நேரிசைவெண்பா.
துள்ளிக் குதித்தோடும் துய்ய சிறுகிளியைப்
பள்ளிக் கனுப்புவதோ பண்ணாமோ------உள்ளந்தான்
நோய்க்கடவை தாண்டா நுடங்கு நிலையினால்
தாய்க்கப் பனுக்குச் சுழல்.
அருஞ்சொற்கள்
துய்ய - தூய்மையான ( நோயில்லாத )
சிறுகிளி - சின்னப்பிள்ளை, பள்ளிப்பிள்ளை.
பண்ணாமோ - பொருந்துமோ, தகுமோ- முறையோ
கடவை - வாயிலில் உள்ள தாண்டவேண்டிய தரைத்தடை.
நுடங்கு - முடக்கம். நோய் ஏற்படுத்தியுள்ள தடை(நிலை.)
தாய்க்கப்பனுக்கு - தாய்தந்தையர்க்கு
சுழல் - ( மனச்) சுழற்சி. தீர்மானிக்க இயலாமை.
இது சிங்கப்பூரின் நிலை. நோய்த்தொற்று வருமோ
மிகுமோ என்ற அச்சம்.இதைப் பற்றிய செய்திக்குறிப்புக்கு
இங்கே சொடுக்கவும்:-
http://theindependent.sg/ong-ye-kung-urges-parents-against-keeping-their-kids-out-of-school-as-circuit-breaker-ends/
While some parents are keeping their children home despite the reopening of schools, due to fears over the risk of COVID-19 transmission, Education Minister Ong Ye Kung has asserted that keeping students home for long will impact their development.
வாழ்க்கை என்பதில் அச்சம் ஏற்படுவது இயற்கைதான்.
ஆனால் அச்சமே வாழ்க்கை ஆகிவிட்டாலும்
எப்படி வாழ்வோம் இனிமேல் இப்புவியில்?
ஏதாவது ஓர் எல்லையில் அச்சம் தவிர்க்கவேண்டியதுதான்.