாமை உண்டாகிவிட்டது என்பதே அதன் பெறுபொருளாக நாம் உணர்தல் வேண்டும்.

வேறு சொற்களுடன் ஒப்பீடு

உருது என்று கருதின சில் சொற்களில்  சூல்,  வால் முதலிய சினைத் தொடர்புகள்  (உறுப்பின் பெயர்கள்) வருதலைக் காணலாம்.  மக + சூல்.   வரு + சூல் ( வசூல் ).  மக என்பது  பிறத்தல் என்ற அடிப்படைப் பொருள் உடையதாதலின்,  மகசூல் என்பது பொருத்தமே.  வசூல் என்பதில் வரு என்பது குறைந்து  வ~    என்றானது, இது  வரு&gt;  வந்தான் என்பதிற்போலவே.  [  சூல் என்பது சிலகாலமே உடலில் இருந்தாலும், அதுவும் உறுப்பு எனவே இலக்கணம் சொல்லும்.   கால அளவு கணக்கில் வாராது ]

முடிவு:

திவால் என்பது தமிழ் மூலம் உடையது.  முகிற்கூட்டத்துள் மறைந்து வேறாகத் தோன்றுகிறதென்று நாம் அறிதல் சரியாகும்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


Edits were lost.  Now has been restored.
21092021  1220
Some errors found and rectified.
Will review.

திங்கள், 20 செப்டம்பர், 2021

திரு ரூபன்( ரதி) வாங்கிவந்த அழகிய நாய்


 சிங்கப்பூரில் இப்போது நாய்க்குட்டிகள் நல்லபடி விற்பனையில் வேகமெடுத்துள்ளன. பலரும் வெளியில் செல்லமுடியாமல் நாய்வளர்ப்பின் பக்கம் திரும்பியுள்ளனர்.  ரூபனும் அம்மா ரதியும் கடைக்குச் சென்ற பொழுது நாலைந்து நாய்க்குட்டிகளை வாடிக்கையாளர்கள் வாங்கிக்கொண்டிருந்தனர்.

நாய்க்குட்டி வீட்டுக்கு வந்து சேர்ந்த பொழுது அடுத்த வீட்டுக் காரர்களும் வந்து பார்த்துத் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டதுடன் நன் கு சிரித்துப் பேசவும் தொடங்கிவிட்டனராம்.  என்ன ஆனந்தம் பாருங்கள். நாய் வந்ததும் அண்டை அயலார் நட்பும் வளர ஆரம்பித்துவிட்டதே!

இந்தக் குட்டி வீட்டுக்குள் சுற்றிச் சுற்றி ஓடிவருகிறது  என்கிறார் ரூபன். சிறியதாகையால் ஓரிடத்தில் இருக்க அதனால் முடியவில்லை.  ஆனந்தமே ஆனந்தம்.

அழகான நாய்க்குட்டி  --- வீட்டுக்குள் ஓடிப்

பழகாமல் இருப்பேனோ என்று

பாய்ந்து மகிழ்வது   (  ஆனந்தமே  ஆனந்தம் ).


கழுத்தில் வாருடன்

குதித்து ஓடுவது   ( ஆனந்தமே ஆனந்தம் ).


பாட்டேகூட வந்துவிட்டது எனக்கு.


இந்த நாய்க்குட்டி என் வீட்டுக்கும் இந்த வாரம் வருமென்று தெரிகிறது.

அது "விருந்தினர்"  ஆகையால் என்ன சாப்பிடும் என்று பார்த்து அதுக்கு

ஒரு சிறு விருந்து கொடுக்கவேண்டும்.  ரூபன் கொண்டுவருகிறார்.


கோவிட்டில் அடங்கிக் கிடப்பதை மறந்து

குட்டி நாய் ஓடுவதில் மகிழ்ந்த   ( ஆனந்தமே  ஆனந்தம்)


என்று அப்போது பாடப்போகிறேன்.

நேயர்களுக்கு வணக்கம். சிவமாலை.


மெய்ப்பு பின்னர்



கோவிட் இன்று

 [Sent by Gov.sg – 20 Sep]


As of 19 Sep, 12pm, 873 cases are warded in hospital. There are 118 cases of serious illness requiring oxygen supplementation and 21 in ICU. 


Over the last 28 days, of the infected individuals, 98.1% have mild or no symptoms, 1.7% requires oxygen supplementation, 0.2% requires ICU care, and 0.04% has died.


As of 18 Sep, 82% of our population has completed their full regimen/received 2 doses of vaccines, and 84% has received at least 1 dose. 


As of 19 Sep, there are 1,012 new cases in Singapore. 


go.gov.sg/moh190921

கனவில் சிவலிங்கம் நனவில் வெளிப்பட்டது


 

ஒரு பூசாரியின் கனவில் ஒரு மரத்தடியின் கீழ் நிலவறையில் சிவலிங்கம்  இருப்பதாகக் கண்டார். அவர் பற்றர்களிடம் கூறினார்.  எல்லோரும் சேர்ந்து சென்று அவர் காட்டிய இடத்தில் தோண்டிப் பார்க்கச் சிவலிங்கமானது அங்கிருந்தது.  அது வெளிக்கொணரப்பட்டு அதற்கு ஆராதனை அபிடேகம் முதலியன நடைபெறுவதை இக்காணொளியில் காணலாம்.

என்னே இவர்தம் கனவின் மகிமை. 

ஆனால் இது நடந்த இடம் எமக்குக் கிட்டவில்லை. நீங்கள் அறிந்திருந்தால் பின்னூட்டமிடுங்கள்.  காணொளியில் மந்திரம் ஒலிக்கிறது .

இதைச் சென்று கண்டவருள் நீங்கள் ஒருவரானல் பின்னூட்டம் இட்டு,  --- தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

சிரம்

இன்று நாம் சிரம், சிரசு என்ற இருசொற்களையும் அலசுவோம்.

சொற்களை அலசுவதென்பது நாம் நெடுங்காலமாகச் செய்துவரும் செயலாகும். இது நம் அறிமுயற்சியாகவும் அகமகிழ்ச்சியாகவும் நாமே செய்துவரும் ஓர் ஆய்வு ஆகும்.  நாம் பணத்துக்காகச் செய்வதன்று இது. ஆர்பயன் கண்டு "ஓர்படி" நின்று செய்வதொன்றாகும்.  இம்முயற்சி நெடுந்தொலைவு செல்ல நீங்களும் உடன்வரவேண்டும். வந்துகொண்டிருக்கிறீர்கள். மகிழ்கிறோம்.

அலைகள் சுருண்டு அருகில்வரும் இடந்தனில் ஆடைகளைக் கசக்கிக் கொள்ளுதலை ( அல்லது வேறு கழுவற்குரிய பொருளை கழுவிக்கொள்ளுதலை)  அலசுதல் என்பர்.  இப்போது நாம் நீர்க்குழாய்கள் பொருத்தப்பட்ட செயற்கைச் சூழல் நிறைந்த ஒரு வீட்டிலிருந்தால் இவ்வாறு அலச நமக்குக் கிடைக்கும் வாய்ப்பு மிக்கக் குறைவே  ஆகும்.  இருப்பினும் அத்தகு  ஒத்த பயன் ஒன்றினைத்  தரு செயலில் நாம் ஈடுபடுவோம். 

நாம் பலகாலும் முன்னறிந்துகொண்டுள்ள படி,  ஒரு சொல்லமைவானது முதனிலை குறுகியும் அமைவுறும்.  இதற்குப் பல்வேறு உதாரணங்களை நாம் பழைய இடுகைகளில் தந்துள்ளோம்.  அவற்றில் நாம் அடிக்கடி கண்ட மீள்தரவாய்ப் போந்த எடுத்துக்காட்டு:  சா >  சா+ அம் > சவம் என்பதாகும்..  இது ஒரு பெயர்ச்சொல் அடிப்படையிலும் எழும்;  ஒரு வினைப்பகுதியினின்றும் எழும்.

சீர் என்பது ஓர் உன்னத நிலையைக் குறிக்கிறது. இந்தச் சொல்லிலிருந்து சிரம் என்ற சொல் அமைந்துள்ளது.  சிரம் எனின் தலை ஆகும்.  சிரசு என்பதும் அதுவே.

சீர் + அம் = சிரம்.  முதலெழுத்துக் குறுகி அம் விகுதி பெற்று இச்சொல் அமைந்தது.

மனித மற்றும் விலங்கின் இயக்கத்துக்கு முக்கியச் சீரைத் தரும் அனைத்து செயல்வசதிகளும் தலையிலே அமைந்துள்ளன.  மூளை அங்குத்தான் உள்ளது. மூளையே சிந்திப்புக்குரிய உறுப்பு ஆகும்.   மற்றும் செவிப்புலன், காட்சிப்புலன்,  நுகர்வு எனச் சிலவும் ஈண்டு அமைந்துள்ளன.  அத்தகு இயக்கத்து ஆளுமை உடைய தலையை,  சீர் > சிரம் என்று  அமைத்துக்கொண்டது ஒரு நுண்மாண் நுழைபுலத்தின் விளைவே ஆகும்.

விரிவு, பரவல் ஆகிய கருத்துக்கள் உள்ளுறைந்த பார் என்னும் சொல்லும் அம் விகுதி பெறப் பரம் என்று அமைந்ததும் கண்டுணரற் குரியதாகும்.  பார் என்பதன் முந்துவடிவம் பர என்பதே. ( பரத்தல்,பரவல்).

அர் > அரசு என்ற சொல்லைப்போன்ற முறையிலே  சு விகுதி பெற்று அமைந்தது  சிரசு என்ற சொல்.     சீர் என்பது சிர் என்று குறுகியபின்,  அது அரசு என்ற சொல் போன்ற அமைப்புநடையையே பின்பற்றி முடிந்துள்ளது.  சு என்பது ஒரு சொல்லமைப்பு விகுதி.  பரிசு என்ற சொல்லிலும் இதை அறியலாகும்.

இங்கு, சிரம், சிரசு என்ற சொல்லமைப்பை அறிந்தீர்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

குறிப்புகள்:

 சிரம்  சிரசு அரசு

சீர் அம் > சிரம்

சிரம் முதனிலைக் குறுக்கப் பெயர்

ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

பிறந்தநாள் கொண்டாடிய திருமதியும் கணவரும்

 


தம்மில்தாம் மனம்பதிந்து

தம்பதிகள் தாம் இணைந்து

செம்மகிழ்வில் நனிநெகிழ்ந்து

சேர்ந்தயலார் கரையணைந்த

மம்மரிலா மண இணையர்

நமர்புகழும் ஓர்மனையர்


திருமதி ரோஷினி பிறந்த நாளில்

அவருக்கும் கணவர் பிரகாஷுக்கும்

எங்கள் வாழ்த்துகள்.


தம்மில்தாம் மனம்பதிந்து -  தாம் மனவொற்றுமையுடன்,

தம்பதிகள் - இவ்வாறு மனம் பதிந்து "தம்-பதி"களாக இணந்துவிட்ட,

செம்மகிழ்வு -  சீரான மகிழ்ச்சி.

நனி -  நன்மையான,   நெகிழ்ந்து -  அன்புகொண்டு

அயலார் கரை அணைந்த -  அயல் நாட்டில் சென்று வாழும்,

மம்மர் இல்லா மண இணையர் -   தம்முள் பேதமற்ற திருமணம் ஆன

சோடிகள்,

நமர் புகழும் -  நம் உறவினர் நட்பினர் உயர்த்திப் பேசும்,

ஓர்மனையர் - இல்லறவாசிகள்.

இவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்து என்றபடி.

சனி, 18 செப்டம்பர், 2021

இரணியன் - பொருள் வலியோன்

 இரணியன் என்பது ஒரு பெயர். இப்பெயரை ஆராய்ந்தால்,  அதை " இரு + அணியன்"  என்று பிரித்துக் காணலாம்.

இரு -  பெரிய.

அணி -  அழகு.

அன் - ஆண்பால் விகுதி.

ஆகவே  இவன் பெரிய அழகன் என்பது பொருளாகிறது.


இன்னொரு வகையில் பார்ப்போம்.

இரு - பெரிய.

அண் -  அருகில் இருப்பவன்.

இ  -  இடைநிலை.

அன் -   ஆண்பால் விகுதி.

ஆகவே, இவ்வாறு நோக்கினால், அருகிலிருக்கும் பெரியவன்,  வலிமை வாய்ந்தவன் என்று பொருளாம்.


இன்னொரு வகையில்:

இர்  -   இருள்.  கரிய நிறத்தோன்.

அண் -  அருகில் இருத்தல்.

இ - இடைநிலை.

அன் -  விகுதி:  ஆண்பால்.

கரிய நிறமாய் அருகில் இருப்பவன்.


இரு என்பதை  இரண்டு என்று பொருள்கொண்டு,  இருவரின் வலிமை பொருந்தியவன் என்றும் சொல்லலாம்.

அணியன் என்ற சொல்லின்முன்  இரு என்பது ஈர் என்று திரியும் என்று கூறினாலும், பின் அது இர் இரு என்றே குறுகலும் உடைத்தாதலின், இந்த வாதத்தில் பயனில்லை.

இச்சொல் தமிழ் மூலமுடையதாயினும் பிற வழிகளிலும் பொருள்கூற இயல்வது  ஆகலாம்.

அறிக மகிழ்க.






ஆலயத்தில் ஐயப்ப பூசை

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்கிறாள் ஔவைப்பாட்டி. அவ்வாறு செய்யாமல் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதும் காலையில் சென்று மதுவருந்துவதும் வெறுக்கத்தக்கது ஆகும்.  இவ்வாறு செய்வோர் குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு குற்றவழக்குகளிலும் மாட்டிக்கொள்கின்றனர். பண்டை நாட்களில் இறைப்பற்று நிகழ்வுகளில் மக்களை அரசர்கள் ஊக்குவிக்கக் காரணமே,  ஒரு மனிதனின் வாழ்வில் எப்போதும் செயல்நேர்மை கடைப்பிடிக்கும் வழிகள் போற்றப்படுதல் வேண்டும்  என்பதுதான். துயர்களுக்கு அயர்வு கொடுக்கவேண்டுமெனில் இறைப்பற்று போற்றுவது இன்றியமையாததே  ஆகும்.

ஐயப்ப பற்றர்கள் விருந்தோம்பலிலும் சிறந்து விளங்குகின்றனர். 







 இந்தக் காணொளி எங்கு  எடுக்கப்பட்டது என்றோ எப்போது என்றோ தெரியவில்லை.  ஐயப்ப பற்றர்கள் செய்த ஒரு பூசையின்போது எடுக்கப்பட்டது என்பது புரிகிறது. உங்களுக்குத் தெரிந்தால் பின்னூட்டம் செய்யுங்கள்.  இதை எடுத்தவர் குறுஞ்செய்தி அனுப்பி இதைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.  இறைப்பற்றினைப் பகிர்ந்துகொள்ளுவோம்.

அனுப்பிவைத்தவர்:  திருமதி லீலா சிவா.

Covid Singpore today

 [Sent by Gov.sg – 18 Sep]


As of 17 Sep 2021, 12pm, 813 COVID-19 cases are warded in hospital. There are 90 cases of serious illness requiring oxygen supplementation and 14 in the ICU. 


Over the last 28 days, of the infected individuals, 98.2% have mild or no symptoms, 1.7% requires oxygen supplementation, 0.2% requires ICU care, and 0.03% died.


As of 16 Sep, 82% of our population has completed their full regimen/received 2 doses of vaccines, and 84% has received at least one dose. 


As of 17 Sep, there are 935 new cases in Singapore. 


go.gov.sg/moh170921

உயரமான கட்டிடங்களில் வாழ்கிறவர்கள்

 







வான்பதி இதுவென லாமே அடுக்குகள்

கூன்சிறி திலவென   மேலே எழுந்தன

மேம்படு மக்களே வாழ்வோர் இவற்றினில்

தாம்பெறு இன்பினைப் பாடாக் கவிகளே.


உயரம்  மேவிய கட்டிட வாழ்வினர்

அயர்வு கொள்பொழு தொட்டிய பஞ்சணை

உயரத்  தெண்ணமே எட்டாது நெஞ்சினை

நயமே நாளுமே  உற்றன  காண்பிரே


வான்பதி -  ஆகாய நகரம்

கூன் - வளைவு

மேம்படு - சிறந்த

தாம் பெறு - தாங்கள் பெற்ற

மேவிய - உள்ள

வாழ்வினர் - வாழ்கிறவர்கள் 

அயர்வு - உறக்கம்

ஒட்டிய - படுத்து உறங்கிய

எட்டாது - இவ்வளவு உயர்த்தில் உள்ளோமே என்ற பயமோ எண்ணமோ

ஏற்படாது

நயமே -  நன்மைகளே

நாளுமே - தினமும்

உற்றன - ஏற்பட்டன


.

ஐயப்ப மகிமை miracle

 பிப்ரவரி 2021 வாக்கில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில்,  கொதிக்கும் நீரையோ எண்ணெயையோ  ஐயப்ப பற்றர்கள் தங்கள் மீது வீசிக்கொள்கிறார்கள். யாரும் பாதிக்கப்படவில்லை என்று படத்தின்மூலம் தெரிகிறது.  இப்பற்றின் மகிமையை இஃது பறைசாற்றுவதாக இருக்கிறது.



இது எங்கு நடந்தது என்று தெரியவில்லை. பதிப்புரிமை உள்ளவர் எங்களைத் தொடர்பு கொண்டால், அவர்கள் வேண்டுகோள்படி இது நீக்கப்படலாம். குறுஞ்செய்தி அனுப்பவும்.  அறிந்தோர் பின்னூட்டம் செய்வீராக.

வெள்ளி, 17 செப்டம்பர், 2021

முதியோர்க்கு வழிதந்து உதவுங்கள்

 கொஞ்ச காலமாகவே கோயில்களில்  முதியோருக்காக நல்ல வசதிகள் செய்துதரப்படுகின்றன. இங்கு காணப்படும் ஒரு படத்தில், ஒரு முதியவர் நாற்காலியில் அமர்ந்தபடி கோவிலில் சாமி கும்பிடுகிறார். பேருந்துப் பயணத்தின்போதும் தொடர்மின்வண்டிப் பயணத்தின்போதும் முதியவர்கள் அமர்ந்து பயணம் செய்ய  இளையோர் வழிவிட வேண்டுமென்னும் சட்டம் அல்லது ஏற்பாடு சிங்கப்பூரில் இருக்கிறது.

சிங்கப்பூரின் வளர்ச்சிக்காகத் தொடக்கத்தில் உழைத்தவர்களை நன்கு கவனித்துக்கொள்ள வேண்டுமென்பது ஒரு சித்தாந்தமாகவே  இங்குத் தொடர்வது பாராட்டுக்குரியதாகும்.


காவலிற் சிறந்த மாமணிகள்.

இவர்கள் குடியிருக்கும் வீடு,  ஓர் ஆற்றோரம் இருக்கிறது.  ஆனால் கொடிக்கால் எதுவும் இல்லை.  அருகில் இருப்பவை வானத்தை முட்டும் மாளிகைகள்..  அங்கு என்ன நடந்தது என்ற விபரம் கீழே.


இது சின்ன நாய்க்குட்டி என்று நினைத்துவிடவேண்டாம்.  பெரிய ஒரு பாதுகாப்பை இது வழங்கிக்கொண்டிருக்கிறது.  எசமான் தாளிகை படிக்கிறார்.  அருகிலே அமர்ந்துகொண்டு கண்காணித்துக்கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் கூட  இத்தகைய இணையற்ற பாதுகாப்பை யாரும் வழங்கிடவில்லையே!  நெருங்கத்தான் முடியுமா யாராலும்?

இரவெல்லாம் நல்லபடி கண்காணித்துப் பாதுகாப்பு வழங்கும் இத்தகைய காவலர்களை, மிகப்பொருத்தமாகவே  மேடை ஏற்றி,  பூங்கொத்துகள் புடைசூழ தங்கள் நன்றியைத் தெரிவித்திருக்கிறார்கள்,  திருமதி ரோஷினியும் அவர்தம் அன்புக்கணவரும்.  நல்ல சாப்பாடும் இருந்தது.   தங்கள் வேலைக்குத் தக்க சன்மானம் கிடைத்த மகிழ்வில் அவை நன்றியுணர்வுடன் அமர்ந்திருக்கின்றன.  காவலர்கள் வாழ்க! வாழ்க!

எப்படி இவர்கள் மேடை?  காவல்மாமணிகள் என்ற பட்டம் வழங்கவேண்டும்.

வியாழன், 16 செப்டம்பர், 2021

சிங்கப்பூர் கோவிட்நிலவரம்

 [Gov.sg அனுப்பிய தகவல் - செப்டம்பர் 17]


செப்டம்பர் 16, நண்பகல் 12 மணி நிலவரப்படி, கொவிட்-19 நோய்தொற்றால் 837 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், கடுமையாக நோய்வாய்ப்பட்ட 77 பேருக்குப் பிராணவாயு தேவைப்படுகிறது; 12 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.


கடந்த 28 நாட்களில், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில், 98.2 விழுக்காட்டினருக்கு மிதமான அல்லது அறிகுறிகள் ஏதும் இல்லை; 1.6 விழுக்காட்டினருக்குப் பிராணவாயு தேவைப்படுகிறது; 0.1 விழுக்காட்டினர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்; 0.0 விழுக்காட்டினர் உயிரிழந்தனர். 

  

செப்டம்பர் 15 நிலவரப்படி, நம் மக்கள்தொகையில், 82 விழுக்காட்டினர் முழுமையாக/இரண்டு தடுப்பூசிகளைப்  போட்டுக்கொண்டுள்ளனர்; 84 விழுக்காட்டினர் ஒரு தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.


செப்டம்பர் 16 நிலவரப்படி, சிங்கப்பூரில் புதிதாக 910 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


go.gov.sg/moh160921

மக்களைக் கவராத படைப்பாளிகள் --- சிதறல்

 இவையெல்லாம் மக்களுக்கு விரித்துவைத்தேன் எடுத்துரைப்பேன்,

நவையில்லா  நற்கருத்தே  நானுரைத்தேன்  என்றிருப்பான்

அவையென்றும்  அஃதில்லா  இடங்களிலும்  எழுத்தறிஞன்;

"சுவைதந்தேன்  கற்பவர்க்கே"   எனஇவைக்கு  மகிழ்பவனாம்.


மக்களென்ற பேருலகோர்  மயங்கிவிடார் இவைகளிலே;

தக்கதிததாம்  என்பதிலே  தயங்கிநின்றே இயங்கலின்றி .

ஒக்கவுறை   தலைப்பினையே ஒருமுறைதான் பார்த்தபடி,

மிக்கபிற  பாற்செல்வார்  படைப்பாளன் உடைப்புறவே..


இந்தச் சிறுகவிதை எளிமையாக உள்ளது.  கடினமொழிகள் எவையும் இல்லை. சில சொற்களின் பொருள்:  நவை -  குற்றம்    அவை - சபை.   அஃதில்லா - சபை இல்லாத.   இயங்கலின்றி -  படித்துவிட்ட பொருளறிய முற்படுதல் முதலிய முயற்சிகள்.  ஒக்கவுறை  -  உடன் இருக்கின்ற.  மிக்க பிற -  கூடுதலான மற்றவை.. படைப்பாளன் -  எழுத்தாளன், கவிஞன் முதலியோர்.  உடைப்புற - தன் திண்மை அல்லது ஊக்கம் அழியும்படி.

 


முல்லை நிலம்: பெயரமைவு

முல்லைப் பூ மிக்கச் சிறப்புடையது என்று தமிழிலக்கியம் பாராட்டுகிறது. முல்லைப்பாட்டு என்பது பத்துப்பாட்டுகளில் ஒன்று, சங்க இலக்கியம் மூலமாகத் இற்றைத் தமிழர் பெற்ற நற்பேறு அல்லது பாக்கியமாகும். பாக்கியமென்பதே  பகு+ இயம் > பாக்கியமென்று முதனிலை நீண்டு உருப்பெற்ற தொழிற்பெயராகும். பகுத்துணரப் பட்டவற்றுள் சிறப்பானதே பாக்கியம் என்று வரையறவு செய்து அதன் உயர்வை உணர்தல் தலையாம்.

மேலும் முல்லைப்பூ என்பது கற்பின் காட்சி  ஆகும்.  இப்பூ வெண்மை நிறம். மனவெண்மை நடத்தையில் தூய்மை.  முல்லையின் பெருமையைப் பலர் எழுதியுள்ளமையின், அதை ஆங்குக் கண்டுகொள்க.  இவற்றைக் கவனிக்கவும்.

முல்லை காடுறை உலகின் காட்சிப்பூ.  காடுகள் குறுகியே நாடுகளும் நகர்களும் தோன்றின.  காடுடைய நிலம் முல்லை நிலம். இந்நிலங்கள் தமிழரிடை  முன்மைத்தன்மை பெற்றன.

முல்  -  முன்னே உள்ளது.

முல் > முள் :  முன்னிருப்பதால் குத்துவது. அல்லது முன்னே கூர்மையுடைத்தாய்க் குத்துவது.   அடிப்படைக் கருத்து முன் என்பதே ஆகும்.

முல்  > முன்  லகர 0னகரப் போலி.

முல் > மூல்  (  சொல் நீட்சி),   அம் விகுதி பெற்று மூலம் ஆகும்.

முல் > மூல் > மூளுதல்.  மூளுவதென்பது தோன்றுவது.  தோன்றுதலில் முன்மைக் கருத்து உள்ளுறைவு  ஆகும்.

இவற்றை இங்கு விரிக்கவில்லை.  சென்ற நூற்றாண்டில் அறிஞர் பலர் இதனை விரித்துரைத்துள்ளனர்.  அங்குச் சென்று காண்க.

எனவே முல்லை நிலம் என்றால் முன்மை வாய்ந்த நிலம் என்பதுணர்க.  மனிதரும் விலங்குகளும் வாழ்தலுக்கு ஏற்ற நிலம்.  மற்றவை ஏற்புடையன அல்ல என்பது பொருளன்று.  மனிதன் அண்டிவாழ ஏற்ற முதன்மைவாய்ந்த நிலம்.  ஆதியில் மனிதன் அங்கிருந்த மரங்களில் வீடுகள் கட்டிக்கொண்டு,  கொடிய விலங்குகளிடமிருந்து தப்பி, காய்களும் கனிகளும் உண்டு பின்னர் முன்னேறி, நகரவாழ்நன் ஆனான்.  இதை விரித்துணர்ந்து கொள்க.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

=====================================================================


பின்னிணைப்பு:-

கோவிட் பற்றிய செய்திகள்:

கோவிட் ஆய்வில்,  தொடர்புற்றவை தொடர்பற்றவை என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டியதில்லை என்று இப்போது நம்பப்படுகிறது. இதைப் பற்றிய செய்தியை இங்கு வாசித்தறியுங்கள்.


 https://theindependent.sg/experts-say-no-need-to-distinguish-linked-and-unlinked-covid-19-cases-during-endemic/


வேலையிடங்களில் சில மாற்றங்கள் நடப்புக்கு வருகின்றன என்று அறியப்படுகிறது.  மருத்துவமனைகள் கோவிட் நோயாளிகளால்  படுக்கை வசதிகள் முதலியவற்றில் நெருக்கடியைச் சந்திக்கக்கூடும்.

சந்தைகளில் காய்கறிகளைத் தொட்டுத் தேர்ந்தெடுப்பவர்களால் கிருமி பரவக்கூடுமென்று இப்பொழுது கருத்துகள் தோன்றியுள்ளன.


[Gov.sg அனுப்பிய தகவல் - செப்டம்பர் 10]


செப்டம்பர் 9, நண்பகல் 12 மணி நிலவரப்படி, கொவிட்-19 நோய்தொற்றால் 664 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 26 பேருக்குப் பிராணவாயு தேவைப்படுகிறது; 7 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.


மொத்தத்தில், புதிதாக 457 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

செப்டம்பர் 8 நிலவரப்படி, நம் மக்கள்தொகையில், 81 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்*; 83 விழுக்காட்டினர் ஒரு தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.


_*இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டோர், அல்லது குணமடைந்து, பின்னர் ஒரு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்_


go.gov.sg/moh090921

Covid 16.09.21 Singapore

16.09.21 புள்ளிவிவரங்கள் இனிமேல் 17.09.2021ல்  வெளிவரும்.


[Sent by Gov[Gov.sg அனுப்பிய தகவல் - செப்டம்பர் 16]


செப்டம்பர் 15, நண்பகல் 12 மணி நிலவரப்படி, கொவிட்-19 நோய்தொற்றால் 822 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், கடுமையாக நோய்வாய்ப்பட்ட 76 பேருக்குப் பிராணவாயு தேவைப்படுகிறது; 9 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.


கடந்த 28 நாட்களில், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில், தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாத 5.7 விழுக்காட்டினர் கடுமையாக நோய்வாய்ப்பட்டனர் அல்லது உயிரிழந்தனர்; முழுமையாகத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட 1.1 விழுக்காட்டினர், அவ்வாறு பாதிக்கப்பட்டனர்.

 

செப்டம்பர் 14 நிலவரப்படி, நம் மக்கள்தொகையில், 81 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்*; 84 விழுக்காட்டினர் ஒரு தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.


செப்டம்பர் 15 நிலவரப்படி, சிங்கப்பூரில் புதிதாக 807 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


go.gov.sg/moh150921sg – 14 Sep]


As of 13 Sep 2021, 12pm, 774 COVID-19 cases are warded in hospital. There are 57 cases of serious illness requiring oxygen supplementation and 8 in the ICU. 


Over the last 28 days, among the infected persons, the percentage of unvaccinated who became severely ill or died is 5.4%, while that for the fully vaccinated is 1.0%.


As of 12 Sep, 81% of our population has completed their full regimen/received 2 doses of vaccines, and 84% has received at least one dose. 


As of 13 Sep, there are 607 new cases in Singapore. 


go.gov.sg/moh130921



[Sent by Gov.sg – 13 Sep]


As of 12 Sep 2021, 12pm, 780 COVID-19 cases are warded in hospital. There are 54 cases of serious illness requiring oxygen supplementation and 7 in the ICU. 


Over the last 28 days, among the infected persons, the percentage of unvaccinated who became severely ill or died is 5.2%, while that for the fully vaccinated is 1.0%.


As of 11 Sep 2021, 81% of our population has completed their full regimen/received 2 doses of vaccines, and 84% has received at least one dose. 


As of 12 Sep, there are 520 new cases in Singapore. 


go.gov.sg/moh120921

புதன், 15 செப்டம்பர், 2021

Splitting of Etymology page.

வணக்கம் 

நமது சொல்லாய்வுப் பட்டியலை  இரண்டு பாகங்களாகப் பிரிக்கத் திட்டமிட்டு இருக்கின்றோம்.  இதற்குக் காரணம்,  இப்போது உள்ள பக்கம்  இயங்க மறுக்கிறது:  இதில் அதிகமான சொற்கள் பட்டியலில் இருப்பதால் புதிய பதிவுகளை  ஏற்றுக்கொள்ள இந்தப் பட்டியல் பக்கத்தினால் இயலவில்லை. பட்டியல் மிக்க நீட்டமாக உள்ளது.   Pages are not responsive.  

நேயர்கள் "அ" முதல் "த"  எழுத்துவரை முதல் பட்டியலிலும்,  ந-விலிருந்து  னகரம் வரை இரண்டாவது பட்டியலிலும் தேடவேண்டிவரும். இந்த வசதிக்குறைவுக்கு மன்னிக்கவும்.

Administrator

செவ்வாய், 14 செப்டம்பர், 2021

வினாயகற்குரிய தினத்தில் பிறந்தநாளும் வந்தது.

 


பிறந்தநாள் வாழ்த்து விநாயகர்க்கும் மற்றுமே

சிறந்தவா  சிரியர்  குமரன்பிள் ளைக்குமே

திருவார்க்குக் கிடைத்தது  மோதகம் வடைகளே

திறலார்க்குச் சர்க்கரைத்  திண்சீமை அப்பமே.

திருவார்  அருள்தரப் பொருள்தந்த பிள்ளையே.

பிள்ளையார் காக்கப் பிள்ளையவர் வாழ்கவே.


[ கோவிட் காரணமாக பிறந்த நாள் விழாவிற்கு ஒருவரே அழைக்கப்பட்டு,  அவரும் முதியவர் ஆனதால்,  பச்சைவெள்ளம்  பருகினார், சீனி அதிகம் அதனால் திண்ணப்பத்தைக் குமரன் பிள்ளைக்கே ஊட்டினார் .  கோவிட்காலம்  ஆனாலுமே சிறப்பாய்   முடிந்தது, ]

குறள்வெண்பா:

விழாவை ஒடுக்கியே கொண்டாடின் வாழ்வோம்

பலாப்போல் சுளைப்பயன் பெற்று.


பொருள் :  விநாயகற்கும் -- ( இது விநாயகனுக்கும் என்பதை

சுருக்கும் முறை.   0ன்+ கு  = ற்கு. ).  விநாயகர்க்கும் எனின் அது

பலர்பால் வடிவம் .

குமரன் பிள்ளை -  பிறந்த நாள் கொண்டாடியவர்.

திருவார் - திருவுடையவர்,  விநாயகர்.

திறலார் -  திறன்கள்  உடைய  பிறந்தநாள் கொண்டாடும் திரு குமரன்.

சர்க்கரைத் திண்சீமை அப்பம்:   "கேக்". இது படத்தில் உள்ளது.

திருவார் அருள்தரப் பொருள்தந்த பிள்ளையே -   இது  பூசை செய்யப் பொருள் தந்ததைத் குறிக்கிறது.  தந்தவர் பிறந்த நாள் கொண்டாடியவர்.

பச்சைவெள்ளம் -  வெறும் பச்சைத்தண்ணீர்.  தண்ணீரைப் பச்சைவெள்ளம் என்று வேடிக்கையாகக் குறிக்கின்றார் கவி. வழக்கில் வெள்ளம் என்பது நீர்ப்பெருக்கு.  ஆனால் தமிழினமொழி வழக்கு வேறுபடுகிறது.

குறள்வெண்பாவின் பொருள்:

பலாப்பழம் அப்பெயர் பெற்றது பல சுளைகள் உடைமையால், 

பல் ( பல) + ஆ = பலா.   ஆவென்பது இங்கு விகுதி. இன்னொரு காட்டு: 

தல்+ ஐ = தலை

தல் + அம் = தலம்

தல் + ஆ =  தலா.  

உல் + ஆ >  உலா.  உல் என்பது சுற்றுதல் குறிக்கும் சுட்டடிச் சொல்.

பலாப்போல் சுளைப்பயன் என்பது:  பலாப்பழம் சுளைகள் பாதுகாப்பாக  உள்ளே கட்டமைக்கப் பட்டுள்ளன.  ஒன்றுக்கு ஒன்று தடுப்புகள் உள்ளன.  வெளித்தோலும் பாதுகாப்புத் தருகிறது.    எனவே, இதன் அமைப்பு,  பழங்களுக்குப் பாதுகாப்பாகும். அதுவே பயன். கோவிட் காலத்தில் பலர் இருக்க, பலாவுக்குப் போல் பாதுகாப்பு வேண்டும்.


அறிக மகிழ்க

மீள்பார்வை செய்யப்படும்.