சந்தித்தல் என்ற சொல்லை இன்று ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்.
அண்டுபடுதல் என்பது அண்டையில் அல்லது பக்கத்தில் இருத்தல் என்ற பொருளுடைய சொல். அண்டுதல் என்றால் பக்கத்தில் இருத்தல்.
எண்டா அண்டா என்ற ஐரோப்பிய முற்காலச் சொற்களிலிருந்து வரும் இக்காலச் சொற்கள் (ஐரோப்பியம்) வரை, இந்தத் தமிழின் '' அண்டு'' என்ற சொல்லுடன் தொடர்பு உடையனதாம். அண்டை என்பது ''அண்டு(தல்) என்ற சொல்லுடன் அணுக்கத் தொடர்பினது ஆகும்.
ஒப்பீடு:
அண்டு (த) > and. (E)
அடு(த்தல்)> ed (Latin).
i.e. - id est. = அதாவது .
et cetera short form etc. et is also and. அடு.
சந்து என்பது துவாரம்.
துவைத்தல் - துளைத்தல். துவைத்தல் மேலிட்டால் துளை தோன்றும்.
துளை> துளை ஆரம் > (துளாரம் ) > துவாரம். [ தொடர்பு கண்டுகொள்க]
அண்டுபடுதல் என்பது போலும் ஒரு சொல்லே அண்+தி+ தல். இது அண்தித்தல்> சண்தித்தல்> சந்தித்தல் என்று திரிந்துள்ளது. ஒருவனை அல்லது ஒன்றைச் சந்தித்தலாவது அண்டுதல் அல்லது அடுத்துச் செல்லுதல்.
எதிர்கொள்ளுதல் என்பதும் அடுத்துச்செல்லுதலே ஆகும்.
இவ்வாறு இதை அறிய இது தமிழ்ச்சொல்லே ஆகும். சமஸ்கிருதம் என்று இதனைக் கூறியது தமிழின் சாயல்மொழியே அதுவென்று உணராத காலத்திலாகும். அதனை இந்தோ ஐரோப்பியம் என்றது அதனோடு உறவு கொண்டாடி, இந்தியா என்னும் நாட்டுக்கு அவர்களும் உரிமை உள்ளவர்கள் என்று கோருவதற்கே ஆகும்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை உடையது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக