Pages

வெள்ளி, 20 ஜூன், 2025

உலகுக்கு உதவும் பிரதமர் மோடி

 பிறருக்கும் தமரான பிரதமர் மோடி

பிரியாமல் உலகருடன் உறைந்து வாழ்வார் 

அறவர்க்கும் அன்பருக்கும் அருமைச் செம்மல்

ஆலயத்தில் இறைவர்காண்  அகத்து மாண்பர்

அரியதீவு சைப்பிரசில்  அடியை வைத்தார்

ஆனமக்கள் அனைவர்க்கும் உறவர் ஆனார்

பெரிதுசொன்னார் இதுவன்று போர்செய் காலம்

பிழைக்காதீர் என்றபடி  பெருமை கண்டீர்.


பொருள்

பிறருக்கும்  -  தாம் அல்லாத பிறருக்கு(ம்)

உலகர் -  உலகத்து மக்கள்

உறைந்து - ஒன்றிணைந்து

அறவர் -  அறம் செய்வோர்

ஆலயத்தில் இறைவர்காண்  அகத்து மாண்பர்

ஆலயங்களின்  இறைவனைக் காண்பவர்

அகத்து மாண்பர் -  மனத்தில் மாண்புடையார்

உறவர் - சொந்தக்காரர்

பிழைக்காதீர் - இதற்குச் தவறு செய்யாதீர் என்று பொருள்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.