புதன், 16 அக்டோபர், 2024

குயவர்/குலாலர் - மண்வேலையர்கள்.

 இரும்பு பொன் முதலிய கண்டுபிடிக்கப்படுமுன் மண்வேலை செய்து தரையைக் குத்தித் தாம் பயன்படுத்திக்கொள்ளும் பொருள்களை மக்களுண்டாக்கிக் கொண்டனர்.  இப்போதுபோலவே  நாகரிகம் என்பது கண்டுபிடிப்புகளின் முன் செல்லும்  திறன் எதுவும் கொண்டிருக்கவில்லை. வேலைக்காரர்கள் அல்லது சாதிகள் பெருகுவதற்கு அவ்வப்போது மனிதன் அடைந்த முன்னேற்றமும் ஒரு காரணமாகும். உள்ள சாதிகளை அல்லது தொழிலர்களை ஏற்றுச்செல்லும் நிலையில் சமுதாயம் நின்றுவிட்ட படியால் ,  புதுத் தொழிலர்கள் சில புதிச்சாதிகளாக ஏற்புடைமை கொள்ளவில்லை. பழமை போற்றும் பண்பும் இதற்கு ஒரு காரணமாகும்.

மண்குழைத்துப் பாத்திரங்கள் செய்து புழங்குவது ஒரு மிக்கப் பழமையான தொழிலாகும்.

குசவனாகிய ஏலன் என்பவன் ( குச ஏலா)  இத்தகைய ஒரு தொழிலாளி,  திருநீலகண்டன் என்னும் குயவரும்  இத்தகையவர்.   குச என்பது குய என்று திரிவது  சகர யகரத் திரிபு.   வாசல்> வாயில் என்பதிலும் இதை உணரலாம்.

வேய்தல் என்பது அணிதல் என்றும் பொருள்தரும்,  வேய்> வேயம்> வேசம்> வேஷம் என்பதிலும் சகர யகரத் திரிபைக் காணலாம்.  வேஷம் ( வேயம் வேசம்) என்பது அணிகலன்களால்  அடையாள மாறுபாடு காட்டுவது ஆகும்.

பல் - பய்,   பலன்>< பயன். குல் > குய் என்றும் ஆகும்  குல் ஆலன் > குய் அவன்.

ஆல் என்பது கருவிப்பொருளுடைய ஒரு பண்டை உருபு   கத்தியால் வெட்டினான் என்பதில் ஆல் என்பது கருவி குறித்தது.  குலாலன் என்பதில் இந்த ஆல் உள்ளது. ஆல்+ அன் > ஆலன்.  ஆளன் என்பது கருதத்தக்க வேறுபாடு உடையதன்று,  பொருள் ஒன்றுதான்.

குய என்பது பேச்சுத் திரிபு போல் தோன்றினும் இது ஒரு வெளித்தோற்றமே.  ஆழ்ந்து ஆய்ந்தால் குய - குல் என்பன தொடர்புடையனவாகும்.

குயவர்கள் ஒரு காலத்தின் முக்கியத் தொழிலர்களாக இருந்தாலும் அவர்களின் முதன்மையில் சரிவு ஏற்பட்டது புதிய கண்டுபிடிப்புகளாலேதாம், இரும்பு பொன் என்பன பின் வந்து முன் இடம் கொண்டவை ஆகும், 

குயவர்கள் முன்னர் பூசாரிகளாகவும் இருந்துள்ளனர்.  இப்போதும் சில கோயில்களில் உள்ளனர் என்று தெரிகிறது.

குயவர் குபேரராகவும் வாழ்ந்ததுண்டு. இதை மகாபாரதம் காட்டுகிறது.  குவை என்றால் குவியல்,  செல்வக் குவியல்.  குவை> குபை. இது வகரப் பகரத் திரிபு. குபை+ ஏறு + அன் > குபேரன்.  சொல்லாக்கத்தில் றகரம் ரகரமாகிவிடும்,    ஏறிய செல்வக் குவியலை உடையோன்.  ஏறுதல் - மிகுதல்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்


கருத்துகள் இல்லை: