இது திருமாலின் ஓர் அவதாரத்தைக் குறிக்கும் சொல். இதனைச் சமஸ்கிருதம் என்றாலும் தமிழ் என்றாலும் காணப்படும் வேறுபாடு ஒன்றுமில்லை. எம்மொழிக்கு உரித்தாயினும் இதன் மூலச்சொற்கள் தமிழே ஆகும், அவற்றை இங்குக் காண்போம்.
பூ வர ஆகும் என்பதே பூவராகம் என்று ஒருசொல் ஆனது. பூமியே அதன் உருவாகி வந்த கொம்புகளாக இருத்தல் என்பதே பொருள். பூ வர அல்லது உருக்கொள்வதற்கு ஆக்கம் தருவது பூமி. இந்தச் சொல்லைப் படைத்தவன் ஒரு தோட்டத்தில் இருந்துகொண்டு இதனை அமைத்திருக்கிறான் என்பது இச்சொல்லிலிருந்து நாம் அறிந்துகொள்வதாகும்.
பூ என்ற சொல்லிற்குச் செடியினின்று தோன்றியது என்பது பொருள். செடி பூமியிலிருந்து தோன்றியதாகின்றது. பூமி என்றால் (1) தோன்றியாதாகின நிலம் என்றும், (2) நிலைத்திணையையும் உயிரினங்களையும் தோற்றுவித்ததாகிய நிலம் என்றும் பொருள் கூறலாம். நில் > நிலம் : நிற்பதற்கான இடம் தருவது என்று பொருள். தரை : தரு> தரை. நிற்பிடமும் வாழ்விடமும் தருவது என்று பொருள். இந்தச் சொல் பிறமொழிகளிலும் ஊடுருவியுள்ளது நமது கொடை. மெய்ப்பொருள் காண்பது அறிவு.
பூமியானது தோற்றமடைந்த ஒரு பெரும் பந்து ஆகும். பூத்தல் என்றால் அழகான தோற்றம் தருதல். இம் என்றால் இங்கு என்பதன் சுருக்கம். பூ இம் இ > பூமி, இகரம் தொகுந்தது. ம் என்ற மெய்யின் ஒலி வெளிவர இ முன் வந்து உதவி செய்கின்றது. மகர ஒற்றில் இகரம் முன்வந்தாலன்றி ஒலி வெளிப்படாது. இ இறுதியை விகுதி எனின் ஒக்கும். பூ என்பது முதனிலைத் தொழிற்பெயர். விகுதி இன்றி பகுதி மட்டுமே நின்று பெயராவது.
இனி வராகம் என்பது பன்றியாய் வந்து மாலானது என்று பொருளும் கூறலாம்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக