https://sivamaalaa.blogspot.com/2018/11/blog-post_28.html இதன் தொடர்ச்சி:
பர என்ற சொல்லை ஆய்ந்துகொண்டிருந்தோம். இதை நாம் தொடர்வோம்.
பரத்தை என்ற சொல்லினை நோக்கின் அதுவும் பரத்தல் ( அதாவது பல இடங்களிலும் உளதாதல் ) என்னும் சொல்லினின்றே வந்திருத்தலை உணரலாம். அதாவது ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டு இல்லாளாக வாழாமல் யார்மாட்டும் தொடர்பு வைத்துக்கொள்பவளாகப் பரந்து ஒழுகுபவள் என்ற பொருளுடையது என்பது தெற்றெனத் தெரியக்கூடியதாகிறது. இது பரமனடி பணிந்தோர் என்ற பொருளில் எங்கும் பயன்படவில்லை ஆதலின் தேவரடியாள் என்ற பதத்தினும் வேறுபட்ட வரலாற்றினை உடையது என்பதும் புலனாகும்.
இனிப் பறையன் எனப்பட்ட பரையன் என்ற சொல்லும் பரத்தல் என்ற சொல்லினின்றே பிறந்தது என்பதும் பொருத்தமுடையதே. இதற்கான காரணங்களை ஆராய்வோம். மனிதனுக்குக் கடவுள் நம்பிக்கை பிறந்ததற்கே காரணம் மரணம்தான். ஆதிமனிதனால் மரணத்தையும் அதன் தன்மையையும் முழுமையாகப் புரிந்துகொள்ள இயலவில்லை. அதை வெல்லவும் இயலவில்லை. ஆகையினால் சாவைப் பற்றி விளக்குவன எழுத்தில் உள்ளனவும் கருத்தில் மட்டும் உள்ளனவும் என அனைத்திலும் கண்ட உண்மைகளை அவன் "சாத்திரம்" என்றான். இது உண்மையில் "சாவின் திறத்தை உரைப்பவை" என்று பொருள்படுந் தொடரிலிருந்து எழுந்த சொல்லாட்சி. சாத்திறம் என்பது "சாத்திரம்" ஆனது. முற்காலத்தில் ரகர றகர வேறுபாடின்று மொழியில் பல சொற்கள் வலம்வந்தன.இன்றும் சில உள்ளன. மொழி நன்'கு வளர்ச்சி அடைந்த பின்னரே இவற்றுள் வேறுபாடு காணப்பட்டது. மேலும் றகரம் என்பது இரண்டு ரகரங்கள் இணைந்த ஓர் எழுத்தே ஆகும். ஒரு ரகரம் ஏற்பட்டுக் காலம் கடந்தபின்னும், குழப்பம் தவிர்க்க வேறுபாடு வேண்டுமென்னும் கோரிக்கை எழுந்த பின்னும் தாம் இரட்டை ரகரமாகிய றகரம் தோன்றியிருக்க முடியும் என்ற கருத்தை உன்னிப் பார்க்கவும். சாத்திரம் என்பது பின் சாஸ்திரம் என்று மெருகு பெற்றதும் சாவு மட்டுமின்றிப் பிற நிகழ்வுகளையும் அலசி ஆய்வு செய்யும் பிற விடயங்களும் அச்சொல்லால் தழுவிக்கொள்ளப்பட்டன. (ொுள் ிிு ) தெளிவு தோன்றத் தோன்றவே கலைகளும் அறிவியலும் வளர்ந்தன. இவை இறைவனால் அருளப்பட்டவை என்பது இவற்றைச் சிந்திக்கும் மூளையைக் கொடுத்ததற்காக அவனுக்குச் செலுத்தப்பட்ட நன்றியுணர்ச்சியைக் காட்டுவதே ஆகும். கலைகளும் அறிவியலுமோ படிப்படியாகவே வளர்ச்சி பெற்றிருத்தல் கூடும். சாவு உட்பட்ட முன்மையான நிகழ்வுகளைக் கையாண்டவன் பறையன் என்னும் பரையன். சடங்குகளென்பவை அவனாலே தொடங்கப்பட்டன. ஊதியத்திற்காக அவன் இவற்றைச் சாவுகள்தோறும் நடத்தி வந்தான். சடங்கு என்ற சொல்லும் அடங்கு என்ற சொல்லின் திரிபே. ஒருவன் இறந்துவிட்ட நிலையில் எல்லாவித நடவடிக்கை டி க் கை யும் உள்ளடங்குமாறு செய்யப்பட்ட தொகுப்புதான் சடங்கு. அடங்கு > சடங்கு. இவ்வகைத் திரிபுகள் முன் விளக்கப்பட்டன. அடு என்பதே அடிச்சொல். அடுத்து நடப்பதும் அதில் எல்லாம் அடங்கிவிடுதலும் குறிப்பதே சடங்கு. ஒரு சடங்கு பல உள்ளுறுப்புகள் உடைய தாகலாம். எல்லாம் அடங்கிய தே சடங்கு ஆகும்.
அகரத திரிபே சகரம்.
https://sivamaalaa.blogspot.com/2017/02/blog-post_92.html
சடங்குகள் பல நிகழ்த்தி வந்தமையாலும் அவன் நான்கு வகை நிலங்களிலும் பரவி அதை நிகழ்வித்ததாலும் பர+ஐயன் = பரையன் எனப்பட்டான். நாலு வகை நிலங்களுக்கும் - மருதம், நெய்தல், முல்லை, குறிஞ்சி என்ப - அவன் பொதுவானவன். பிற்காலத்து இச்சொல் பறையன் என்று மாற்றி எழுதப்பட்டு அவன் இயக்கிய கிணையும் பறை என்று பெயர் பெறலாயிற்று. இராமகாதை இயற்றிய வால்மீகி முதலியொரும் சங்கதத்துக்கு இலக்கணம் பாடிய பாணனாகிய பாணினியும் அவன் வழியினரே. சடங்குகட்கு இவன் சிறப்புமொழியைப் பயன்படுத்தியது வியப்பன்று.
இராமகாதை சங்கத இலக்கணம் முதலியவை இந்தியாவிலே இயற்றப்பட்டவை.
சடங்கு என்பதற்கு மறுபெயர் வழங்கவேண்டுமானால் அதற்கு முடிநிகழ்வு என்றுதான் சொல்லவேண்டும். ஒரு பெண் பூப்பு எய்துகிறாள். அடுத்து நிகழ்வது ஒரு சடங்கு. அடுத்த அதனில் யாவும் அடங்கிவிடுகிறது: அதனால் அது ---அடு> அடுத்தல்; அடு > அடங்குதல் என்பவை ---- சடங்கு என்பதன் நடுவண் கருத்தமைவுகள் ஆகின்றன.
முடிநிகழ்வு : முடித்துவைக்கும் நிகழ்வு. அதுவே சடங்கு.
குறிப்பு:
கேரளாலில் பரைய அரசன் ஆண்ட ஊர் பரவூர் எனப்பட்டது. பரவு+ ஊர் = பரவூர். இவனை வீழ்த்தி அவ்வூரை நம்பூதிரிகள் மேற்கொண்டதாக இவ்வூர் மக்களிடை வழங்கும் வரலாறு கூறுகிறது. நம்+ புது + இரி = நம்பூதிரி: புதிதாக வந்து தங்கிய கூட்டத்தினர் என்று இச்சொல் பொருள்படுகிறது.
ஒரு வள்ளுவ அரசனிடம் பிராமணன் பாடிப் பரிசில் பெற்ற நிகழ்ச்சி புறநானூற்றில் காணப்படுகிறது.
பெரும் சமஸ்கிருதப் புலவர் வால்மீகி யாரும் பரையரே. இவரே காலத்தால் மூத்த புலவர். பாரதம் பாடியோன் மீனவன் வேதவியாசன். சமஸ்கிருத இலக்கணம் அமைத்தவன் பாணனாகிய பாணினியும் பரையன். இதனால் இவையெல்லாம் பிராம்மணர் சூழ்ச்சி என்பது வெறும் ஆதாரமற்ற கூற்றாகிறது. இர் + ஆம் + அன் ( இருள்நிறம் உடையோன்) என்பதும் காரணப் பெயர். இராமன் நீல நிறத்தோன்.
இதற்கு வேறொரு பொருளும் உண்டு. பரை என்பது பார்வதியையும் குறிக்கும்.எனவே பார்வதியை முற்காலத்தில் வணங்கியவர்கள் என்ற பொருளும் உள்ளது. அன் விகுதி சேர்த்து, பரையன் - அம்மையின் வணக்கம் உடையவன் என்ற பொருளுக்கு, பிராமணன் - பிரம்மனை வணங்கியவன் என்ற பொருள் மாற்றநிலை காட்டுவதாகிறது. பரைச்சி - இதுவும் பார்வதியையே குறித்தது. மேலும் பரை என்பது சிவனருள் பெற்ற நிலையினையும் உணர்த்தும். சைவசித்தாந்தத்தில் ஆன்மா சிவனருள் வேண்டி நிற்றல் குறிக்கும். பரிபூரண நிலை. பரையர் ( இன்று பறையர்) இந்நாளிலும் பெரும்பாலும் சிவமதத்தாரே.
இனிப் பரம்பரை என்ற சொல்லின் இறுதிப்பாதி, பரவிநிற்றலைக் குறிப்பதும் காணவேண்டும். இன்று இது வழித்தோன்றல்களைக் குறித்தாலும், பரனைப் பரவி நிற்றல் என்ற பொருளும் தொக்கது. பின்னும் பரை நாபியிலிருந்து எழும் ஒலியையும் குறிக்கும்.
பரத்தல் - தொழுதல் என்பது, பரவுதல் கருத்தடிப்படையில் பற > பறையாகி, பரை - பறை என்பனவற்றிடை எழுத்து மாற்றம் ஏற்படுதல் முற்றிலும் ஏற்புடைத்தே ஆகும். குருவி பறத்தலும் ஓரிடத்திருந்து இன்னோரிடத்துப் பரவுதலே. பறை அடித்தலும் ஒலி பரவுதலே. பறைதல் என்பதும் சொல் பரவுதலே. ஆதலின் இச்சொல் முற்காலத்துப் பரை என்றே இருந்தது என்பது தெளிவாகும்.
அறிக மகிழ்க.
சில பாகிகள் சேர்க்கப்பட்டன. மெய்ப்பு பின். 10042021