கோரோசனை என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.
இந்தச் சொல்லில் கோ என்பது மாடு என்றோ பசு என்றோ பொருள்படும். பசு என்பது தமிழன்று எனப்படினும், இச்சொல்லில் பசு என்பது பசுமை என்னும் சொல்லுடன் எண்ணத்தக்கதாய் இருப்பதால், மாந்தர்தம் வாழ்வைப் பசுமையாக்கும் ( வளமாக்கும்) விலங்கு என்ற பொருளில் பசு என்பது தமிழ்ச்சொல்தான். இச்சொல் சிற்றூர்களில் மிக்க வழக்கு அல்லது பயன்பாடு பெற்ற சொல்லாகும். ஆ என்னும் சொல்லும் அறியப்பட்ட சொல்தான் என்றாலும் இலக்கியப் பயன்பாடு உடைய சொல்.
பசுமை எய்தச் செய்யும் விலங்கு - பசு.
ஆக்கம் உருப்பெறச் செய்யும் விலங்கு - ஆ. ஆன் என்றுமாகும்.
இவ்வாறு காணின், இரண்டு சொற்களும் ஒரே மூலக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்தவை. ஆகு என்ற வினைச்சொல்லில் கு என்பது ஒரு வினையாக்க விகுதி. ஆதல் ஆகுதல் என்ற இருவிதமாகவும் வந்து, ஆ என்பதே மூல வினைச்சொல் என்பதை இது மெய்ப்பிக்கின்றது. இது ஆன் என்றும் வரும்.ஆன என்ற எச்சவினையில் னகரம் வருவதுபோல் இங்கும் சொல் அமைந்துள்ளமை பொருத்தமே.
ஆனால் கோ என்ற சொல் வேறு காரணங்கள் கொண்டு ஆக்கப்பட்ட அல்லது அமைந்த சொல். மாடுகள் மேயும்போது கோலி நின்று மேய்பவை. கோலுதலாவது ஒரு வட்டத்தில் சுற்றி நிற்றல். இன்னும் மனிதனைச் சூழ நின்று வாழ்ந்து அவனுக்குப் பசுமையையும் ஆக்கத்தையும் உண்டாக்குபவை. மந்தையாகக் கூடி நிற்பவை ஆதலால் கூ> கோ என்ற திரிபு இயல்பானதாகிறது.
கூடு> கோடு> கோலு. கோடுதல் வளைதலாகும்.
மடி > மறி > மரு(வு)>மரி>.மாள்>
மாள்கிறான் மரிக்கிறான் இதில் மாண்டான் என்று இறந்தாலத்தில் வருவதையும் கவனிக்கவேண்டும்.
ஈரலைச் சுற்றி வளரும் ஒரு கல் வகை.
ஒசிதல் > வளைதல், ஒடிதல்.
கோலு > கோரு> கோரு+ ஒசி+ அன் + ஐ > கோரோசனை.
இது கோசனை என்றும் வரும்.
கூடி நின்று மேயும் வழக்கத்தினால், கோ என்ற சொல் ஏற்பட்டுள்ளது.
கோ என்பது பசு.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை வழங்கப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக