சனி, 2 நவம்பர், 2024

தந்திர வாழ்த்துக் கவிதைகள்

 தினமும் வணக்கம் அனுப்பும் அன்பர்பலர்.  இரண்டுநாட்கள் காய்ச்சலாகப் போய்விட்டது.  ஆகவே விடுபட்ட எல்லா நாட்களுக்கும் சேர்த்து:

எம் வாழ்த்து இவ்வாறு அமைந்தது:

நேற்று இன்று நாளை

காலை மாலை

கனிந்த வணக்கம் இவ்வேளை


என்று பாடி அனுப்பினோம்.


கனிந்த மலர்களால்

காலை மகிழ்ச்சி

துணிந்த வாழ்வினில்

துணையாம் எழுச்சி.


என்றும் எழுதினோம்.


திங்கட் கிழமை

தீந்தமிழ் உரிமை

எங்கும் இனிமை

எதிலும் அருமை.


என்றும் வந்தது.


நாள்தொறும் வளரும் காலை வணக்கம்

பாலொடு தேனாய் இனிப்பது இணக்கம்.

நாளை இன்று நண்ணும் ,  மணக்கும்!

நன்மை உண்மை,  எண்ணில் இனிக்கும்.


இருநாளும் திருநாளாய்

இருக்கையில் திருக்கைகள்.

இணைக்கும் வணக்கம்.





உங்கள் சிந்தனைக்கு:-


எல்லாரையும் அணைத்துச் செல் என்னும்போது அண் என்பதன் பொருளை அணை என்பதில் தெரிந்துகொள்ளுங்கள்அண் என்பது அங்கிருப்பதனை உட்படுத்திக்கொள்வது என்பதாகப் பொருள்தரும்அனைத்தும்அனைவரும் என்ற பதங்களில் இச்சொற்கள் எல்லோரையும் உட்படுத்தியே செல்கிறதுஇது பொருளின்படி பார்த்தால் அணைவரும்அணைத்தும் என்றுகூட அமைந்திருக்கலாம்பொருளில் அழிவில்லை என்றாலும் சொல் அனைத்துஅனைவரும் என்றிருப்பதால் மரபின்படி அனை என்றுதான் நாம் சொற்றொடக்கம் செய்கின்றோம் என்பதறிகஆகவே அண் அன்.


வணக்கம்.


என்ன தந்திரம்,  சொற்சுவைதான்

கருத்துகள் இல்லை: