தேநீருக்குக் கொழுந்துநீர் என்பது மொழிபெயர்ப்பாகத் தரப்பட்டுள்ளது.
இந்நாள் தேநீர் ( ~ குடிப்போர் தொகை உலகில் அதிகம் என்று நினைக்கிறேன் ) என்பது பெரிதும் விரும்பப்படும் பானம் ஆகிவிட்டது. அதனால் கெடுதல் உண்டு என்றும் நன்மை உண்டு என்றும் பலவாறாகச் செய்திகள் நம் செவிகளை எட்டுகின்றன.
வயிற்றுப் போக்குக்கு வெறும் தேநீரை ( பால் இனிப்பு முதலிய இல்லாமல்) இளஞ்சூடாக இரண்டு மூன்று முறை அருந்தினால் அது கட்டுக்குள் வரும் என்பதும் பலர் கூறுகின்றனர். நுகர்வில் இது உண்மை என்று அறிகிறோம். தேநீரைக் குடித்தால் இரவில் தூக்கம் வருவதில்லை என்பதும் கூறப்படுகின்றது. இதுவும் உண்மையென்றே கருதும்படி நமது நுகர்வறிவு நமக்குப் புலப்படுத்துகின்றது. நம் சீன மலாய் அன்பர்களும் இதை நம்புகின்றனர்.
மிகுதியான தாகத்துக்கு ( நீர்விடாய்) குளிர்க்கட்டிகளை இட்டுத் தேநீர் அருந்தினால் ( பால் சீனி இல்லாமல்) அந்தத் தாகம் நின்றுவிடும் என்று சிலர் நம்புவர்.
ஒவ்வாமை விளைவிக்கும் பானவகைகளில் தேநீரும் ஒன்று ஆகும். இதைப் பற்றிய பலரின் பட்டறிவுரைகள் இங்குக் கிட்டுகின்றன. இதைச் சொடுக்கி வாசிக்கவும்: