ஞாயிறு, 23 ஜூன், 2024

கல்யாணம் என்ற சொல் மற்றும் அதன் வரலாறு

 கலியாணம் என்ற சொல் பற்றி நம் ஆய்வாளர்கள் செய்த ஆய்வு சொற்பமே.  அவர்கள் அறிந்துகொண்டது அது மற்ற வட இந்திய மொழிகளிலும் வழங்குகிற சொல் என்பதுதான். அது இன்னொரு மொழியில் வழங்கினால் அங்கிருந்து வந்திருக்கலாம் என்பது படித்தவன் படிக்காதவன் எல்லோருக்கும் ஒப்ப வந்துசேரும் எண்ணம்தான்.  இதில் ஒன்றும் ஆராய்ச்சி இல்லை. இதைக் கற்றோனின் கருத்து என்று சொல்லலாம். கல்லான் கருத்து என்றும் கூறலாம்.  ஆய்வதற்குரியது  சொல் ஒன்றுமட்டும்  அன்று.  கல்யாணம்,  கலியாணம்,  கல்யாண் எனப் பலவடிவங்கள்.  இவற்றுள் யாண் என்பதென்ன.  ஆண்டு> யாண்டு என்பதுபோலும் திரிபே  ஆண்> யாண் என்பது.

கலியாணம் என்பது கலயாணம் என்று வழங்கியிருத்தலும் உண்மை.  பெண் வழி பற்றிய பண்டைக் காலத்தில் ஆண்மகன் பெண்ணின் வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டு அவன் கலந்தமையின் கலயாணம்> கலியாணம்  என்ற திரிபு இருந்தமை சால உணரப்படும்.  கல> கலி> கல்.  தமிழர் இந்தியாவெங்கும் இருந்தமையின் இச்சொல்லும் பரவித் திரிந்து வழங்குவதாயிற்று.

இவ்வாறு அறிய, இச்சொல் கல யாண் > (கல ஆண்)   என்பதே.  கல இ ஆண் என்பது இந்த ஆணுடன் மணந்து வாழ்வாய் என்பதாகும்.  அது கலியாண் என்றே திரியும். இத்தொடர் வாக்கியப் பொருத்தம் உடையது.

பூசை மொழி என்பது வீட்டு மொழியின் திரிபே.  அது வெளிநாட்டு மொழியன்று. அதற்கெனச் சொற்கள் அமைந்திருக்கலாம்.  அப்படி அமைவதே இயல்பு ஆகும். வால்மிகி முனிவரும் உள்நாட்டவரே. அவரே முதல் பூசைமொழிப் பாவலர்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

கருத்துகள் இல்லை: