Cargo என்ற சொல் எப்படி வந்தது என்று ஐரோப்பிய ஆய்வாளர்களால் திட்டவட்டமாகச் சொல்லமுடியவில்லை என்றுதான் தோன்றுகிறது. கப்பல்களின் மூலம் பொருட்கட்டுகள் அங்குமிங்கும் அனுப்ப்பப்படுவது நெடுநாளாக நடப்பில் உள்ளது. எப்படி ஆய்ந்தாலும் இது கடல்வணிக முறையிலிருந்து வந்த சொல் என்பதை மறுக்கமுடியவில்லை.
கேரி அண்ட் கோ carry and go என்பதே சுருங்கி கார்கோ என்று வந்திருக்கவேண்டும். இப்படிச் சொன்னால் தங்களின் மொழியறிவுக்கு ஏற்புடைத்தான விளக்கமாக இருக்காது என்று எண்ணிய இவர்கள், இலத்தீன், ஸ்பானிய மொழி, பிரஞ்சு ஆகிய எல்லா வற்றையும் ஆய்ந்து, இறுதியில் காரஸ் carrus என்ற மூலத்தைக் காட்டுகிறார்கள். இதில் பிழை இல்லை. ஆங்கிலத்தில் கேரி என்ற சொல்லுக்கும் இது மூலமாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
கப்பலில் வேலை செய்தவர்கள் இந்த மொழிகளை எல்லாம் அறிந்த அறிவாளிகளாக இருந்திருக்க மாட்டார்கள். ஒரு நாட்டின் ஒரு துறைமுகத்திலிருந்து இன்னொரு நாட்டின் இன்னொரு துறைமுகத்திற்கு த் தூக்கிக்கொண்டு போய்ச் சேர்ப்பது என்ற பொருளில் இந்த வழக்கு (formulation ) வெகு எளிதாகவே படைக்கப்பட்டுள்ளது. இதுபோன்றவற்றைத்தான் யாம் மக்கள்படைப்பு என்று கூறுகிறோம்.
இதில் கேரி என்ற சொல்லில் ry என்பதை நீக்கிவிட்டால் மீதமிருப்பது கார் car என்பதுதான். இது தூக்குவதன் அறிகுறிச் சொல். அடுத்துப் போவதைக் குறிப்பது go என்பதுதானே! துறைமுகத்தில் நடப்பது அவ்வளவுதான். பிறகென்ன வேண்டும். கார்கோ என்ற சொல் வந்துவிடுகிறது. சான்றிதழ் இல்லாதவன் அமைத்த சொல் அப்படித்தான். இப்படி விளக்கும்போது அது பாமரற்கு உரிய பாழ்மர விளக்கமாகிவிடுமோ என்பதுதான் அவர்களின் அச்சம். சொல்லை விளக்கினால் அது தன் பாண்டித்தியத்தையும் காட்டுவதாக இருக்கவேண்டும். இல்லை என்றால் யாரும் விளக்கலாமே என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.
யாங்கள் வேலையிலிருந்த காலையில் handcourse என்ற ஒரு சொல்லைச் சந்தித்தோம். ஓய்வு பெற்றுப் பல மாமாங்கங்கள் கடந்திருந்தாலும் இதன் மூலத்தையோ புனைவையோ கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் இது மரணவிசாரணை( சாவாய்வு )முறைவரின் வழக்கைக் குறிக்கிறது என்று சொன்னார்கள். அப்படியானால் இன்-குவஸ்ட் (inquest) என்பதைக் குறித்திருக்கலாமோ என்று ஐயப்பாடு எழுந்தது, இன்னும் ஐயப்பாடு தீரவில்லை. ஆனால் இது மலாய் மொழி பேசும்போது பயன்படுத்தியதால் ஆங்கிலம் பொருந்தவில்லை. இப்போது இது வழக்கிறந்தது. இதைப் பயன்படுத்திய கூட்டம் இப்போது இல்லை. மலாயில் எங்கோஸ் . அம்மொழியின் அகரவரிசையில் இல்லை.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக