காண்தாரம் என்ற சொல் எவ்வாறு திரிந்துள்ளது என்பதைக் காண்போம்.
காண்தார நாட்டின் இளவரசி காந்தாரி. இவள் பாரதக் கதையில் வரும் கதைமகள் ஆவாள்.
காண்தார நாட்டின் அழகின் காரணமாக அந்நாட்டுக்குக் காந்தாரம் (காண்தாரம்) என்ற பெயர் ஏற்பட்டது. காணபதற்குப் பல அழகுகளை உடைய நாடு என்ற பொருளில் இச்சொல் அமைந்துள்ளது. காண் - காண்பதற்கு தாரம் - அழகுபல தருவதான நகர். காணுதல் தருதல் என்பன இதன் வினைச்சொற்கள்.
மகாபாரதச் சொற்களில் பல தமிழ் மூலங்கள் உடையவை என்பதை முன்னர் எடுத்துக்காட்டி யுள்ளோம்.
காண்தரு அழகுடைய நகர். காண்தரு+ அம் > காண்தாரம்.
காண் தரு > காண்தாரி> காந்தாரி.
சமஸ்கிருதத்திலும் தமிழிலும் இச்சொல் வழங்குகிறது.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
பகிர்வுரிமை,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக