வருவதற்கான எடை என்பதற்கு நிறுத்தெடுத்த பின்பு அது கொடுக்கப்படவேண்டியவனுக்குச் சென்றுசேரவேண்டியதைக் குறிப்பதாகும். அதுவரைக்கும் அந்தத் தராசுவில் உள்ள எடை போற்றப்படும். இது பொன்னின் .எடையையும் காட்டும்.
வராகன் என்பது தங்கவராகனையும் குறித்த சொல். தங்கம் என்பது ஒரு காலத்தில் நாணயமாகவும் வழங்கியது.
தங்க வணிகம் புரிதலில் தங்கம் மென்மேலும் வரவு பெறுவதே தங்க+ வரு+ ஆகம் என்பதாகும். ஆகு+ அம் > ஆகம். இது பொருளோடு சொல்லிறுதியாய் வருதல் இதன் சிறப்பு. ஆகி அமைதல் என்பது ஆகம் என்பது அறிக. தங்க இருப்பு போதலை விட வருதலே தொழிற் சிறப்பு.
வரு ஆகம் என்பது வராகம் என்றமைந்தபின் வராகன் என்று திரிந்தது அம் என்ற இறுதி அன் என்று திரிதல். அதன்பின் எடை எனல் இணைய, வராகனெடை ஆயிற்று.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.
பகிர்வுரிமை
----------------------------------------------------------------------------------------------------------------
திரிபு ( நினைவுக்குறிப்பு)
தேய்வடை > தேவடை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக