By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
வியாழன், 31 மார்ச், 2022
சத் - - சத்குரு பெயரமைவு
சுகம் எங்கே - உணர்ந்த நாய்க்குட்டி.
சுவரில் சார்த்தி வைத்த துடைப்பம் தன்னை
சுகம்வேண்டித் தன் தலைமேல் இழுத்துப்போட்டு
இவள்( இந்த நாய்க்குட்டி ) தலை நுழைத்தே
என்ன ஒரு சுகம் கண்டு தூங்கு கின்றாள்?
வாசல்களில் படுத்தபடி வாழ்க்கை தம்மை
வந்த பெரும் பாகமும் முடித்துக்கொண்ட
கூசலிலா வைரவர்கள் கூட்டம் தாமே
கொண்ட சுகம் எங்கே என்றறிந்துயர்ந்தார்.
சுகமெங்கே என்றே உகந்தே அறிந்துவாழ்
வகைதெரிந்த நாய்க்குலமே வாழ்க நெடுங்காலம்.
இந்த விளக்கத்துக்கு நீங்கள் உங்கள் விளக்கத்தை வரைந்து பின்னூட்டம் இடவும்
மெய்ப்பு பின்னர்
புடின் அமைதிக்கு வந்துவிடுவார் --- புகழ்பெற.
வலதுகையை வீசாத வண்ணத் துடனே
வளர்திட உள்ளத்தர் வன்மைத் ---- தலைவரென.
நின்று தயங்கா நிமிர்நடையர் புட்டினே
என்று பலர்கூறு வார்.
ஒருகையை வீசித்தான் ஒன்றசைக் காமை
பெறுபுகழ்போல் சண்டைசேர் பீடும் ---- ஒருபக்கல்
போரெனினும் ஓர்பக்கல் ஆரமைதி தான்நாடிப்
பார்புகழ்தல் தந்துயர் வார்.
போர்மற மன்னரெனப் போற்றும் உயர்விலும்
நீர்நிலம் சூழமைதிப் பேராளாய்ச் ---- சீருறுதல்
உங்கள் புகழுக் கொருமகுடம் வைத்திடுமே
பொங்கபோ ரின்மைக் கதிர்.
நிமிர்நடையர் - நிமிர்ந்த நடை உடையவர்
ஒன்றசைக்காமை - ஒரு கையை அசைக்காமல் இருப்பது
பெறுபுகழ் பொல்- பெற்ற புகழ் ஒப்ப
பக்கல் - பக்கம்
பீடு - பெருமை
ஆரமைதி - நிறைவான அமைதி
பார் புகழ்தல் - உலகம் போற்றுகை
மற மன்னர் - வீரமிக்க ஆட்சியாளர்
சூழமைதி - சூழும் அமைதி
மகுடம் - சூட்டும் முடி
பேராள் - பிரதிநிதி, பெரிய ஆள்.
போரின்மை - அமைதி, சமாதானம்
சுவைத்து மகிழ்க.
மீள்பார்வை பின்னர்.
உங்கள் கருத்தை அல்லது காண்பனவற்றைப்
பின்னூட்டம் செய்க.