இதைப் பற்றிச் சற்று விரிவாக இங்கு எழுதியுள்ளோம்.
https://sivamaalaa.blogspot.com/2022/02/blog-post_8.html
ஒரு சரிவில் கொட்டிய நீரனைத்தும் சரிவினடிக்குச் சென்றுவிடுவதால், அடியிற் சென்று மீட்டாலன்றி, எல்லாம் ஓடிவிட்டது என்றுதான் சொல்வர். சரிவிலிருந்து மீட்டல் அரிய ஒன்றே ஆகும். இதன் அடிச்சொல் சரு என்பதுதான். அரு> சரு> சருவு> சருவம்> சர்வம் என்றானதுதான் இச்சொல். சரு என்பதற்கு முந்திய அடி அரு என்பது கூறினோம். மீட்டல் அரிது என்பதை அரு என்ற அடி காட்டுகிறது. சரிதல் என்பது சொன்னவன் பக்கம் சாய்ந்துகொள்வது என்ற பொருண்மையால் ஒத்துக்கொள்ளுதலும் உணர்த்துகிறது.
சர்வம் என்பது சமஸ்கிருதம் என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் அது சம+ கதம் உடைய சொல் என்று பொருள். சம - ஒப்புமையுடன் கதம் - ஒலித்தல். எதற்கு ஒப்புமையாக என்றால் தமிழுக்கு ஒப்புமையாக என்று பதில் கொள்க. இவ்விரண்டு மொழிகளும் இணைமொழிகள் ஆம். சம் > சம என்பது பின் சம(ஸ்) என்று திரிந்தது. கதம் என்பது கிருதம் என்று திரிந்தது. இவ்விரண்டையும் சேர்த்தால் '' சமஸ்கிருதம்'' என்ற பெயர் கிடைக்கிறது. என்றால், ஒன்றாக ஒலிக்கும் சொற்கள். இரண்டு மொழிகளின் ஒலியமைப்பும் ஒருப்போல அமைந்தவை என்று வங்காள மொழியறிஞர் எழுதியுள்ளார். சுனில் குமார் சட்டர்ஜீ என்பது அவர் பெயர். இப்போது அவர் அப்படி ஏன் எழுதினார் என்று சிந்தித்தபின் இங்கு யாம் விளக்கியதைப் படித்தால் மொழியறிவு வந்துவிடும். இதுபோல பல சொற்களில் உதாரணம் காட்டமுடியும். அதனால்தான் இதையுணர்த அறிஞர்கள் 'தற்சமம்'', ''தற்பவம்'' என்ற சொற்குறியீடுகள் உண்டாயின. இதை மறந்துவிட்டு, சமஸ்கிருதம் ஆரிய மொழி, கூரிய மொழி, கீரிய மொழி என்றெல்லா நினைப்பது மூடமதேயாகும். உதாரணம் என்ற சொல்லைப் பாருங்கள். உது - முன் நிற்பது என்று பொருள். உது ஆ > என்றால் முன் நிற்பதாக ஆகுவது என்று பொருள். அண்- அண்மி நிற்பது. அம் - அமைப்பு. எல்லாம் சேர்த்தால் ''முன் நிற்பதாக அண்மி நிற்கும் அமைப்பினதான சொல்'' என்று பொருள். அப்படியென்றால் எடுத்துக்காட்டு என்று இச்சொல்லைப் பயன்படுத்துகிறோம். தனித்தனியாகப் பிய்த்துப் பார்த்தாலும், சம கதம் என்பது புரிகிறதா? கதம் என்பது: கத்து, இடைக்குறைந்து, கது. இதில் அம் சேர்ந்து கதம். இது திரிந்து கிருதம், அல்லது கிர்தம் என்றாகும். இப்போது சமஸ்கிருதம் என்ற சொல் கிட்டுகிறது. உதாரணம் என்பதும் இவ்வாறே அறிந்துகொள்ளத் தக்கது.
வெள்ளைக்காரனின் பொய்ச் சரித்திரத்தை நம்பி, இதை ஆரிய மொழி, இந்தோ ஐரோப்பியம் என்றெல்லாம் கொண்டது ஆய்வின்மையே ஆகும்.
சர்வம் என்பதும் இவ்வாறே உணர்ந்து கொள்ளத் தக்கது.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக