புதன், 30 நவம்பர், 2016

Love words in Tamil

மோகம் என்ற சொல்லின் அடி.  மோத்தல் அல்லது மோந்து பார்த்தல்
என்பதில் அடங்கியுள்ளதென்பது ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் இங்கும் பிற இடங்களிலும் விளக்கப்பட்டது. இப்  பொருட் காரணம் என்னவென்றால், இயற்கையில் விலங்குகள் மோந்துபார்த்தே இணைசேர்கின்றன என்பதுதான்.  மனிதன் நாகரிகம் அடைந்து, மோப்பத்தினால் தன் துணையை அடையும்  இயற்கை நிலையிலிருந்து வெகுதூரம் வந்திருக்கலாம்.  இருப்பினும் அவன் மொழியில் உள்ள‌ சொற்கள் அவனைக் காட்டிக்கொடுத்துவிடுகின்றன,

இது உண்மையா என்று நீங்கள் ஐயுறலாம்.  பழங்காலத்தில் மனிதன்
மரப்பட்டையை இடுப்பில் அணிந்து மானத்தைக் காத்துக்கொண்டான்,
அது சீரை எனப்பட்டது.  பின் துணி நெய்யக் கற்றுக்கொண்டு ஆடைகள்
அணிந்த காலத்தில் சீரை என்ற சொல் சீலை, சேலை என்றெல்ல்லாம்  மாறிவிட்டாலும் அவன் மொழி அவன் முன் நிலையைக் காட்டிவிடுகிறது. ரகர லகரப் பரிமாற்றமுடைய சொல் திரிபுகள்.

காமம் காதல் என்பன காத்தல் அல்லது காவல் வழங்குதலை முன் காலத்தில் குறித்தன.  ஒருவன் தன்னையும் தன் குடும்ப உறுப்பினரையும் காக்கும் கடமையையே மேற்கொண்டான். இதற்கு மாறாக அவன் பிற குடும்பத்தில் பிறந்த ஒரு மனிதப் பிறவியைக் காக்க‌ முனைவது   பெரும்பாலும்  அவன் காதல் வயப்படும்போதுதான். தான் விரும்பிய ஒரு பெண்ணை   (அல்லது ஆணை )ப்  பிறனுக்கு விட்டுக்கொடுக்காமல் காவல் செய்கின்றான்( ள் )..
மொழியில் காதல் காமம் என்பனவெல்லாம் காவல் குறிக்கும் கா என்பதிலேயே அமைகின்றன. இச்சொற்களில் காவல் பொருள் மறைந்து பிற்காலத்தில் உடல் உணர்ச்சி, மன உணர்ச்சி பற்றிய "பொருள் நிறங்கள்"  ஏற்பட்டன.  ஆனால் காப்பது காதலியை என்ற காவற்பொருளை முழுவதும் மறைத்துவிட முடிவதில்லை.

பிரேமை என்ற சொல்லோ நேரடியாகவே இதைத் தெரிவிக்கிறது.
பிற = இன்னொரு குடும்பத்தின் பிற பெண்ணை அல்லது ஆணை , ஏமை =  காத்து மேற்கொள்வது என்பது தெளிவாம். ஏம், ஏமம் : காத்தல்.  பிற என்பது ற > ர என்றானது.   பிரேமை ஆனது.


செவ்வாய், 29 நவம்பர், 2016

நிஷ்டை

நிட்டை என்ற சொல்லின் அமைப்பைப் பற்றிச் சற்று சிந்திப்போம்.

நீள் என்ற சொல் நீளுதல் என்று வினைவடிவம் கொள்ளும்.
நீள் > நீடு என்றும் மாறி நீடுதல், என்று தன்வினையாகவும்
நீட்டுதல், நீட்டித்தல் என்று பிறவினையாகவும் வரும்,

ஞானும் நீயுமாக ~  ஞானியாக ~  இறையும் தானுமாக நெடு
நேரம் அமர்ந்து மனம் நிலைநாட்டி இருப்போன் தானிருக்கும்
நேரத்தை நீட்டிக் கொள்கிறான். அவன் நினைப்பது என்ன
என்பது அவன்மட்டும் அறிந்தது.  அவனைப் பார்ப்பவர்கள்
அறிவது ஒரு புற்றுக்குப் பக்கத்தில் ஆடாது அசையாது
கண்மூடி அமர்ந்திருப்பது.  இவற்றிலும் அவன் இருக்கும்
நெடு நேரமே கவனிப்போர் அறிந்துகொள்வது.  ஆகவே
அவன் நிட்டையில் இருக்கிறான் என்றனர்.

நீடு > நீடை > நிட்டை அல்லது நீடு > நிடு >
நிட்டை ஆகும்.  நீ என்ற‌ முதலெழுத்து நி என்று
குறுகியது.@   நீட்டு > நீட்டை > நிட்டை  எனினுமாம்
தன்வினையில் தோன்றியதாகக் காட்டினும்  பிறவினையில்
தோன்றியதாகக் காட்டினும் மூலம்  ஒன்றே.  கால் கைகளை
ஒடுக்கினாலும்  நேரத்தை நீட்டிக்கொண்டு  அமர்ந்திருப்பது.   
மக்கள் கவனத்தை ஈர்த்தது    அதுவே. நேரச் செலவு .

இங்கு இங்ஙனம் குறுகல் விரிவாக ஆராயப்பட்டுள்ளது,
சாவு >  சாவம் > சவம் என்று குறுகினாற் போல.
முன் இடுகைகள் காண்க.

கடு அம் கட்டம் கஷ்டமானது போல நிட்டை நிஷ்டை
ஆகி இந்தோ ஐரோப்பிய ஒப்பனை அழகு பெற்றது
உணர்க,

=================================================

@கூடு  :>   குடி    ( கூடி  வாழும் மக்கள் )  (  குறுக்கம் )
@கூடு   >   குடு  >  குடும்பு  >  குடும்பம் ,
குடும்பி   இதுவும்  குறுக்கம் .

will edit

ல் > று இரண்டு எடுத்துக்காட்டுகள்

தொடர்ந்து லகர மெய்யீறு கொண்டு முடியும் சொற்கள், றுகரத்தில்
முடிவதை மேலெடுத்துச் செல்வோம். முன் இடுகையில் இரண்டு
உதாரணங்கள் தரப்பட்டிருந்தன.

http://sivamaalaa.blogspot.com/2016/11/blog-post_44.html

அல் என்பது அன்மை அல்லது அல்லாமை குறிக்கும். இந்த அடியிலிருந்து, அன்று, அல்ல, அல்லது, அல்லன், அல்லை, அல்லள் , அல்லாய், அல்லோம், அல்லோன் என்றெல்லாம் பல‌ வடிவங்கள் தோன்றி மிளிர்கின்றன. இவைகளில் ஒவ்வொன்றையும் ஒரு சொல்லாகக் கருதி தமிழ்மொழி முழுவதுமுள்ள சொற்களை அப்படியே எண்ணினால் சொற்களின் தொகை பெருத்துவிடும். அதனால் என்ன?

அல் என்பது அறு என்று வரும். இது நல் > நறு போலவேதான். முன் இடுகையின் விளக்கம் காண்க.

அல்லாதது  அற்றது என்பவை சொல்லாக்கத்தில் ஒன்றுக்கொன்று
கருத்திலும் சொற்றிரிபிலும் உறவுகொண்டவை. அற்றது அல்லாதது
ஆகும்.  அல்+து =  அற்று.   அல் > அறு >அறுதல்.   அல்லாதது
ஆதல். வெட்டி வீசப்படுவது அல்லாதது,  அறுபட்டது. மறுக்கப்பட்டது.

இல் என்று லகர மெய்யீற்றில் முடிந்த சொல், இறு என்றும் திரியும். இறு ‍~  முடி;  இறுதல் ~ முடிதல்.  மெய்யீற்றில் முடிந்த என்னாமல் மெய்யீற்றில் இற்ற என்றும் சொல்லலாம். தூர் இற்றுப் போய்விட்டது
என்று கேள்விப்பட்டதுண்டா?  இறு >  இற்று என்று எச்சமாதல் அறிக.

இந்த வடிவங்கள் வாக்கியங்களில் கையாளப்படுத்லைக் கண்டு
பல்வேறு பொருட் பரிமாணங்களையும் உணர்க. பரிதல்: புறப்படுதல்;
மாணுதல் ‍ சிறத்தல்.  பரி+ மாண் + அம் ‍:  வெளிப்பாடு சிறத்தல்
என்று பொருள்.

தலைப்பு :    ல்  > று   இரண்டு  எடுத்துக்காட்டுகள்