இச்சொல்லினை இன்று ஆய்வு செய்வோம்.
சுழல் துப்பாக்கிகளில் ரவைகளென்னும் தோட்டாக்களை வைப்பதற்குத் துவாரத்துடன் கூடிய சுழலி இருக்கும். சுழலியின் துவாரத்தில் வைப்பதற்குரிய தோட்டாக்காக்கள் ரவைகள் எனப்படும்.
இருக்கும்படியாக வைப்பதுதான் இரு + அ + வை > இரவை ஆகும். இச்சொல் பின்னாளில் தன் இகரத்தை இழந்து ''ரவை' ' என்று மட்டும் வழங்கியது.
இரவை என்பதில் இரு என்பது சொல்லின் பகுதி. அகரம் இடைநிலை. வை என்ற இறுதியே விகுதி ஆகும்.
தோட்டில் இருப்பது இரு அ வை > இரவை. ( ரவை). தோடு > தோட்டா ( தோடு+ ஆ) எனவும் படும். ஆ என்பதும் ஒரு விகுதி. நில் > நிலா எனக்காண்க. பல சுளைகள் உள்ள பழம் பலா ( பல் + ஆ). தோடு> தோட்டா. இங்கு டகரம் இரட்டித்தது, இவ்வாறு இரட்டித்தல் வினையிலும் பெயரிலும் நிகழும். பாடு> பாட்டு என்பது அறிக. காடு> காட்டா என்ற சொற்புணர்ச்சியும் காண்க. இது காடு+ ஆ என்பதுதான்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
பகிர்வுரிமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக