ஞாயிறு, 22 ஜூன், 2025

வாயு அல்லது வாய்வு

 வாயு என்ற சொல்லைக் கவனிப்போம்.

வாய்த்தல் என்பது  வினைச்சொல். இது கிடைத்தல், கிட்டுதல் என்றிதற்குப் பொருள் கூறலாம். பெறுதல் என்று கூறவும் இடமுண்டு.  வாய் என்ற சொல்லுக்கு இடமென்ற பொருளும் இருக்கிறது.

வாய்வு என்பது உடலின் ஓரிடத்தில் அல்லது அதற்கு மேற்பட்ட இடத்தில் உண்டாகி ஒருவித வலியையும் உண்டாக்கும் ''காற்றுத் தொல்லை என்று சொல்வார்கள். ஆங்கில வைத்தியத்தில் இதற்கு வேறு விளக்கங்கள் தரப்படும்.

இந்த ''வாய்வு'' உடலிலே உள்ளதன்று,  அது சில உணவுப் பழக்கங்களினால் வாய்க்கப்பெறுவது என்று சிலர் எண்ணினர். எடுத்துக்காட்டாக,  கடலைப் பருப்பு அதிகம் எடுத்துக்கொள்வதால் இது ஏற்படும் என்ற ஐயப்பாடும் உள்ளது.  ஆகவே வாய்க்கப்பெறுவது என்ற பொருளில் 'வாய்வு'' என்றனர்.  சமஸ்கிருதமும் இதற்கு இதே அடிச்சொல்லைக் கொண்டு  ''வாயு''  என்ற சொல்லை உருவாக்கியது.  வகர மெய் விடப்பட்டது.  வாய்வு என்னாமல் வாயு என்றனர்.

இந்த வாய்வுத் தொல்லை என்றால் அது வாய்க்கப்பட்டது என்பதுதான் பொருள்.

பாவாணர் இதை வாயினின்று வெளிப்படுவது என்று கருதினார்.

வாய்வு என்ற சொல்லே சரியானது.  ஆனால் தமிழர்களும் வாயு என்பதையே பின்பற்றினர். இதை நோயாகவே பார்க்கலாம்.

சமஸ்கிருதத்தில் இது பொதுப்பொருளில் வழங்குகிறது

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை வழங்கப்படுகிறது.


 

கருத்துகள் இல்லை: