பலவாறு பிரித்துப் பொருள்சொல்லும் வசதி படைத்த சொல்தான் குபேரன் என்பது. இதுபோல பல்பிரிப்பு வசதியுள்ள சொற்கள் பல உள்ளன நம் தமிழில்.
குபேரன் என்ற சொல்லில் முதலிற் பகவாய் இருப்பது குவிதல் என்னும் வினையின் திரிபாகிய குபி என்னும் பகுதி. குவி> குபி. இப்பகவு குபி என்பதன் பொருள் குவித்து வைத்தல்தான். குபேரன் என்ற சொல்லின் பழைய வடிவம் குவேரன் என்பது குவி+ ஏர் + அன் என்று பிரிந்துவரக் கூடியது என்பது ஆய்வில் தெளிவாகிறது. ஏர்த்தொழிலில் மிகுதியாய் விளைவித்து செல்வர்களானவர்களைக் குறித்த சொல்லே இது. நாளடைவில் பிறதொழில்களால் பொருள் விளைத்துச் செல்வர்களாய் ஆனோரையும் அது குறித்தது. இப்படிப் பொருள் விளைந்தமையினால் ஏர் என்ற சொல் பொருள் தெளிவினை இழந்துவிட்டது என்ற கருத்து, வலிவினை உடையதென்று கருதக்கூடும் ஆனால் பின்வருவனவும் கவனிக்கவும்.
ஏர் என்ற சொல்லுக்குப் பல பொருள் உள்ளன. ஏர் என்பது ஓர் உவம உருபாகவும் உள்ளது. எர்ப்பு என்பது ஈர்ப்பு என்ற சொல்லுடன் தொடர்பு உடையதாய் உள்ளது.
ஏர்பு என்ற சொல் எழுச்சி என்றும் பொருள்படும். வலனேர்பு திரிதரு என்ற தொடரைச் சிந்திக்கலாம். ஏர்தல் என்பதில் ஏர் என்பதே பகுதி. வேளாண்மையால் வருஞ்செல்வம் ஏர்ச்சீர் எனப்படும்.
ஏர்தல் என்பது எழுச்சி என்று பொருள்தருவதால், ஏர் என்று வரும் ஏரன் என்ற சொல்லுக்கு பொருளெழுச்சி உடையவன் என்ற பொருளே கூறவேண்டும்.
குவித்தல் என்பது பெருக்கம் உணர்த்துவதால் குபேரன் என்ற சொல் தமிழ்ச்சொல்தான். வகர பகரப் போலி தமிழிலும் உள்ளதே.
மேற்கொண்டு ஆய்வு செய்யாமல் இதைத் தமிழென்று முடித்துவிடலாம்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக