ஞாயிறு, 30 ஜூன், 2024

விடியல் குறிக்கும் சொற்கள்.

 வை >  வயின். வை எனபது அடிச்சொல்லாக இருந்தால் அதிலிருந்து பிறக்கும் சொல் குறிலாகிவிடும்.  வை+ இன் >  வயின். இங்கு இன் என்பது விகுதி யானது.

வை+ அம் >  வையம்:   இது உலகம் என்று பொருள்படுவது. உலகம் என்பது கடவுளால் வைக்கப்பட்ட இடம் என்பது பொருள்.  வையகம் என்பது இதன் இன்னொரு வடிவம்.

வை+ கு+ அறை >  வைகறை:  சூரியன் அடிவானில் வைக்கப்பட்டது போல் பாதியும்  அறுத்து மீதமுள்ளதுபோல் வெளிப்பட்டுப்  பாதியும் தெரிய, விடியும் நிலை. 

அருணம் >  அறு+ உண் + அம் >  அறுணம்>   அருணம்,  இது வைகறை. சூரியன் அறுக்கப்பட்டதுபோல் பாதியும்  வெளிப்பாடு பாதியும் தெரிவது.  உண் என்பது   அறுதலுண்டது என்பதன்பொருட்டு. உள்> உண்.  அம் விகுதி.

உயரற்காலம் :  இது திரிந்து உயற்காலம் (  இடைக்குறை)  இது பின் திரிந்து உசற்காலம் ஆகி,  மெருகேறி உஷற்காலம் ஆயிற்று. யகர சகரப் போலியும்  பின் ச >ஶ என்று மெருகும்.  உஷா என்பது தொடர்புடைய பெண்பெயர்.

உதயம் :  உது + அ+ அம் : சூரியன் முன் அங்கு எழுந்தமைதல்.  உது = முன். யகர உடம்படு மெய். உது + ஐ + ய + ம் எனினுமாம்.  உதை என்ற சொல்லும் இவ்வாறு எழுந்த சொல்.  ஒருவாறு எழுந்த சொற்கள் ஒரு பொருளே குறிக்க என்னும் விதி இலது.

றகரம் இன்னொரு சொல்லாக்கத்துக்குப் பயன்படுமாயின் ரகரமாகப் பெரும்பாலும் மாறும். 


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்


சனி, 29 ஜூன், 2024

பராமரித்தல் சொல்லாக்கம் பொருண்மை

 பராமரித்தல் என்பதென்ன என்று இன்று அறிந்துகொள்வோம்.

இந்தச் சொல்லில் "மரித்தல்" என்று ஓர் இறுதி உள்ளது.

மரித்தல் என்பது இறத்தல் என்பதைக் குறிக்கிறது என்றாலும், இந்தப் பொருள் அது தனிச்சொல்லாக வரும்போது கொள்ளத்தக்க அர்த்தம் தான். இதன் பொருளாவன: இறத்தல், சுமந்து போதல், வாய் பிளத்தல்,  இதில் இறுதியிலிருப்பது வாய்மொழியில் மட்டும் வரும் பொருள் எனப்பட்டாலும் இப்போது யாரும் இப்பொருளில் பேசிக் கேட்டதில்லை. இறத்தல் என்னும் பொருள் மட்டுமே இன்றும் வழக்கில் உள்ளதாகும்.

மருவுதல்> மரு + இ > மரி.  இங்கு இறத்தல். ஆனால் பராமரித்தல் என்பது மரு+ இ > மரித்தல். ஒரு நிலையினின்று இன்னொரு நிலைக்கு மாறுதல் என்பதே இதன் பொருளாகும். இந்தப் பொருள் பராமரித்தல் என்ற சொல்லில் வருவது ஆகும்.

பரா என்பது பர(த்தல்) + ஆ (தல்). இது விரிந்து ஆக்கம் கொள்ளுதல் என்பதைக் குறிக்கிறது. பரத்தல் - விரிதல். ஆ- ஆக்கம் ஆகும்.

எனவே பரந்து ஆக்கம் கொண்டு மாற்றங்களை உள்ளிருத்துதல் என்பதே பராமரித்தல் என்பதன் சொல்லாக்கப் பொருண்மை ஆகும்.  ஒரு குழந்தையைப் பராமரித்தல் என்று சொன்னால் அதை ஒரே நாளில் கொஞ்சுவது மட்டுமன்று, நெடுநாட்களுக்குக் கொஞ்சி, அழும்போதெல்லாம் பால் கொடுத்து, குளிப்பாட்டி, ஆடைகள் அணிவித்து வளர்த்தல் என்று பொருளாகிறது. ஓர் உந்து வண்டியைப் பராமரிப்பது என்றால்,  தினமும் கழுவி, குப்பை ஏதுமிருந்தால் அகற்றி,  பளபளப்பாக வைத்துக்கொண்டு, இயந்திரங்களை வேண்டிய காலை பழுதுபார்த்து எப்போதும் சேவைக்கு ஏற்ற நிலையில் வைத்திருப்பது என்பது பொருளாகிறது. பரவற் கருத்து,  ஆக்கக் கருத்து, வேண்டிய மாறுதல்களைச் செய்வித்தற் கருத்து --  அத்தனையும் உள்ளடங்கி வருகிறது.

இப்போது பராமரித்தல் என்பது ஆங்கிலத்தில் உள்ள maintain என்பதனுடன் ஒத்துப்போகிறது எனற்பாலது கருதத்தக்கது.

இது ஒரு மிகச்சிறந்த தமிழ்ச்சொல்லாகும்.  தற்கால நிலைமைக்கு மிக்கத் தேவையான ஒரு சொல். எல்லா மூலங்களும் தமிழாக உள்ளன..

இன்னொரு வகையில்:  பர + ஆகும் + அரு+ இ > பரா(கு)ம் அரு இ >  பராமரி, பரவலான முறையிலும்  ஆகும் வழிகளிலும் ஒன்றை அருகில் இட்டுக்கொள்வது என்று அதே பொருளைத் தருகிறது என்பதறிக.  ஆகவே இது இரு பிறப்பிச்சொல்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


வியாழன், 27 ஜூன், 2024

இலத்தீன் இலக்கணமும் தமிழும்.

 இலத்தீன் மொழி, சமஸ்கிருதம், தமிழ்  ஆகியவற்றிடை ஒற்றுமை ஒன்றுள்ளது. இத்தகைய ஒற்றுமை உள்ள மொழிகளில் இன்னும் இளமையுடன் எழில்காட்டும் மொழிகளில் தமிழ் சிறப்பினைப் பெறுகின்றது.தமிழில் வினை முற்றுக்களுக்கும் வினையெச்சங்களுக்கும் பொருள் தெரிவிக்கின்றன. வந்தான் என்பது வேறு,  வந்து  உண்டான் என்பது வேறு. வந்த பையன் என்றால் இங்கு வந்த என்பது வேறுபொருள் தருகிறது.  முற்று, எச்சம் என்றெல்லாம் வேறுவேறு பொருளைக் காட்டாத புத்துலக மொழிகளில்  பேசிப் பழகியோர் தமிழைப் பேசுகையில் இவற்றில் (பயன்பாட்டில்) தடுமாறுவர். உமது மொழி மிகவும் கடினம் என்று கவலை கொள்வர். சாப்பிட்டுவிட்டாயா என்று கேட்கவந்தவர்,  "தம்பீ!  நீ சாப்பிடு போச்சி?" என்று கேட்கிறார். நம் மொழி அவர்களுக்கு எளிதாய் இருப்பதில்லை. இலத்தீனும் சமஸ்கிருதமும்  தமிழைப் போன்று வாக்கியங்களை அமைக்கின்றன.

பெயர்ச்சொற்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு  வேற்றுமை என்பர். இவற்றுக்கு உருபுகளும் உள்ளன.

ஆங்கிலத்தில் இது declensions of the noun எனப்படும். இது பழைய ஃபிரஞ்சு மொழியிலிருந்து வந்தது என்பர். அதற்குரிய சொல்: clinaison  என்பதாகும்.  கிளத்தல் என்ற தமிழ் வினைச்சொல்லுடன் ஒப்பீடு செய்யத்தக்கது இது ஆகும்.  கிள என்பதை cli என்பதுடன் ஒப்பிட்டு நோக்குக.  de என்பது முன்னொட்டு.

இலத்தீனில் பெயர்கள் வேற்றுமை ஏற்கும் என்பதறிக.

மெய்ப்பு பின்னர்

மீள்பார்வை: 29062024 0354