செவ்வாய், 29 நவம்பர், 2016

ல் > று இரண்டு எடுத்துக்காட்டுகள்

தொடர்ந்து லகர மெய்யீறு கொண்டு முடியும் சொற்கள், றுகரத்தில்
முடிவதை மேலெடுத்துச் செல்வோம். முன் இடுகையில் இரண்டு
உதாரணங்கள் தரப்பட்டிருந்தன.

http://sivamaalaa.blogspot.com/2016/11/blog-post_44.html

அல் என்பது அன்மை அல்லது அல்லாமை குறிக்கும். இந்த அடியிலிருந்து, அன்று, அல்ல, அல்லது, அல்லன், அல்லை, அல்லள் , அல்லாய், அல்லோம், அல்லோன் என்றெல்லாம் பல‌ வடிவங்கள் தோன்றி மிளிர்கின்றன. இவைகளில் ஒவ்வொன்றையும் ஒரு சொல்லாகக் கருதி தமிழ்மொழி முழுவதுமுள்ள சொற்களை அப்படியே எண்ணினால் சொற்களின் தொகை பெருத்துவிடும். அதனால் என்ன?

அல் என்பது அறு என்று வரும். இது நல் > நறு போலவேதான். முன் இடுகையின் விளக்கம் காண்க.

அல்லாதது  அற்றது என்பவை சொல்லாக்கத்தில் ஒன்றுக்கொன்று
கருத்திலும் சொற்றிரிபிலும் உறவுகொண்டவை. அற்றது அல்லாதது
ஆகும்.  அல்+து =  அற்று.   அல் > அறு >அறுதல்.   அல்லாதது
ஆதல். வெட்டி வீசப்படுவது அல்லாதது,  அறுபட்டது. மறுக்கப்பட்டது.

இல் என்று லகர மெய்யீற்றில் முடிந்த சொல், இறு என்றும் திரியும். இறு ‍~  முடி;  இறுதல் ~ முடிதல்.  மெய்யீற்றில் முடிந்த என்னாமல் மெய்யீற்றில் இற்ற என்றும் சொல்லலாம். தூர் இற்றுப் போய்விட்டது
என்று கேள்விப்பட்டதுண்டா?  இறு >  இற்று என்று எச்சமாதல் அறிக.

இந்த வடிவங்கள் வாக்கியங்களில் கையாளப்படுத்லைக் கண்டு
பல்வேறு பொருட் பரிமாணங்களையும் உணர்க. பரிதல்: புறப்படுதல்;
மாணுதல் ‍ சிறத்தல்.  பரி+ மாண் + அம் ‍:  வெளிப்பாடு சிறத்தல்
என்று பொருள்.

தலைப்பு :    ல்  > று   இரண்டு  எடுத்துக்காட்டுகள் 

கருத்துகள் இல்லை: