இன்று ஒட்டகம்
என்ற தமிழ்ச்சொல்லை மாற்றி அயல்மொழி வடிவம்
கொடுப்போம்.
ஒட்டகம் என்று
தமிழர்கள் பெயர்வைத்துவிட்டதால் வேறு புதிய சொல்வடிவங்களைத் தேடி அலையவேண்டாம் அல்லவா.
ஒட்டகத்தையே எடுத்து அயல்வடிவம் கொடுப்பதே திறமுடைமை ஆகும்.
ஒட்டகம். இதில்
“ட்ட” என்பதை எடுப்போம்.
ட்ட ஷ்ட.
இது வழக்கமான மாற்றம். ட்ட > ஷ்ட.
ஒ என்ற தலையெழுத்தை
எடுப்போம்.
ஒ > உ..
அயல்மொழிகளில்
ஒகரம் இல்லை; எகரமும் இல்லை. ஓகாரம் ( நெடில் )
ஏகாரம் ( நெடில் ) உள்ளன. ஓஷ்ட் என்னாமல்
உஷ்ட என்பதே சரியாகவிருக்கும்.
இப்போது ஒட்ட என்பதை
உஷ்ட என்று மாற்றிவிட்டோம்.
இறுதி கம் இணைக்கலாம்.
அப்படிச் செய்தால் பெரிய மாற்றம் எதுவுமில்லை. ஆகவே கம் வேண்டாம். ரம் என்று போட்டுச்
சொல்லை முடிப்போம்.
ஒட்டகம் > உஷ்ட்ர
நன்றாக இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக