தேவகி என்ற பெயர் எவ்வாறு அமைந்தது என்பதைக் காண்போம். இதைப் பிற வகைகளில் சொல்லியிருந்தாலும் தமிழின் மூலம் அறிந்துகொள்வோம்.
இதில் உள்ள பகவுகள்: தேவ(ன்), அகம், மற்றும் இ விகுதி.
இ விகுதி உள்ள பெண்பால் பொதுப்பெயர்களும் சிறப்புப் பெயர்களும் உள்ளன. இவ்விகுதி தமிழிலும் பயன்பாடு உடையது.
வலைச்சி, ஆய்ச்சி என்ற சொற்களில் சி விகுதி, உண்மையில் ச்+இ என்பதுதான். தி என்பது த் + இ. பி என்பது ப்+ இ. இவ்வாறு பார்த்தால் உண்மையான விகுதி இ மட்டும்தான்.
ஆகவே, தேவகி என்பதில் க்+ இ என்று பிரித்து, இ விகுதி என்க.
அகம் என்பதில் அ+ கு + அம் என மூன்று பிரிவுகள் உள்ளன.
அகம் என்பது உள் என்ற பொருளில் வழங்கப்பட்டுள்ளது. அங்கு சேர்ந்திருப்பது என்று பொருள். அங்கு உடலில் சேர்ந்து உள்ளிருப்பதைக் குறிக்கும். மனம் என்பதும் ஒரு பொருள். கு என்பது சேர்வு குறிக்கும் பழஞ்சொல். அம் என்பது அமைவு குறிக்கும் விகுதி.
அ+ கு+ இ > அகி ஆகும்.
தேவகி என்பது தேவனுடன் ஒருங்கு வாழும் பேறு பெற்றவள் என்று பொருளாகிறது. தேவகனின் மகள் என்றும் பொருள்.
இவர் கிருஷ்ணரின் தாயார்.
எப்படி நோக்கினும் தெய்வத் தொடர்பு உடையவள் தேவகி என்ற பெயர்ப்பொருத்தம் ஏற்படுகிறது. காரணப்பெயராகத் தோன்றுகிறது.
தெய்வம், தேவன் முதலிய சொற்கள் முன்னர் விளக்கப்பட்டுள்ளன.
இதைத் தமிழுக்குப் புறம்பாக உச்சரித்தால் வேறு பொருளை அடையவேண்டி வரும்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக