செவ்வாய், 31 ஜனவரி, 2023

சகஜம் தமிழில்

 மக்கள்  குழுக்களிடையே  அக்குழுவிலில்லாத வெளியாருக்குப் புரியாத பல்வேறு எழுத்துருவற்ற இலக்கணங்களில்லாத மொழிகள் வழங்கிவந்தன என்பது உண்மையாகும்.  இத்தகைய மொழிகளில் சிலவற்றையாவது நாம் கேட்டு  அது புரியாமல் விழித்திருக்கிறோம்.  இவற்றுள் ஒன்றிரண்டு பரவி அவற்றில் பாடல்களுமிருந்தால்,   புரியாதவன்,  அது வெள்ளைக்காரன் கொண்டுவந்தது,  அல்லது "ஆரியன்" கொண்டுவந்தது என்று ஏதாவது சொல்வான்.  இந்தோனேசியாவில் பல மொழிகள் குழுமொழிகளாய் உள்ளன.  அவற்றுக்கு எழுத்து ஒன்றுமில்லை.   மேடான் ( சுமத்திரா)  பகுதிகளிலும் உண்டு.  ஜாவா மொழி மலாய் மொழியிலிருந்து வேறுபட்டது.  அதிலுள்ள சொற்களை ஆய்ந்து ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளனர்,  பலவருடங்களுக்கு முன்பு.  

தெரியாதவன் அப்படி ஒன்றுமில்லை என்று சொல்லி மனநிறைவு கொள்வது அவனது இயலாமை.

சமஸ்கிருதம் என்பது  இப்படி உண்டாகி, பின்னர்   புதிய புகுந்த சொற்களால் வளம்பெற்று இலக்கியம் பெற்ற உயர்ந்த மொழியாகும்.  இதன் முதல்கவி வால்மிகி முனிவர்.  இவருடைய வழித்தோன்றல்கள் இன்று கவனிப்பாரற்ற குலத்தவரானது  ஒரு சோகமே ஆகும்.      ( சோர்(வு)+கு+அம் > சோகம்). [ துயரமே சோர்வு தருவது]

இனிச் சகஜம் என்ற சொல்லைத் தெரிந்துகொள்வோம்.

அகம் என்பது வீடு.   வீட்டில் அடுத்தடுத்து நடக்கும் பல  நிகழ்வுகள்,  இயல்பானவை என்று மக்கள் கண்டுகொண்டனர்.   வீட்டில் பாயில் படுத்துக் கிடப்பது  இயல்பு  ( சகஜம்).  இதுபோது குறிப்பாக யாராலும் எடுத்துக்கொண்டு கவனத்தில் கொள்ளப்படாதவை இயல்பாகும்,  ( சகஜம்!).     அகவட்டத்தில்  ( வீட்டுச் சூழலில்) தோன்றிய சொல்லே சகஜம் என்பது.

அகத்தில் அடுத்தடுத்து நடக்கும் முன்மையற்ற செயல்கள். 

அகம் -   சகம்.

அடு(த்தல்)  ( அடுத்தடுத்து )  -  அஜ்.  (  அடிக்கடி ).

அம் -   அமைந்தது.

சக + அஜ + அம் >  சகஜம்.

இதைச் சகசம் எனலாம்.  இது சிற்றூர் வழக்கில் உள்ள சொல்.



கடைதல்.*

கடையம் கடயம் கடம் கஜம்  ( கடைந்த முகமுடையதுபோல் தோன்றும் ஆனை).

*This etymology is given by European scholars.

இன்னொன்று:

படி  ( பாடு என்ற பொருளில்)  >  பஜி,

"முருகனைப் பஜி மனமே -  திருமால் 

மருகனைப் பஜி  மனமே!"

"பாண்டுரங்க நாமம் பஜி மனமே..."

"உன்னை நினைச்சேன்  , பாட்டுப் படிச்சேன்"   - படி என்பதை அறிக.

பண்டைத் தமிழில் உரையிடையிட்டவை தவிர யாவும் பாடல்களே.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்ன

Reviewed  on  01022023 



சனி, 28 ஜனவரி, 2023

பேச்சுமொழியில் சமீபம். கிட்ட, எட்ட.

 சமீபம் என்ற சொல்லை நாம் முன் கவனித்திருக்கிறோமா?  அஃது இங்கு இன்னும் உள்ளது.

சமீபம் என்ற சொல், சிற்றூர் வழக்கிலும் உள்ளது. நேரகாலத்தால் ஒன்று அணிமையில் இருப்பதும்  இடத்தொலைவினால் ஒன்று அருகினில் இருப்பதும் என்பவற்றில்  சமீபம் என்பது இருவகையாகும்.  இதுதவிர,  கிட்ட  எட்ட என்ற பேச்சுமொழிச் சொற்களும் இருந்து நம் பேச்சுத் தமிழை மிக்க வளம்பொருந்திய மொழியாக்குகிறது.

மனித வாழ்வில் எப்படித் தொலைவு ஒரு பொருண்மையுள்ள கருத்தாகத் தோன்றி உதவுகிறது?    வாழைப்பழம் உண்ண விரும்பும் மனிதன், அக் கனிதரு மரம் அருகில் உள்ளதா  என்று அறிய விரும்புவான்.  கிட்ட இருக்கிறது, போய் எடுத்துவருகிறேன்  என்று கிளம்பிடுவது இயல்பாக நடைபெறுவது.   கிட்ட -  கிடைத்திடும் தொலைவு  .  ஒன்றை  முயற்சி மேற்கொண்டுதான் அதை எட்டிப் பிடிக்கவேண்டிய நிலை இருக்குமானால்  எட்ட என்ற சிறு எச்சவினை, இதை நன்றாகக் குறிக்கின்றது.

தம் என்பதே சம் என்பதன் மூலம்.  தம் என்பது பன்மை. மகர ஒற்று அடிநாளில் பன்மைப் பொருள் தந்தது. சீனமொழியிலும் அஃது பன்மை காட்டுவதுண்டு. அப்போது மகரத்தோடு அன் கலந்து முடியும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

வியாழன், 26 ஜனவரி, 2023

அகப்பை, ஆப்பை, சட்டகப்பை , சிரட்டை.

 சட்டிக்குள் இருக்கும் குழம்பை சோற்றுக்குப் பரிமாறும் பொழுது,  சிந்திவிடாமலும் சுற்றிடத்தை அழுக்குப்படுத்திவிடாமலும் வெளியிலெடுத்துச் சாப்பிடும்  மேசைக்குக் கொண்டு  செல்லுதல் வேண்டியிருந்ததனால், ஓர் அகப்பை தேவைப்பட்டது.  பழங்காலத்தில் தேங்காய்ச் சிரட்டைகள் இதற்குத் உதவின.  அகப்பை என்பது இதற்குப் பெயர்.  குழம்பை அகப்படுத்தி ப் பின் இலையில்   பெய்யும் கருவி என்னும் பொருள் இன்னும் இதில் காணக்கிடக்கின்றது.  பெய் என்பது எடுத்தலைக் குறித்தது. எடுப்பது பெய்தற்பொருட்டு என்பது தொக்கது.

சட்டி என்பது குழம்பை  அட்டி   (சமைத்து) அணியமாக்கும்  (தயார்ப்படுத்தும்)  அடுபாத்திரம்.  அடுதல் - சமைத்தல்.  அட்டி -  சமைபானை.  அகப்பைக்குச் சட்டுவம் என்ற பெயரும் ஏற்பட்டது.   அடு> சடு> சடு+ அம் >  சட்டுவம் ஆகும். இங்கு,  சடு என்பது சட்டு என்று இரட்டித்தது.

பகு > பா என்று திரிந்தது போலுமே,  அக என்பது ஆ என்று திரிந்து,  அகப்பை என்பது ஆப்பை ஆனது.  உட்பெய்துவைக்க உதவுவது  பெய்> பை ஆயிற்று.

உடலானது,  வயிறு, கணையம்,  ஈரல், நுரையீரல்,  சிறுநீர்ப்பை இன்னும் உள்ள உறுப்புகளை உள்ளடுக்கி வைத்திருக்கும்  பெரும்பை.  உள்ளுறுப்புகளை அடுத்தடுத்து  அடுக்கி வைத்திருக்கிறது நம் உடம்பு..  அடுக்கு என்றவினைச்சொல்லிலிருந்து,    அடு> சடு> சடு+ அகம்>  சட்டகம்,  உடலைக் குறிக்கிறது.  அகர முதலாயின சொற்கள், சகர முதலாகும்.   அமண-  சமண் என்பது இதற்கு எடுத்த்துக்க்காட்டு.  உடல் என்பது ஒரு பைதான்.  சட்டகப்பை என்பது பொருந்திய அமைப்புச்சொல்லே ஆகும்.

அடு(தல்)  ( சமைத்தல் )  என்பது சடு என்றும் திரிதலால்,   குழம்பை எடுக்கும் அடுப்படியில் பயன்படுத்தும் அகப்பையும்  சட்டகப்பை எனப்படும். சில அகப்பைகள்,   தட்டு இணைக்கப்பட்டிருப்பன வாகும்..  தோசை திருப்புவதற்கு இது உதவியானது.  தட்டு அகப்பை >  சட்டகப்பை என்றுமாகும்.  

ஒன்றின் மேற்பட்ட பொருளைத் தரவல்லது சட்டகப்பை என்னும் சொல்.

ஓட்டாங்கச்சி,  கொட்டாங்கச்சி, சிரட்டைக்கச்சி, கொட்டகச்சி என்பன ஒரு பொருளன.  இரண்டாய் உடைந்த தேங்காயில்,  இரு பாகங்கள்.  ஒன்று ஒரு கைப்பக்கம், இன்னொன்று இன்னொரு கைப்பக்கம்,  என இரு பக்கங்கள் (கைப் பகுதிகள் ) எனவே,  " கை -  கைச்சி". என்று சொல்லப்படும்.  

தேங்காய் உடைத்தால் இருகைப்பாலன வாகும்.   கச்சி > கைப்பாற்று.

சிறு அடு ஐ >  சிரட்டை.   சிறட்டை என்றும் எழுதப்படும்.

தட்டு அகப்பை என்பதே சட்டகப்பை என்று திரிந்தது.  இதைச் சட்-டகப்பை என்ற படி உணர்க.   சட்ட - அகப்பை என்று பிரித்து  ஒலித்தால் இதன் பொருள் வழுவும்.

மெய்ப்பு பின்னர்.















பாகவதர்