மாலுதல் என்னும் வினைச் சொல்: மயங்குதல் - கலத்தல் என்பன பொருள்
சொல்லின் அடி மால் என்பதுதான். இதனுடன் ஐ விகுதி இணைந்து வர, மாலை என்ற சொல் உண்டாகும். பூக்கள் பலவும் கலந்து தொடுப்பதால் கலத்தல் பொருளதாயிற்று. பூக்கள் ஒன்றுடன் ஒன்று மயங்குவன என்பதும் அறிக.
இனி அடிச்சொல் ஆ விகுதி பெற்றும் சொல் ஆகும். அப்போது மாலா என்றும் சொல்லாம். இச்சொல் பிறமொழிகள் பலவினும் சென்று கலக்கும். இது தமிழுக்கும் பெருமையே. பலா நிலா என்பனவும் ஆ விகுதி உடையனவே . நீலா என்ற பெயரில் ஆ விகுதி கண்டு கொள்க.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்.
பிறருடன் பகிர்ந்து கொள்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக