பின் என்னும் சொல்லை மேலும் அணுக்கமாகக் கருதுதற்கு இது நல்ல தருணமே.
பிம்பம் என்ற சொல்லும் பின் என்பதனடிப் பிறந்ததே. பின்> பின்பு>
பின்பு+அம் > (பின்பம்)
> பிம்பம் >
bimba.
இது பின் தொடர்வதாகிய நிழல்போலும் ஒற்றொளியைக்
குறிக்கிறது.
இதுபோலும் ஒளி முன்னும் விழுவதுண்டே, எனின் உண்டுதான். சொல்லைமைப்பில் எல்லாக் கோணத்துக் கருத்துகளையும்
உட்புகுத்திவிடுதல் அரிது. வேண்டாத எல்லாவற்றையும் திட்டவட்டமாக விலக்கிவிடவும்
முடியாது. நாற்காலி என்பது நாலு கால்களை உடையது என்று பொருள்பட்டாலும் அது வழக்கில் நாய்க்குட்டிக்கு ஒத்துவருவதில்லை. ஆகவே காரண இடுகுறியாகிறது. பகுதி காரணத்தையே உள்ளடக்கிற்று. மிகுதி: இடுகுறியாய்
நிற்பதாம்.
ஒற்றொளியாவது ஒன்றி அல்லது ஒற்றி வரும் ஒளி. 1
பின் என்பதனடி வேறு சொற்கள் சில::
பின் > பின்னணி. (பின்னணிப் பாடகி........)
பின் > பின்னடி (சந்ததி)
பின் > பின்னகம் (வேறுபாடு)
பின் > பின்னம் ( அரை. கால் எனவரும் இன்ன பிற)
பின் > பின்றுதல், ( இது வினைச்சொல். அருகியே வழங்குகிறது).
பின் > பின்னுதல். ( நூல் பின்னல். சடைப்பின்னல்).
பின்றை > பிற்றை.
பின் > பின்னிதம் ( பின்+ இது + அம்). வேறுபாடு.
பின் > பின்னிலை. பின்பற்றுதல். வழிபாடு.
பின் > பின்னிரை (பின்+ நிரை).
நிரை : வரிசை.
பின் > பின்னோக்குதல்
. (எதிர்பார்த்தல்).
பின் > பின்னை
பின் > பின்னர்
பின் > பின்னனை ( பின்+அ(ன்)னை): சின்னம்மா, சிறியதாயார்.
இன்னும் உளவற்றைப் பட்டியலில் சேர்த்துக்கொள்க.
குறிப்புகள்:
1.
ஒன்றும் ஒளி
: ஒன்று+ ஓளி > ஒற்றொளி, வலித்தல் விகாரம். இன்னோர் உதாரணம்: இரும்பு+ பாதை = இருப்புப்பாதை. Railway tracks.
கம்பிச்சடக்கு என்பர் மலேசியவழக்கில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக