சிதைவிடத்தும் ஒல்காத சீரியர் குவான்யூ
சீராட்டிப் பாராட்டி வளர்த்த பிள்ளை,
எதைஎதையோ யாஉயர்வும் பேறாய்க் கொள்க
என்றுபல கனவிடையே தவழ்ந்த பிள்ளை,
பதைபதைத்தோம் ஈங்குயிரை நீங்கிச் சாய்ந்தே
பாரோர்கண் ணீர்வடிக்கும் தேரா நாளும்
உதயமாகும் சூரியனும் மறைந்து நோக்கும்
ஒருநாளாய் ஆனதடி என்னே துன்பம்.
பிரிந்துசென்ற உரவோர்லீ சொரிந்து கண்ணீர்
பிரிவாற்றா நிலையில்நாம் இங்கே உள்ளோம்;
விரிந்தகல்வி மருத்துவராம் லீவெய் லிங்கின்
வெள்ளியசே வைதன்னைப் புகழ்ந்து சொல்வோம்;
சிறந்தசேவை இனும்பத்து வருடம் கூடி
இருந்திருந்தால் பொருந்துமது என்றும் எண்ணும்
வருந்துதலும் பலரிடையே கண்டோம்; நின்றே
அஞ்சலிசெய் கின்றோமே அமைதி கூர்க.
Condolences, RIP.
சிதைவிடத்தும் ஒல்காத---- துன்பங்கள் வந்தாலும் துவண்டிடாத.
யா உயர்வும் - எத்தகைய சிறப்பும்.
பேறு - பாக்கியம்
கனவு - பெற்றோரின் கனவு
உயிர் நீங்கிச் சாய்ந்தே - இறந்துவிட்ட, காலமான
தேரா நாள் - பொல்லாத நாள்
சூரியன் மறைதல் - துயரத்தின் குறிப்பு
உரவோர் - சிறந்த அரசியல் அறிஞர் எனல் பொருட்டு
அவர் லீ இல்லையாதலால் அதற்குப் பதிலாக மக்கள் கண்ணீர் சொரிந்தனர்.
வெள்ளிய - தன்னலமற்ற
நின்றே - எழுந்து நின்று.
இனும் - இன்னும். தொகுத்தல் விகாரம்.
யா என்பது: யாவை, (எந்தப் பொருள்.)
யாது யா யாவை என்னும் பெயரும்ஆவயின் மூன்றொடு அப் பதினைந்தும்
பால் அறி வந்த அஃறிணைப் பெயரே. தொல். சொல். 654
அறிக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக